Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

சேப்பகிழங்கு கீரை

சேப்பகிழங்கு,சாமை கிழங்கு, யானை கால் செடி என பலப்பெயர்களில் அழைக்கபடுகிறது இது இந்தியா முழுவதும் மருந்திற்காகவும்.உணவிற்காகவும் பயிரிடப்படுகிறது.இந்த யானை கால் செடி தரைக்கு அடியில் கிழங்கை விளைவிக்ககூடியது...இதன் கிழங்கை பயன்படுத்தும் அளவிற்கு கூட இதன் கீரையை அதிகம் விரும்புபவர்கள் யாரும் இல்லை.சேப்பகிழங்கில் ஆயிரம் வகை உள்ளது..இதன் இலையை பொருத்து கிழங்கு வகைபடுத்தபடுகிறது.
சேப்பகிழங்கில் புரதம் கொழுப்பு தாது உப்புகள்,நார்சத்து மாவுச்சத்தும்,காணப்படுகின்றன.

சேப்பங்கீரை இலைச்சாற்றை விந்தணு பாதிக்கப்பட்ட ஆண்களுக்குத் தர விந்து கட்டும். இது மூல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். சேம்புக்கீரையுடன் புளி சேர்த்து சமைத்து உண்ண வெளித்தள்ளிய மூலமும் ரத்தக்கடுப்பும் நீங்கும். இந்த கீரையை சமையலில் சேர்த்துக்கொள்ள மேக சாந்தி குணமடையும். மேலும் மூலவாய்வு, மூலச்சூடு, ரத்த மூலம், மூளை மூலம் இவைகள் நீங்கும்.

குளவி, வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரையின் சாற்றைப் பூச நஞ்சு இறங்கி வேதனை நீங்கும்.

சேம்பங்கீரை சிறந்த மூலிகையாகவும் செயல்படுகிறது. இது பலவித நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. இந்த இலையில் சாற்றை வெட்டுக்காயங்களுக்குப் பூச விரைவில் காயங்கள் ஆறும். தசைநார்களை வேகமாக வளரச் செய்யும்.

இந்த இலையின் சாற்றினை ரத்தம் சொட்டும் இரத்தக் காயங்களின் மீது பூச இரத்தம் ஒழுகுவது நிற்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலிக்கு இதன் சாற்றைக் கொடுக்க வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும். கீரையையும், தண்டையும், வேகவைத்த நீரில் நெய் கலந்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும். காதுவலி, காதில் சீல் வடிதல், போன்றவற்றிர்க்கு கீரை சாற்றினை இரண்டொரு துளி விடலாம். இதனால் வலி நீங்கும்.

கண்களில் ஏற்படும் சிவப்புக்களை போக்கும் ஆமணக்கு


  201208-06 ஆமணக்கு விதைகள் மிகுந்த நச்சுத்தன்மைகளைக் கொண்டவை. இரண்டு ஆமணக்கு விதைகள் மரணத்தைக் கொண்டுவரப் போதுமானவை. ஆனால், இவற்றைக் கொதிக்க வைத்து எண்ணெய் வடித்தெடுக்கும்போது அதில் நச்சுக்கள் இருப்பதில்லை. ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து எண்ணெய் வடித்து எடுக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் குடல் ஏற்றம், வயிற்று வலி, அல்சர் புண்கள், கண், மூக்கு, காது, வாய்ப் பகுதிகளில் உருவாகின்ற எரிச்சல்களைப் போக்கி குணப்படுத்த உதவுகின்றது. இவை நமது உடலைப் பொன்னிறமாக்குகின்றது. குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கும் வயிறு கழியவும், பேதியைக் கொண்டு வரவும் இந்த எண்ணெயைக் கொடுப்பார்கள். பசியின்மையைப் போக்குகிறது. அதிகமான சளித்தொல்லை இருந்தாலோ அல்லது இரைப்பு, இருமல் இவைகளால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ சிற்றாமணக்கு இரண்டு பங்கும், தேன் அரைப்பங்கும் சேர்த்து கலந்து கொடுக்கலாம். மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு அரைத்தேக்கரண்டி அளவு கொடுப்பார்கள். தேன் கலந்தும் கொடுக்கலாம். ஆமணக்கு எண்ணெயை தேன் அல்லது உப்பு கலந்த தண்ணீரில் சுக்கு நீர், சோம்புத் தீநீர், ஓமத்தீநீர், எலுமிச்சம் பழரசம் மற்றும் சர்க்கரை கலந்த நீர், பால், தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து கொடுக்கலாம். தாய்மார்களின் மார்பக காம்புப் பகுதியில் புண், வீக்கம் அல்லது வெடிப்பு இருந்தால் இந்த எண்ணெயை துணியில் நனைத்துப் போடலாம். பலவிதமான தைலத் தயாரிப்புகளிலும் ஆமணக்கு எண்ணெய் கலக்கப்படுகின்றது. தொடர்ந்து மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடுவதால் அவர்களின் கண்கள் சிவப்பாகக் காட்சியளிக்கும். சிற்றாமணக்கு எண்ணெயையும், தாயப்பாலையும் கூட்டி, குழைத்து கண்களில் விடுவதால் கண்களில் காணப்படும் சிவப்பு நிறம் போய்விடுகிறது. தூசுக்கள், கற்கள் விழுந்து விடுவதால் கண்கள் சிவந்து போனாலும் இந்த எண்ணெயை விடலாம். நமது உடலின் மேல் தோல் உராய்ந்து இரத்தம் கிளம்பத் தொடங்கினால் இந்த எண்ணெயைத் தடவி, எரிச்சலைப் போக்கி குணப்படுத்தலாம். இதனால் அந்த இடம் முன்பிருந்த நிலையை அடையும். ஆமணக்கு நெய் மூன்று பங்கு, எண்ணெய் இரண்டு பங்கு, பசுவின் நெய் ஒரு பங்கு கலந்து கொடுப்பதன் மூலம் வலிப்பு நோய் தீரும். ஆமணக்கு நெய் இரண்டு பங்கு, எண்ணெய் மூன்று பங்கு அளவிற்குக் கலந்து கொடுத்து வந்தால் சளித் தொல்லையால் உண்டாகும் நோய்கள் நீங்கி குணம்பெறும். 30 மில்லி ஆமணக்கு எண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ, இஞ்சிச் சாறு கலந்தோ கொடுத்து வந்தால், நான்கைந்து முறை பேதி உண்டாகும். பசியின்மை வயிற்று வலி ஆகியவையும் தீரும்.

வடக்குக் கடலில் கண்காணிப்பை மேலும் அதிகரிக்கிறது கடற்படை; இரு புதிய தளங்கள் அமைப்பு

05.08.2012.
news
இலங்கைக் கடற்படை யினர் வடக்கில் மேலும் இரண்டு கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள் ளனர். வடக்குக் கடலில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் இந்தத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தக் கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் திகதி இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பூநகரிக்கு அண்மையில் உள்ள கல்முனையிலும், சுண்டிக்குளத்திலும் இந்தப் புதிய தளங்கள் அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.அதேவேளை மாதகல் சம்பில்துறையில் இலங்கைக் கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கும் கடற்படைத் தளபதி பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு கடற்படையினரால் தென்பகுதியில் இருந்து வரும் பௌத்த யாத்திரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு நிலையத்தையும் அவர் பார்வையிட்டுள்ளார் எனத் தெரியவருகிறது

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அபிநயா. 05 .08 .2012 .

                    நவற்கிரியைபிறப்பிடமாகவும்
சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக க் கொண்ட
அருளானந்தம்
 தம்பதிகளின் புதல்வி அபிநயாதனது நான்காவது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா அம்மா அண்ணா அக்கா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் தேவன் மாமா குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்

துளசிதரன் சாந்திராஜாவை நாடுகடத்த அவுஸ்ரேலியா முடிவு _

_
05.08.2012.28 தொன் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப முயற்சித்த மெல்பேர்ன் சர்வதே சபாடசாலையின் முன்னாள் தலைவரான துளசிதரன் சாந்திராஜா என்பவரை இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம், கடந்த முதலாம் திகதி தீர்மானித்துள்ளது.

இவரை நாடு கடத்தும் உத்தரவை அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் நிக்கலோ ரொக்ஷன் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக விசா அனுமதியில் அவுஸ்திரேலியா சென்றிருந்த இந்த நபர், மெல்பேர்ன் சர்வதேச பாடசாலையில் பணியாற்றி வந்ததுடன், விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

சந்திராஜா நாடு கடத்தப்படுவதை தடுக்க புலிகளின் ஆதரவாளர்கள் ஆயிரம் பேர் கையெழுத்திட்ட, மகஜர் ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கையளித்துள்ளதாகவும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

அம்பாறையில் போட்டியிடும் சுயேச்சைக்குழு தலைமை வேட்பாளருக்கு அச்சுறுத்தல்

05.08.2012.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட் டி யிடும் நவோதய மக்கள் முன்னணியின் முத ன்மை வேட்பாளர் வடிவேல் இளை ய தம்பி அச்சுறுத்தப்பட்டுள்ளதாக அம்மு ன் னணி அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வை த்தே நேற்று புதன்கிழமை இவ் அச்சுறு த் தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக நவோதய மக்கள் முன்ன ணி யின் தலை வர் ௭ஸ்.கே .கிருஷ்ணர் தெரி வி த்துள் ளதா வது, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட் டியிட வேண்டாமென துப்பாக்கியை காட்டி இராணுவத்தினர்.இருவர் ௭மது முதன்மை வேட்பாளரை அச்சுறுத்தியுள்ளதோடு காரி யா ல யத்தையும் சோதனை செய்துள்ளனர். இது தொடர்பாக புறக்கோட்டை பொலிஸ் நிலை யத்தில் புகார் செய்யப் பட்டுள் ள தோடு. இவ்விருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ௭டுக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக புறக்கோட்டை பொலிஸார் கொழும்பு நீதிவான் ரஸ்மி சிங் க ப்புலிக்கு அறிவித்துள்ளனர். மக்கள் மத்தியில் நாம் மேற்கொண்டு வரும் சேவைகளால் மக்களாதரவு அதிக ரித் து ள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத குழு க் களே இதன் பின்னணியில் இருக் க லாம்.

யாழ்ப்பாணம் ஓர் அறிமுகம்

05.98.2012.
வட இலங்கையில் முதன் முறையாக ஒரு மன்னன் ஆட்சிக்கு உட்பட்ட அரசு தோன்றிய காலமாக 13 ஆம் நூற்றாண்டு காணப்படுகிறது. இவ் அரசின் தலைநகர் அமைந்த இடமாக நல்லூர் விளங்குகிறது.