Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீந்தும் 62 வயதுப் பெண்மணி

23.08.2012.கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு நீந்தும் முயற்சியில் 62 வயது அமெரிக்கப் பெண் ஒருவர் நான்காவது தடவையாக ஈடுபட்டுள்ளார். டயானா நயத் ௭ன்ற இந்தப் பெண்மணி கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு பாதுகாப்பு கூண்டெதுவுமின்றி நீந்திய முதலாவது நபரென்ற சாதனையை நிறைவேற்ற ௭திர்பார்த்துள்ளார்.

இதற்கு முன் ஜெலி மீன்கள் காரணமாக மேற்படி 166 கிலோமீற்றர் தூர நீச்சல் சாதனை முயற்சியை அவர்  கைவிட நேர்ந்தது.
அவர் கியூபத் தலைநகர் ஹவானாவிலிருந்து சனிக்கிழமை மாலை நீந்த ஆரம்பித்து தொடர்ந்து நீந்திக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பெண் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் புளோரிடா மாநில கடற்கரையைச் சென்றடைய ௭திர்பார்த்துள்ளார். அவர் முதன் முதலாக 1978ஆம் ஆண்டு இந்தச் சாதனை முயற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

10 வருடங்களாக வயிற்றில் முள்ளுக்கரண்டியுடன் வாழ்ந்த நபர்

23.08.2012.தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் வயிற்றிலிருந்து 9 அங்குல நீளமான முள்ளுக் கரண்டியொன்றை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
லீ கார்ட்னர் (40 வயது) ௭ன்ற நபர், 10 வருடங்களுக்கு முன் உணவு உண்ணும்போது முள்ளுக்கரண்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். அதை விழுங்கியதால் ௭துவித பாதிப்பும் உடனடியாக ஏற்படாத நிலையில் அவர் அது தொடர்பில் மறந்து விட்டிருந்தார்.
ஆனால், காலம் செல்லச்செல்ல லீ கார்ட்னர் பல்வேறு வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரத்த வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பிரித்தானியாவிலுள்ள பார்ன்ஸ்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர்கள் லீ கார்ட்னரின் வயிற்றினுள் மருத்துவ நுண் புகைப்படக் கருவியை அனுப்பிப் பரிசோதித்த போது, அவரது வயிற்றினுள் முள்ளுக்கரண்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ௭தையாவது விழுங்கினீர்களா ௭ன அவரை மருத்துவர்கள் வினவிய போது, 10 வருடங்களின் முன் முள்ளுக்கரண்டியொன்றை விழுங்கியமை அவருக்கு ஞாபகத்துக்கு வந்து அது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இந்த முள்ளுக்கரண்டியானது லீ கார்ட்னரின் வயிற்றில் புண்களும் உள்ளகக் குருதிப் பெருக்கும் ஏற்படக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து 45 நிமிட அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு லீ கார்ட்னரின் வயிற்றிலிருந்த முள்ளுக்கரண்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

24 மணிநேரத்தில் பல்கலைக்கழகங்களைத் திறக்காவிடில் பாரிய போராட்டம்: ஜே.வி.பி.

23.08.2012.
சுதந்திரக் கல்வியைப் பாதுகாக்கவேண்டியது அனைவரதும் கடமை ௭ன்கிறது ஜே.வி.பி.மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக் கழகங்களையும் இன்னும் 24 மணித்தியாலத்துக்குள் திறக்க அரசாங்கம் நடவடிக்கை ௭டுக்க வேண்டும். இல்லையென்றால் பாரிய ௭திர்ப்பு நடவடிக்கைகளை ௭திர் கொள்ள நேரிடும் ௭ன்று ஜே.வி.பி. அரசாங்கத்தை ௭ச்சரித்துள்ளது.

கல்வித் துறைசார் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காது பாடசாலைகளையும் பல்கலைகழகங்களையும் மூடுவதால் பலன் ஏற்படப் போவதில்லை. இவ்வாறான முட்டாள்தனமான செயல்களினாலேயே நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ௭னவே, கல்வித் துறைசார் பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இதனை தேவையாகக் கொண்டு பொது மக்களும் ஏனைய தரப்புகளும் போராட முன்வர வேண்டும். சுதந்திரக் கல்வியைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் ௭ன்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேசிய கல்வியில் பாரிய சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அரசு பல்கலைகழகங்களை மூடிவிட்டுள்ளது. கல்வித்துறைக்கு ௭வ்விதத்திலுமே தகுதியற்ற உயர் கல்வி மற்றும் கல்வியமைச்சர் இருவரை நியமித்து அரசு தனது உள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது.

பல்கலைகழகங்களை மூடியமை கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். அரசாங்கத்தின் அனைத்து செயல்களிலுமே அடிப்படையறிவற்ற நிலையே காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்தும் அனுமதித்து தேசிய சுதந்திரக் கல்வியின் அழிவுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணைய நிதியம் உட்பட ஏகாதிபத்திய வாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே உள் நாட்டின் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும் நடவடிக்கையினை அரசு முன்னெடுக்கின்றது. 2005 ஆம் ஆண்டில் தேசிய வருமானத்தில் 2.9 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 1.9 வீதமே ஒதுக்கப்படுகின்றது. மேலும் கல்விக்கான ஒதுக்கீடுகளைக் குறைத்து அரசு இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும் சூழ்ச்சியினையே முன்னெடுக்கின்றது ௭னக் கூறினார்

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

23.08.2012.
கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 200 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை நான்கு ரோலர் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு மீனவர்களின் படகுகளிலிருந்த வலைகள் உள்ளிட்ட கருவிகளைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கண்டி – மாத்தளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

23.08.2012.
அட்டன் - பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தின் வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் தனிமையில் வாழ்ந்த இரண்டு சிறுமிகளை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று பிற்பகல் மீட்டனர்.

ஆகாரமின்றி எட்டு வயது மற்றும் ஐந்து வயதான இரு சகோதரிகள் தமது பெற்றோர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பாக தோட்டத்தில் வசிக்கும் ஒருவர் கொடுத்த தகவலுக்கு அமையவே பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர்.

இச்சிறுமிகளின் தாய் தாம் கொழும்புக்கு சென்று வருவதாக கூறி அவர்களை வீட்டில் தனிமையில் விட்டு சென்றதாகவும் தந்தை தொடர்பாக இவர்களுக்கு கூறத் தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுமிகள் இன்று அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நீதவானின் கட்டளைக்கு ஏற்ப மஸ்கெலிய சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இச்சிறுமிகளின் பெற்றோர் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



மாத்தளை பஸ் வண்டி விபத்தில் 15 பேர் காயம்

23.08.-2012.கண்டி – மாத்தளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயடைந்த 15 பேரும், ஆபத்தான நிலையில் இருந்த பஸ் வண்டியின் சாரதியும் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் மாத்தளை டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டி கண்டியில் இருந்து மாத்தளைக்கு செல்லும் போதே இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கும் மாத்தளை பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

நாடாளுமன்றில் சம்பந்தன் நேற்று அறிவிப்பு

23.08.2012.

 தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமான முறையில் கௌரவமானதொரு தீர்வு காணப்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்ட பேச்சுகளை முன்னெடுப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் திட்டவட்டமாக இடித்துரைத்தார்.

அத்துடன், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய செயற்றிட்டம் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி, வடக்கு, கிழக்கில் குடிப்பரம்பல், தமிழர்களின் பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை அரசு உடன்நிறுத்தவேண்டும் என்றும் சம்பந்தன் வலியுறுத்தினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
போரின் போது சர்வதேச சட்டதிட்டங்கள் மீறப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி இலங்கைப் பயணத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரும், இலங்கை அரசும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டன.

போரில் ஈடுபட்ட தரப்பினர் மனித உரிமைகளை மீறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

அதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் காணாமல் போனோர் தொடர்பில் நம்பத்தகுந்த முறையிலான நடவடிக்கை, இராணுவ மயமாக்கலின் குறைப்பு, சிவில் அமைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் அதிகாரப்பகிர்வுடனான அரசியல் தீர்வு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் இதனையே வலியுறுத்தி நிற்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் 2013ஆம் ஆண்டு நடைபெறும் கூட்டத்தொடரின்போது இலங்கை அரசு அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும்.

குறிப்பாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் அமுலாக்கம் தொடர்பிலான தேசிய செயற்றிட்டம் தமிழ் மக்கள் பிரதிநிதிகளான எங்களுடன் கலந்துரையாடப்படாமல் தன்னிச்சையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நல்லெண்ணம், ஒற்றுமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அந்த செயற்றிட்டம் தயாரிக்கப்படவில்லை. அடுத்ததாக, மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர்களின் படுகொலை, திருகோணமலையில் கடற்கரையில் வைத்து ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் ஆகியன தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் விருப்பம் இலங்கை அரசிடம் இருக்கவில்லை. எனினும், இது குறித்தான விசாரணையை விதப்புரை வலியுறுத்தி நிற்கின்றது.

 உண்மை வெளிவரவேண்டும் என்ற விடயத்தில் சர்வதேச சமூகம் கரிசனை கொண்டுள்ளது.

தேர்தல்
சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படாத நிலையிலேயே நாம் தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். தேர்தல் ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த விடயம் இருப்பது எமக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.

காணி அபகரிப்பு
சம்பூர், வலிகாமம் ஆகிய பிரதேசங்களில் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அவை மீண்டும் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். ஆனால், உங்கள் செயற்றிட்டம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை.

குடிப்பரம்பல் மாற்றம்
அதுமட்டுமல்லாது, வடக்கு, கிழக்கில் சில நபர்கள்மூலம் இனப்பரம்பல், தமிழர்களின் பாரம்பரியம் ஆகியவற்றை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு தடுத்து நிறுத்தவேண்டும். இவற்றை இதற்கு முன்னரும் நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம். இவ்வாறான விடயங்களை நாம் ஆதாரபூர்வமாகவே சுட்டிக்காட்டுகின்றோம்.

தீர்வு
 உள்நாட்டில் தீர்வை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் கடந்த காலங்களில் தோற்றுப்போயின. இதனால் உள்நாட்டுத் தீர்வு சரிவராது என்ற நிலைமை உருவாகியுள்ளது.

டட்லி சேனாநாயக்கா ஒப்பந்தம், 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ஆகிய முயற்சிகளை இதற்கு சான்றாகக் குறிப்பிடலாம். இதே வேளை, 2006 ஆம் ஆண்டு சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்த போது, நியாயமானதொரு அரசியல் தீர்வை வலியுறுத்தியிருந்தார்.

2008 ஆம் ஆண்டு பஸில் ராஜபக்ஷ இந்தியாவிற்குச் சென்றிருந்த வேளையிலும் இது குறித்துப் பேசப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது நியாயமான அரசியல் தீர்வுக்கு 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் வழிகோலும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரசு கூட்டமைப்பு பேச்சு
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுவந்த இருதரப்பு பேச்சுகள் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முடக்கமடைந்துள்ளன. இன்றுவரை பேச்சுகள் தொடராமல் உள்ளன.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடவில்லை. அந்தக் குழு உறுதியானதாக கௌரவமானதாக இருக்கவேண்டும் என்றே சொல்கின்றோம்.

அத்துடன், தீர்வுத்திட்டப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால், அதன் மூலம் எட்டப்படும் தீர்வு நியாயமானதாக நீடித்து நிலைக்கக்கூடியதாக கௌரவமானதாக தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருத்தல் வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்  என்றார்

விஜய் தலைமையில் திருமணம் (வீடியோ இணைப்பு)

23.08.2012.வேலூர் மாவட்ட மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து வைக்கும் விழா நேற்று(19.08.12) வேலூரில் நடந்தது.
இந்த திருமணத்தை நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். விஜய் தலைமை தாங்கும் செய்தி அறிந்த ரசிகர்கள் திருமணத்திற்கு பெருந்திரளாக கலந்துகொண்டனர். நடிகர் விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் மாலைகள் எடுத்துக் கொடுக்க மணமக்கள் அதை மாற்றிக் கொண்டனர்.
விஜய்,சங்கீதா தாலி எடுத்து கொடுக்க திருமணம் இனிதே நடந்தது. 51 சீர்வரிசைகளை திருமணமான தம்பதிகள் வரிசையாக பெற்றுக்கொண்டனர். மணமக்களை வாழ்த்திப் பேசிய விஜய் “ திருமணம் செய்துகொண்டு இங்கு அமர்ந்திருக்கும் மணமக்களை வாழ்த்த எனக்கு வயதில்லை. குடும்ப வாழ்க்கையை பற்றி கருத்து சொல்கிற அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை.
வாழ்க்கை என்றால் சிறு சிறு துன்பங்கள் வரத்தான் செய்யும்.அதைக் கடந்து வாழ புரிதல் முக்கியம். எந்த சூழ்நிலையிலும் நம்பி வந்தவர்களை கைவிட்டுவிடாதீர்கள். எனக்கு என் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள நேரம் இருக்காது. சங்கீதா தான் அவர்களின் படிப்பு, உணவு என அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்” என்று கூறினார்.
மண்டபத்திற்குள் இருந்த ரசிகர்கள் துப்பாக்கி படத்தின் நிலை பற்றி கேட்ட போது “துப்பாக்கியில் 5 குண்டுகள் போட்டாச்சு. மீதி ஒரு குண்டு தான் இருக்கிறது. அதையும் லோட் செய்தபின் துப்பாக்கியை உங்களிடம் கொடுத்துவிடுவேன்” என்று கூறினார்.

Video:


 

5 நாட்களில் ‘ரூ.100 கோடி’ வசூல்

23.08.2012.சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று வெளியானது. படம் வெளியான வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூலாகியுள்ளது. 5 நாட்களில் ஒரு இந்தியப் படத்திற்கு ரூ.100 கோடி வசூலானது இது தான் முதன் முறை.
இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று ரிலீஸாகி ரூ.100 கோடி வசூல் செய்தது. ஏக் தா டைகரின் மூலம் தொடர்ந்து 4வது முறையாக சல்மானின் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.
நேற்றுடன் ரூ.110 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் ஆமீர் கானின் 3 இடியட்ஸின் வசூல் சாதனையான ரூ.385 கோடியை மிஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை உள்நாட்டில் மட்டும் ரூ.92.5 கோடி வசூலானது. இன்னும் 2 வாரத்திற்குள் ரூ.200 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏக் தா டைகரில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

போட்டியில் வென்ற ஷாலினி! அஜித் கொடுத்த பரிசு!

23.08.2012.தமிழ் சினிமாவில் சில முன்னணி கதாநாயகிகள் மார்க்கெட் இருக்கும் வரை நடித்துவிட்டு பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடுவது அனவரும் அறிந்ததே. ஆனால் நடிகை ஷாலினி பிரபலமாக இருந்தபோதே நடிகர் அஜீத்குமாரை மணந்துகொண்டு வீட்டோடு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு வெளியில் அவர் தலை தெரிவதே அதிசயம்.
அஜீத்தை போன்றே வெளி உலகை அதிகம் விரும்பாத ஷாலினி எங்காவது நெருங்கிய நண்பர்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அஜீத்துடன் வருவார். படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், ஷாலினி பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் காட்டி தொடர்ந்து விளையாடிக்கொண்டு வருவதே அதிகம் பேருக்கு தெரியாது.
சமீபத்தில் நாகர்கோவிலில் நடந்த மாநில அளவிலான பேட்மிட்டன் தரவரிசை போட்டியில் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் ஷாலினி ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது பற்றி பேட்டியளித்த ஹாஸினி “ நான் பயிற்சி எடுத்துக்கொள்ள என் கணவர் எனக்கு வீட்டிலேயே பேட்மிட்டன் கோர்ட் கட்டித் தந்துள்ளார்.
எங்கள் வீட்டினுள் இருந்த பூங்கா தான் விளையாட்டுத்தளமாக மாற்றப்பட்டுள்ளது. என் வீட்டையும் கவனித்துக்கொண்டு என்னால் விளையாட்டிலும் கவனம் செலுத்த முடிகிறது. இது அவரிடம் இருந்து எனக்கு கிடைத்த நல்ல பரிசு” என்று கூறினாராம். ஷாலினிக்கு தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு பரிசையும் தன் மகள் அனௌஷ்கா கையால் தான் பெற்றுக்கொள்கிறாராம்

சிகரெட்டையும், சிப்ஸையும் 'சாப்பிட்டு' உயிர் வாழும் அமெரிக்க நடிகை!

23.08.2012
அமெரிக்க நடிகை கிரிஸ்டன் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் சரியாக சாப்பிடுவதில்லையாம். மாறாக எப்போது பார்த்தாலும் தம்மடித்தபடி இருக்கிறாராம். சிப்ஸ் மட்டுமே சாப்பிடுகிறாராம்.



சமீபத்தில்தான் கிறிஸ்டனின் காதலரான ராபர்ட் பேட்டின்சன் அவரை விட்டுப் பிரிந்தார். இதனால் மனம் நொந்து போய் விட்ட கிறிஸ்டன், சரியாக சாப்பிடுவதில்லையாம். மாறாக சிப்ஸை மட்டுமே கொறித்துக் கொண்டிருக்கிறாராம். அதேபோல எப்போது பார்த்தாலும் சிகரெட் புகைத்தபடி விரக்தியாக இருக்கிறாராம்.

அமெரிக்க நடிகைகளிலேயே அழகானவர் என்ற பெயருடையவர் கிறிஸ்டன். அவர் இப்போது இப்படி சோகமான நிலையில் இருப்பது அவரது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

கிறிஸ்டன் எப்போது பார்த்தாலும் புகைத்தபடி இருக்கிறார். அவ்வப்போது ரெட் புல் எனர்ஜி பானத்தை அருந்துகிறார். கூடவே உருளைக்கிழங்கு சிப்ஸை கொறிக்கிறார். அவ்வளவுதான் இதுதான்அவரது சாப்பாடு என்று பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

லாஸ் ஏஞ்சலெஸிஸ் உள்ள ஒரு தயாரிப்பாளரின் வீட்டில்தான் தற்போது தங்கியிருக்கிறாராம் கிறிஸ்டன். வெளியே அவ்வளவாகத் தலை காட்டுவதில்லை. முகமெல்லாம் வெளுத்துப் போய் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறாராம் கிறிஸ்டன்.

யாராவது அவரை வற்புறுத்தி எதையாவது சாப்பிடக் கூறினாலும் அவரால் சாப்பிட முடியவில்லையாம். ஒரு கப் சூப் கூட குடிக்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு சோகம் அவரைத் தாக்கியுள்ளதாம்.

கிறிஸ்டனின் இந்த நிலை எங்கு போய் முடியுமோ என்று அவரது ரசிகர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

 


 

பிரபுதேவாவே ஆடுறார்னா... உணர்ச்சிவசப்படும் சோனாக்ஷி!

23.08.2012.
பிரபுதேவா நமக்கு டான்ஸ் சொல்லித் தரும்வரை எந்தப் பயமும் இல்லை. ஆனால் அவரே நம்முடன் இறங்கி ஆட வந்து விட்டால் நாம் அம்பேல்தான். கண்டிப்பாக அவருக்கு சமமாக ஆடினால்தான் நாம் பிழைக்க முடியும் என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறுகிறார் பாலிவுட்டின் இளம் புயல் சோனாக்ஷி சின்ஹா.

அக்ஷய் குமார் நடிக்கும் ஓ மை காட் படத்தில் கெஸ்ட் ரோலில் வருகிறார் சோனாக்ஷி. அதாவது அவரும் பிரபுதேவாவும் இணைந்து கோ கோ கோவி்ந்தா என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.
அந்தப் பாடலுக்கு ஆடிய அனுபவம் குறித்து சோனாக்ஷி கூறுகையில், பிரபுதேவா சார் நமக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் ஜாலியாக சொல்லிக் கொடுப்பார். அவர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்தால் போதும். ஆனால் அவர் நம்முடன் சேர்ந்து டான்ஸ் ஆட வந்து விட்டால் நாம் செத்தோம். அவர் ஒரு அபாரமான ஆட்டக்காரர். அவருடன் இணைந்து ஆடுவது என்பதை நினைத்தாலே நடுங்கிப் போய் விடும்.
இருந்தாலும் அவருக்கு இணையாக ஓரளவுக்காவது ஆடினால்தான் நாம் பிழைத்தோம். அவருடன் இணைந்து ஆடும்போது தானாகே நமது டான்ஸும் சிறப்பாக மாறி விடுகிறது என்றார் சோனாக்ஷி.
இந்தப் பாடலுக்காக செமத்தியான மூவ்மென்ட்களை சோனாக்ஷிக்காக வைத்துள்ளாராம் பிரபுதேவா. அதை கஷ்டப்பட்டாலும் கூட சிறப்பாக செய்து அசத்தி விட்டாராம் சோனாவும்.
பட்டையைக் கிளப்பும் மூவ்மென்ட்களை வைப்பதில் பிரபுதேவாவுக்கு நிகர் அவர்தான்

தாய்லாந்தில் RE-ENTRY கொடுத்திருக்கும் அலெக்ஸ் என்னும் குகேந்திரராஜா

23.08.2012.2009ம் ஆண்டு 254 இலங்கை அகதிகளை ஏற்றிக்கொண்டு கனடா நோக்கிச் சென்ற கப்பல் இந்தோனேசியப் படையினரால் பிடிக்கப்பட்டது. இக் கப்பலில் இருந்து தாம் தரைக்கு இறங்கப்போவது இல்லை என தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வேளை இவர்களுக்காகப் பேச அலெக்ஸ் என்னும் நபர் முன்வந்தார். இதேவேளை சர்வதேச தொலைக்காட்சிகள் அவரை நேர்காணல் கண்டவேளை, நிகழ்ச்சி தயாரிப்பாளரை விட படு கெட்டித்தனமாக ஆங்கிலம் பேசினார் அலெக்ஸ். அவரது ஆங்கிலப் புலமை கனேடிய பேச்சு வழக்கில் இருந்ததால், அவர் யார், ஏன் இந்தியாவில் இருந்து புறப்பட்ட கப்பலில் ஏறினார் என்பதுபோன்ற கேள்விகள் எழுந்தது. பின்னர் அவர் கனடா நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் என்று அறியப்பட்டது. இதேவேளை இவர் தான் அனைவரையும் கடத்திச் சென்ற ஏஜன்சி என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

அதுவரை காலமும் தான் தான் அகதிகளின் பேச்சாளர் என்ற நிலையில் இருந்த அலெக்ஸ், இரவோடு இரவாக இந்தோனேசியாவில் இருந்து மர்மமாக மறைந்தார். அதன்பின் அவர் என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்பதுபோன்ற விடையங்கள் தெரியாது அகதித் தமிழர்கள் குழம்பிப்போய் இருந்தனர். அகதிகளாக இருந்த தமிழர்கள், அலெக்ஸ் தங்களை சங்கடத்தில் மாட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும், இவரால் தான் எல்லாப் பிரச்சனைகளும் தலைதூக்கியதாகவும் முன்னர் அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்திருந்தனர்.

தற்போது தாய்லாந்து நாட்டில், இவர் தலைதூக்கியுள்ளார் என அன் நாட்டுப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தான் இந்தோனேசியாவில் இருந்து எவ்வாறு தப்பினேன், நடந்தது என்ன என்று பக்கம் பக்கமாகக் கதைசொல்லியிருக்கிறார் அலெக்ஸ். தமிழ் நாட்டில் உள்ள பாதிரியார் காஸ்பர் புலுடா விடுவதுபோல இவர் தனது அனுபவங்கள் என்றுகூறி பல செய்திகளை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்

இலங்கையின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணை நிலைநிறுத்தம்

23.08.2012.
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென் ஆசியாவின் சகல முக்கிய நிலைகளையும்தாக்கக் கூடிய வகையில் இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அக்னி ரக ஏவுகணையே இவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள், கட்டுநாயக்க,மத்தள, ரத்மலானை விமான நிலையங்கள், இராணுவத் தலைமையகம், புத்தளம் அனல்மின்நிலையம், களனிதிஸ்ஸ, கெரவல பிட்டிய மின்நிலையங்கள் போன்றவற்றை இலக்குவைத்து இவ்வாறு ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்களை வழங்கிய இந்திய உளவுப்பிரிவின் உயர் அதிகாரி அம்ரீட் அவுவாலியா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மிஸைல்டொட் கொம் என்ற இணைய தளத்தை பராமரித்து வரும் கலிபோர்னியாவை மையமாகக் கொண்ட அமெரிக்கநிறுவனமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைகளைப் பயன்படுத்தி இந்தியா, இலங்கையிடமிருந்து பொருளாதார நலன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும்அதேவேளை, சீனா முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதனையும் தடுக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இலங்கையூடான சீனாவின் விநியோக வழிகளைதடுப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் இரகசிய திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகராலய முதலாம் நிலை செயலாளர் அனுராக் சிறிவட்சரா பாலியல் துஸ்பிரயோகசம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

ஆளணிப் பற்றாக்குறை; குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கும் நல்லூர் கந்தன் ஆலயச் சூழல்

23.08.2012.
நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் முடிவடைந்து 4நாட்களைக் கடந்த நிலையிலும் பொதுமக்களினாலும் வியாபாரிகளினாலும் போடப்பட்ட குப்பைகள் இன்னும் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஆலயச் சுழலை சுழ்ந்து அமைக்கப்பட்டிருந்த வியாபாரக்கடைகள் அகற்றப்பட்டு விட்டன. எனினும் பொது மக்கள் மற்றும் வியாபாரக்கடைகளிலிருந்து வீசப்பட்ட கழிவுப் பொருட்கள் காணப்படுவதுடன் துர் நாற்றமும் வீசுகின்றது.
புனிதமாக வைத்திருக்க வேண்டிய ஆலயச் சூழல் இவ்வாறு காணப்படுகின்றது இது மாநகர சபையினுடைய அசமந்தப்போக்கினால் மிகவும் வேதனையாக இருப்பதாக அங்கிருந்தவர்கள் சிலர் பேசிக்கொண்டதனையும் காண முடிந்தது.
இது தொடர்பில் மாநாகர சபை உத்தியோகத்தரிடம் கேட்ட போது,
ஆலயச் சுழலின் ஒவ்வொரு பகுதிகளாக இப்போது தான் துப்பரவு செய்து வருகின்றோம். இவற்றை வெகு விரைவில் முடித்து விடுவோம் ஆனால் தற்போது எங்களுக்கு ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது இதனாலேயே மந்தகதியில் வேலைகள் நடைபெறுகின்றது என அவர் தெரிவித்தார்.
எனினும் ஆலயத்தினுள் உட்பிரவேசிக்கும் நுழைவாயிலில் மக்கள் இளைப்பாறும் நோக்கோடு அமைக்கபட்ட கொட்டகைகளை போக்குவரத்து செய்பவர்களுக்கு இடையூறு இன்றி அகற்றி வருகின்றோம்.
அத்துடன் ஆலயத்தை சுழ உள்ள வீதிகளில் இடப்பட்ட மணல் மண்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

கடல்மார்க்கமாக ஆஸி.செல்வோர் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு நேற்றும் 69 பேர் கைது; இரு நாள்களில் இரண்டாவது சம்பவம்

23.08.2012.இலங்கையில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா விற்குச் செல்பவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த போதும் இந்த ஆபத்தான பயணத்தை மேற் கொள்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கின்றது.
ஆஸ்திரேலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று நேற்று அதிகாலையில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டது. இதில் 69 பேர் இருந்தனர். அவர்களில் 48 பேர் தமிழர்கள், 19 பேர் சிங்களவர்கள், 2 பேர் முஸ்லிம்கள்.
கடந்த இரண்டு நாள்களில் கடற்படையினரிடம் மாட்டுப்படும் இரண்டாவது அகதிகள் படகு இது. நேற்றுமுன்தினம் திருகோணமலை கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகளைக் கடற்படையினர் வழிமறித்துக் கைப்பற்றினர். அவற்றில் ஆஸ்திரேலியா செல்வதற்காக 83 பேர் இருந்தனர்.
நேற்றுக் கைப்பற்றப்பட்ட படகு நீர்கொழும்பு கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது கடற்படை ரோந்துப் படகிடம் மாட்டிக்கொண்டது. "ஆஷா துவா' என்று பெயரிடப்பட்ட இழுவை மீன்பிடிப்படகிலேயே 69 பேரும் ஆஸ்திரேலியா பயணமாகிக் கொண்டிருந்தனர்.
நீர்கொழும்பு, புத்தளம், வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், விசுவமடு, மட்டக்களப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம்களுமே படகில் இருந்து கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினரின் பாதுகாப்புடன் மோதர துறைக்குக் கொண்டு செல்லப்பட்டது படகு. அதிலிருந்தவர்கள் விசாரணைகளுக்காக குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருபவர்களை அயல் நாடுகளில் தங்க வைப்பதற்கான சட்டத் திருத்தத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ள நிலையிலும் இங்கிருந்து அகதிகளாகச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சிப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.
கடந்த 21 நாள்களில் மட்டும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்ட 663 பேர் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெருமளவானோர் தமிழர்கள்.
அதேவேளை, மேலும் பல நூற்றுக்கணக்கானோர் படகுகள் மூலமாக இதேகாலப் பகுதியில் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்திருக்கிறார்கள்