siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

இப்போதைக்கு திருமணம் இல்லை! நம்புங்க ப்ளீஸ்

 
26.08.2012.பொதுவாக த்ரிஷா என்றாலே அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக அவரைப்பற்றிய பரபரப்பான செய்தி அவரது திருமணத்தை பற்றி தான். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான சுரேஷ் காருவின் மகனும், நடிகருமான ராணா டகுபதிக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இதுபற்றி த்ரிஷாவிடம் நாம் நேரடியாக கேட்டபோது, அவர் கூறியதாவது, என் கல்யாணம் பற்றிய செய்திகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் வருகிறது. இப்போதைக்கு நான் படங்களில் தான் பிஸியாக இருக்கிறேன். ராணாவுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கு. ஆனால் அது கல்யாணம் வரைக்கும் போகுமா...? என்பது எனக்கு தெரியல, பழகி பார்க்கணும். சினிமாவுக்கு வந்து 10 வருடம் ஆகிறது. பல மொழிகளிலும் நடிச்சாச்சு, நிறைய கமர்ஷியல் படங்களிலும் நடிச்சாச்சு. இப்பதான் த்ரிஷா எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பாங்க என்று நம்புறாங்க. இதனால் எனக்கு நல்ல நல்ல ரோல் கிடைக்குது. ரொம்பவே என்ஜாய் பண்ணி படங்களில் நடிக்கிறேன்.

எதையும் மூடி மறைத்து பேசுறவ நான் கிடையாது. அது என்னோடு பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்க என் கல்யாண விஷயத்தை நான் ஏன் மறைக்க போறேன். இப்போ விஷால் கூட சமர், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, ஜெயம் ரவியுடன் பூலோகம் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இதுதவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேசிக்கிட்டு இருக்கேன். எனக்கு ராணா புதிய நபர் கிடையாது. ஏற்கனவே அவரது அப்பா சுரேஷ் சாரின் தயாரிப்பில் வெங்‌கடேஷ் கூட நமோ வெங்கடேசா, ஆடலாரி, பாடிகார்ட் போன்ற படங்களில் நடிச்சுருக்கேன். அவர் தயாரிப்பில் நான் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். ராமநாயுடுவின் ‌பேரன் தான் ராணா. நடிகர் வெங்கடேஷ், ராணாவுக்கு சித்தப்பா முறை. அவங்க குடும்பம் எல்லோருடனும் நான் நன்றாக பழகி இருக்கேன்.

ராணா எனக்கு நல்ல நண்பர். அவருடன் கொஞ்சம் பழகி பார்க்கணும். கல்யாணம் என்பது காலம் முழுக்க வாழ்க்கை நடத்தும் விஷயம். அது விளையாட்டு கிடையாது. ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். என்னுடைய கல்யாணம் இப்போதைக்கு இல்ல, என்ன நம்புங்க ப்ளீஸ் என்றார்.

கல்யாண விஷயத்தில் ஆரம்பத்தில் நடிகர்-நடிகைகள் உண்மையை மறைப்பதும், பின்னர் இறுதியாக கல்யாண பத்திரிகையோடு பத்திரிகையாளர்களை சந்திப்பதும் சகஜம் தான். ஆனால், த்ரிஷா விஷயத்தில் எப்படியோ...? பொறுத்திருந்து பார்ப்போம்

இசட்புள்ளிப் பிரச்சினை தொடர்பில் நேரடியாகத் தலையிடவுள்ள நாமல்

26.08.2012.
. By rajah.
க பொ த உயர்தர பரீட்சை இசட் புள்ளி பிரச்சினையுடன் தொடர்புடைய அனைவருக்கெதிராகவும் நடவடிக்கையெடுக்குமாறு  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.
இப்பிரச்சினையை உயர்நீதிமன்றம் வரை கொண்டு செல்லத் தான் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தமது கட்சிக்கும், அரசுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் இது தொடர்பில் தான் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்
23:15 26.08.2012

யாழ். நகரில் இளம் பெண்களுடன் சேஷ்டைபுரிந்த இளைஞன் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

இளம் பெண்களுடன் சேஷ்டை புரிந்த இளைஞர்களில் ஒருவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இடம் பெற்றது.

தனியார் வங்கியில் கடமையாற்றும் பெண் ஊழியர்களும் ஆண் ஊழியர்களுமாக வங்கியின் நடவடிக்கை சம்பந்தமான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் ஈடுபட்டிருந்தார்கள்.
அவ்வேளையில் குறிப்பி;ட்ட இடத்திற்கு வந்த நான்கு இளைஞர்கள் குறிப்பி;ட்ட பெண் ஊழியர்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன் கையடக்கத் தொலைபேசி மூலம் படம் எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனால் ஆத்திரமுற்ற பெண் ஒருவர் இளைஞர்களுக்குத் ஏதோ கூறவே ஆத்திரமுற்ற இளைஞர் ஒருவர் பெண்ணைத் தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் குறிப்பி;ட்ட இளைஞர்களைப் பிடிக்க முற்பட்ட வேளையில் மூவர் தப்பி ஓடிவிட ஒருவர் வகையாக மாட்டிக்கொண்டார்.குறிப்பி;ட்ட இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளார்

தவறான உறவால் வந்த வினை!

கள்ளக்காதல் விவகாரத்தில், நபரொருவரின் நாக்கை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் துண்டித்த சம்பவமொன்று பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரின் கிழக்கில் உள்ள ஒகாரா மாவட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள மிர்சாபூர் கிராமத்தில் சிகையலரங்கார நிலையமொன்றினை நடத்தி வருபவர் யூசுப்கான் (32).

இவருக்கும் அக்கிராமத்தில் உள்ள செல்வாக்கான குடும்பமொன்றைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அக்குடும்பத்தினர் யூசுப்கானை கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் அவருடைய கண்களை தோண்டி எடுத்தனர். ஆத்திரம் அடங்காமல், காது, மூக்கு, உதடு, நாக்கு ஆகிய உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி வீசினர். இரத்த வெள்ளத்தில் துடித்த யூசுப்கானை ஒதுக்குப்புறமான இடத்தில் போட்டு விட்டு சென்றனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வரும் யூசுப்கானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளன்ர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் துரிதசெயற்பாடு :யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்


.26.08.2012
யாழ். குடாநாட்டு பொலிஸ் நிலையங்கள் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டு வருகின்றது. இந்த வகையில் கடந்த வாரம் மட்டும் 160 வழக்குகளை யாழ். மாவட்ட நீதிமன்றங்களில் பொலிஸார் தாக்கல் செய்துள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ். மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே வாராந்தம் நடைபெறும் சந்திப்பு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகநேசன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் கருத்துக் கூறிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகநேசன்
பல்வேறு குற்றச்செயல்களையும் கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணம் பொலிஸாரினால் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் கடந்த வாரம் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் கள்ளச்சாராயம் விற்றல் ,குழுவாக சண்டையிட்டு; சிறு குற்றங்களில் ஈடுபடல் மற்றும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் உட்பட நூற்றி ஐம்பத்தைந்துபேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்கள்.
காங்கேசன்துறை பொலிஸ் பகுதியில் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை விட கடந்த காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்;டவர்கள் சம்பந்தமான விபரங்கள் பெறப்பட்டுள்ளபோதிலும் குறிப்பி;ட்ட சந்தேக நபர்கள் பலர் தலைமறைவாக வேறு மாவட்டங்களில் மறைந்திருப்பதனாலும் அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸார் நடமாடும் சேவைகளைக் கிராமம் கிராமமாக நடத்துவதுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளையும் போக்குவரத்து விழிப்புணர்வுகளையும் பரவலாக முன்னெடுத்து வருகின்றார்கள் எனவும் குறிப்பி;ட்டார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய 31500 பேர் வடக்கிற்கு விஜயம்


 26.08.2012.
இவ்வருட ஓகஸ்ட் மாதம் வரையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட 31500 வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்
போர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். 2011 ஜூலை மாதத்திற்கு பின்னர் நூற்றிற்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 51 400 கடவுச் சீட்டுகளை வைத்திருப்போர் இலங்கை விஜயத்தை மேற்கொண்டபோது யாழ்ப்பாணத்திற்கும் சென்று வந்துள்ளனர்.
அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாகும். இவர்கள் தமது பரம்பரையினரின் வீடுகளையும் சொத்துக்களையும்நெருங்கிய உறவினரையும் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
சேர் ஜோன் கொத்தலாவலை இராணுவ
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு
செயலர் ராஜபக்ஷ இத்தகவலை வெளியிட்டார்

விலங்குகளை மம்மியாக்கி வழிபடும் எகிப்தியர் (வீடியோ இணைப்பு)

26.08.2012.எகிப்தியர்கள் பல மனித கடவுளை வழிபட்டனர். அவர்கள் வணங்கிய கடவுளில் விலங்கு உருவமும் கொண்டவை. இவர்கள் மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் மம்மியாக்கினர்.
எல்லா மம்மிகளும் பல பொருள்களை கொண்டு இறுக்கமாய் சுற்றப்படும்.
375 மீற்றர் அளவுக்கு நாரால் நெய்த துணி ஒரு மம்மியை மூடுவதற்கு தேவைப்படுகிறது

திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கும் அஞ்சலி


Sunday, 26 August 2012,
நடிகை அஞ்சலி தனது ஒவ்வொரு படமும் வெளியாகும் போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க புறப்படுகிறார்.
தென்னிந்திய நடிகை அஞ்சலி தற்போது தெலுங்கில் ஒரு படமும் தமிழில் 3 படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் ஆர்யாவுடன் சேட்டை படத்திலும் சுந்தர்.சி இயக்கத்தில் எம்.ஜி.ஆர் படத்திலும் கரிகாலன் என்ற படத்திலும் நடிகை அஞ்சலி நடித்து வருகின்றார்.
ஏற்கனவே அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும், அங்காடித் தெரு போன்ற படங்களின் வெற்றியே இந்த புதிய படங்களுக்கான வாய்ப்பு என்றுகூட சொல்லலாம்.
ஏனெனில் தற்போது அஞ்சலி நடித்து வருகின்ற 3 படங்களும் பெரிய இயக்குனர்கள், முன்னணி நடிகர்களின் படமாகும்.
இந்த வெற்றிக்கு மற்றொரு காரணமும் உள்ளது. அதாவது தன்னுடைய ஒவ்வொரு படமும் வெளியாகும் போது திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க சென்று விடுகிறார் அஞ்சலி.
திருப்பதி பகவானின் அருளால் இந்த படங்கள் வெற்றியடைவதாகவும் நடிகை அஞ்சலி நம்புகிறார்
 

பாடசாலைகளிலும் திருட்டு ஆரம்பம்; யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தகவல்

 26.08.2012.
இதே வேளை தெல்லிப்பழையில் வீடு உடைத்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 22 ஆயிரம் ரூபா பெறுமதியான ரீ.வி, பிளேயர் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
உடுவில் மத்தியிலுள்ள வீட்டில் இரவு நேரம் அங்கிருந்த 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர். இடைக்குறிச்சி மேற்கு, வரணியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை ஒருவர் திருடிச்சென்றுள்ளார்.
அது பற்றிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட தையடுத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்ப்பட்டார். உடுவில் உதய சூரின் வீதியால் தனியால் சென்ற பெண்ணிடமிருந்து 63 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்.
நல்லூர் நாயன்மார்கட்டு இருகுக்களிடையே சில நாள்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோதலில் வீடு ஒன்றிலிருந்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த திங்கட்கிழமை 87 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான சங்கிலியைக் களவாடியமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
விசாரணையின் மூலமாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்ததோடு களவுபோன சங்கிலி சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டது. சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸார் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்ற போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

தண்ணீருக்கு அலையும் கட்டாக்காலிகள் இறைச்சிக்கு வெட்டப்படும் கொடூரம்

26.08.2012.
 
நீர் நிலைகளை தேடிவரும் கட்டாக்காலி கால்நடைகளைப் பிடித்து இறைச்சிக்காக வெட்டப்படும் அதிர்ச்சியான சம்பவங்கள் தென்மராட்சி கிழக்குப்பகுதியில் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.
இங்கு வெட்டப்படும் கால்நடைகளின் இறைச்சிகள் மீன்கொண்டு வருவோர் மூலம் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எழுதுமட்டுவாழ் தெற்குப்பகுதியில் கட்டாக்காலியாக அலையும் கால்நடைகள் அந்தப்பகுதியில் குளங்கள் நீரின்றி வற்றியதால் கழிங்கரை என்னும் இடத்துக்கு கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடிக்க வருகின்றன.
இந்தப்பகுதி பெரும் பற்றைகள் என்பதால் அந்த இடங்களில் தடங்கல் வைத்து மாடுகளைப் பிடித்து இறைச்சிக்காக வெட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப்பகுதியில் உள்ள பற்றை மறைவுகளில் பெருமளவு மாடுகளின் தலைகளும் கழிவுகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
உரிய அதிகாரிகள் இவ்விடத்தில் நடவடிக்கை மேற்கொண்டு மாடுகளை வெட்டுவதைத் தடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது அந்தப்பகுதியில் தூர்ந்து போயுள்ள குளங்களை ஆழமாக்கும் பணியை இவ்வாறு குற்றம் செய்வோருக்கு தண்டனையாக வழங்குமாறும் மக்கள் கேட்டுள்ளனர்.
தென்மராட்சி கிழக்குப்பகுதியில் 2000ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது அங்குள்ள குடியிருப்பாளர்களால் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள் கட்டாக்காலிகளாக அலைவது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் புதிய தீர்மானத்தை எதிர்த்து கிறிஸ்மஸ் தீவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் உணவுத் தவிர்ப்பில்

26.08.2012.
 
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் புதிய தீர்மானங்களையடுத்து, கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக் கோரிக்கையாளர்களாக ஏற்றுக்கொள்ளாது அக் கோரிக்கையை பரிசீலிப்பதற்காக நவ்றூவுக்கு அவுஸ்திரேலிய அரசு அனுப்பிவைப்பதால், தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் பல ஆண்டுகளுக்கு அத் தீவிலேயே தங்கிவிட நேரிடும் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற படகுப் பயணங்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் வரமுயற்சிப்போரை தடுத்து வைப்பதற்காக நவ்றூ மற்றும் பப்புவா நியு கினி ஆகிய இடங்களில் விசாரணை மையங்களை திறப்பதற்கு அண்மையில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது.

அவுஸ்திரேலியா நோக்கி வருபவர்கள் நேராக இந்த தடுப்பு முகாம்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தாம் தங்கியிருக்கும் இடைத்தங்கல் இடங்களிலிருந்து சட்டரீதியான வழிமுறைகளில் தஞ்சம் கோருபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் கூறியுள்ளார்.

ஆனால் இந்த முடிவுக்கு மனிதவுரிமைகள் அமைப்பு மற்றும் உள்நாட்டு அமைப்புக்கள் போன்றவற்றால் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

வெலிங்டனில் சிறிலங்காப் படையதிகாரிகளுக்கு பயிற்சி எதிர்ப்புப் போராட்டத்தில் பலர் கைது

 
26.08.2012.தமிழகம் நீலகிரியில் சிறிலங்காப் படையினருக்கு இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் பயிற்சி அளித்து வருவதனைக் கண்டித்து போராட்டம் நடத்தியோர் காவற்றறையினரால் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள எம்.ஆர்.சி. என்ற இராணுவ பயிற்சி மையத்தில் சிறிலங்காப் படை அதிகாரிகள் இருவருக்கு கடந்த மூன்று மடாத காலமாகப் பயிற்சியளிக்கப்பட்டு வருவது குறித்து நேற்று தகவல் வெளியானது.

அதனையடுத்து அவ்வாறு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை மாவட்டத் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் ரெட்பீல்டில் உள்ள இராணுவ மையத்தை முற்றுகையிட கட்சியினர் திரண்டு சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவற்றுறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கட்சி கொடிகளை ஏந்தி சிறிலங்காப் படையதிகாரிகள் மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

அதேபோன்று, கோவை மாநகர் மற்றும் கோவை மாவட்ட ம.தி.மு.க, சார்பில் அவினாசி சாலையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிலங்காப் படையதிகாரிகள் மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட 60 பேர் காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.

இந்த முற்றுகை போராட்டத்தினால் கோவை அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெலிங்டனில் கடந்த மாதம் நடைபெற்ற கருத்தரங்கில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிலர் கலந்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தயிலும் மத்திய அரசு சிறிலங்காப் படை அதிகாரிகள் இருவருக்கு வெலிங்டனில் பயிற்சி அளித்து வரும் இரகசியம் நேற்று வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்