Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 15 ஆகஸ்ட், 2012

ஆவர்த்தன அட்டவணை தரப்படாத இரசாயனவியல் வினாப் பத்திரம்

15.08.2012.இன்றுகாலை நடைபெற்ற உயர்தர விஞ்ஞானப்பிரிவின் புதிய பாடத்திட்டத்திற்கான இரசாயனவியல் பாடத்தின் முதலாம் பகுதி வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை தரப்படும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ள போதும் ஆவர்த்தன அட்டவணை
தரப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை இந்தப் பிரிவில் சிங்கள மொழிமூல வினாப் பத்திரத்தில் ஆவர்த்தன அட்டவணை
தரப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகள்

15-08-2012.ஆரோக்கியமான பெண்களால் தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.
குடும்பத்தை பற்றிய சிந்தனையாலும், பணிச் சூழலாலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
கரோட்டினாய்டு உணவுகள்
பெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகள் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.
ஒமேகா 3 உணவுகள்
பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி உள்ள அனைத்து வகை மீன்களையும் உட்கொள்ளலாம்.
மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
இதன் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்றநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். வால் நட் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
அத்திப்பழம், பால்
அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் பெண்கள் தினசரி இருவேளை பால் உட்கொள்ள வேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.
ஓட்ஸ், தக்காளி
ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
கீரைகளில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு பி.எம்.எஸ் சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரையை உட்கொள்ள வேண்டும்.
தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது.
இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

ஆண்களே 5 மணி நேரமாச்சும் தூங்கிருங்க இல்லண்ணா ஆப்புதான்…!!


15.08-2012.இளைஞர் ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் அளவு குறைந்துவிடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதுவும் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது, ஒரு வார காலத்திற்குள்ளாகவே இந்த பாதிப்பை உணரலாம் என்கிறது அந்த ஆய்வு.
ஆண்களின் பாலியல் உணர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது ஹார்மோன்கள்தான். இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு இருந்தால்தான் பாலியல் உணர்வு தூண்டப்படும். அவ்வாறு பாலியல் உணர்வை தூண்டுவதற்கு ஆதாரமாக விளங்கும் ஹார்மோன் அளவை ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ என்று அழைக்கிறார்கள். இந்த டெஸ்டோஸ்டெரோன் அளவுக்கும், சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ முக்கிய பங்காற்றுவதாக இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார். ஈவ் வான் உள்ளிட்ட சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த விவரம் தெரியவந்துள்ளது. அந்த பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சராசரியாக 24 வயது கொண்ட இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோதனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப்பட்டனர். ஆய்வின் ஒவ்வொரு நாளின்போதும், 24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்களது ரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தபட்டது. இதில் குறைவாக தூங்கியதற்கு பிற்கு இவர்களது ’டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்ததாக சொல்லும் ஈவா வான், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு இருப்பதால்,தூக்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கும் என்று அடித்துக் கூறுகிறார்

நீங்கள் தனியாக இருக்கும் போது “பீல்” பண்றீங்களா…? சூடா குளிங்க!!

15.08.2012.தனியாக இருப்பதாக உணர்பவர்கள் வெந்நீரில் சூடாக ஒரு குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள் பறந்து போய் விடும் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று. தனிமையால் தவித்தவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்துள்ளது இந்த ஆய்வு முடிவு.
தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி. தனிமை என்பது கொடுமையானது. துணையுடன் வசித்தவர்கள் திடீரென யாரும் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்படும் போது புழுங்கிப் போய்விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கிறது அந்த ஆய்வு முடிவு.
புத்துணர்ச்சி ஏற்படும்
இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரை ஆண், பெண்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், சூடான குளியலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமையின் வேதனை பெரிதாக தெரியவில்லை என்றும் மாறாக புத்துணர்ச்சியுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். அதேசமயம், சூடான குளியலைப் போடாதவர்கள் எதையோ பறி கொடுத்தவர்களாக காணப்பட்டனராம்.
குளியல் சுக அனுபவம்
சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட்டுப்படுவதாக ஆய்வை மேற்கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும். அதேபோன்ற நிலைதான் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இருக்குமாம். இப்படிப்பட்டவர்களுக்கு சூடான குளியல் சுகானுபவமாக இருக்குமாம். மேலும் அவர்களை விட்டு வேதனைகளைப் போக்க இது நல்ல உபாயமாகும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.
இதேபோல் அமெரிக்காவில் நடந்த மற்றொரு ஆய்விலோ சுடு நீரில் குளித்தால் சுகமாகும் என்ற புதிய முடிவைத் தெரிவித்துள்ளனர்.
நம் பழக்கத்திற்கு நேர் எதிர்
இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக்கத்திற்கு நேர் எதிராக உள்ளது. நமது ஊர்களிலெல்லாம் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படும், தனிமையில் தவிக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் அதைத் தணிக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கையும், பழக்கமும் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
நம்மூரில் ‘அப்படியாப்பட்ட’ சூழ்நிலையில் இருப்பவர்கள் ‘ஜில்’லென்று குளியல் போடுவார்கள், இவர்கள் சுடுநீரில் குளிக்கச் சொல்கிறார்கள்…அது சரி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஃபீலிங்ஸ்…!

முருங்கைக்காய் மேட்டர் உண்மைதானா?

15.08.2012.முருங்கைக்காய்ன்ற பேரைக்கேட்டாலே நமக்கெல்லாம் நியாபகத்துக்கு வர்றது பாக்யராஜ் கெளப்பிவிட்ட கில்மா சமாச்சாரம்தான். சம்சாரத்துக்கெல்லாம் புருஷனோட ஆசையை கிளறிவிட்டு கெஞ்சவெக்கிறதுக்கான ஆயுதமா முருங்கைக்காய் சமாச்சாரம் பதிஞ்சிபோச்சு. ஆனா உண்மையிலேயே இந்த முருங்கைக்காய் சமாச்சாரம் நெசந்தானான்னு ஆராய்றதுக்கு முன்னாடி அது என்ன சமாச்சாரம்னு தெரியாத இளசுங்களுக்கெல்லாம் ஒரு முன்னோட்டம் குடுத்துரலாம்…
பாக்யராஜோட ‘முந்தானைமுடிச்சி’ன்ற படம்தான் இந்த விசயத்துக்கு அடிபோட்டு இன்னக்கிவரைக்கும் பல தமிழ் சினிமாவுலேயும், ஏன் இந்தி சினிமால கூட இந்த விசயத்தை பத்திப்பேசுற அளவுக்கு செய்ஞ்சிடுச்சி. அந்தப்படத்துல பாக்யராஜீக்கும் ஹீரோயின் ஊர்வசிக்கும் ஒரு இக்கட்டான சூழல்ல கல்யாணம் நடந்திரும். பாக்யராஜ் கல்யாணத்துக்கு அப்புறம் ஊர்வசிகிட்ட போகாம ஒதுங்கியேஇருப்பார். அப்போ ஏதோவொரு பெருசு ஒன்னு ஊர்வசிக்கு முருங்கைக்காய் ஐடியாவைக் குடுத்துரும். உடனே ஊர்வசியும் அன்னக்கி முருங்கைக்காய் பொறியல், முருங்கைக்காய் ரசம், முருங்கைக்காய் சாம்பார்னு சமையல் எல்லாம் முருங்கைக்காயா செய்ஞ்சி வைச்சிரும்.
பாக்யராஜ் வீட்டுக்கு வந்ததும் ஆஹா சமையல் எல்லாமே நல்லா டேஸ்ட்டாயிருக்குன்னு சொல்லி முருங்கைக்காய் அயிட்டங்களை நல்லா கட்டு கட்டுன்னு வயிறு ஃபுல்லா கட்டிருவாரு. அப்புறமா தூங்கலாம்னு படுக்குற பாக்யராஜிக்கு ஃபுல்லா மூடு கெளம்பி ஊர்வசிகிட்ட போகவும் முடியாம, உணர்ச்சிகளை அடக்கவும் முடியாம அவஸ்தைப்படுவாரு பாருங்க. அப்போதாங்க இந்த முருங்கைக்காய் மேட்டர் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சாயிடிச்சி. அன்னைலயிருந்து இன்னக்கி வரைக்கும் பல சினிமாவுல இந்த முருங்கைக்காய் மேட்டரை யூஸ் பன்றாங்கன்னா அந்த பெருமையெல்லாம்(!) சத்தியமா பாக்யராஜைத்தான் சேரும். இது நெசமா… பொய்யான்னு தெரியாமலேயே அந்த மாதிரி மேட்டருன்றதால மக்கள் மனசுல பச்சக்குன்னு பதிஞ்சிபோச்சு.
சரி… அறிவியல்ரீதியா முருங்கைக்காய்க்கு நிஜமாகவே ‘அந்த’ உணர்ச்சிகளை தூண்டுற சக்தியிருக்கா?… அந்த உணர்ச்சிகளைத்தூண்டுற சக்தி பல விஷயங்கள்ல இருக்குதான். ஆனா முருங்கைக்காய்ல சத்தியமா அந்த மாதிரி எதுவும் இல்லைன்றதுதான் விஞ்ஞானமும் மருத்துவமும் சொல்ற சேதி. இந்த மாதிரி தமிழ்சினிமா கிளப்பிவிட்ட மகத்தான மருத்துவத்தால பலபேரு இந்த விஷயத்துல பி.ஹெச்.டி ரேஞ்சுக்கு ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சவிஷயம்தான் முருங்கைக்காய்ல அந்தமாதிரியெல்லாம் எதுவும் இல்லைன்றது.
முருங்கைக்கீரைல சிட்ரஸ் பழங்களைவிட ஏழுமடங்கு விட்டமின் ‘சி’யும், கேரட்டைவிட நாலு மடங்கு விட்டமின் ‘ஏ’யும் பாலில் இருப்பதைவிட நாலு மடங்கு கால்சியமும் வாழைப்பழத்தில் இருப்பதை விட மூன்று மடங்கு பொட்டாசியமும்தான் நிறைய இருக்குது. அப்படித்தான் முருங்கைக்காய்லகூட… மற்றபடி நம்ம ஹார்மோன்களை தூண்டுற எந்த சமாச்சாரமும் அதுல இல்லைங்க.
உண்மையிலேயே அந்த மாதிரி விஷயத்துக்கு சிறந்த உணவு என்னான்னா
1)இரவு படுக்குறதுக்கு முன்னாடி மிதமான சூட்டுல ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.
2)அவ்வப்போது பேரிச்சம்பழம் நிறைய சாப்பிடலாம்.
3)வெங்காயம் பச்சையா சாலட் மாதிரி நிறைய சாப்பிடலாம்.
4)உலர் பழங்கள் மற்றும் பாதாம் முந்திரி பருப்புகளும் அதுக்கான சக்தி கொண்டதுதான்.
அதனால முருங்கைக்காய் மேட்டரும் தெருவோரம் லேகியம் விக்கிறமாதிரியான டூப்ளிகேட் சமாச்சாரம்தான்றதை ஜனங்க புரிஞ்சிக்கிட்டா சரிதான். இப்படி எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது இனிமேலும் நாம முருங்கைக்காய் சமாச்சாரத்தை நெசமுன்னு நம்பிக்கிட்டு இருந்தா அதுக்குமேல நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லைங்க…!

பிரச்சினையில் இருந்து மீண்டு விட்டேன்: நயன்தாரா

15.08.2012.நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்து பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு பிரபுதேவா சம்மதிக்காததால் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதம் மாறியும் சினிமாவுக்கு முழுக்கு போட்டும் திருமணத்துக்காக காத்திருந்த தன்னை பிரபு தேவா ஏமாற்றி விட்டதாக நயன்தாரா கலங்குவதாக கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சினிமாவில் இரண்டாவது ரவுண்டு துவங்கியுள்ள நயன்தாரா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி என்ன வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தையும் அளித்துள்ளது. இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் சந்திப்பேன்.

பெரியவர்கள் என்ன நடந்தாலும் நம் நல்லதுக்குத்தான் என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. நடந்த சம்பவங்களை நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொண்டேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். வாழ்க்கை இப்போ நல்லா போயிட்டு இருக்கு தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வருகின்றன.

சிறு வயதில் கஷ்டம் கண்ணீர் தெரியாமல் ரொம்ப செல்லமா வளர்ந்தேன். அப்புறம் பிரச்சினைகளில் மாட்டி அவதிப்பட்டேன். அது ரொம்ப தப்பு என இப்ப புரியது. துன்பங்களை மறக்க பழகி விட்டேன். பிரச்சினைகளை எதிர்த்து போராடும் திறமை இல்லாவிட்டாலும் அவற்றில் இருந்து தப்பிக்க வழி தெரிந்து இருக்க வேண்டும்.

திரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் வருகின்றன. பத்திரிகைகளில் வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

டப்பிங் பேசிய காலம்! வியக்க வைக்கும் விக்ரம்!

15.08.2012.1990களில் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். என் காதல் கண்மணி, தந்துவிட்டேன் என்னை, மீரா போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார்.
திறமை இருந்தாலும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சியை அவர் கைவிடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். டெலி ஃபிலிம்களும் நடித்தார். தனக்கான அங்கீகாரத்தை இந்த திரையுலகம் ஒரு நாள் கண்டிப்பாக தரும் என்று நம்பினார், காத்திருந்தார்.
வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில் மற்ற ஹீரோக்களுக்கு டப்பிங் பேசினார். அப்பாஸ், பிரபுதேவா போன்ற பலருக்கும் அவர் டப்பிங் பேசி இருக்கிறார். அந்த நடிகனின் திறமையை உணர்ந்து சரியான வாய்ப்பைக் கொடுத்தார் இயக்குனர் பாலா. அந்த படம் சேது. முழு அர்ப்பணிப்போடு அந்தப் படத்தில் நடித்தார் அந்த ஹீரோ.

வெளிவர முடியாத நிலையில் இருந்த சேது படம் பல தடைகளையும் தாண்டி வெளியிடப்பட்டது, பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. தொடர்ந்து படங்கள் நடிக்க தொடங்கினார் அந்த ஹீரோ. ராசி இல்லாத ஹீரோ என்று ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்டவர். வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்தார். பிதாமகன் படத்தில் தன் நடிப்பால் தேசத்தையே தன் பக்கம் திருப்பினார். தேசிய விருதையும் பெற்றார்! தொடர்ந்து ஷங்கர், மணிரத்னம் படங்களில் நடித்தார்.
தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்குப் பிறகு வித்தியாசம் என்ற பெயரை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். அவர் தான் சீயான் விக்ரம்! 16.06.2012 அன்று 6வது விஜய் அவர்ட்ஸ் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். சிறந்த நடிகருக்கான விருது விக்ரமிற்கு வழங்கப்பட்டது. (படம் – தெய்வத்திருமகள்)
அந்த விருதை அவருக்கு வழங்கியவர் பிரபுதேவா. ஒரு காலத்தில் பிரபுதேவாவிற்கு டப்பிங் பேசியவர் தான் விக்ரம் என்ற சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. இதை அவர்கள் இருவரும் கூட உணார்ந்திருக்க கூடும். விக்ரமின் வளர்ச்சி மிக பிரம்மாண்டமானது என்பதை நாம் அந்த நேரத்தில் உணர முடிந்தது.

அதே விழாவில், சிறந்த நடிகைக்கான விருது அஞ்சலிக்கு வழங்கப்பட்டது (படம் – எங்கேயும் எப்போதும் ). ஃபேவரெட் ஹீரோ விருது அஜீத்துக்கும், ஃபேவரெட் ஹீரோயின் விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டது.
செவாலியர் சிவாஜி கணேசன் விருது பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வழங்கபட்டது. கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், பிரபு மூவரும் இணைந்து எஸ்.பி.பி.க்கு அந்த விருதை வழங்கினார்கள்
.

இணையதளத்தில் உலாவரும் பிரபல நடிகையின் முத்தக்காட்சி! (வீடியோ இணைப்பு)

15.08.2012.தனுஷ் நடித்த 3 படத்தின் கொலவெறி பாடலுக்கு இசையமைத்து புகழ்பெற்றார் இசையமைப்பாளர் அனிருத். இளம் இசையமைப்பாளர்களில் வேகமாக வளர்ந்து வருபவர் அனிருத்.

அந்நியன் படத்தின் மூலம் பாடகியாகவும், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. வேட்டையாடு விளையாடு, ஆயிரத்தில் ஒருவன், கோவா, மெரினா, மன்மத அம்பு ஆகிய படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார்.

இளம் இசையமைப்பாளர்களுடன் ஆண்ட்ரியாவிற்கு நல்ல நட்பு இருந்து வந்தது. கமல் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் கதாநாயகி ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனிருத்தும், ஆண்ட்ரியாவும் லிப்-டூ-லிப் முத்தம் கொடுக்கும் முத்தக்காட்சி புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருகின்றன