Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 14 ஜூலை, 2012

காதலிக்கு குழந்தை ஏற்க மறுக்கும் காதலன்! புதுக்குடியிருப்பில் சம்பவம்

கோம்பாவில் 04ம் வட்டாரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
2008ம் ஆண்டு காலப்பகுதியில் பல இடப் பெயர்வுகளை சந்தித்து முள்ளிவாய்க்கால் வரை சென்று இறுதியாக 2009ம் ஆண்டு 4ம் மாதகாலப்பகுதியில் வவுனியா செட்டிகுளம் வலயம் டீ கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தற்காலிகமாக வசித்துவந்தபோது நலன்புரி நிலையத்தில் அ.ரஞ்சித் என்ற வேலுகுமாரசாமி சரிதா வயது 21என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பாலியல் வல்லுறவுக்குற்படுத்தியுள்ளார்.
அதன் பின் 2012.03.22ம் திகதி அன்று குறித்த பெண் தனது தாய் தந்தையுடன் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு புதுக்குடியிருப்பிற்கு சென்று தனது தாய் தந்தையுடனேயே வசித்து வந்தாலும் நலன்புரி நிலையத்திலிருந்த அ.ரஞ்சித் என்ற நபருடன் தொலைபேசியில் தொடர்பிலேயே இருந்து வந்தார்.
அப் பெண் கர்ப்பமாகியுள்ளமையை அறிந்த அந்நபர் தொலைபேசி அழைப்பை துண்டித்து பிறக்கப்போகும் குழந்தைக்கும் தனக்கும் ஒருவித தொடர்பும் இல்லையென்று கூறி குறித்த பெண்ணை விட்டு முற்றுமுழுதாக விலகிவிட்டார்.
தற்போது குறித்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட பொது வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறந்த குழந்தைக்கு பெயர்சூட்டுவதற்கு தந்தை பெயர் வேண்டுமென்ற கட்டாயத்தில் குறித்த பெண்ணிண் தாய் தந்தை அ.ரஞ்சித் என்பவரிடம் சென்று மண்றாடிக் கேட்ட போதும் தனக்கு திருமண வயது வரவில்லை என்றும் குழந்தைக்கு தான்பொறுப்பு கூறமுடியாதென்றும் இந் நிலையில் பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவது முதல் பிறப்பத்தாட்சி பத்திரம் பெறுதல் வரை கேள்விக்குறியாகவே உள்ளது

யாழ். பிரதான வீதியின் கரையில் உள்ள வீடுகளின் சுவர்கள் கருமை நிறத்தில்

யாழ். பிரதான வீதியில் வீதி அபிவிருத்திப் பணிகளின் போது வீதிக்கு இயந்திரம் மூலம் தார் தெளிக்கும் செயற்பாட்டினால் வீதிக்கரையில் உள்ள மக்கள் விசனத்துக்குள்ளாகியுள்ளனர்.

யாழ் கண்டி வீதியில் தற்போது வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது. வீதிக்கு தார் தெளிக்கும் செயற்பாடு இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்போது வீதிக்கரையில் உள்ள பரவி வீடுகளின் மதிற்சுவர் மீது தார் தெளிபட்டுள்ளது. இதனால் மதிற்சுவர் மட்டுமன்றி வீட்டின் சுவரும் கருமை நிறமாகக் காட்சியளிக்கின்றன.

இதனால் பொது மக்கள் விசனமடைந்துள்ளனர். ஆயினும் உரிய அதிகாரிகள் பார்வையிட்டு மீண்டும் வர்ணம் பூசும் நடவடிக்கை மேற்கொள்ள உறுதியளித்ததுடன், சில வீடுகளுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும், வீடுகளுக்கும் சுவருக்கும் வர்ணம் பூசி நிவாரணம் வழங்கப்பட்ட போதிலும் வீட்டிற்கு மேலும் அழகைத் தந்த பூச் செடிகள் மீதும் தார் பரவி அவை தீயில் கருகியது போன்று காட்சியளிக்கின்றன. இதனால் அம் மக்கள் தமது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
 

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடை வழங்குமாறு கோரிக்கை

மன்னார் முச்சக்கர வண்டிச் சாரதிகளை அடையாளம் காணும் வகையிலும்,மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவில் உள்ளவர்களையும் அடையாளம் காணும் வகையில் அவர்களுக்கு சீருடைகளை வழங்க உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என மன்னார் மக்களும்,சமூக ஆர்வலர்களும் உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தொடர்ந்தும் மன்னாரில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலரால் இளம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதும் மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிக்கின்றனர்.
மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாகவுள்ள முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து சேவையாற்றி வரும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சிலர் மீதே குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு அதன் தலைவரும்,முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களும் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருவதோடு தம்மீது சுமத்தப்பட்ட பழியால் தமது தொழில் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறித்த தரிப்பிடத்தில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலர் செய்கின்ற குறித்த செயலினால் அனைவரும் பாதிக்கப்படுவதாக குறித்த தரிப்பிடத்தில் உள்ளோரால் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே குறித்த குற்றச் செயல்;களில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளை அடையாளம் காண்பதற்காக அவர்களுக்கு இலக்கங்கள் பிரசுரிக்கப்பட்ட சீருடையினை வழங்க மன்னார் நகர சபையும்,மன்னார் முட்ச்சக்கர வண்டி சங்கமும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் மக்களும்,சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.