Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 16 ஜூலை, 2012

மரத்திலிருந்து பேரீச்சம் பழம் பறித்து சுவைத்தார் மேர்வின் (பட இணைப்பு)

16.07.2012  பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த அமைச்சர் மேர்வின் சில்வா பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் காத்தான்குடி நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரிச்சை மரத்தில் பேரிச்சம் பழங்களைப் பறித்து சுவைத்துப்பார்த்தார்

இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ,பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் மேர்வின் சில்வா காத்தான்குடியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார்.
___

தேங்காய்களுக்குப் பதிலாக உடைக்கப்பட்ட தற்பூசணி

படத்தைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு கோயிலுக்கு தேங்காய் உடைப்பதற்குப் பதிலாக கோடைகாலம் ஆகையால் தற்பூசணிகளை உடைத்திருக்கின்றார்கள் போலும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஆனால் உண்மை அதுவல்ல, ஹென்டக்கி எனும் இடத்தில் வியாபாரத்திற்காக தற்பூசணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி தடம்புரண்டதை அடுத்து அதில் ஏற்றப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தற்பூசணிகளும் கீழே விழுந்து சிதறியுள்ளன
o

பிரபலங்களை உயிருடன் புதைப்பது போன்ற சித்திரிக்கப்பட்ட புகைப்படங்கள்: சிலி நாட்டு பத்திரிக்கை எழுப்பிய சர்ச்சை

 16 யூலை 2012
உலகளவில் புகழ் பெற்ற பிரிட்டன் இளவரசர் வில்லியம்- கேட், எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே ஆகியோரை உயிருடன் புதைப்பது போன்ற புகைப்படங்களை சிலி நாட்டு பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது.
இப்புகைப்படங்களின் விபரம்: முதல் புகைப்படத்தில் பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவியும் இளவரசியுமான கேட் வில்லியம் ஆகிய இருவரையும் சமீபத்தில் மறைந்த பிரிட்டனின் பிரசித்த பாடகி அமி வைன்ஹவுஸ் புதைகுழி ஒன்றில் புதைப்பது போல் அமைந்துள்ளது.
இரண்டாவது படத்தில் சமீபத்தில் கொல்லப்பட்ட லிபியா சர்வாதிகாரியான கடாஃபி எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியும் இராணுவத் தளபதியுமான ஹோஸ்னி முபாரக்கை புதைகுழியில் புதைப்பது போல் அமைந்துள்ளது.
மூன்றாவது படத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான ஸ்டீவ் ஜொப்ஸ் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் மற்றும் தலைவர் ஜூலியன் அசாஞ்சேயை புதை குழியில் புதைப்பது போலவும் உள்ளது.
இப்புகைப்படங்கள் போஃட்டோ ஷாப் மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்டது என்றும் விளம்பர நோக்கத்துக்காக சிலி நாட்டு பத்திரிகையில் வெளியாகியிருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

டி.வி பார்த்துக் கொண்டே தந்தையை சுட்டுக்கொன்ற 3 வயது சிறுவன்

டி.வி பார்த்துக் கொண்டே தந்தையை சுட்டுக்கொன்ற 3 வயது சிறுவன்
16 யூலை 2012
டி.வி பார்த்துக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் தந்தை பலியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவர் மிக்கேல் பேலெஸ் (வயது 33). இவர் தனது இரண்டு மகன்களுடன் அருகில் அமர்ந்து வீட்டில் டி.வி நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை அருகில் வைத்திருந்தார். அப்போது துப்பாக்கியை எடுத்து வைத்து அவரது 3 வயது சிறுவன் டி.வி. பார்த்தான்.
டி.வி. நிகழ்ச்சியில் மும்முரமாக இருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி விசையை அழுத்தினான். குண்டுகள் நிரப்பப்பட்டு இருந்ததால் துப்பாக்கி வெடித்து குண்டு மிக்கேலின் உடலில் பாய்ந்தது.
அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதைப்பார்த்த 2 சிறுவர்களும் செய்வதறியாது கதறி அழுதனர். பொலிசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஆபத்தான பொருட்களை சிறுவர்கள் கண்ணில் படும் வகையில் வைக்க கூடாது, என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கனடாவில் வெப்பநிலை உயரும் அபாயம்: மக்களுக்கு எச்சரிக்கை

 16யூலை 2012
கனடாவில் ஒண்டோரியாவிலும், கியூபெக்கிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கனடாவின் சுற்றுச் சூழல் துறை தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் கியூபெக்கில், குறிப்பாக அதன் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் வெப்பநிலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அதிக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டது. வயதானவர்களும், சிறுவர்களும் வெப்பம் தாக்காத வண்ணம் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டது.
நேற்று மொன்றியல் நகர மக்கள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க விரும்பி கடற்கரைகளில் குவிந்தனர்.
அங்கு வெயில் 33 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த போதிலும், அதனால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்தது.
ஒட்டாவா மாகாணத்தில் ரிடியு ஆற்றின் நீர்மட்டம் வெப்பத்தின் தாக்கத்தால் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட வறட்சி எச்சரிக்கை விடப்பட்டது.
தெற்கு ஒண்டோரியாவிலும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இப்பகுதியினர் தங்கள் வீடுகளை குளிரூட்டவும், மின்விசிறி பொருத்தவும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
ஒண்டோரியோவின் கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் டொரொண்டோ, கிங்ஸ்ட்டன் மற்றும் பெலிவெலி நகரங்களில் அலைகாற்று வீசும் அபாயமும் உள்ளது. வெயில் அதிகரிப்பதோடு அனல் காற்று வீசுவதும் அதிகரிக்கும்.
மேலும், தற்போது சில வாரங்களாக கனடாவின் பல பகுதிகளிலும் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது

கூகுளும் ஓரினச் சேர்க்கையாளர்களும்

16.07.2012இணைய ஜாம்பவானான கூகுள் புரட்சிகரமான பிரசாரத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமையை வலியுறுத்தும் பொருட்டே இப்பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இப் பிரசார நடவடிக்கைக்கு 'காதலை சட்டபூர்வமானதாக்கு' (Legalize Love) எனப் பெயரிட்டுள்ளது.

உலகில் பலநாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக கூகுள் தெரிவிக்கின்றது.

இப்பிரசார நடவடிக்கையானது ஜூலை 7ஆம் திகதி போலந்து மற்றும் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் ஓரினச்சேர்க்கை சட்ட விரோதமானதாகக் காணப்படுவதுடன், போலந்தில் ஓரினத்தம்பதிகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லையெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும் இப்பிரசார நடவடிக்கைகளைப் பல்வேறு நாடுகளிலும் முன்னெடுக்கவுள்ளது

சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை

16.07.2012  சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க வேணடுமென சிறுவர் அபிவிருத்தி மற்றம் மகளிர் விவகார அமைச்சு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கிலேயே இப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்வைத்த இப் பரிந்துரையை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும் அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுவர்களை கடத்துதல், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளõகும் நபர்கள் அல்லது குழுக்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் நபருக்கே இவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அத்தோடு பிணை பெற்றுக் கொள்வதை தடுப்பதற்கு பிணை வழங்கும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சமூகத்தில் தெளிவுபடுத்தல்களையும் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தும் திட்டங்களை நாடு பூராகவும் விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பிள்ளயார் பாடல் பக்திப்பாடல்கள்

மனம் உருகிவணங்கி வந்தால் வேண்டும்வரம் அருள்வார்