siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 11 ஆகஸ்ட், 2012

வல்வெட்டியில் சுமார் பத்து நிமிடம் நீடித்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்!

11.08.2012.
யாழ். வல்வெட்டிப் பகுதியில் இன்று மாலை 6:30 மணியளவில் துப்பாக்கி வெடிச் சத்தம் போன்ற சத்தம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
வழமைக்கு மாறாக குறிப்பிட்ட இடத்தில் இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரதேச மக்கள் பெரும் பதற்றத்தில் இருப்பதாகவும் வட்டாரச் செய்திகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, மோட்டார் சைக்கிளில் வருபவர்களை மறித்து சோதனை நடாத்தி வருகின்றனர். இதேவேளை, சில தினங்களாக யாழில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் எவ்வாறு துப்பாக்கிச் சத்தம் கேட்டது? குறிப்பாக எதற்காக துப்பாக்கிச் வேட்டுச் சத்தம் எழுப்பப்பட்டது என ஊகிக்கமுடியவில்லை எனவும் பிரதேசமக்கள் தெரிவித்துள்ளனர்

மட்டு. போதனா வைத்தியசாலையின் தாதிய மாணவர்களின் மாதாந்த சம்பளம் இழுத்தடிப்பு

11.'08.2012மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் சம்பள படிகள் இதுவரையில் வழங்கப்படாமை தொடர்பில் மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வழமையாக 25ஆம் திகதி மாணவர்களுக்கு இந்த வாழ்க்கைச்செலவு படிகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், இதுவரையில் சென்ற மாதச்சம்பளம் தமக்கு வழங்கப்படாமையினால் தாம் மிகுந்த அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக இந்த நிலையேற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கேட்டால் சாக்குப்போக்கு கூறிவருவதாகவும் தாதிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனைய பிரதேசங்களில் இந்த சம்பளம் குறித்த திகதிகளில் வழங்கப்பட்டு வருகையில், மட்டக்களப்பில் மட்டும் தாமதம் ஏற்படுவதன் காரணங்கள் தமக்கு தெரிவிக்கப்படவில்லையெனவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொடுப்பனவுகள் இழுத்தடிக்கப்படுவது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தாதிய மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அளவுக்கு அதிகமான வெடி பொருட்களுடன் இருவர் கைது

11.08.2012.
அட்டன் ருவன்புர களஞ்சியத்தில் இருந்து உத்தரவுப் பத்திரத்தில் குறிப்பிட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான வெடிபொருட்களைக் கொண்டு சென்ற இருவர் மஸ்கெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமோனியா 50 கிலோ கிராம், வெடிப்பு தூள் (கருப்பு மருந்து) 2 கிலோ கிராம், வெடிக்கும் வயர்கள் 50, மோட்டார் ஜெல் 5 கிலோ கிராம் என்பன கைப்பற்றப்பட்ட பொருட்களில் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடி பொருட்கள் கற்பாறைகளை வெடி வைத்துத் தகர்ப்பதற்காகவே களஞ்சியசாலையில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ

11.08.2012.
அது போலவே உயிருக்கு அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே, வலிமைகளில் எல்லாம் உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை பெறுவான். * அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால் உயர்ந்திருப்பவர்களைக ் காட்டிலும், அறிவால் சிறந்தோரே உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும் அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது. இவர்கள் யாருக்கும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கமாட்டார்கள். * பரிபூரணமான அறிவைப் பெற்றிருப்பவர்கள், எப்போதும் தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள். இவர்கள் எந்த இன்பத்திற்கும் அடிமையாகாமல், தம்மை அடக்கி வைத்திருப்பார்கள். ஒரு பொருளை பார்த்தவுடன் அதன் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து கணிக்காமல், அதன் உட்பொருள் தன்மையையும், உண்மை நிலையையும் எளிதில் கணித்து விடுவார்கள். * மனிதர்கள் சிறந்து திகழ அறிவு தேவை. கடவுளே அறிவின் வடிவமாக இருக்கிறார். அந்த அறிவாகிய இறைவன் உள்ளே வருவதற்கு இதயம் சுத்தமாக இருக்க வேண்டும். இதயத்தை சுத்தப்படுத்த இறைவனிடத்தில் பக்தி செலுத்த வேண்டும்
புகைப்படம்: Visit www.pagejaffna.com Right Now...புகைப்படம்புகைப்படம்காணொளி,

இலங்கையின் மனித உரிமை மீறல்! நியாயம் தேட பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்: சர்வதேச மன்னிப்புச்சபை

 
சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012,
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நியாயங்களை தேட ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான பக்கச்சார்பற்ற விசாரணையே ஒரே வழியாகும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி ஆனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையின் பிரச்சினை சர்வதேச கண்ணுக்கு மீண்டும் வெளிப்படும்.
எனினும், இதன்போது ஒருபக்கம் அல்லாது, இலங்கைப் படையினரும் அதேநேரம் விடுதலைப் புலிகளும் செய்த போர்க்குற்றங்களும் முன்னிலைப்படுத்தப்படும் என்று ஆனந்த பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பை அது கொண்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக பல உறுதிமொழிகளை வழங்கியுள்ள இலங்கை அரசாங்கம் கடந்த ஜூலையில் வெளியிட்ட குழுவின் இறுதி அறிக்கையிலும் உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழக மக்கள், இலங்கை தமிழர்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் சாசனப்படி இலங்கை தமிழர்களின் அகதி நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று ஆனந்த பத்மநாபன் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் சென்னையில் நடைபெறவுள்ள தமிழீழ ஆதரவாளர் மாநாடான டெசோவில் பங்கேற்கவுள்ள அவர், இந்த மாநாடு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்டார்.
எனினும் சாதாரண மக்கள் மத்தியில் இலங்கை தமிழர்கள் தொடர்பில் அக்கறையைக் கொண்டு வர இந்த மாநாடு உதவும் என்று ஆனந்த பத்மநாபன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

திருட முயன்று பொது மக்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட திருடன்: கிளிநொச்சியில் சம்பவம்

சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012,
கிளிநொச்சியில் நேற்றிரவு வீடென்றில் திருட முற்பட்ட போது திருடன் ஒருவன், பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் கிளிநொச்சி உமையாள் புரத்தில் நேற்றிவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்திலிருந்தபோது உள்ளே நுழைத்த திருடர்கள் அங்கிருந்த பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயற்பட்டனர்.
இதன்போது சத்தம் கேட்டு எழுந்த வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிடவே ஒன்று கூடிய பொது மக்கள், திருடர்களை துரத்திச் சென்று ஒருவரை பிடித்தனர். ஏனையவர்கள் தப்பிச் சென்றனர்.
பொது மக்களால் பிடிக்கப்பட்ட திருடன் நையப்புடைக்கப்பட்டு பின்னர் அப்பகுதி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஈழத்தமிழர் காவியம்! படைக்கப் போகிறார் கவிஞர் வைரமுத்து!

 
 சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012,
கவிஞர் வைரமுத்து எழுதிய 'மூன்றாம் உலகப் போர்’ என்னும் நூல் திறனாய்வு விழா நிகழ்வு கடந்த 4-ம் தேதி தேனியில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் எனது மகனின் வேண்டுகோளுக்கிணங்க நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போகமாட்டேன் என்று தெரிவித்தார்.
'மூன்றாம் உலகப் போர்’ என்னும் நூலைத் திறனாய்வு செய்த வைரமுத்துவின் மகன் கபிலன், இதுவரை எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், நூல்கள் படைத்த என் தந்தைக்கு இந்த விழா மூலம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
அவர் ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஒரு காவியம் எழுத வேண்டும். அதுவே அவர்களின் பிரச்சினைகளை உலகுக்கு உணர்த்துவதாக அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இவ்விழாவில் அடுத்துப் பேசிய கம்பம் செல்வேந்திரன், மூன்றாம் உலகப் போர். இது கவிஞரின் 36-வது நூல். புத்தகமாக வெளிவந்த மூன்று மாத காலத்திற்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது.
எனவே, கபிலன் வைத்த கோரிக்கையை நினைவில் வைத்து, ஈழத் தமிழர் காவியம் படையுங்கள் என்று தன் பங்குக்கும் வேண்டுகோள் வைத்தார்.
இவ்விழாவில் இறுதியாக உரையாற்றிய கவிஞர் வைரமுத்து அவர்கள்,
எல்லோரும் மகனிடம்தான் வேண்டுகோள் வைப்பார்கள். ஆனால், என் மகன் என்னிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறான்.
நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போக மாட்டேன் என்று முடித்தபோது அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்தது

முதல் முதலாக சம்பத் வங்கியின் தேர்வுப் பரீட்சை யாழில்

news11.08.2012.  யாழ் மாவட்டத்திற்கான சம்பத் வங்கியின் தேர்வுப் பரீட்சை சம்பத்
வங்கி மனித வள முகாமையாளர் L. லீர கொட மற்றும் பிரதி பொது முகாமையாளர் “மனித வளம்” அருண ஜயசேகர தலைமையில் இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. இப் பரீட்சையில் சுமார் 200 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
பொதுவாக நாடலாவியரீதியில் சம்பத் வங்கி வலையமைப்பில் தமிழ் பேசும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே காணப்படிகிறது என சம்பத் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் “ மனித வளம்” கவலை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்;
தமிழ் பேசும் ஊழியர்களின் குறைவை நிவர்த்தி செய்யும் முகமாக தமிழ் பேசும் மக்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் தேர்வுகள் நடத்தப்பட்டு அப்பிரதேச சம்பத் வங்கி கிளைகளில் அவர்கள் இணைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
வழமையாக இப் பரீட்சை கொழும்பிலேயே நடாத்தப்பட்டு வருகினறமை குறிப்பிடத்தக்கது. இம்முறை பரீட்சார்த்திகளின் நலன் கருதி முதல் முதலாக யாழில் இன்று நடாத்தப்பட்டது. ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ந்து சம்பத் வங்கிக்கான நேர்முகப் பரீட்சை நடாத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் திருமுருகனின் நகர்வலம்


11.08.2012.
கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

உற்சவங்களில் மிகப்பெரிய உற்சவமாக பிரம்மோற்சவம் கருதப்படுகிறது. துவஜாரோஹனம் எனப்படும் கொடியேற்றம் முதல் தீர்த்தம்,பூங்காவனம் வரையான உற்சவங்கள் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல் ஆகியவற்றை குறிக்கின்றன.

இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்த்திருவிழாவானது மனிதனிடத்தில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற தத்துத்தை வெளிப்படுத்துகிறது.

கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கடந்த முதலாம் திகதி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமானது. இத்திருவிழா நாளை மறுதினம் திங்கட்கிழமை பூங்காவனம்,திருவூஞ்சல் பூஜைகளுடன் நிறைவுபெறும்.
(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்)
kovil
kovil
Kovil
kovil
kovil
Kovil
Kovil
Kovil

கண்டி போதனா வைத்தியசாலையில் தீ விபத்து

11.08.2012.
கண்டி போதனா வைத்தியசாலையில் இன்று முற்பகல் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் இரசாயன பகுப்பாய்வு பிரிவில் இருந்த எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்தால் தீ பரவியுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. தற்போது தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் நடந்த மாற்றான் இசை வெளியீட்டு விழா


 


11.08.2012.
சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் மாற்றான். முதன் முறையாக சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். படத்தில் அகிலம், விமலன் என்ற இரு கேரக்டரில் வருகிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சிங்கப்பூரில் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக் கச்சேரியுடன் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் இசைக் குறுந்தகட்டை இயக்குநர்கள் கவுதம் மேனன், ஹரி, விஜய், லிங்குசாமி வெளியிட, சூர்யா, கேவி ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நடிகர்கள் சிவகுமார், பிரபு, பிரசன்னா - சினேகா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பிருந்தா நடன அமைப்பில் தன்ஷிகா, பூர்ணா உள்ளிட்டோர் நடனம் ஆடினர். விழாவில் அஞ்சலா அஞ்சலா பாடலுக்கு மேடையில் திடீரென தோன்றிய சூர்யா நடனம் ஆடினார். அவருடன் இணைந்து கார்த்தி, பிரசன்னா ஆகியோரும் நடனமாடி உற்சாகப்படுத்தினர். சுமார் 10 ஆயிரம் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்

ரசிகர்கள் இம்சை தாங்க முடியலை: அஞ்சலி

11.08.2012.
கலகலப்பு படத்தில், விமலும் சிவாவும் இவளுக இம்சை தாங்க முடியல என்று அஞ்சலி, ஓவியாவைப் பார்த்து பாடினர்.
ஆனால் இப்போது அஞ்சலியோ, ரசிகருங்க இம்சை தாங்க முடியல என்று சலித்துக் கொள்கிறார்.
அப்படி என்ன பண்ணிவிட்டனர் ரசிகர்கள்? என்று கேட்டால், போன்ல பேசியே என்னை கொல்றாங்க. சரி, ரசிகர்களாச்சேன்னு இரண்டு வார்த்தை பேசினா, விட மாட்டேங்கறாங்க.
மணிக்கணக்குல கடலை போடுறாங்க. அதுவும் கலகலப்பு படத்துக்கு பின், என் அழகை அவங்க வர்ணிக்கிறது ரொம்ப அதிகமாயிடுச்சு.
என்னென்னவோ, கவிதையா சொல்றாங்க. ஒருத்தர், இரண்டு பேரு இப்படி சொன்னா ரசிக்கலாம். ஆனால் போன் பேசுற அத்தனை பேருமே லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுனா, நான் என்னங்க பண்றது என்று கூறுகிறார் அஞ்சலி.
ரசிகர்களின் அன்புத் தொல்லை சந்தோஷமான விஷயம் தானே என்றால், ஒரு நாள், இரண்டு நாள்னா பரவாயில்லை. தினமும் இதே வேலையா இருந்தா எப்படி. பகல் முழுக்க ஷூட்டிங் போயிட்டு வர்ற நான், இரவு தூங்க வேணாமா? அதனால் இப்பல்லாம் நான் போன் எடுக்கறதே இல்லை. சினிமாக்காரங்ளே பேசினா கூட, அம்மா தான் பதில் சொல்வாங்க என்கிறார் அஞ்சலி

ரூ. 25 லட்சம் சம்பளம் வாங்கும் அஞ்சலி

11.08.2012.
நடிகை அஞ்சலி ஒரு படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலிவுட்டில் வெளிவந்த அங்காடித்தெரு படத்தின் மூலம் தனக்கென்று ஒரு நன்மதிப்பை உருவாக்கிக்கொண்டார் நடிகை அஞ்சலி.
இதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும், கலகலப்பு படங்கள் அபார வெற்றி பெற்றது.
தொடக்கத்தில் ஒரு படத்திற்கு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 9 லட்சம் வரை வாங்கிக்கொண்டிருந்த நடிகை அஞ்சலி, ஒரேயடியாக தனது சம்பளத்தை தற்போது உயர்த்தியுள்ளார்.
இப்போது அவருடைய சம்பளம் ரூ. 25 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக அஞ்சலி நடித்த கலகலப்பு படத்தின் வெற்றியே சம்பள உயர்வுக்கு காரணமென்று கொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது டெல்லி பெல்லி ரீமேக், சேட்டை படத்தில் நடிகர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அஞ்சலி.