siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 31 டிசம்பர், 2012

இங்கிலாந்தின் மிகச் சிறிய மொடல் அழகன்

இங்கிலாந்தில் மிகச் சிறிய மொடல் அழகனாக ரோவன் ஸ்டோன் என்ற 7 மாத குழந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் வென்ச்சர் போட்டோகிராபி நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கான அழகு போட்டி நடத்தப்பட்டது.
இதில் 2300-க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றன. ஒன்லைனில் போட்டோக்களை பார்த்து 24 ஆயிரம் பேர் வாக்களித்தனர்.
இவர்களுடன் சூப்பரான அழகு குழந்தையை தேர்வு செய்ய நடுவர் குழுவும் அமைக்கப்பட்டது.
அவர்களது ஏகோபித்த ஆதரவுடன் கொழு கொழு குழந்தையாக தாமஸ்(வயது 28) - பெக்கி(வயது 29) தம்பதியின் 7 மாத ஆண் குழந்தை ரோவன் ஸ்டோன் தெரிவு செய்யப்பட்டுள்ளான்.
இவனுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் பொம்மைகள் வாங்கிக் கொள்வதற்கான கிப்ட் வவுச்சர் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி இன்னும் ஓராண்டுக்கு வார, மாத இதழ்களில் அட்டை படமாக குழந்தை ரோவனின் படம் வெளிவருவதற்கும் விளம்பரத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.





தமிழ் கணித மேதை ராமானுஜத்தின் கண்டுபிடிப்புக்களை 90 ஆண்டுகள்

       

கழித்து ஒப்புக்கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.  உலக பிரசித்தி பெற்ற இந்திய கணித மேதையும், தமிழருமான ராமானுஜம் 1920-ம் ஆண்டு மரணப்படுக்கையில் இருந்தபோது பல கண்டுபிடிப்புகள், சூத்திரங்களை கண்டறிந்தார். இங்கிலாந்தை சேர்ந்த தனது வழிகாட்டியான கணிதமேதை ஜி.எச்.ஹார்டிக்கு எழுதிய கடிதத்தில் இதுபற்றி அவர் எழுதி இருந்தார்.

இது கணித உலகுக்கே புதிதாகவும், புதிராகவும் இருந்தது. இப்போது அமெரிக்க கணித ஆராய்ச்சியாளர்கள் ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள், சூத்திரங்கள் எல்லாம் சரிதான் என ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரது கணித புதிர்களுக்கும் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.

ராமானுஜம் இறந்து ஏறத்தாழ 100 ஆண்டு காலம் நெருங்கும் நிலையில், இப்போது அவரது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி எமோரி பல்கலைக்கழக கணித ஆராய்ச்சியாளர் கென் ஒனோ கூறுகையில், ராமானுஜத்தின் கடைசி கடிதத்தில் கூறி இருந்த கணக்கு புதிர்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். கடந்த 90 ஆண்டுகளாக இந்த தீர்வு காணப்படாமல் இருந்தது. ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள் சரியானவைதான் என்றார்.

வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு ரத்த உறைவு கண்டுபிடிப்பு


அமெரிக்காவில் அதிபர் ஒபாமா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2009 ஜனவரி முதல் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு மந்திரி ஆக உள்ளார். தற்போது, உடல் நிலையை கருத்தில் கொண்டு ஒபாமாவின் மந்திரி சபையில் மீண்டும் தொடர மறுத்துவிட்டார்.
எனவே, அடுத்த வெளியுறவு மந்திரியாக ஜான் கெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டன் திடீரென மயங்கி விழுந்தார். வயிற்று வலி காரணமாக இப்பிரச்சினை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் மயங்கி விழுந்தபோது உடலில் அடிபட்டு ரத்தம் உறைந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் நியூயார்க்கில் உள்ள பிரஸ்பிடேரியன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் தனது பணிகளை கவனிப்பார் என அவரது செய்து தொடர்பாளர் பிலிப் ரீயின்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி பதவியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டன் 112 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பதவியில் இருந்தபோது அதிக உலக நாடுகளுக்கு சென்று வந்த அமெரிக்க வெளியுறவு மந்திரி என பெருமையை இவர் பெற்றுள்ளார்

மிகவும் நூதனமான முறையில் கணனிகளை கொள்ளையிட்ட பெண்?



எல்.ஈ.டி, எல்.சீ.டி. மற்றும் மடி கணனிகளை கொள்ளையிட்ட பெண் கும்பலொன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதிலும் கோடிக் கணக்கான இலத்திரனியல் சாதனங்களை இந்தப் பெண் கும்பல் கொள்ளையிட்டுள்ளது. மிகவும் நூதனமான முறையில் இந்தக் கொள்ளைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கால்களுக்கு நடுவில் மடிகணனிகள் மற்றும் எல்.ஈ.டி. மற்றும் எல்.சீ.டி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களை மறைத்து கொள்ளையிட்டுள்ளனர்.

கவர்ச்சியாக ஆடையணிந்த பெண்கள் கும்பலொன்று பிரபல இலத்திரனியல் சாதன விற்பனை நிலையங்களுக்கு சென்று ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடாத்தி, பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையன்று சம்ராஜ் என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகளின் போது இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

சுரங்கீ என்ற 25 வயதான பெண்ணே இந்தக் கும்பலை வழிநடத்தியுள்ளார். முதலில் கையடக்கத் தொலைபேசி போன்ற சிறிய பொருட்களை கால்களின் நடுவில் வைத்து நடக்க பயிற்சி அளிக்கப்படுவதாகவும் பின்னர் பெரிய இலத்திரனியல் சாதனங்களை கால்களின் நடுவில் வைத்து சந்தேகம் ஏற்படாத வகையில் நடக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இந்தக் கும்பல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட மடிகணனிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

மீரிகமவைச் சேர்ந்த பெண்களே இந்தக் கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டுள்ளனர். சுரங்கீயுடன் ஆறு பெண்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

நல்லூர் ஆலயத்துக்கு முன் மகேஸ்வரனின் சகோதரர் மீது நேற்று அசிட்

           
 தாக்குதல் சம்பவம்!முன்னாள் இந்து கலாசார அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரும், பிரபல வர்த்தகருமான தியாகராசா துவாரகேஸ்வரன் (வயது41) மீது நேற்று சனிக்கிழமை நல்லூரில் வைத்து அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


முதுகிலும், கழுத்துப் பகுதியிலும் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி வெளியேறிய அவர் கொழும்பு வைத்திய சாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம் யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முன்பாக நேற்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.

துவாரகேஸ்வரன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்பி வந்து தனது வாகனத்தில் ஏறிப் புறப்படுவதற்கு முற்பட்டபோதே அவர்மீது அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர் உடனடியாக தான் அணிந்திருந்த சேர்ட்டைக் கழற்றிவிட்டு அவ்விடத்தில் தேங்கியிருந்த மழைநீரில் உருண்டு புரண்டு எரிவு ஓரளவு குறைந்ததும் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறுவது தனக்குப் பாதுகாப்பில்லை என்று கூறியுள்ள அவர் கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நேற்றுச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

அசிட் வீச்சால் அவரது முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் பிரத்தியேகச் செயலாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான ஜெயக்கொடி என்பரே தன்மீது அசிட் வீசித் தாக்குதல் நடத்தியதாக துவாரகேஸ்வரன் தெரிவித்தார். அசிட் வீசியதைத் தொடர்ந்து ஜெயக்கொடி மோட்டார் சைக்கிளில் அந்த இடத்டதில் இருந்து சென்றார்.

அவருடன் இராணுவத்தினர் எனச் சந்தேகிக்கும் நான்கு பேரும் உடனிருந்தனர் எனவும் துவாரகேஸ்வரன் கூறினார். நேற்றுமுன்தினம் காரைநகர் சிவன்கோயிலுக்குத் தான் சென்றபோது அங்கும் ஜெயக்கொடி என்பவர் என்னைப் பின்தொடர்ந்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பில் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவுடன் தொடர்புகொண்டபோது,

அசிட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஜெயக்கொடி என்பவரே அசிட் வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தான் சந்தேகிப்பதாக துவாரகேஸ்வரனின் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதேவேளை

ஜெயக்கொடி என்பவர் முரண்பாடு ஒன்று காரணமாகவே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். முன்னரும் இவர் முரண்பட்டமையால் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கும் தெரியப்படுத்தினேன். கொழும்பு இராணுவத் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்தேன். தற்போது ஜெயக்கொடிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை நடைபெறுகிறது. அதனாலேயே என்மீது அவர் தாக்குதல் நடத்தினார் என்றார் துவாரகேஸ்வரன்

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் தமிழகம் வருகை

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேர் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வந்து சேர்ந்தனர்.
காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியில் இருந்து டிசம்பர் 21ம் திகதி நான்கு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் பலத்த காற்று வீசியதால் கச்சதீவு அருகே சென்றபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை பிடித்து திரிகோணமலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
நீதிபதி உத்தரவுபடி 26ம் திகதி வரை தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் 27ம் திகதி விடுவிக்கப்பட்டனர்.
மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சர்வதேச கடல் எல்லையில் மண்டபம் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர்.
நேற்று காலை இராமநாதபுரம் மண்டபம் அழைத்து வரப்பட்ட அவர்கள், விசாரணைக்குப் பின் மீன் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பு பயிற்சி

பெண்களுக்கெதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான டெல்லி மாணவியின் உயிரிழப்பை அடுத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டியது அவசியமாகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவற்றை முழுமையாக காவல்துறையால் மட்டுமே கட்டுப்படுத்தி விட முடியாது.
பொது மக்களின் ஆதரவும் அவசியம், இதனால் வரும் ஜனவரி மாதம் முதல் பெண் பொலிசாருக்கும் கல்லூரி மாணவிகளுக்கும் தற்காப்புக் கலை கற்றுத்தரப்படவுள்ளது.
இதில் வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பத் தலைவிகள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
பயிற்சி பெற விரும்புபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பொலிஸ் தலைமை அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.
தற்காப்பின் முதற்கட்டமாக பெண்கள் மிளகுத்தூள், மிளகாய்த்தூள் ஸ்ப்ரேக்களை எப்போதும் தங்களுடன் கொண்டுசெல்ல வேண்டும்.
இந்த உபகபரணங்கள் மூலம் ஆறு அடிக்கு அப்பால் இருந்தே எதிராளிகள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என மகாராஷ்டிரா புனே மாநகர காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது

ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடற் பயிற்சி

வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஹோமுஸ் நீரிணைப் பகுதியில் ஈரான், தொடர்ந்து கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பயிற்சி ஹோமுஸ் நீரிணையைச் சுற்றிய 10 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் நடப்பதாக கடற்படை தளபதி ஹபிபோலோ சையரி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, இந்தப் பயிற்சியின்போது கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசுவது, நீர்மூழ்கிகள் மூலம் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் சோதிக்கப்படுகின்றன.
மேலும் எதிரி நாட்டுப் படைகளின் ஆக்கிரமிப்பு முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கான ஒத்திகை, வெற்றிகரமாக நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணுசக்தித் திட்டங்களை முடக்குவதற்காக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஹோமுஸ் நீரிணையை ஈரான் அடைத்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பயணிகள் விமானம் தீப்பிடித்தது: 4 பேர் பலி

ரஷ்யாவில் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், 4 பேர் பலியாயினர். ரஷியாவின் ரெட் விங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம், செக் குடியரசுக்குச் சென்றுவிட்டு பயணிகளை இறக்கிவிட்டு காலியாக வினுகோவா விமான நிலையத்துக்கு திரும்பியது.
இறங்கும் போது ஓடு பாதையை விட்டு விலகி, சாலையையொட்டி நின்று உடைந்து தீப்பிடித்தது. வேறு எந்த வாகனம் மீது விமானம் மோதவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானியின் தவறே விபத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 4 பேர் பலியாயினர், 8 பேர் படுகாயமடைந்தனர்[புகைப்படங்கள்]


 

சனி, 29 டிசம்பர், 2012

இந்தியாவின் வீரமகள் இறந்துவிட்டாள்: ஜனாதிபதி ?

இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக திகழ்ந்த வீரமகளை நாடு இழந்து விட்டதென ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்காகவும் கவுரவத்துக்காகவும் கடைசி நிமிடம் வரை தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் அந்த மாணவி போராடினார்.
இந்தியாவின் வலிமை மிக்க இளைய சமுதாயத்தின் அடையாளமாக, உண்மையான முன்மாதிரியாக திகழ்ந்த இந்தியாவின் வீரமகளை இழந்த இந்த நாடு துயரப்படுகின்றது.
துரதிர்ஷ்டவசமாக அவரை இழந்து துயரப்படும் குடும்பத்தினர் இந்த இழப்பை தாங்கும் வலிமையை பெற பிரார்த்திக்கின்றேன்.
அதே வேளையில், அவரது மரணம் வீணாகிப் போகும் என்ற முடிவுக்கு நாம் வந்து விடக்கூடாது.
இதை போன்ற சம்பவம், இனி எப்போதுமே ஏற்படாது என்ற பாதுகாப்பை தருவதற்கு தேவையான அனைத்தையும் நாம் செய்வோம் என்று தனது அனுதாப செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதேவேளையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இரங்கல் தெரிவித்திருப்பதுடன் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கிடைக்க வழி செய்வோமென கூறியுள்ளனர்.

அமெரிக்கர்கள் தத்து எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம். புதின் அதிரடி


 

ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்து எடுப்பதை தடுக்கும் புதிய சட்டம் ஒன்று ரஷியாவில் கொண்டு வரப்பட்டது. இதில் ஜனாதிபதி புதின் நேற்று கையெழுத்திட்டார். இது ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
இந்த தகவலை மாஸ்கோவிலுள்ள ஜனாதிபதி மாளிகை தெரிவித்தது. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ரஷியர்களை தண்டிக்கும் சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்து இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ரஷியா தற்போது இந்த புதிய சட்டத்தை இயற்றி இருக்கிறது.
இதன் மூலம் இரு நாடுகள் இடையே உறவு பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது

ஆங்சான் சூகி பயன்படுத்திய கம்பளி ரூ.25 லட்சத்துக்கு ஏலம்

.
 
மியான்மர் எதிர்க்கட்சியின் தலைவர் ஆங்சான் சூகி. நாட்டில் ஜனநாயகம் வேண்டி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடினார். எனவே அவர் சுமார் 18 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.
சமீபத்தில் விடுதலையான இவர் தற்போது உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் தனது கட்சி வளர்ச்சி மற்றும் கல்வி வளர்ச்சி திட்டத்துக்காக நிதி திரட்டி வருகிறார்.
இதற்காக அவர் தனது கம்பளி ஆடையை ஏலத்தில் விட்டார். சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறத்தில் 'வி' வடிவிலான கழுத்து அமைப்பை கொண்ட அந்த ஆடை ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை மியான்மரின் தனியார் 'எப்.எம். ரேடியோ' நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.
யங்கூனில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் போராட்டங்களின் போதும் இந்த கம்பளி ஆடையை பயன்படுத்தியுள்ளார்

காணாமல் போன குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின் மீட்பு


காணாமல் போன குழந்தை 3 ஆண்டுகளுக்கு பின்பு திரும்ப கிடைத்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆத்யா அஞ்சும் வில்கின்சன் என்ற சிறுமி மூன்று வயதாக இருக்கும் போது, காணமால் போய்விட்டார்.
இதனையடுத்து ஆத்யாவை, அவரது தந்தை அழைத்து சென்றது தெரியவந்தது. பின் குழந்தையை பார்க்க வேண்டும் என தாய் கெஞ்சி கேட்டும், மறுத்து விட்டார்.
இதனால் கோபமடைந்த பெண், கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
உடனே இவருக்கு சிறைத்தண்டனை விதித்து, குழந்தை கண்டுபிடிக்கும்படி பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இச்சிறுமி பாகிஸ்தானில் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே பாகிஸ்தானிலிருந்து மென்செஸ்டருக்கு அழைத்து வரப்பட்ட சிறுமியை, தாய் கண்ணீர் மல்க வரவேற்றார்.
அவர் கூறுகையில், ஆத்யாவை கடந்த 2009ஆம் ஆண்டில் தான் பார்த்தேன். அதன் பின்பு மூன்றாண்டுகள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டில் கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்ததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





வர்த்தகர்களை நோக்கி வெள்ளை வான்


கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் நேற்று (28) இரவு 9.40 அளவில் இடம்பெற்றுள்ளதென தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலபார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை கம்பளை பகுதியில் வைத்து இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடத்தப்பட்டவர் 56 வயதுடைய கோவிந்தசாமி அருணாச்சலம் பிரபாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்

சுவிஸில் நாய், பூனைக்கறி சாப்பிடும் விவசாயிகள்

சுவிட்சர்லாந்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் நாய் மற்றும் பூனை இறைச்சிகளை சாப்பிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உலகில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் நாய், பூனை சாப்பிடுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
சுவிஸ் குளிர்பிரதேசம் என்பதால் அங்குள்ள மக்கள் இறைச்சியை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஆனால் நாய், பூனை என்பது வீட்டின் செல்லப்பிராணிகள், இதன் இறைச்சிகளை சாப்பிடுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது.
சுவிஸில் அல்பென்ஸெல் மற்றும் செயிண்ட் கேலன் மாநிலங்களில் வாழும் விவசாயிகள் இந்த பிராணிகளை அதிகம் விரும்பி உண்கின்றனர்.
இது குறித்து அவர்கள், இறைச்சி என்றால் ஆடு, மாடு, பூனை, நாய் என்ற வேறுபாடு கிடையாது என்றார்.
சுவிஸில் இதை தடுக்கும் படியான அதிகாரப்பூர்வ சட்டமேதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

வசதிக்கு பஞ்சமில்லை: மனநிறைவுடன் புத்தாண்டை வரவேற்கும்

 
கனடாவில் வாழும் மக்கள் புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையோடும் புத்துணர்ச்சியோடும் வரவேற்க காத்திருக்கின்றனர். கனடியர்களின் புத்துணரச்சிக்கு அடிப்படை காரணம், தங்களது நிதி நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று அவர்கள் நம்புகின்றனர்.
இது தொடர்பாக ஹேரிஸ்- டெசிமோ நிறுவனம் மூலமாக கருத்துக்கணிப்பு நடத்திய CIBC, 70 சதவீதம் பேர் தங்களது தற்போதைய நிதிநிலை குறித்து மனநிறைவடைந்துள்ளனர்.
ஆனால் இந்த மனநிறைவு சென்ற ஆண்டு 63 சதவீதம் பேரிடம் மட்டுமே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மற்றொருமொரு சிறப்பாவது, 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் மிகுந்த மனநிறைவுடன் இருக்கின்றனர்.
ஆனால் 25-34 வயதுடையவர்களில் 67 சதவீதம் பேர் மட்டுமே மனநிறைவு பெற்றுள்ளனர்.
இதுதவிர மேலும் பலர், எதிர்காலத்தில் தங்களின் நிதிநிலமை சிறப்படையும் என்றும் தாம் எதிர்பார்த்த இலக்குகள் அடைவது உறுதி என்றும் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 2 சதவீதம் உயர்ந்து 74ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடா முழுவதும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 4 வரை 2000 பேரிடம் தொலைபேசி மூலம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்

இங்கிலாந்தில் 10 வயதுக்கு குறைவான மாணவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது
அமெரிக்காவில் சமீபத்தில் ஆசிரியை மகன் ஒருவன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் தினமும் 4 சிறுவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருவது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிரலப பத்திரிக்கையான டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் 4 மாணவர்களாவது தினமும் கத்தி, சுத்தி, துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பள்ளிக்கு வருகின்றனர்.
மாணவர்கள் சிலர் உலோகத்தால் நட்சத்திர வடிவில் தயாரிக்கப்படும் நிஞ்சா ஸ்டார் ஆயுதத்தை கொண்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மாணவர்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் 4,150க்கும் அதிகமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் 20க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களின் ஆவணங்களில் இருந்து தெரிய வந்தது. சில பள்ளிகளில் கோடாரியை கூட மாணவர்கள் கொண்டு வந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரபல பாடகி விட்னி ஹுஸ்டன் கொலை செய்யப்பட்டாரா? திடுக்கிடும் ?

பிரபல பொப் இசை பாடகி விட்னி ஹுஸ்டன்(வயது 48), சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் கோகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை அதிகளவு உட்கொண்டதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது இவர் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சிகாகோ நகரின் காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது நடித்து கொண்டிருக்கும் பால் ஹுபுல் என்பவர் இது தொடர்பாக சமீபத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அமெரிக்காவில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு விட்னி ஹுஸ்டன், ரூ. 9 கோடி வரை பாக்கி வைத்திருந்தார்.
இந்த கடனை வசூலிக்கும் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். பிவர்லி ஹில்ஸ் ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் அவருடன் இருந்தது ஹோட்டல் கமெராவில் பதிவாகியுள்ளது.
இவர்கள், விட்னி ஹுஸ்டன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து அவரை கொன்றிருக்கலாம். அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் போராடியிருக்கக்கூடும். இந்த வாதத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அவரது உடலில் சில காயங்களும் காணப்பட்டன.
என்னிடம் உள்ள ஆதாரங்களை பொலிசாரிடம் நான் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் விரைவில் இதை ஆதாரமாக வைத்து, புதிய கோணத்தில் விட்னி ஹுஸ்டனின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுரங்கத் தொழிலில் முதலீடு அதிகரிக்கிறது:

சுவிஸ் சுரங்கத்தொழில் ஜாம்பவானான எக்ஸ்ட்ராட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பாப்புவா நியு கினியாவில் ஃபிரீடா ஆற்றங்கரையில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கத்தை மேம்படுத்த முன்பு கணக்கிட்டதை விட 300 மில்லியன் டொலர் கூடுதலாகத் தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. சுவிஸ் நிறுவனம், பாப்புவா நியு கினியாவில் உள்ள ஹைலாண்டஸ் பசிஃபிக் என்ற நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து அந்தத் தீவில் சுரங்கத்தொழிலை மேற்கொண்டுள்ளது. முன்பு 5.3 மில்லியன் டொலர் முதலீடு செய்தால் போதும் என்ற திட்டமிட்டது.
இப்போது 5.6 மில்லியனாக உயர்ந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் புனல் மின்சார முறையை விடுத்து எரிவாயு மின்சார முறையைப் பின்பற்ற வேண்டும் என்று இந்நிறுவனம் முடிவெடுத்ததே ஆகும். 82 சதவீதம் பங்குகளுக்குச் சொந்தமான எக்ஸ்ட்ராட்டா நிறுவனம் திட்ட ஆய்வு அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது.
முதலீடு அதிகரிப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், கழிவு மேலாண்மைக்கான செலவினங்களில் ஏற்பட்ட மாற்றம் ஆகும்; என்று Xstrata திட்ட மேலாளர் பால்கோ குறிப்பிட்டுள்ளார்.
ஹைலாண்ட்ஸ் பசிஃபிக் நிறுவனம் தனியாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், அமெரிக்கச் செலாவணியின் மதிப்பு குறைந்ததால் முதலீடு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த சுரங்கம் மட்டுமின்றி உலகில் உள்ள மற்ற சுரங்கங்களிலும் செலவுகள் அதிகரித்து இருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
போன ஜுன் மாதம், தன்னுடைய பங்குகளை விற்கப் போவதாக எக்ஸ்ட்ராட்டா குறிப்பால் உணர்த்தியது. முதலீட்டுச் செலவுகளின் உயர்வினை உத்தேசித்தே பங்கு விற்பனை குறித்து இந்நிறுவனம் சிந்தித்திருக்கலாம்.
ஃபிரீடா ஆற்றங்கரையில் உள்ள சுரங்கங்களில் 204,000 டன் செம்பும் 305,000 அவுன்ஸ் தங்கமும் கடந்த இருபது ஆண்டுகளில் கிடைத்துள்ளது. எக்ஸ்ட்ராட்டா இந்தச் சுரங்கத்தை 2007 முதல் எடுத்து நடத்தி வருகிறது.
ஹைலாண்டஸ் பசிபிக் தனது அறிக்கையில், அடுத்த ஆண்டில் தானும் எக்ஸ்ட்ராட்டாவும் பாப்புவா நியு கினியாவின் அரசுடன் சமபங்கு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளது

வாழ்த்துகளை விட பரிசுகள் அனுப்பியோரே அதிகம்

சுவிட்சர்லாந்தில் இந்த கிறிஸ்துமஸில் வாழ்த்துகளை விட பரிசுகளே அதிகம் அனுப்பப்பட்டதாக Swiss.com தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்த கிறிஸ்துமஸிற்காக சுவிஸ் தபால்துறை டிசம்பர் 1 முதல் 24 வரை 16 மில்லியன் பரிசுப்பொருட்களை பட்டுவாடா செய்துள்ளது.
கடந்த வருடம் வரை இந்த எண்ணிக்கை 15 மில்லியனாகவே இருந்தது. இந்த கூடுதல் ஒரு மில்லியன் பரிசுப்பொட்டலங்களும் வாட், துர்கா, சோலோதுன் மாநிலங்களுக்கே அதிகமாக அனுப்பப்பட்டுள்ளன.
அதாவது, சாதாரண நாட்களில் வரும் பரிசுப்பொருட்களை விட கிறிஸ்துமஸ் தினங்களில் இருமடங்கு வந்துள்ளன.
கடிதங்களும் இந்த டிசம்பர் மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நாளைக்கு இருபது மில்லியன் கடிதங்கள் வந்திருக்கின்றன.
சுவிஸ்காம், இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் முன்னிரவு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று கடந்த வருடத்தை விட குறைவான(மூன்று மில்லியன்) குறுந்தகவல்களே அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தது.
கிறிஸ்துமஸ் அன்று 24.4 மில்லியன் வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டதாக சுவிஸ்காமின் அறிக்கை தெரிவிக்கின்றது.
சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பலரும் வாழ்த்துகளை அனுப்பியதனால் அலைபேசிகளில் வாழ்த்துகள் அனுப்புவது குறைந்து போனது என்று சுவிஸ்காமின் தகவல் தொடர்பாளர் செப் ஹுபெர் கூறினார்

அமெரிக்க மருந்து பொருட்களை இறக்குமதி செய்த ஈரானின்பெண்


மருந்து பொருட்கள் மீது விலை உயர்வு அறிவித்த ஈரான் பெண் அமைச்சரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். ஈரான் அதிபராக முகமது அகமது நிஜாத் (55) உள்ளார்.
இவரதுஅமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக மெரீஷா வாஹில் தஸ்தர்டி உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரான இவர். நாட்டில் மருந்து பொருட்கள் மீது விலை உயர்வை அறிவித்தும், ‌2.4 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கத்திய மருந்து பொருட்கள் இறக்குமதி செய்தும் உத்தரவிட்டார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அணுசோதனை செய்வதை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதால் அமெரிக்க ‌மருந்து பொருட்கள் இறக்குமதிக்கும் அனுமதியளித்ததால் ஆத்திரமடைந்த அதிபர், இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

வியாழன், 27 டிசம்பர், 2012

மத்திய அரசை வெளுத்து வாங்கிய ஜெயலலிதா. பிரதமர் அதிர்ச்சி.

 
மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார். அவருடைய பேச்சை கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் இறுகிய முகத்துடன் காணப்பட்டார்.
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 10 நிமிட பேச்சு: கடந்த ஆண்டு நடைபெற்ற இதே கூட்டத்தில் தமிழக அரசு அளித்த பரிந்துரைகளில் ஒன்றைக் கூட பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதன் மூலம் மாநில அரசுகளின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டங்களை வகுக்கும் மத்திய அரசு, மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்துகிறது. இப்படி செய்தால் எவ்வாறு வறுமை ஒழியும்? மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒவ்வொரு சிறு கோரிக்கைகளும், தேவைகளும் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமருக்கு கோரிக்கை வைத்தும், அதனை பல முறை நினைவுப்படுத்தியும், இதுவரை ஒரு பதில் கூட மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு அனுப்பப்படவில்லை.
தமிழகத்தில் நடைபெற வேண்டிய பல்வேறு கட்டமைப்புப் பணிகள், மத்திய அரசின் நிதியுதவி சரிவரக் கிடைக்காமல் காலதாமதம் ஆகின்றன. காவிரியில் இருந்து தண்ணீரை தமிழகத்துக்குக் கிடைக்க வகை செய்யும் பணியிலும், இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காக்கும் பணியிலும் மத்திய அரசு தோல்வியையே அடைந்துள்ளது. அரசு கேபிள் டிவியை, டிஜிட்டல் மயமாக்க எத்தனையோ முறை விண்ணப்பித்தும், மத்திய அரசு இதுவரை ஒரு பதிலும் அளிக்கவில்லை. இதற்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்களின் டிவி நெட்வொர்க் பயன்பெற வேண்டும் என்பதே காரணமாக உள்ளது.
எப்போதுமே வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்க எண்களில் நிர்ணயிக்க வலியுறுத்துவது வழக்கம். ஆனால் எப்போதையும் விட 9% இருந்து இந்த ஆண்டு 8.2% ஆக வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. நேரடி பணப் பரிமாற்ற திட்டம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்த இயலாது என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. குறிப்பாக உணவுப் பொருள் மானியத்துக்கு இது ஏற்றதாக அமையாது. ஆதார் திட்டத்தில் உள்ள குறைபாடுகளால், அதன் லட்சியம் நிறைவேற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இந்தியாவில் நதிநீர் பங்கீடு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எப்போதும் போலவே 12வது திட்ட ஆவணத்திலும் அதுபற்றிய ஒரு விவரமும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறை குறித்து பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும், இதுவரை மத்திய அரசு சார்பில் நேர்மறையான பதில் இல்லை. எனவே, தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார். ஜெயலலிதா பேசிய 10வது நிமிடத்தில் மணி அடிக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டால் அதிருப்தி அடைந்து வெளிநடப்பு செய்தார். மேலும் தாம் கொண்டு வந்த அறிக்கையை முழுவதும் படித்ததாக பதிவு செய்து கொள்ளுமாறு கூறிவிட்டு விருட்டென வெளியேறிவிட்டார் ஜெயலலிதா

பின்லேடனிமே ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பாகிஸ்தான் அரசு அதிகாரி.


சர்வதேச தீவிரவாத தலைவர்... அமெரிக்காவையே மிரட்டிய கும்பலின் மூலகர்த்தா... என்று உலகத்தையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த மனிதரான ஒசாமா பின்லேடனிடமே, பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ரூ.50,000 லஞ்சம் பெற்றது, அவரது டைரி குறிப்பில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை தேடி, அமெரிக்க ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ரகசிய பங்களாவில் தங்கியிருந்த அவரை கடந்த ஆண்டு மே 2ம் தேதி, அமெரிக்க அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். பின்லேடன் தங்கியிருந்த ரகசிய பங்களாவை, இந்த ஆண்டு துவக்கத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். பின்னாளில் இதை நினைவிடம் ஆக்கி பிரச்னை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தாலேயே இந்நடவடிக்கையை பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

14 அடி உயரச் சுற்றுச்சுவர், இரும்புவேலியுடன் கூடிய 3 மாடி பங்களாவை இடிக்கும் பணியின்போது, பின்லேடனின் டைரி மற்றும் 1,30,000 ஆவணங்கள் கிடைத்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த டைரியில் இருந்த ஒரு குறிப்பு பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் உருது பத்திரிகையான ஜங் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

அபோதாபாத் பங்களாவை கட்டுவதற்கு, கிராம நிர்வாக அதிகாரி அனுமதி வழங்கவில்லை. அவரிடம் வலியுறுத்தி கேட்ட நிலையில், ரூ.50,000 கேட்டார். அதன்படி, அவருக்கு ரூ.50,000 தரப்பட்டது. ஆளானப்பட்ட பின்லேடனிடமே ரூ.50,000 பெற்ற அந்த கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் பின்னாளில் கைது செய்துள்ளனர். வீட்டை கட்டுவது யார் என்ற எந்த விவரமும் தெரியாமல், லஞ்சத்தை பெற்றுக் கொண்டு வீட்டை கட்ட அந்த கிராம நிர்வாக அதிகாரி அனுமதி அளித்துள்ளார். பாகிஸ்தான் அதிகாரிகள் சகஜமாக லஞ்சம் வாங்குவது பின்லேடனு க்கு நன்றாக தெரிந்துள் ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

மோசடி செய்த இந்தியருக்கு 45 ஆண்டுகள் தண்டனை?


அமெரிக்க பங்குச்சந்தை உள்வணிகத்தில் ஈடுபட்டதாககுற்றம்சாட்டப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியரும் ஹெட்ஜ் நிதிய மேலாளருமான மேத்யூ மர்டோமா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மர்டோமா மீது, நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் வரும் ஜனவரி முதல் வாரம் வழக்கு தொடரப்பட்ட உள்ளது.
அல்ஸீமர் எனப்படும் மறதி நோய்க்கு மருந்து தயாரிப்பு குறித்து டாக்டரின் அறிக்கையை அறிந்து கொண்டார் மர்டோமா. இதனால் ரூ.1,518 கோடி ஹெட்ஜ் நிதியம் நஷ்டமடையும் எனத் தெரிந்து கொண்டு அதை தவிர்க்கும் முயற்சியில் விதிகளை மீறி அவர் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அவருக்கு ரூ. 27.50 கோடி ரொக்க ஜாமீன் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மர்டோமா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.27.50 கோடி அபராதத் தொகையும் விதிக்கப்படும் என்று தெரிகிறது. மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டும்.
பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக அமெரிக்க பங்குச் சந்தையும் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

புதன், 26 டிசம்பர், 2012

குட்டி பாப்பா வேண்டும் கிறிஸ்துமஸ் தாத்தாவிடம்

கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் தம்பி, தங்கை மற்றும் அப்பாவை கேட்டதாக பிரிட்டன் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் விழாவின் போது, கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி குழந்தைகளை மகிழ்விப்பார்.
இந்நிலையில் பிரிட்டன் பத்திரிக்கை ஒன்று, கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் எதை பரிசாக கேட்பீர்கள்? என்பது குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டது.
மூன்று வயது முதல் 12 வயதுடைய சிறார்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
இதில் குழந்தைகள், யானை, குதிரை, கழுதை என விதவிதமாக கேட்டனர். இன்னும் சில குழந்தைகள் போன், கை கடிகாரம், சிறிய கணனி என கேட்டுள்ளனர்.
பெரும்பாலான குழந்தைகள் எனக்கு தம்பி பாப்பா வேண்டும், தங்கை பாப்பா வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
ஒரு சிலர் எனக்கு அப்பா வேண்டும், அம்மா வேண்டும் என கோரியுள்ளனர்

செவ்வாய், 25 டிசம்பர், 2012

அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்

வாசகர்கள் அன்பர்கள் நண்பர்கள்உறவு ஒன்றியங்கள் அனைவர்க்கும்எமது நத்தார் பண்டிகை நல் வாழ்த்துக்கள் ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் யேசு பிறந்த இனிய நத்தார் வாழ்த்துக்களை எமது உறவுகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி சாந்தியும் சமாதானமும் மிக்க தேசமொன்றில் வளமும் நிறைவும் கொண்ட நல்வாழ்விற்காய் இறையாசி வேண்டி பிரார்த்திக்கின்றது
உறவு இணையங்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள்  நன்றி.565656
 

திங்கள், 24 டிசம்பர், 2012

நுனாவத் விமான விபத்தில் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு

கனடாவில் ஹட்சன் வளைகுடாவில் உள்ள பெல்ச்சாத் தீவில் நுனாவத் என்ற இடத்தில் நடந்த விமான விபத்தில் விசாரணை அதிகாரிகள் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்தனர்.

பெரிமீட்டர் என்ற தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் பெல்ச்சார் தீவில் சானிகிலுக் என்ற இடத்தில் திடீரென்று தரையில் விழுந்தது.

இதில் இரண்டு விமானிகளும் ஒரு குழந்தை உட்பட ஏழு பயணிகளும் இருந்தனர்.

குழந்தை தவிர மற்ற அனைவரும் உயிர் பிழைத்தனர் என்று விமான நிறுவனத்தின் தலைவர் மார்க்வெஹ்ர்லே தெரிவித்தார்.

இந்தக் கறுப்புபெட்டி கிடைத்த பின்பு விசாரணை முழு வீச்சில் நடைபெறுவதாக போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தகவல் தொடர்பாளி கூறினார்.

கனடா காவல்துறையினர், இந்தத் தனி விமானத்தில் ஒன்பது பேர் இருந்ததாகவும் விபத்தில் எட்டுப்பேர் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தனர்.





மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு?

 
பிரிட்டனில் செவிலியர் ஜெஸிந்தாவின் மரணத்திற்கு காரணமாக அவுஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து பொலிசார் பரிசீலித்து வருகின்றனர். பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜெஸிந்தா.
அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று பேசி கேத் குறித்த தகவல்களை சேகரித்தனர்.
அறிவிப்பாளர்களுக்கு, கேத் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தது ஜெஸிந்தா தான் என தெரியவந்தது.
இதனையடுத்து மன உளைச்சலில் ஜெஸிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது லண்டனில் பெரிய பிரச்னையாக வெடித்தது. ஜெஸிந்தா மரணம் குறித்து லண்டன் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
வானொலி அறிவிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியுமா என கேட்டு, Prosecution துறையிடம் கருத்து கேட்டுள்ளனர். அந்த துறை ஒப்புதல் அளித்தால், ரேடியோ ஜாக்கிகள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிகிறது.
இதற்கிடையே ஜெஸிந்தா மரணம் தொடர்பாக கிங்எட்வர்டு மருத்துவமனை மற்றும் அவுஸ்திரேலியா ரேடியோ நிறுவனத்துக்கு 60 கேள்விகளை கேட்டு ஜெஸிந்தா குடும்பத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்

ஜெயிலில் இருக்கும் கொலைகாரனை காதலிக்கும்



சகோதரியை கொலை செய்தவனை, அர்ஜென்டினாவை சேர்ந்த பெண், திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக உள்ளார்.தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவின், சான்டா குருஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டர் சிங்கோலானி. இதே பகுதியை சேர்ந்த மாடல் அழகி ஜொகானாவை கொலை செய்ததாக, 13 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.ஜொகானாவும், எடித் கசாஸ் இருவரும் இரட்டை சகோதரிகள். 2010ம் ஆண்டு, ஜூலை மாதம் ஜொகானா, படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே, கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்டரை, தீவிரமாக காதலிக்கிறார் ஜொகானாவின் சகோதரி, எடித் கசாஸ். இதற்கு எடித்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், விக்டரை மணக்கும் திட்டத்தை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார் எடித்."என் காதலர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது' என, கூறிய எடித், 21ம்தேதி, காதலர் விக்டரை மணக்க தயாராக இருந்தார்.பொதுமக்கள் முன்னிலையில், இந்த திருமணம் நடப்பதற்கு, அர்ஜென்டினா கோர்ட், தடை விதித்துள்ளது. கடைசி நேரத்தில் திருமணம் நின்றதால், விக்டர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வரும், 31ம்தேதி, இந்த திருமணம் குறித்து, கோர்ட் தனது இறுதி தீர்ப்பை அளிக்க உள்ளது.

குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு

         
 
ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமை கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக்கொண்ட இலங்கையர்களே இவ்வாறு குடிவரவு குடியகழ்ல்த் திணைக்களத்தின் ஊடாக இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
எனினும், தமது கோரிக்கைக்கு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் சாதகமான பதில் எதனையும் அளிக்கவில்லை என வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் ஏற்கவே இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து வகித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு 30 நாள் வீசாவே வழங்கப்படுகின்றது.
இதற்காக 50 அமெரிக்க டொலர் அறவீடு செய்யப்படுகின்றது.
வீசா காலம் முடிவடைந்ததன் பின்னர் தங்கியிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்களவன்!


கிளிநொச்சியில் 4 வயதுச் சிறுமி மீது சிங்கள காமுகன் ஒருவன் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளான். கிளிநொச்சிக்கு வரும் சிங்கள முஸ்லீம் வியாபாரிகள் அப்பாவி தமிழ் மக்கள் மீது பாலியல் பலாத்காரம் புரிவதாகவும், அம்மக்களிடம் கொள்ளையடித்து செல்வதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கள இராணுவத்தினர் அவர்களுக்கு துணையாக இருப்பதால் யாரும் முறைப்பாடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முதல் காரைநகருக்கு வந்த முஸ்லீம் இரும்பு வியாபாரிகள் ஊனமுற்ற தமிழ் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில் தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்கள முஸ்லீம் காடையர்கள் அப்பாவி தமிழ் மக்கள் மீது தமது அட்டகாசத்தை காட்டி வருகின்றனர்.

கிளிநொச்சியில் 4வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்களவன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ள போதிலும் இவன் சிங்களவன் என்பதால் விரைவில் விடுதலை செய்யப்படுவான்

அனர்த்த பிரதேசங்களைப் பார்வையிட்ட??



மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தின் பனிச்சங்கேணி பாலம் பெருக்கெடுத்து வீதி முற்றாக தடைப்பட்ட நிலையில் வாகரைப் பிரதேசத்தின் திருமலை எல்லை பகுதி வெருகல் மகாவலி கங்கை பெருக்கெடுத்த நிலையிலும், பொலநறுவை பாராக்கிரம சமூத்திரம் பெருக்கெடுத்து கதிரவளி, புச்சாக்கேணி, அம்பந்தனாவெளி, வாகரை, தட்டுமுனை, ஊரியன்கட்டு, புளியங்கண்டலடி, கண்டலடி, பால்ச்சேனை, பனிச்சங்கேணி, காயான்கேணி, இறாலோடை, ஆலங்குளம், மாங்கேணி, மாவடிஓடை, மதுரங்கேணிக்குளம், கட்டுமுறிவு, தோணிதாட்டமடு, வாகரை மத்தி உட்பட்ட பல இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது{புகைப்படங்கள்,}.


இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இவ்விடங்களில் சிலவற்றுக்கு சென்று பார்வையிட்டார். அதாவது கதிரவெளி, அம்பந்தனாவெளி, பால்சேனை, ஊரியன்கட்டு, புளியங்கண்டலடி, வாகரை மத்தி, தட்டுமுனை, பெல்லடிமடு. பனிச்சங்கேணி, மாவடிஓடை, மாங்கேணி, காயான்கேணி ஆகியவற்றை பார்வையிட்டு அவர்களுக்கான அடிப்படை உதவிகளை வழங்கல் சார்பாக வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.இராகுலநாயகியுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் உரையாடி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை வாகரைப் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உடனடியாக சமைத்த உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகளை புரியுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் அவசர வேண்டுகோள் விடுத்தார்.


ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி

இத்தாலி பிரதமர் மரியோ மோன்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ஜியார்ஜியோ நெபோலிடனா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜனாதிபதியை சந்தித்த மரியோ மான்டி ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொடர்ந்து காபந்து அரசின் பிரதமராக நீடிக்குமாறு மரியோ மான்டியை கேட்டுக்கொண்டார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பாக இரு அவைகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி ஆலோசனை நடத்தி முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விலகிய மரியோ மான்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சியில் இருந்த கடந்த 13 மாத காலகட்டம் மிகவும் கடினமாகவும், வசீகரமாகவும் இருந்தது. நான் கொண்டு வந்த பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை, அடுத்து பொறுப்பேற்கும் தலைவரும் முன்னெடுத்துச் செல்வார் என நம்புகிறேன்.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளும் முயற்சியில் சர்வதேச அளவில் நம்பகமான நாடாக இத்தாலி மாறியுள்ளது என்றார்.
மரியோ மோன்டியின் அரசுக்கு அளித்த ஆதரவை முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சி திரும்பப் பெற்றது. இதையடுத்து, பெரும்பான்மை பலத்தை இழந்த மாண்டி தானாகவே முன்வந்து ராஜினாமா செய்து விட்டார்

சட்ட விரோதமாக நுழைய முயன்ற 11 பேர் சுட்டுக் கொலை

ஈரான் நாட்டு எல்லைக்குள் சட்ட விரோதமாக கடக்க முயன்ற 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியிலிருந்து வந்த 11 பேர் ஈரான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றனர்.
அப்போது அப்பகுதியிலிருந்து மறைந்திருந்த மர்ம கும்பலொன்று 11 பேரையும் சுட்டு கொன்று விட்டனர்.
இந்த சம்பவத்துக்கு இதுவரையிலும் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து ஈரான், துருக்கி வழியாக ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக பலரும் நுழைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு தாக்குதலில் அமைச்சர் உட்பட 9 பேர் பலி


பாகிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், அமைச்சர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பாகிஸ்தானில் பேஷ்வார் மாகாணத்தின் கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் பேஷ்வார் மாகாண அமைச்சரும், அவாமி தேசிய கட்சியின் முன்னணி தலைவருமான பஷீர் பிலவ்ர் கலந்து கொண்டார்.
அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில், அமைச்சர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர், 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3 முறை பஷீர் பிலவ்ருக்கு தெஹ்ரீக்- இ- தலிபான் பாகிஸ்தான் இயக்கம் கொலை மிரட்டல் விடுத்திருந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு அந்த இயக்கம் தான் காரணமாக இருக்க வேண்டும் என்றும் தகவல் துறை அமைச்சர் இப்திகார் ஹுசைன் கூறியுள்ளார்{புகைப்படங்கள்,}.