siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 22 ஆகஸ்ட், 2012

தான் அழைத்தால் நித்தியானந்தா யாழ்ப்பாணம் வந்து நிச்சயம் தங்குவார் – கணவரைப் பிரிந்த யாழ் பெண்

22.08.2012.வலிகாமம் பகுதியில் நித்தியானந்தாவுக்கு ஆசிரமம் திறப்பதற்கு பெண் ஒருவர் அதீத முயற்சிகளில் ஈடுபடுவதாக் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த குறிப்பிட்ட பெண் வெளிநாட்டில் தனது கணவருடன் முரன்பட்டு விட்டு இந்தியா சென்றதாகத் தெரியவருகிறது.
இதன் பின்னர் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வந்த குறிப்பிட்ட பெண் தனது வீட்டில் குடியிருந்த தனது அண்ணனை குடும்பத்துடன் துரத்தி விட்டு தற்போது அந்த வீட்டை பெருமளவு பணம் செலவு செய்து திருத்தி வருகின்றார். இவரது வீட்டில் திரும்பும் இடமெல்லாம் நித்தியானந்தாவின் கட்டவுட்டுகளால் அலங்கரித்துள்ள மேற்படி பெண் விரைவில் குறிப்பிட்ட வீட்டை ஆசிரமமாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
தான் நித்தியானந்தாவை நேரடியாகச் சந்தித்ததாக கூறி பரவசப்படும் இப் பெண் தான் அழைத்தால் நித்தியானந்தா யாழ்ப்பாணம் நிச்சயம் வந்து சில நாட்கள் தங்குவார் எனவும் தெரிவித்துள்ளார்

லண்டன் குருக்களின் ரவுடித்தனம்!

22.08.2012.லண்டனில் உள்ள ஒரு பெயர்போன கோவிலில், சாப்பாடு கேட்டுச் சென்ற தமிழன் ஒருவனைத் தாக்கி வெளியே கொண்டு வந்துபோட்டுள்ளனர் நிர்வாகத்தில் இருக்கும் சிலர். இதற்கு அக்கோயிலில் உள்ள குருக்களும் துணைபோன சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை(17) இடம்பெற்றுள்ளது. அட பேர்போன கோயில் என்று ஏன் எழுதவேனும் ? அது ஈலிங் அம்மன் கோவில் தான் ! அடிவாங்கிய இளைஞன் கோமா நிலையில் உள்ளார், கோவில் சீல் வைக்கப்பட்டது ! சுமார் 11 பேர்கைதாகி பின்னர் விடுதலையானார்கள் ! அப்ப என்ன தான் அங்கே நடந்தது ? வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !
லண்டனில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு, பேர்போன பழைய கோவில்களில் ஒன்று ஈலிங் அம்மன் கோவில் ஆகும். இக்கோயில் நிர்வாகிகள், ஊரில் உள்ள தமிழ் மக்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளனர். பல ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பு, விதவைகள் மறுவாழ்வு என்று பல நல்ல காரியங்களைச் செய்துள்ளனர். அதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால் இவ்வளவு ஆண்டுகளாக இவர்கள் செய்து வந்த நற்பணிகள் எல்லாம் ஒரே நிமிடத்தில் கலைந்துபோய்விட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் ஈலிங் அம்மன் கோவிலுக்குச் சென்று, உணவு உள்ளதா என்று கேட்டுள்ளார். குறிப்பிட்ட இந்த இளைஞர் வல்வெட்டித்துறைச் சேர்ந்தவர் என்றும், அவர் வீடற்ற நிலையில் ஒரு அகதியாக, வாழ்ந்து வருகிறார் என்றும் அதிர்வு இணையம் அறிகிறது.
குறிப்பிட்ட இளைஞர் விரக்தியில், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், சம்பவ தினத்தன்று அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உணவு கேட்ட இளைஞருக்கு, கோவில் நிர்வாகிகள் கூறிய பதில் ஆத்திரமூட்டியுள்ளது. ஒரு கொஞ்ச சாப்பாடு கூட இல்லையா என்று அவர் கேட்டுள்ளார். ஆனால் உணவு முடிந்துவிட்டதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதனை அடுத்து ஏற்பட்ட வாய் தர்கத்தில், கோயிலுக்கு உள்ளேயே வைத்து அவ்விளைஞர் பலமாகாத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை அப்படியே தூக்கிவந்து வெளியே போட்டுள்ளனர் சிலர். இவர்கள் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள் பொலிசார். இதனிடையே பொலிசாருக்கு அடித்துச் சொல்லிவிடலாம் என, ஒருவர் தனது மோபைல்போனைத் தூக்க, அங்கே நின்றிருந்த ஐயர் ஒருவர் பொலிசுக்கு போன் பண்ணவேண்டாம் ! இது பொலிஸ் கேஸ் ஆகிவிடும் என்று பகிரங்கமாக உரக்க கூறியுள்ளார் என்றால் பாருங்களேன் ! குடித்துவிட்டு ரோட்டில் விழுந்துவிட்டதாக பொலிசார் நினைக்கட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.
பசி என்று வந்தால், எதிரி என்றாலும் உணவுகொடுக்கும் மரபில் வந்தவர்கள் தமிழர்கள். அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! கோயில்….. ஒரு திருப்பணி புரியும் புனிதஸ்தலம் ! தெய்வாதீனம் மிக்க இடம் …. அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! ஒரு ஈழத் தமிழன் அதுவும் வீடு இல்லாதான ஒரு எதிலி ! அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! சரி அடிக்காமல் அவரை அப்படியே பிடித்து வெளியே கொண்டுபோய் விட்டிருக்கலாம் அல்லவா ? படு மோசமாக அடித்து கோமா நிலைக்கு அவரைத் தள்ளி, பின்னர் பொலிசையும் அழைக்காமல் விடுவது எந்தவகையில் ஞாயம் ? இதனைப் பார்த்த வேற்றினப் பெண்(ஆங்கிலப் பெண்மணி) ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்தபொலிசார், குறிப்பிட்ட 30 வயது இளைஞன் பிழைக்கமாட்டார் எனக் கருதி ஏல்-அம்பூலன்சை(உலங்கு வானூர்தி மருத்துவப் பிரிவை) வரவழைத்துள்ளனர். கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர். பாதிக்கப்பாட்ட இளைஞனுக்கு என்ன உதவிகளைச் செய்தார்கள் என்று கோயில் நிர்வாகத்திடம் அதிர்வு இணையம் கேட்டது, இது நீதிமன்றில் உள்ள வளக்கு இதுகுறித்து எதுவித கருத்தையும் நான் கூறமுடியாது என்கிறார்கள். கேள்விக்கு கோயில் நிர்வாகம் எந்தப் பதிலையும் கூறவில்லை. நடந்த இச் சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் வெளியே கொண்டுவரக்கூடாது என்பதில் மட்டும் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர் விடையங்களில் அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை ! இதுவே ஒரு தமிழ் இளைஞன் லண்டனில் உள்ள புத்த விகாரை ஒன்றுக்குச் சென்று உணவுகேட்டபோது, அவர் தாக்கப்பட்டிருந்தால், தமிழர்கள் அந்த புத்தவிகாரை நிர்வாகிகளை சும்மா விட்டிருப்பார்களா ? இல்லையேல் கிறீஸ்த்தவ மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் வழிபாட்டுஸ்தலங்களில் இவ்வாறு சம்பவங்கள் ஏதாவது நடந்துதான் உள்ளதா ? கோவிலில் என்ன நடந்தாலும் குற்றமில்லையா ? இதனை தமிழர்கள் தட்டிக்கேட்க்கமாட்டார்களா ?
ஈழத்தில் தமிழர்களை யாராவது அடித்தால் மட்டும் தானா நாம் குரல்கொடுப்போம் ? வேறு இடங்களில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நாம் தட்டிக்கேட்க்க மாட்டோமா?
வல்லிபுரத்தான்

தலவில புனித அன்னம்மாள் தேவாலயத்தில் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் திருச் சொருபம் ஸ்தாபிப்பு

22.08.2012அதி வணக்கத்திற்குரிய 16ஆவது ஆசிர்வாதப்பரின் ஆலோசனைக்கிணங்க தலவில புனித அன்னம்மாள் புனிதத்தலத்தில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் திருச் சொருபம் ஒன்று அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தனவினால் வழங்கப்பட்டது.
இந்த திருச்சொருபமானது, சமீபத்தில் கொண்டாடப்பட்ட தலவில ஆலயத்தின் 250வது ஆண்டு பூர்த்தி விழாவின் போது சிலாபம் ஆயர் அதி வண. வெலன்ஸ் மென்டிஸ் மற்றும் குறித்த ஆலயத்தின் தந்தை அதி வண. லூக் நெல்ஸன் ஆகியோரால் ஆசிர்வதிக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டது.
இலங்கையின் சம்பிரதாயங்களுக்கமைவாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட சிற்பக் கலைஞர்கள் உருவாக்கிய இந்த திருச் சொருபத்தின் சிறியது ஒன்று இலங்கை கத்தோலிக்கர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரோம் - வத்திக்கான் நகரில் வைத்து பரிசுத்த தந்தை அவர்களுக்கு டாக்டர் ஜயலத் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நூதனசாலை திருட்டு: மேலும் ஒருவர் மாணிக்கம் பதித்த தங்க மோதிரத்துடன் கைது

22.08.2012.கொழும்பு தேசிய நூதனசாலையில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சில பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து நூதனசாலையிலிருந்து திருடப்பட்ட மாணிக்கம் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மார்ச் 16ஆம் திகதி நள்ளிரவன்று நூற்றாண்டுகள் பழமையான வாள்களும் நாணயங்களும் அடங்கலாக விலை மதிப்பற்ற பல பொருட்கள் இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெண்கள் இருவர் உட்பட 3 பேரை பிலியந்தல பகுதியில் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

புதிய சாதனை படைத்துள்ள ஏக் தா டைகர்

22.08.2012.
சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது.
படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை.
இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்தது. ஏக் தா டைகரின் மூலம் தொடர்ந்து 4வது முறையாக சல்மானின் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.
நேற்று முன்தினத்துடன் ரூ.110 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் ஆமீர் கானின் 3 இடியட்ஸின் வசூல் சாதனையான ரூ.385 கோடியை மிஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை உள்நாட்டில் மட்டும் ரூ.92.5 கோடி வசூலானது. இன்னும் 2 வாரத்திற்குள் ரூ.200 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏக் தா டைகரில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

காதல் ஜோடியின் கசப்பான அனுபங்களே “கபடம்”

22.08.2012.
நாகரீக காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை விளக்கி கூறும் படமே கபடம்.
ராதா மோகன், சிம்பு தேவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஜோதி முருகன். இவர் இயக்கும் படம் கபடம்.
இதுபற்றி அவர் கூறுகையில், நவீன நாகரிகம் என்ற பெயரில் இன்றைய சமுதாயம், மனிதனின் உடல், மனம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த கதை அலசுகிறது.
நாகரிகத்தில் திளைக்கும் இளைஞனுக்கும், இளம் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் அவர்களுக்குள் மனமுறிவு ஏற்படுகிறது.
அதைத் தொடர்ந்து அவர்களின் வாழ்வில் ஏற்படுகின்ற விபரீத சம்பவங்களை யதார்த்தத்துடன் பதிவு செய்திருக்கிறேன்.
யாதுமாகி படத்தில் நடித்த சச்சின் கதாநாயகனாக நடிக்கிறார். அங்கனா ராய் கதாநாயகியாக நடிக்கிறார்.
மற்றொரு ஜோடி சந்தோஷ், அனிகா. மும்பையில் 35 நாட்கள், ஊட்டியில் 15 நாட்கள், சென்னையில் 10 நாட்கள் என படப்பிடிப்பு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்

நயன் தான் என்னுடைய பெஸ்ட் பிரண்ட்: ஆர்யா

22.08.2012.
என்னைப் பொறுத்த வரை, நயன்தாரா எனக்கு நல்ல தோழி என்று கூறியுள்ளார் ஆர்யா.
இது குறித்து ஆர்யா கூறுகையில், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்த போது தான் நயன்தாரா ஒரு நல்ல நடிகை என்பதை தெரிந்து கொண்டேன்.
அந்த படத்தில் இருந்து தான் எங்களுக்கிடையே நல்ல நட்பும் உருவானது.
இப்போது வரை சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை இருவருமே பகிர்ந்து கொண்டு வருகிறோம் என்றார்.
மேலும் நயன்தாராவுக்கு நீங்கள் சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறதே... நிஜம்தானா? என்ற கேள்விக்கு, அது தவறான செய்தி.
எந்த இயக்குனராக இருந்தாலும், தங்கள் கதைக்கு யார் பொருத்தமான நடிகையோ அவரை தான் ஒப்பந்தம் செய்வர்.
நான் நடிக்கிற படமாக இருந்தாலும், இதே நிலை தான். அதனால் இதெல்லாம் சினிமா தெரியாதவர்கள் பரப்பும் செய்தி என்று பதிலளித்துள்ளார்

பயண எச்சரிக்கையில் மாற்றம் செய்க: பிரித்தானியாவிடம் பீரிஸ் கோரிக்கை

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,பிரித்தானிய பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் விடுத்த பயண எச்சரிக்கை தொடர்பாக பிரித்தானிய உயர் ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துரையாடியுள்ளார்.

இவ்விடயம் குறித்து கலந்துரையாடிய அமைச்சர்,
வடபகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு ஏற்ப மேற்படி பயண எச்சரிக்கையில் மாற்றம் செய்யுமாறு கோரினார்.
நாட்டில் ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி எச்சரிக்கையை நியாயப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் அதிக இராணுவ பிரசன்னம் காணப்படுவதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாகவும் மேற்படி பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நாட்டில் பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கூட்டங்கள் வன்முறைகளாக மாறுவது குறித்தும் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

“சீனா டவுன்“ இலங்கைக்கு வருகிறது!

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012மலேசியா,சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் செயற்படும் “சீனா டவுன்” (China Town) என்ற இரவுச்சந்தை அம்பாந்தோட்டைப் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இச்சந்தை, தினமும் காலை 9 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை திறந்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்கள் தயாரிப்புக்கள் மற்றும் சாதனங்களை இந்த “சீனா டவுன்” சந்தையில் விற்பனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்தால விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் உத்தேச தொழில்நுட்ப பூங்கா என முன்மொழியப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் இந்தச் சந்தையால் அதிகம் பயனடைவார்கள் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

தாய்மார்கள் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லத் தடை

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, 18 வயதுக்கு கீழ் பிள்ளைகள் இருக்கும் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதைத் தடுக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் ௭ன்று அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஐ. தே. க.வின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் ௭ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறுவர்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ௭டுத்து வருகின்றோம். சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்கின்றோம்.
ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதை தடுக்கும் வகையில் தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதா?
இன்றேல் 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களை வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வதை தடை செய்யும் வகையில் சட்டத்தை திருத்துவதா ௭ன்பதுதான் பிரச்சினையாக இருக்கின்றது.
௭வ்வாறோ விரைவில் தடைச் சட்டம் கொண்டு வரப்படும். இதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் ஐந்து நிறுவப்பட்டுள்ளன. அதில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பராமரிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்

வெள்ளவத்தை மூவர் படுகொலை! சந்தேகநபர் தற்கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் மூலம் தகவல்!

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,வெள்ளவத்தை இராமகிருஷ்ண டெரஸ் பகுதியில் இடம்பெற்ற மர்ம மரணங்கள் தொடர்பில் இதுவரையில் 25இற்கும் மேற்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 18 இலட்ச ரூபாவிற்கும் அதிகமாக கடன் பெற்றிருப்பதாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த மர்மங்கள் தொடர்பிலான விசாரணைகள் பற்றி தொடர்புகொண்டு கேட்டபோதே பொலிஸார் இதனைத் தெரிவித்தனர்.
நேற்று முன்நாள் இரவு பிரதான சந்தேகநபர் அவருடைய சகோதரி ஒருவருக்கு மின்னஞ்சல் மூலம், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டி தகவல் ஒன்றினை அனுப்பியதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்வாறு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட செய்தி தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த மின்னஞ்சலானது இரத்மலானை பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றிலிருந்து அனுப்பப்பட்டதை கண்டறிந்துள்ளனர்

சுன்னாகம் பிரதேசசபை புதிய கட்டிடத்திற்கு விஷமிகளால் கழிவு ஒயில் அபிஷேகம்

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டு இன்று திறக்கப்பட இருந்த சுன்னாகம் பிரதேசசபைக் கட்டிடத்திற்கு அதிகாலை 2.30 மணியளவில் விஷமிகளால் கழிவு ஒயில் அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த திறப்பு விழாவினை யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியமானவரை அழைக்காது சாதாரணமாக பொதுமக்களுடன் சேர்ந்து திறப்பதற்கு திட்டமிட்டதே இந்த கழிவு ஒயில் ஊற்றப்பட்டதற்கு காரணம் என சுன்னாகம் பிரதேசசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது கழிவு ஒயில் கழுவும் நடவடிக்கை மும்முரமாக நடைபெறுவதாகவும் நிச்சயம் இன்று கட்டடத் திறப்புவிழா நடைபெறும் எனவும் பிரதேசசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

குகன், லலித் ஆகியோரை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும்

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, யாழ்ப்பாண மனித உரிமை செயற்பட்டாளர்களான குகன் மற்றும் லலித் ஆகியோரை உடனடியாக இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மனிதாபிமான தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் செயற்பாட்டாளரான அஜித் குமார நேற்றைய தினம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் குறித்த இருவரும் கடத்தி செல்லப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நாளாந்தம் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்களது வாழ்விடத்தில் மனித உரிமைகளை நிலைநாட்ட செயற்பட்டதாலேயே கைது செய்யப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் இருவரையும் உடன்டியாக இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும் லலித் மற்றும் குகன் விவகாரத்திற்கும், இராணுவத்தினருக்கும் தொடர்புகள் இல்லை என்று, இராணுவப் பேச்சாளர் நுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்

வவுனியா மீள்குடியேற்ற மக்களுக்காக ஜப்பான் உதவி

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாராத்தை அதிகரிப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதற்காக 11 மில்லியன் ரூபாய்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்காக ஒரு லட்சம் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் வாழ்வாதார அபிவிருத்தி நிதியத்திடம் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் கொழும்பு தூதரகத்தின் ஊடாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிதி வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள சுமார் 625 குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை ஒன்றை ஜப்பான் தூதுவர் நொபியிடோ ஹோபோ மற்றும் மக்கள் வாழ்வாதார அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் பிரியந்த குமார ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இலங்கையில் நாளாந்தம் 650 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,புகைத்ததல், மதுபானம் மற்றும் அதீத கொழுப்புணவின் காரணமாக இலங்கையில் நாளாந்தம் 650 பேர் பலியவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் உதவி செயலாளர் பாலித மகிபால இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் 1250 குழந்தைகள் பிரசவம் ஆகின்றன. அதேவேளை அண்ணளவாக 1000 மரண சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
மரணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட முடியாத நோய்களினால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Canvas A100: மைக்ரோமக்ஸின் புதிய வெளியீடு

21.08.2012.கைப்பேசி உற்பத்தியில் ஏனைய நிறுவனங்களுக்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும் மைக்ரோமக்ஸ் நிறுவனமானது தனது நவீன தயாரிப்பில் உருவான Canvas A100 எனும் டுவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கின்றது.
கூகுளின் அன்ரோயிட் 4.0 ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசிகள் 5 அங்கு அளவு கொண்டதும், 854 x 480 ரெசொலூசன் உடையதுமான LCD தொடுதிரையைக் கொண்டுள்ளன.
மேலும் 5 மெகாபிச்சல்கள் கொண்ட அதிவினைத்திறன் உடைய கமெரா, 1GHz வேகம்கொண்ட புரோசசர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசிகளின் பிரதான நினைவகமான RAM இனை 4GB வரை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.