siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சமுத்திரக்கனியின் சாட்டை பாடல்கள் இன்று வெளியீடு

28.08.2012.BY.rajah.
மைனா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டூடியோஸ் சார்பில் பிரபு சாலமன், ஜான் மேக்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் சாட்டை.
இந்த படத்தில் சமுத்திரகனி ஆசிரியர் வேடம் ஏற்று நடிக்கிறார். படத்தில் கண்ணியம் மிக்க ஆசிரியராக வலம் வரும் சமுத்திரகனிக்கு சுவாசிகா ஜோடியாக நடிக்கிறார்.
இளம் கதாநாயகனாக நடிக்கும் யுவனுக்கு, மகிமா ஜோடியாக நடிக்கிறார். வில்லனாக தம்பி ராமய்யா நடிக்கிறார்.
மைனா படத்திற்கு தேசிய விருதையும், பாராட்டுகளையும் பெற்ற தம்பி ராமய்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
பிளாக் பாண்டி, பிரேம், ஜீனியர் பாலையா, அவரது மகன் முரளி, பாவாலட்சுமணன் ஆகியோர் சாட்டைக்கு வலு சேர்க்கும் கதாபாத்திரங்கள்.
சாட்டை படம் பற்றி இயக்குனர் கூறுகையில், சாட்டை கதை நல்ல விதை! நல்ல விதை விதைக்கப்படுகிற நிலத்தை பொறுத்தே விருட்சமாவதும், வீணாவதும் தீர்மானிக்கப்படுகிறது.
பிரபுசாலமன்- ஜான் மேக்ஸ் இருவரும் நல்ல கதைக்கு கொடுத்த மரியாதைக்கு தலை வணங்குகிறேன்.
பிரபு சாலமன் தனது மாணவனை மதித்து, எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார். நானும் அவரது பெயரை காப்பாற்றி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
பிரபு சாலமன் கூறுகையில், திரைப்படக் கல்லூரியில் கோல்டு மெடல் பெற்றவர் அன்பழகன். சாட்டை என்கிற தலைப்பு ஆக்ஷன் தலைப்பாக தெரிந்தாலும், இது ஆக்ஷன் படமில்லை.
எந்தவொரு நாடும் வளமான நாடாக மதிக்கப்படுவது அந்த நாட்டின் கல்வித்துறையின் செயல்பாடுகளை வைத்து தான்.
பொறுப்பில்லாத ஆசிரியர்களும் இருக்கிறார்கள். கல்வியின் மதிப்பு தெரியாத மாணவர்களும் இருக்கிறார்கள்.
பெற்றோர்கள் தங்களது வாரிசுகளை ஆசிரியர்களை நம்பித்தான் அனுப்புகிறார்கள். ஆசிரியர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை சாட்டையில் பதிவு செய்திருக்கிறோம்.
தயா கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும், மாணவன் வேடத்தில் யுவனும் பொருந்தி போய் விட்டார்கள். இந்த படத்தை தயாரிப்பதற்காக பெருமைப்படுகிறோம் என்றார்கள் பிரபு சாலமனும், ஜான் மேக்சும்.

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட 18 வயசு படம்

சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் ஊடகத்தினருக்காக 18 வயசு படம் திரையிடப்பட்டது.
நிக் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள 18 வயசு படத்தை ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார்.
இதில் ஜானி, காயத்திரி, ரோஹிணி, சத்யேந்திரன், மறைந்த எழுத்தாளர் கிருஸ்ணா டாவின்சி, யுவராணி, டொக்டர் சூரி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
சக்தி ஒளிப்பதிவு செய்ய தினேஷ், சார்லஸ் போஸ்கோ இசையமைத்துள்ளனர்.
சண்டைப் பயிற்சியை ராஜசேகர் கவனிக்க திரைப்படத்தை ஆண்டனி தொகுத்து வழங்கியுள்ளார்.
குடும்ப சூழலால் மன நிலை தவறும் இளைஞனின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பன்னீர் செல்வம்.
அம்மாவின் பாசத்துக்கும் தோழியின் அன்புக்கும் ஏங்கித் தவிக்கிறார் இளம் நாயகன் ஜானி. காடும், நட்சத்திர வான் வெளியும் தான் சுகமளிக்கும் உறுதியாக ஜானி நம்புகிறார்.
நண்பன் சொன்னதால் தோழி காயத்ரியின் காதல் நெருக்கத்தை ஜானி விரும்புகிறார். அம்மா யுவராணியையும், அவரின் அந்தரங்க நண்பனையும் தீர்த்துக் கட்டுகிறார்.
நண்பன் சத்யேந்திரன் உதவ, தோழி காயத்ரியோடு ஜானி தான் விரும்பிய காட்டுக்கு பயணமாகிறார். ஜானியை வேட்டையாட பொலிஸ் துரத்துகிறது.
மரண வாசலை நோக்கி வேகமாக செல்லும் நாயகன் ஜானியை காப்பாற்ற டொக்டர்கள் கிருஷ்ணா டாவின்சியும் ரோகிணியும் போராடுகிறார்கள்.
பொலிஸின் துப்பாக்கிக்கு ஜானி பலியாகிறாரா? தோழி காயத்ரியின் அன்பு ஜானிக்கு கிடைத்ததா? என்பதை பரபரப்பாக இயக்குனர் பன்னீர் செல்வம் சொல்லியிருக்கிறார்.
சவாலான கதாபாத்திரத்தில் ஜானி மிருகத்தனமான நடிப்பைக் காட்டியிருக்கிறார். சீரியசான காட்சிகளில் காயத்ரி அழுத்தமான நடிப்பைக் காட்ட முயற்சித்துள்ளார்.
தொழில் நுட்ப அளவில் ரசிகர்களை கவரும் வகையில் '18 வயசு' படம் வந்துள்ளது

புதிய தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட உயிர்மொழி



கொலிவுட்டில் ஹார்மோன் மூவி மேக்கர்ஸ், மானவ் புரடக்சன் இணைந்து தயாரித்துள்ள படம் உயிர்மொழி.
இப்படத்தில் மானவ், ராஜீவ், சர்தாஜ், கீர்த்தி, சாம்ஸ், சசி, பாபி ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி அறிமுக இயக்குனர் ராஜா இயக்கியுள்ளார். விளம்பரப்படங்களில் பணியாற்றியுள்ள இவர், ப்ரைம் ஃ போகஸ் ஸ்டுடியோவில் எடிட்டராக பணிபுரிந்து, திரைப்பட இயக்கத்தையும் கற்று தேர்ந்தவர்.
உயிர்மொழி படம் குறித்து இயக்குனர் ராஜா கூறுகையில், பல சுவாரஸ்யமான காட்சிகள், சம்பவங்களை சேர்த்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். நிச்சயம் தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
காதல், பாசம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, அதிர்ச்சி என்று எல்லாம் கலந்த அழகான கலகலப்பான படமாக உயிர்மொழி ரசிகர்களை கவரும். திரைக்கதையுடன் பின்னப்பட்டுள்ள டி.என்.ஏ அம்சம் படத்துக்கு கூடுதல் பலமாக நிற்கும்.
சென்னை, கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், அனிமேஷன் அசத்தலும் உண்டு. stop motion, Limbo frame முறையிலும் காட்சிகளை எடுத்துள்ளோம்.
புதுமையான தொழில்நுட்பத்தில் நீளமான காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளோம் என்றும் பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


16 வயது பெண்ணாக நடிக்கும் தேவயானி

Tuesday, 28 August 2012, 07:57.50 AM GMT +05:30 ]
கொலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி.

காதல் கோட்டை, பிரண்ட்ஸ் என்று பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் இயக்குனர் ராஜகுமாரனை மணந்து கொண்ட பின்னும் அவ்வப்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
28.08.2012.BY.rajah.
கோலங்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் வெற்றிகரமாக நடித்த இவர் தற்போது திருமதி தமிழ் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை அவரது கணவர் ராஜகுமாரன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார்.
இதில் அவர்களுக்கு, இரண்டு டூயட் பாடல்கள் உள்ளதாம். அதில் ஒரு பாடல் காட்சியில், தேவயானி பதினாறு வயது பெண்ணாக பாவாடை, தாவணி அணிந்து நடித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ராஜகுமாரன் கூறுகையில், தேவயானியின் முகமும், உடலமைப்பும் இளமையாக தோற்றமளிப்பதால், இந்த கதாபாத்திரத்திற்கு, அவர் கச்சிதமாக பொருந்தி விட்டார்.
மேலும், திருமதி தமிழ் படத்தை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இயக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்
 

கணவரின் பிறந்தநாளை பார்வையற்றோருடன் கொண்டாடிய சினேகா

Tuesday, 28 August 2012, BYrajah.
நடிகை சினேகா வழக்கமாக தனது பிறந்தநாளை பார்வையற்றோருடன் கொண்டாடுவார்.
அதேபோலவே அவரது கணவரான நடிகர் பிரசன்னாவின் பிறந்த நாளையும் மந்தைவெளியில் பார்வையற்றோருடன் இன்று கொண்டாடினார்.
பிரசன்னா பார்வையற்றோர் மத்தியில் கேக் வெட்டினார். அவர்களுக்கு சினேகா கேக் ஊட்டி விட்டார். பின்னர் மூன்று சக்கர சைக்கிள், 100 பேருக்கு ஆடைகள், உபகரணங்கள், 200 பேருக்கு உணவு போன்ற உதவி பொருட்களையும் சினேகாவும், பிரசன்னாவும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசன்னா கூறுகையில், எனது பிறந்தநாளை இன்றுதான் பயனுள்ளதாக கொண்டாடி இருக்கிறேன். எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு வருவது கடைசி நிமிடம் வரை தெரியாது.
பிறந்தநாளையொட்டி மயிலாப்பூர் கோவிலில் சினேகாவும், நானும் சாமி கும்பிட்டோம். திடீரென்று இங்கே சினேகா என்னை அழைத்து வந்து விட்டார்.
இவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக சினேகாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இனிவரும் காலங்களிலும் இதுபோல பயனுள்ள வகையில், பிறந்த நாள் கொண்டாடுவேன் எனவும் கூறினார்.
நிகழ்ச்சியில் பார்வையற்றோர்கள் சங்க தலைவர் அருணாச்சலம், ஐயப்பன், சாய் சங்க தலைவர் கே.தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்


ரஜினி ஸ்டைலில் சசிகுமார்!

28,08.2012.BYrajah.தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் இயக்குனர் சசிகுமார் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன். சசிகுமாருக்கு ஜோடியாக லஷ்மி மேனன் நடிக்க நடிகர் சூரி, தேசிய விருது பெற்ற அப்புகுட்டி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் சுந்தர பாண்டியன் படத்தின் இசை வெளியீடு நடந்தது. இதில் இயக்குனர்கள் பாலா, சமுத்திரகனி, ஆகியோர் கலந்துகொண்டனர். அதன் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் சசிகுமார்.
படத்தின் முதல் பாடலான கொண்டாடும் மனசு ஹீரோ சசிகுமாரின் அறிமுகப்பாடல். இதில் நடன அசைவுகள் எல்லாமே ரஜினி ஸ்டைலில் இருந்ததை பார்த்தவர்கள் உணரமுடியும். இதுபற்றி சசிகுமாரிடம் கேட்டபோது, “ இந்த படத்துல நான் ரஜினி சார ஃபாலோ பண்ணி நடிச்சிருக்கேன். படத்துல என்னோட முதல் காட்சியே ‘இவர் தான் சுந்தரபாண்டியன். ரஜினி ரசிகர்’னு சொல்றா மாதிரி தான் இருக்கும். முதல் பாடலும் அப்படித்தான் ரஜினி சார் ஸ்டைலில் மூவ்மெண்ட் போட்டிருக்கோம்.
இதுவரைக்கும் நான் நடிச்ச படத்துல என்ன பாத்து எல்லாரும் பயந்தாங்க. என்னடா இவன் எப்பவுமே கத்தியோட வந்து கொலை செய்யுறதே வேலையா இருக்கான்னு. ஆனா இந்த படத்துல நட்பு,காதல், ஆக்‌ஷன், குடும்பம் என எல்லாம் இருக்கு.
எப்போதும் படத்தில் நீங்க மத்தவங்க காதலுக்கு தான் உதவி செய்வீங்க. ஆனா, இந்த படத்துல நீங்களே காதலிக்கிறீங்களே? என்று கேட்டதற்கு, ஏன் நான் காதலிக்கக் கூடாதா ஒரு பொண்ண வெரட்டி வெரட்டி இந்த படத்தில் காதலிக்கிறேன்” என்றார். சுந்தரபாண்டியன் அடுத்த மாதத்தில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது

சந்தனமடு ஆற்றுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் பலி

28.08.2012.BY.tajah.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றுப் பகுதியில் நேற்று திங்கள் அதிகாலை யானைத் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். பலியானவர் களுவன்கேணியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (32 வயது) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் நேற்று அதிகாலை களுவன்கேணியிலிருந்து சந்தனமடு ஆற்றுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஆற்றுக்கு அண்மையில் யானை குறுக்கிட்டு இவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.

நேற்றுக் காலை செங்கலடி வைத்தியசாலைக்குச் சடலம் கொண்டுவரப்பட்டபோது மாவட்ட வைத்திய அதிகாரி கே.சுகுமார் முன்னிலையில் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மரண விசாரணையை நடத்தினார். சடலத்தை பலியானவரின் மனைவி கிருஷ்ணபிள்ளை மஞ்சுளா அடையாளம் காட்டினார். பிரேதப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பலமான தாக்குதல் காரணமாக மண்டையோட்டுப் பகுதி நொருங்கியதால் இரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

ஏறாவூர் பொலிசார் சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்

28.08.2012.BY.rajah.
நடைபெற்று முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட மோசடியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
வினாத்தாள் மோசடி தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் மேற்கண்டவாறு எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் இவ்வாண்டுக்கான 5ஆம் ஆண்டுப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,803 பரீட்சை மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து நானூற்றுப் பத்து பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அதன் போது தேசியக் கொடியின் சிறப்புப் பற்றி எழுதுவதற்கான கட்டுரை வினா தென்னிலங்கையின் பல இடங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டதை அடுத்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரீட்சை ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் விசாரணைகளை நடாத்தி உண்மையினைக் கண்டறியுமாறு கோரப்பட்டது.
அதன்படி கம்பகா கடவத்த போன்ற பல பகுதிகளில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.
எனினும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் இது தொடர்பில் ஆராய உள்ளதாக அவர் தெரிவித்தார்.ஆனாலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக பரீட்சை ஆணையாளர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இல்லையேல் ஆசிரியர் சங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ தெல்லிப்பழை துர்க்கை தேர்த் திருவிழா

.BY.rajah.28.08.2012
வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று நடைபெற்றது.

காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து உள் வீதியுலா வந்த துர்க்கை அம்மன் 9 மணியளவில் தேரில் ஏறி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டனர். பக்கதர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ் சங்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆலயத்துக்கு விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.


கிளிநொச்சியில் இரவு 12 மணிக்கு பின்னர் தொடரும் சிங்களவரின் வெறியாட்டாம்!

 செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, BY.rajah.
 
இலங்கையில் போருக்கு பின்னரான காலத்தில் தென்னிலங்கை சிங்களவர்கள் வடக்குப் பிரதேசங்களுக்கு சுற்றுலா வருவது தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இவ்வாறு வரும் சிங்களவர்களுக்கு இரவு நேரங்களில் தங்குவதற்கு இராணுவம் வசதிகளை செய்துகொடுக்கிறது. இவ்வசதிகள் புலிகளின் இடங்கள் எனக் கூறிக்கொண்டு, இராணுவம் தம்வசம் வைத்துக்கொண்டுள்ள தமிழர்களின் காணிகள் மற்றும் வீடுகளிலேயே வழங்கப்படுகின்றன.
இவ்வாறு கிளிநொச்சி திருநகர் பிரதேசம், கிளிநொச்சி நகரில் இருந்தும் சற்று உள்நோக்கி இருந்தப்போதும் அங்கும் தமிழர்களின் காணிகள் பல இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளவை தென்னிலங்கை சிங்களச் சுற்றுலா பயணிகளுக்கு தங்க இடமளிக்கப்படுகிறது.
இவ்விடங்களில் இரவு தங்கும் சிங்களவர்கள் இரவு 12:00 மணிக்கு பின்னரும் மதுபோதையில் "பைலா" எனும் பெயரில் கிடைக்கும் தகரம் தட்டுகளை அடித்து சிறு குழந்தைகள், வயோதிபர் என எவரும் நித்திரை கொள்ள முடியாத வகையில் பெரும் ஓசை எழுப்பி ஆடல் பாடல் என வெறியாட்டம் ஆடுகின்றனர்.
இதனால் இப்பிரதேச மக்களால் இரவு நேரங்களில் நித்திரைக் கொள்ள முடியாமலும், அச்சத்தினால் எவரிடமும் முறையிட முடியாத அவல நிலைக்கு அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பிரதேச மக்கள் ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை காவல் துறையினரிடமோ, இராணுவத்திடமோ மக்கள் முறையிட்டால் முறையிடுபவர்களே தண்டனைக்கு உள்ளாவது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
தமிழர் எதிர்நோக்கும் இப்பிரச்சினைகளை முறையிடுவதற்கோ, முறையிட்டாலும் அதனை தீர்ப்பதற்கோ எவரும் அற்ற நிலைக்கே இன்று இப்பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

சுன்னாகத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி

 
செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, BY.rajah.
 
யாழ்ப்பாணம், சுன்னாகம் மதவடியில் இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய உற்சவத்திற்கு வந்தவர்களை ஏற்றிக்கொண்டு யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த மினிபஸ் ஒன்று, சைக்கிளில் சென்ற நபரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் சுன்னாகம் மயிலணி வடக்கை சேர்ந்த விசுவலிங்கம் சங்கரன்(வயது-50) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் மினிபஸ்ஸையும் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மினிபஸ்ஸின் சாரதி தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேர்த்திருவிழா என்பதால் வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்: முக்கொலை சந்தேகநபர் வாக்குமூலம்



28.08.2012-By rajah
தூக்க மருந்துக்கள் கலந்த பழச்சாற்றை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்தபோது அம்மா மளமளவென பருகிவிட்டார். அப்பாவோ கொஞ்சம் குடித்து விட்டு கசக்கிறது ௭ன்றார். புதுப் பழங்கள் ௭ன்றால் அப்படித்தான் இருக்குமென்று கூறவே அவரும் குடித்துவிட்டார்.

பின்னர் தங்கைக்கும் கொடுத்தார். தங்கையோ சிறிது நேரத்தில் வாந்தி ௭டுத்துவிட்டார். ௭னவே மீண்டும் மீண்டும் தூக்க மாத்திரையை தங்கைக்கு கலக்கிக்கொடுத்தேன் ௭ன்று வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபரான மகன் பிரசான் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். மூவரும் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்டதும் அவர்களை தூக்கி ஒரே கட்டிலில் அடுக்கிவிட்டு கொஞ்சமாக தூக்க மாத்திரைகலந்த பழச்சாற்றினை நானும் குடித்துவிட்டு சடலங்களுக்கு பக்கத்தில் உறங்கிவிட்டேன்.
விடிந்தது தெரியாது. காதலி கதவை தட்டியபோதே விழித்தெழுந்தேன் ௭ன்றும் அவர் கூறியுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தாயும் தந்தையும் இறந்துகிடக்க மயக்க நிலையிலிருந்த தங்கை திடீரென வாந்தியெடுத்துள்ளார். அதுவரையிலும் நித்திரைக்குச்செல்லாத பிரசான் உடனடியாக இன்னும் கொஞ்சம் தூக்க மாத்திரைகளையும் கரைத்து தங்கையின் வாயை பிடித்து ஊற்றியுள்ளார்.
அதன் பின்னர் சொற்ப வேளையில் தங்கையும் நிரந்தரமாக தூங்கிவிட்டார். மூவரும் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்டதன் பின்னர் தானும் தூக்கமாத்திரை கலந்த பழச்சாற்றை அருந்திய பிரசான் அன்றைய இரவை சடலங்களோடே கழித்துள்ளார். பிரசான் அருந்திய பழச்சாற்றில் மிகவும் சொற்பமான தூக்க மாத்திரையே கலந்திருந்ததால் அவர் இறந்து போகாமல் அயர்ந்து தூங்கிவிட்டார்.
மறுநாள் காதலி கதவை தட்டிய சத்தத்தில் ௭ழுந்த பிரசான் வெளியில் வந்து நீபோ நான் பிறகு வருகிறேன் ௭ன அவரை வாசலோடு வழியனுப்பிவிடுகிறார். வீட்டிற்குள் மூன்று சடலங்கள் கிடப்பதை அறியாத காதலி அப்படியே திரும்பிச் செல்கிறாள். அன்றைய தினம் மாலை அவரை தெஹிவளை வில்லியம் சந்தியில் வைத்து பிரசான் சந்தித்துள்ளார்.
மறுநாள் காதலியை சந்தித்த பிரசான் அவளை காரில் ஏற்றிக்கொண்டு உல்லாசமாக சுற்றியதுடன் 17 ஆயிரம் ரூபா பெறுமதியா ன கையடக்கத் தொலைபேசியொன்றினையும் பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் குறித்த யுவதி தங்கியிருந்த வெள்ளவத்தை பகுதியில் சென்று அவளை விட்டுச் சென்றுள்ளார்.
சந்தேகநபர் கொட்டாஞ்சேனை, ஜா–௭ல, ஏக்கலை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரிடம் பெருந்தொகையான பணத்தினை வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார். அத்தோடு தவணைக் கொடுப்பனவு முறையில் கடந்த இருவருடங்களுக்கு முன்னர் காரொன்றினையும் இவர் கொள்வனவு செய்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 42 இலட்சம் ரூபாயும் புறக்கோ ட் டை பகுதியைச்சேர்ந்த ஒருவரிடம் 28 இல ட்சம் ரூபாயும் ஜா–௭ல ஏக்கலைப்பிர தே சத்தைச் சேர்ந்த ஒருவரிடம் மூன்றரை இலட்சமுமாக மொத்தம் ௭ழுபத்தி மூன்றரை இல ட்சம் ரூபா பணத்தினை கடனாக பெற்று ள் ளதாக வாக்குமூலம் அளிக்கப்ப ட் டுள்ளது

தமிழில் என்னை வெறுத்து ஒதுக்குகிறார்கள்: பத்மப்பிரியா

.BY.rajah.Tuesday, 28 August 2012,
தமிழ் சினிமாவில் என்னை ஒதுக்குகிறார்கள், வாய்ப்பு தருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் பத்மப்பிரியா.
தொடர்ந்து சர்ச்சைகளின் நாயகியாக திகழ்கிறார் பத்மப்ரியா.
கன்னத்தில் அறைந்ததாகக் கூறி, இயக்குநர் சாமியை மன்னிப்புக் கேட்க வைத்தவர், அடுத்து மலையாளத்தில் மேனேஜருக்கு கூடுதல் சம்பளம் கேட்டு பிரச்சினை செய்தார்.
இதனால் நடிகர், நடிகைகள் யாரும் மேனேஜரே வைத்துக் கொள்ளக் கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது மலையாள சினிமா உலகம்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழ் சினிமா தன்னை ஒதுக்குவதாகக் கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், தமிழில் எனக்கு நீண்ட இடைவெளி விழுந்துள்ளது. படங்களே இல்லை. இயக்குனர்கள் என்னை ஏன் ஒதுக்குகிறார்கள் என்ற காரணமும் தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். ஏற்கனவே இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளேன்.
இயக்குனர் சாமி அடித்த விவகாரம் மற்றும் மானேஜர் பிரச்சினைகளால் என்னை சர்ச்சைக்குரியவராக பார்ப்பது சரியல்ல. நான் 45 படங்களில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.


தற்கொலைக்கு முயலவில்லை: சுஜிபாலா

BYrajah.
Tuesday, 28 August 2012,
காய்ச்சல் காரணமாக மாத்திரை சாப்பிட்டதாகவும் தற்கொலைக்கு முயற்சி செய்ய வில்லை என்றும் நடிகை சுஜிபாலா கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ராசுமதுரவன் இயக்கத்தில் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படத்தில் நடித்தவர் நடிகை சுஜிபாலா.
தற்போது உண்மை என்ற படத்தில் நாயகியாகவும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் எம்.ஜி.ஆர் படத்தில் கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடித்து வருகின்றார்.
இவருக்கும் உண்மை படத்தின் இயக்குனர் ரவிக்குமாருக்கும் திருமணம் நிச்சியிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்கொலை முயற்சி செய்ததாக சுஜிபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் தான் தற்கொலைக்கு முயலவில்லை என்றும் அன்றைய தினம் காய்ச்சல் அதிகமானதால் இரண்டு மாத்திரைகளை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணத்தினாலேயே மயக்கநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சுஜிபாலா தெரிவித்துள்ளார்.
தனக்கும் ரவிக்குமாருக்கும் திருமணம் நடந்த பின்னர் சினிமாவிலிருந்து விலகுவதாகவும் இவர் கூறியுள்ளார்

.

ரோம்னிக்கு ஆதரவாக சுவிஸ் வங்கி ஊழியர்கள்

BY.rajah,28.08.2012
அமெரிக்காவிலுள்ள சுவிஸ் வங்கிகளான கிரெடிட் சுவிஸ் மற்றும் UBSல் பணிபுரியும் வங்கிப் பணியாளர்கள் ஒபாமாவை விட மிட் ரோம்னிக்கு அதிகளவில் தேர்தல் நிதி வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 6ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கின்றது. இந்நிலையில் இரு வேட்பாளர்களின் பணப்பெட்டியும் தேர்தல் நிதியால் நிரம்பி வழிகின்றது. அமெரிக்க வரலாற்றிலேயே இந்த 2012 ஆண்டு தேர்தல் தான் அதிக செலவில் நடத்தப்படும் முதல் தேர்தலாக கருதப்படுகின்றது.
யூலை மாதம் ஒபாமாவை விட அவரது போட்டியாளர் மிட் ரோம்னிக்கு அதிகம் நிதி குவிந்ததாகத் தெரிகிறது. ஆனால் ஒபாமா தனக்கு இதுவரை 348 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மிட் ரோம்னிக்கு 193 மில்லியன் டொலர் சேர்ந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக வங்கி உயர் அதிகாரிகள் அமெரிக்க ஜனாதிபதி போட்டியாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்குவதில் மிகவும் தாராளமாக இருக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் வர்த்தக உலகில் 2012ம் ஆண்டிலிருந்து பெரு நிதி பெறுவதில் சில புதிய கட்டுப்பாடுகளை வெள்ளை மாளிகை கொண்டுவந்துள்ளது

கலிபோர்னியாவில் 100 சிறு நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் மக்கள்

B.Yrajah.
 செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 100 சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கலிபோர்னியாவின் தென் கிழக்கு பகுதியில் எல் சென்ட்ரோ என்ற இடத்தின் வடக்கு பகுதியில், உள்ளூர் நேரப்படி கடந்த 26ஆம் திகதி காலை 10.02 மணிக்கு முதல் நில நடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவில் 3.9 என பதிவானது.
இதன்பின் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிறு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் 30 நில அதிர்வுகள் ரிக்டர் அளவில் குறைந்தபட்சம் 3.5 என்ற அளவில் பதிவாகின.
மிக அதிகபட்சமாக பராவெலி நகரின் வடமேற்கு பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநிலக்கம் ரிக்டர் அளவில் 5.5 என பதிவானது.
இந்த தொடர் நில அதிர்வுகளால் மக்கள் பெரிதும் பீதியடைந்தனர். நடமாடும் வீடுகளில் வசித்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உணவகங்கள், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கீழே விழுந்து சேதம் அடைந்தன

திருகோணமலை மொரவௌ பகுதியில் இன்று அதிகாலை வர்த்தக நிலையத்தில் கொள்ளை

.
BY.rajah.
செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
திருகோணமலை மொரவௌ பொலிஸ் பிரிவிற்குட்ட ரொட்டவௌ பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு ஏராளமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
12,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள், பல பெறுமதியான பொருட்கள் மற்றும் 20,000 ரூபாவுக்கும் அதிகமான பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது..
கொள்ளையர்களை பொலிஸார் துரத்திச் சென்ற போது ஒருவரின் காலணி கழன்று விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபர் பிரசான் இன்று நீதிமன்றில் வாக்குமூலம்

BY.rajah.
 
 செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
வெள்ளவத்தை ராமகிருஷ்ண டெரஸில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று கொழும்பு நீதிமன்றில் வாக்குமூலம்
அளிக்கவுள்ளார்.
தம்மால் புரியப்பட்டதாக கூறும் மூன்று கொலைகள் தொடர்பில் அவர் கொழும்பு மேலதிக நீதவான் ஏ.நிஷாந்த முன்னிலையில் இன்று வாக்குமூலம் அளிப்பதற்கான ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன…
ஹட்டன் - கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த பிரசான் குமாரசுவாமி என்ற குறித்த சந்தேக நபர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக நீதவான் குசலானி அயோத்யாவிடம் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அதன்போது முக்கொலைச் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
வாக்குமூலம் அளிப்பது குறித்து மீண்டும் சிந்தித்து தீர்மானிக்குமாறும், அவ்வாறு வாக்குமூலம் அளிக்கப்பட்டால் அது மேல்நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணையின் போதும், கவனத்தில் கொள்ளப்படும் என்றும் நீதவான் கூறியுள்ளார்..
சந்தேக நபருக்;கு சட்டரீதியான ஆலோசனைகள் அவசியமாயின் அதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதவான் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு பணித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய விசாரணையின் பின்னர் பிரசான் குமாரசுவாமியை எதிர்வரும் செப்டெம்பர் 4 ம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறும் மேலதிக நீதவானால் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொல்லப்பட்டவர்களின் உடல் கூறுகள் அரச ரசாயண பகுப்பாய்வாளர் மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கும் ஒப்படைக்கப்பட்டு ஆய்வுகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்

இலங்கைக்கு சொந்தமான கப்பல் டேர்பனில் தடுத்து வைப்பு

BYrajah.
 
செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான லங்கா மஹாபொல கப்பல் இன்னும் டேர்பன் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
இந்த கப்பல் டேர்பனில் நங்கூரமிட்டதற்கான கட்டணமான 81 ஆயிரம் டொலர்கள் செலுத்தப்படவில்லை என்பதாலும், உரிய தரம் பேணப்படாமையாலும், கடந்த மே மாதம் 17ம் திகதி டேர்பன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டது.
அதன் மாலுமிகள் கடந்த ஜுன் மாதம் நாடு திரும்பினர். எனினும் இந்த கப்பல் இன்னும் மீட்கப்படாது உள்ளது.
இதற்கிடையில் அரசாங்கத்தினால் இந்த கப்பல் தன்சானியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரையில் இலங்கையின் கொடி பறக்கவிடப்பட்டிருந்த இந்த கப்பலில், தற்போது தன்சானியாவின் கொடி பறக்கப்படவிப்பட்டுள்ளது.
எனினும் இதுவரையில் இந்த கப்பல் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலான அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிடவில்லை.
இந்த கப்பலை கொழும்பில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று பயன்படுத்தி வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர், ஜனாதிபதியின் முக்கிய அதிகாரி ஒருவரின் உறவினர் என்று தெரிவிக்கப்படுகிறது
.

கொக்கிளாய் பகுதியிலுள்ள தனியார் காணியில் வந்தமர்ந்த கெளதம புத்தர்

BY.rajah
 
 செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்குளாய் எனும் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பாரிய பெளத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சிங்கள மக்களின் கால் தடமே இதுவரை பதியப்படாத இவ்விடத்தில் தற்போது படையினர் இவ்வாறு பாரிய பெளத்த விகாரை அமைப்பதற்கான காரணம் என்ன என மக்கள் கேள்வி எழுப்பியதுடன், இனிவரும் காலங்களில் இப்பகுதியில் சிங்கள குடியோற்றங்கள் ஆரம்பத்தில் இருந்ததாக கூறி சிங்கள மக்களை குடியேற்ற எத்தனிக்கும் முயற்சியின் ஆரம்ப நடவடிக்கையே இது என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2010ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் நடுப்பகுதியில் இப்பகுதியில் மக்கள் மீள்குடியோற்றப்பட்டனர். எனினும் தற்போது பெளத்த விகாரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் மக்கள் குடியேறச் சென்ற போது குறித்த பகுதி பெளத்த விகாரை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக காணிச் சொந்தக்காரர் பல தரப்பினருடனும் முறையிட்டும் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை என அவர் கண்ணீர் மல்க குறிப்பிடுகின்றனர்.
யுத்தத்தின் போது எமது உடமைகள் மற்றும் பொருளாதார ரீதியான அனைத்தையும் இழந்தோம். ஆனால் எமது நிலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையில் வந்ததாகவும், ஆனால் அதுவும் தற்போது அதுவும் கனவாகி போய்விட்டதாகவும் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்

நூதனசாலை கொள்ளைச் சம்பவம்: ஊடகங்களுக்கு வழங்கிய பொலிஸார் குறித்து விசாரணை

BY.rajah.
 
செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
கொழும்பு நூதனசாலை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்ட காவற்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
காவற்துறை தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அண்மையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய போது, அவர் வழங்கிய தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்ட அதிகாரிகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது குறித்து காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிக்கையில்,
தகவல் வெளியாகமுன்னமே, ஊடகங்கள் இந்த கொள்ளை சம்பவத்துடன் பிரபல அரசியல்வாதி ஒருவர் இருப்பதாக தகவலை வெளியிட்டன. அதன் பின்னர், காவற்துறை ஊடகப்பேச்சாளர் இந்த செய்திக்கு மறுப்புக்களை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது

கைதடி அரச சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த பச்சிளம் குழந்தை இறப்பு

BYrajah.
 
 செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
குடாநாட்டின் அரச சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் இருந்த பச்சிளம் குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது. கிளிநொச்சியில் பிறந்த ஜெயலக்சுமி என்று பெயரிடப்பட்ட மூன்றரை வயதுக் குழந்தையே உயிரிழந்தது என்று யாழ். போதனா வைத்தியசாலை தெரிவித்தது.
கைதடியில் உள்ள அரச சிறுவர் இல்லத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்குப் போதிய ஆளணி வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்த நிலையில் இந்தக் குழந்தை இறந்துள்ளது.
குழந்தை நோய்வாய்ப்பட்டே இறந்து போனதாக யாழ். போதனா வைத்தியசாலை தெரிவித்தது. குழந்தை ஒரு மாதத்துக்கு முன்னரே சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து குழந்தை ஒப்படைக்கப்பட்ட போதே, அதன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உயிரிழக்கக்கூடும் என்ற எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்று வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் ரி.விஸ்பரூபன் தெரிவித்தார்.
குழந்தையை கொழும்புக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதும் குணப்படுத்த முடிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார். சில மாதங்களுக்கு முன்னர் இதே அரச சிறுவர் இல்லத்தில் இருந்த குழந்தை ஒன்று உயிரிழந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் மறுசீரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டது.
அப்படி இருந்த போதும் இல்லத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்ப பராமரிப்பாளர்கள் இல்லை என்று கூறப்படுகின்றது. தற்போது இல்லத்தில் 31 குழந்தைகள் உள்ளன. இவற்றைப் பராமரிக்க 7 பராமரிப்பாளர்கள் உள்ளனர். இவர்களில் இருவர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள்.
இரவு பகல் என மாறி மாறி வரும் கடமை என்பதால் ஒரு நேரத்தில் ஆகக் கூடுதலாக 3 பேர் மட்டுமே கடமையில் இருக்கின்றனர். 10 பிள்ளைகளுக்கு ஒரு தாய் என்ற ரீதியில் பராமரிப்பைச் செய்வது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
திணைக்கள விதிகளுக்கு அமைய 5 பிள்ளைகளுக்கு ஒரு பராமரிப்புத் தாய் இருக்க வேண்டும். இப்போதும் அவ்வாறே உள்ளது. இருப்பினும் ஆளணியை அதிகரிப்பதற்குக் கோரியுள்ளோம் என்று ஆணையாளர் ரி.விஸ்பரூபன் தெரிவித்தா