| 30.08.2012.BYrajah. |
| ரமணா குடிபதியின் தயாரிப்பில் உருவான அரக்கோணம் படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. |
|
இந்த படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாகும். இதில் ஸ்ரீமன் கதாநாயகனாக நடிக்க,
பிராச்சி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்னம்பலம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சுமன் செட்டி, வாகினி, வெங்கல் ராவ் ஆகியோரும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளரான ரமணா குடிபதியும் சிறு கதாபாத்திரத்தில் வருகிறார். இசை: அர்ஜீன். சண்டை: பஞ்ச் பரத். நடனம்: கருண். தயாரிப்பு: ரமணா குடிபதி. கதை, இயக்கம்: சிங்கம் சுதாகர். எடிட்டிங்: உட்டம் |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
செப்டம்பர் 7ஆம் திகதி வெளியாகிறது அரக்கோணம்
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மிருகபலி பூஜையைக்கு ஹெல உறுமய விளக்கம்
தனி மனித அபிவிருத்தி என்பது யாழில் இல்லாத ஒரு பொருளாகிவிட்டது; யாழ்.பல்கலைக்கழக நூலகர்
| 30.08.2012.BY.rajah. |
|
சமூக மேம்பாடு என்பது தனி மனித அபிவிருத்தியிலேயே
தங்கியுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி மனித அபிவிருத்தி என்பது
பேசப்படாத ஒரு பொருளாகவே காணப்படுகின்றது என யாழ்.பல்கலைக்கழக நூலகர் காந்தலட்சுமி
அருளானந்தம் தெரிவித்தார்.
ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய டாவட்டங்ககைச் சேர்ந்த 46
நூலகங்களுக்கு ஒரு தொகுதி நூல்கள் கையாளிக்கும் நிகழ்வும் நூலகர்களுக்கான பயிற்சி
பட்டறை வழங்கும் நிகழ்வும் இன்று காலை 9 மணிக்கு யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து
தெரிவிக்கையில்,
சமூகம் சார்ந்த சில செய்திகளை நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும். அந்தவகையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தனி மனித அபிவிருத்தி
என்பது சுய கற்றலில் தான் தங்கியுள்ளது. இந்த சுய கற்றல் வாசிப்பு பழக்கத்தினை
மேம்படுத்திக் கொள்வதனால் மட்டுமே ஏற்படும்.
அதன்படி இன்றைய நிலையினை எடுத்து நோக்கினால்
இன்று நுலகங்களை பார்க்கும் போது வாசிப்பு பழக்கம் என்பது அருகி போய் விட்டதனைக்
காணலாம்.
அத்துடன் இன்று நூல் நிலையங்களைப் பார்க்கும்
போது தனி மனித அபிவிருத்தியில் கவனம் செலுத்தவில்லை. எங்களுடைய அறிவை நாங்கள்
வளர்த்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
இன்று யாழ். பல்கலைக்கழக நூலகம் மற்றும்
யாழ்.பொது நூலகம் ஆகியன போதியளவிலான வளங்களுடன் மக்களது பாவனைக்கு ஏற்றதாக
உள்ளது.
அத்துடன் எங்களுடைய சமூகம் மொழி ஆற்றலை
வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு சுயமாக கற்கின்ற ஆற்றல் இல்லை இவை மனித
மேம்பாட்டுக்கு அவசியமானது.
எனவே இவற்றை எமது சமூகத்தில் மேம்படுத்துவதற்கான
அவசியம் நுலகத்திற்குண்டு. அத்துடன் ஏசியா பவுண்டேசன் போன்ற அன்பளிப்பாளர்கள்
சிறுவர் நூலகங்களிலும் தமது பங்களிப்பை செய்வது இன்றைய காலகட்டத்தின்
அவசியமாகும்.
எனவே அவற்றையும் ஏசியா பவுண்டேசன் நிறுவனம்
கவனத்திற் கொண்டு தமது பங்களிப்பை செய்யும் என நம்புவதாக அவர் மேலும்
தெரிவித்துள்ளார்
|
யாழ்.நகரில் சுகாதார நடவடிக்கை புதிய திட்டங்களால் சீரமைப்பு; மாநகர சுகாதாரக் குழுத் தலைவர் தகவல்
| 30.08.2012.BYrajah. |
|
யாழ்.நகரின் சுகாதார நடவடிக்கைகள் முன்னர்
ஒருபோதும் இல்லாதவாறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்திச் சீரமைக்கப்படவுள்ளது
என்று யாழ்.மாநகர சபை சுகாதாரக் குழுவின் தலைவர் எஸ்.விஜயகாந்த் நேற்றுப்
புதன்கிழமை யாழ்.மாநகர சபையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது
குறிப்பிட்டார்.
சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஒரு கட்டமாக
எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை முதல் குப்பைகளை அகற்றும் பணி தினமும்
காலையிலும் பிற்பகல் 2 மணியில் இருந்தும் இரு தடவைகள் இடம்பெறும். நகரின் மையப்
பகுதியில் மூன்று கட்டமாக இடம்பெறும்.
குப்பை எடுப்பதற்கென முன்னர் எட்டு டிராக்டர்கள்
இருந்தன. இப்போது இருபத்தி ஐந்துவரை உள்ளன. குப்பை எடுக்கவரும் வாகனங்கள் சமிக்ஞை
ஒலிகள் எழுப்பிவரும். பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை வைக்காமல் வாகனங்கள்
வரும்போது கொடுக்க முடியும். காலையும் மாலையும் என இரண்டு தடவைகள் ஓடு வீதிக்கு
குப்பை அகற்றும் வாகனங்கள் வரும்.
பொதுமக்கள் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கி
வீதிச் சுத்தத்துக்கு உதவ வேண்டும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மட்டும் ஆயிரத்து 386
மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
தைமாதம் தொடக்கம் ஆறுமாதம் வரை 8,604 மெற்றிக்
தொன் திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது எனவும் ஆடி மாதம் வரை மலக்கழிவு ஏழு
லட்சத்து 33 ஆயிரத்து 200 லீற்றர் வரை அகற்றப்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்ற பெக்கோ இயந்திரம்
தேவைப்படுகிறது. ஒரு இயந்திரம் ஒரு கோடி 50 லட்சம் ரூபாவரையானது. அப்படி ஒரு
இயந்திரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி மாநகர சபையிடம் தற்சமயம் இல்லை.
அதுதொடர்பாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் என
நம்புகின்றோம் என்று அவர் மேலும் கூறினார்
|
மட்டக்களப்பில் பஸ் விபத்து: 14 பேர் காயம்
30.08.2012.BYrajah.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியொன்று கிரான்குளம் பகுதியில் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆரையம்பதி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் ரமேஸ் தெரிவித்தார்.
இதேவேளை, ஆரையம்பதி வைத்தியசாலையில் 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆரையம்பதி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் ரமேஸ் தெரிவித்தார்.
இதேவேளை, ஆரையம்பதி வைத்தியசாலையில் 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
சுன்னாகத்தில் குடிநீர்க் கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள்!-ஆய்வின் மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்
வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah.
சுன்னாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையம்; மூலமே இக்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் குடிநீர்க் கிணறுகளில் எண்ணைக்கழிவுகள் கலந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் இதற்கான ஆய்வுகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை மேற்கொண்டது. இவ்ஆய்வின் போது காணியொன்றின் கழிவு எண்ணை பாரிய அளவில் தேங்கி நின்றதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மின் உற்த்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எண்ணையினாலேயே இக்கசிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டள்ளது
மேலும் இது தொடர்பில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை வலி.தெற்கு பிரதேச சபையின் கோரிக்கையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டு வருகின்றது.
மக்களின் குடிநீர்க் கிணறுகளில் எண்ணைக்கழிவுகள் கலந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் இதற்கான ஆய்வுகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை மேற்கொண்டது. இவ்ஆய்வின் போது காணியொன்றின் கழிவு எண்ணை பாரிய அளவில் தேங்கி நின்றதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மின் உற்த்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எண்ணையினாலேயே இக்கசிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டள்ளது
மேலும் இது தொடர்பில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை வலி.தெற்கு பிரதேச சபையின் கோரிக்கையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டு வருகின்றது.


திருட்டு டிவிடியில் என் படத்தை பாருங்கள் – இயக்குனர் மிஸ்கின்!
30.08.2012.BYrajah.மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா,பூஜா ஹெக்டே நடித்திருக்கும் படமான முகமூடி ஆகஸ்டு 31-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.முகமூடி படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் மிஸ்கின் “முகமூடி படத்தில் எம்.ஜி.ஆர் பாணியைத் தான் பின்பற்றியிருக்கிறோம்.இந்த படத்தை ரசிகர்கள் திருட்டு டிவிடியில் பார்த்தால் கூட எனக்கு கவலையில்லை. திருட்டு டிவிடியில் பார்த்தாலும் இப்படி ஒரு நல்ல படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் தியேட்டருக்கு தானாக வருவார்கள். 50 ரூபாயை வீணாக்க வேண்டாம் என நினைத்தால் முதலிலேயே தியேட்டருக்கு வந்து பாருங்கள்” என்று கூறினார்
எதிர்ப்புகளை மீறி சாதித்துக்காட்டிய ஈரான்
அணுஆயுத திட்டத்தால், ஈரானை மற்ற நாடுகளிடமிருந்து தனித்துவைக்க அமெரிக்கா,
இஸ்ரேல் போன்ற நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், 120 நாடுகளின்
தலைவர்கள் பங்கேற்றுள்ள அணிசேரா நாடுகளின் மாநாடு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று
ஆரம்பமாகின்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பல தலைவர்கள் ஈரான் சென்றுள்ளனர்.
ஈரானில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம், அமெரிக்காவை வெற்றி கொள்ளும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இதேவேளை இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அண்மையில் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஈரான் இம்மாநாட்டை நடத்தவுள்ளமையை உலகநாடுகள் பல பாராட்டியுள்ளன.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பல தலைவர்கள் ஈரான் சென்றுள்ளனர்.
ஈரானில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம், அமெரிக்காவை வெற்றி கொள்ளும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இதேவேளை இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அண்மையில் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தன.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஈரான் இம்மாநாட்டை நடத்தவுள்ளமையை உலகநாடுகள் பல பாராட்டியுள்ளன.
உயிருக்கு எமனான கையடக்கத்தொலைபேசி
| By.rajah. | |
திருட்டினால் ஏற்படும் பின்விளைவுகள் விபரீதமாகிய பல சம்பவங்களை நாம்
கேள்விப்பட்டுள்ளோம்.
ஆனால் உகாண்டாவில் நபரொருவர் திருட்டினால் மிகவும் மோசமான பின்விளைவுக்கு
முகங்கொடுத்துள்ளார்.
ஆம் கொடிய நோய்த்தொற்றுக்குள்ளாகியிருந்த நோயாளியிடமிருந்து
கையடக்கத்தொலைபேசியொன்றைத் திருடிய நபரொருவரும் அதே நோய்க்கு ஆட்பட்டுள்ளார்.
உகாண்டாவின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கையடக்கத்தொலைபேசியைக் குறித்த நபர் வைத்தியசாலையொன்றில் இருந்தே
திருடியுள்ளார்.
அக்கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளர் ' இபோலா' எனப்படும் கொடிய வைரஸ்
தொற்றுக்கு ஆளாகியிருந்தவர்.
இவர் தனது கையடக்கத்தொலைபேசியைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு
செய்துள்ளதுடன் பின்னர் நோயின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் திருடியவரைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் அவர் அதே நோய்
அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்துள்ளார்.
மேலும் கையடக்கத்தொலைபேசியினை திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது நோயின் தாக்கத்தால் அவதியுற்றுவரும் அந்நபர் திருடிய
கையடக்கத்தொலைபேசியின் விலை வெறும் 24 அமெரிக்க டொலர்கள் மட்டுமே.
ஆனால் அவரின் உயிருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளதென்பதனைத் திருடியவர்
அறிந்திருக்கவில்லை.
இபோலா வைரஸானது இபோலா காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியது. தொற்றும் இக்காய்ச்சலானது
அரிப்பு, வயிற்றோட்டம், வாந்தி, இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன்
உயிராபத்தையும் ஏற்படுத்தக்கூடியது.
ஆஸி செல்லமுற்பட்ட 39 பேர் ஒரு கோடியே 95 இலட்ச ரூபா பிணையில் விடுதலை
பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்ப உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் ஏனைய நால்வருக்கும் பிணை வழங்க மறுத்த நீதிவான், அவர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பணித்தார். நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்தவர்களே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவர்களாவர்.
39 பேருக்கும் வழங்கப்பட்ட சரீரப் பிணைகளின் மொத்தப் பெறுமதி ஒரு கோடியே 95 இலட்சம் ரூபாவாகும். இந்த வழக்கை ௭திர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்
அமெரிக்காவை மிரட்டும் ஐசக் சூறாவளி
| 30.08.2012.BYrajah.பிந்திய செய்தி |
| அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள ஐசக்
சூறாவளிப் புயலின் காரணமாக லூசியானா மாகாணம் இருளில் மூழ்கியுள்ளது.
அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசிசிப்பி, லூசியானா மற்றும் அலபாமா
உள்ளிட்ட மாகாணங்களில் ஐசக் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாபிந்திய க 130 கி.மீ வேகத்தில் கடும் சூறைகாற்று வீசி வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி கத்ரினா புயல் தாக்கியதில் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் 18 ஆயிரம் பேர் பலியாயினர். கத்ரினாவை போன்ற சக்தி வாய்ந்த புயல் மீண்டும் அமெரிக்காவை தாக்கியுள்ளதால், இம்மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். லூசியானாவின் கவர்னரான பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சி மாநாட்டு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ![]() ![]() ![]() ![]() |
பல மில்லியன் டொலர்களுடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய அதிகாரி
| 30.08.2012.BY.rajah. |
| சீனாவில் ஊழல் புகாரில்
சிக்கிய அதிகாரி ஒருவர், அமெரிக்காவுக்கு தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
சீனாவில் தற்போது சீனா கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்குள்ள
லியோனிங் மாகாணம் பெங்க்செங்க் நகரத்தில் அக்கட்சியின் செயலாளராக வேலை பார்த்து
வந்தவர் வேங் குவாங்கியாங். அவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு விசாரணை
நடந்து வந்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் 31.5 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் தனது மனைவியுடன் அமெரிக்கா தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. வெளிப்படையாக விமானம் மூலம் அமெரிக்காவிற்கு தப்பி ச்சென்ற அவரை நிர்வாகம் பிடிக்க தவறியது குறித்து கண்டனம் எழுந்துள்ளது. அவர் மீது பல மில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. அவருடன் வேலை பார்த்தவர்கள் இது குறித்த செய்திகளை மறைத்து விட்டதாகவும், இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தக்கூடாது என்றும் அந்நாட்டு ஊடகங்களில் பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது |
தனது சக தோழியை சீப்பால் குத்திக் கொலை செய்த பெண்
| 30.08.2012.BY.rajah. |
| லண்டனில் பரபரப்பான கடைத் தெருவில்
15 வயது இளம் பெண், சக தோழியை சீப்பால் கத்திக் கொலை செய்தார்.
மத்திய லண்டனில் உள்ள பிம்லிகோ பகுதியைச் சேர்ந்தவர் ரெபேக்கா டோக்லாஸ்(வயது
15). கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னி பகுதியை சேர்ந்தவர் ராவுப்பின் மகள் ஜூலி. இவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தனர். கடந்தாண்டு மே 7ஆம் தேதி தெற்கு லண்டனில் பாட்டர்சீ பகுதியில் உள்ள பால்கன் சாலையில் ஒரு கடை முன்பு நின்றிருந்த ஜூலியுடன், ரெபேக்கா டோக்லாசும் ஆவேசமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற ரெபேக்கா, தன் தலையில் சொருகியிருந்த உலோக சீப்பை எடுத்து கைப்பிடி பகுதியில் இருந்த இரும்புக்கம்பியால் ஜூலியின் தலையில் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த ஜூலிக்கு ரத்தம் தொடர்ந்து வெளியேறியது. இதனால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். ஜூலியை சீப்பால் குத்துவதற்கு முன்பாக தனது பிளாக்பெரி போனையும், பையையும் அருகில் உள்ள தனது நண்பரிடம் கொடுத்துள்ளார் ரெபேக்கா டோக்லாஸ். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் வீட்டில் இருந்த அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். ரெபேக்கா டோக்லாஸ் ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக ஜூலி அவதூறு பரப்பியதாகவும், அதனால் ஆத்திரம் அடைந்த ரெபேக்கா ஜூலியை கொலை செய்ததும் தெரியவந்தது. டோக்லாஸ் சீப்பின் உலோக பகுதியால் குத்தியதில் ஜூலியின் மண்டை ஓடு வரை துளைக்கப்பட்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதற்கிடையில் கோமா நிலையிலேயே இருந்த ஜூலி, நினைவு திரும்பாமலேயே கடந்த செப்டம்பரில் உயிரிழந்தார். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய பொலிசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். லண்டனில் உள்ள தி ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் நீதிபதி நிக்கோலஸ் குக் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சீப்பும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளார். நீதிபதி தனது தீர்ப்பில், ஜூலி கொலை வழக்கில் உலோக பிடியுள்ள சீப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் அழகு சாதன பொருட்களும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள், ஆபத்தில்லாத அழகுப் பொருட்களை உபயோகிக்கிறார்களா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்றார் |
அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
| 30.08.2012.BY.rajah.புகை படங்கள் காணொளி கள் . |
| கரீபியன்
கடலில் ஏற்பட்ட இசாக் புயல் அமெரிக்காவில் கடும் புயலாக மாறி லூசியானா மாகாணத்தை
தாக்கியுள்ளது.
இசாக் புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கியுள்ளது. தற்போது அங்கு கடும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். இப்புயலால் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இப்புயல் வீசியதால் மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக அம்மாகாணம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. இது குறித்து ஒபாமா, புயல் தாக்கினால் சேதமும், வெள்ளப்பெருக்கும் பெருமளவில் ஏற்படும் அபாயம் உள்ளது. வளைகுடா பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று அங்கிருந்து வெளியேற வேண்டும். எச்சரிக்கைகளை கடுமையாக பரிசீலித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்றும் அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு லூசியானாவை தாக்கிய கத்ரீனா புயலுக்கு 1,800 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கெய்தி மற்றும் டொமினிகள் குடியரசு நாடுகளில் இப்புயலுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர். புயல் தாக்கியதை தொடர்ந்து இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
பாகிஸ்தானில் மத துவேஷம் என்ற பெயரில் கிறிஸ்துவர்களுக்கு கடும் தண்டனை
| வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah. |
| பாகிஸ்தானில்
கிறிஸ்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், தனி மாகாணம் உருவாக்கித் தரும்
படி அந்நாட்டு கிறிஸ்துவ அமைப்பினர் அரசிடம் கோரியுள்ளனர்.
புனித நூலான குர்ரானை அவமதித்ததாக கூறி அந்நாட்டு கிறிஸ்துவ சிறார்கள் இரண்டு
பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மனநிலை சரியில்லாத அந்த சிறுவர்கள் மீது மத துவேஷ குற்றச்சாட்டு சுமத்தி தண்டனை அளிக்கப்பட்டுள்ளதற்கு, பாகிஸ்தான் கிறிஸ்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் கிறிஸ்துவ நல கூட்டமைப்பின் தலைவர் யூனுஸ் மாசிக் பட்டி கூறுகையில், பாகிஸ்தானில் 20 லட்சம் கிறிஸ்துவர்கள் வசிக்கின்றனர். மத துவேஷம் என்ற பெயரில் கிறிஸ்துவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த விஷயத்தில் எங்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை. போதிய பாதுகாப்பில்லாத நிலையில் உள்ள எங்களுக்கு, தனி மாகாணம் உருவாக்கி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எங்களது உரிமைகள் பாதுகாக்கப்படும், பாகிஸ்தானில் உள்ள அனைத்து கிறிஸ்துவ அமைப்புகளும் இந்த கோரிக்கைக்காக ஓரணியில் திரள வேண்டும், இதற்கு அரசியல் தலைவர்களும் ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார் |
முன்னேஸ்வரம் ஆலய மிருகப் பலி விவகாரம்! வேறு சமய குழுக்கள் தலையிட வேண்டாம்! அகில இலங்கை இந்து மாமன்றம்
வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah.
மனிதர்களுக்காக மிருகங்களையோ பட்சிகளையோ எந்த ஓர் உயிர் இனத்திற்கும் ஆலயத் திருத்தலத்திலோ சுற்றாடலிலோ கொடுமைசெய்வதை அனுமதிக்க முடியாது என அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் 2012 செப்டம்பர் முதலாம் திகதி மிருகபலி நிகழ்வு இடம்பெற இருப்பதையறிந்து வேதனைப்படுகின்றோம்.
அதனைச் செய்யவேண்டாமென ஆலய நிர்வாகத்தினரையும், பூசகர்களையும் வேண்டுகின்றோம்.
அதேநேரம் அரசியல்வாதிகளையும், இந்து அல்லாத வேறு சமய குழுக்களையும் இதில் தலையிடவேண்டாமென வேண்டுகின்றோம்.
மேலும், இதனை ஓர் அரசியல் பிரச்சினையாகவோ மதத்துவேச நிலைமையை ஏற்படுத்துகின்ற நிலைமையாகவோ மாற்ற வேண்டாம்.
இந்தப் பிரச்சினைகளை கையாளும் பொறுப்பை இந்துக்களிடமே விட்டுவிடுங்கள்.
வழிபாட்டுத் தலத்தில் சமூகம் சம்பந்தமான பிரச்சினைகள் அல்லது கேள்விகள் எழலாம். சமூக நம்பிக்கையின் அடிப்படையில் ஓர் நிகழ்வு இடம்பெறும் போது அதனை அந்தக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டும்.
அதே நேரத்தில் சமூக விடயங்கள் சமய நம்பிக்கைகளுடன் கலக்கப்படக்கூடாது. எமது சமயத்தின் புனிதமான கோட்பாடுகளுக்கோ அல்லது வழிபாட்டுத் தலங்களின் புனிதத்திற்கோ அல்லது தெய்வீகத் தன்மைக்கோ எவரும் களங்கம் ஏற்படுத்தக்கூடாது.
இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் 2012 செப்டம்பர் முதலாம் திகதி மிருகபலி நிகழ்வு இடம்பெற இருப்பதையறிந்து வேதனைப்படுகின்றோம்.
அதனைச் செய்யவேண்டாமென ஆலய நிர்வாகத்தினரையும், பூசகர்களையும் வேண்டுகின்றோம்.
அதேநேரம் அரசியல்வாதிகளையும், இந்து அல்லாத வேறு சமய குழுக்களையும் இதில் தலையிடவேண்டாமென வேண்டுகின்றோம்.
மேலும், இதனை ஓர் அரசியல் பிரச்சினையாகவோ மதத்துவேச நிலைமையை ஏற்படுத்துகின்ற நிலைமையாகவோ மாற்ற வேண்டாம்.
இந்தப் பிரச்சினைகளை கையாளும் பொறுப்பை இந்துக்களிடமே விட்டுவிடுங்கள்.
வழிபாட்டுத் தலத்தில் சமூகம் சம்பந்தமான பிரச்சினைகள் அல்லது கேள்விகள் எழலாம். சமூக நம்பிக்கையின் அடிப்படையில் ஓர் நிகழ்வு இடம்பெறும் போது அதனை அந்தக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டும்.
அதே நேரத்தில் சமூக விடயங்கள் சமய நம்பிக்கைகளுடன் கலக்கப்படக்கூடாது. எமது சமயத்தின் புனிதமான கோட்பாடுகளுக்கோ அல்லது வழிபாட்டுத் தலங்களின் புனிதத்திற்கோ அல்லது தெய்வீகத் தன்மைக்கோ எவரும் களங்கம் ஏற்படுத்தக்கூடாது.
இவ்வாறு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி. கயிலாசபிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
150 அகதிகளுடன் சென்ற படகு இந்தோனேசிய கடலில் மூழ்கியது, அறுவர் கரையேறினர்
வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, BY.rajah,
இதில் அறுவர் மட்டும் கரையேறியுள்ளனர். இப்படகில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல பெண்களும் அடங்குவதாக அவ் அறுவரும் தெரிவித்துள்ளனர்.
இந்த படகை தேடும் நடவடிக்கைகளில் இந்தோனேசியாவை சேர்ந்த இரண்டு ஹெலிக்கெப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சட்டவிரோத படகில் சென்றவர்கள் ௭ந்த நாட்டை சேர்ந்தவர்கள்? ௭ன்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.
எனினும் இப்படகில் பயணித்தவர்களில் இலங்கையர்களும் அடங்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிருக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம் என்றதனால் தான் கடல் மூலம் அவுஸ்திரேலியா வருவதை தடுக்கும்படி கேட்டுக்கொண்டோம் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது
இந்த படகை தேடும் நடவடிக்கைகளில் இந்தோனேசியாவை சேர்ந்த இரண்டு ஹெலிக்கெப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சட்டவிரோத படகில் சென்றவர்கள் ௭ந்த நாட்டை சேர்ந்தவர்கள்? ௭ன்பது போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.
எனினும் இப்படகில் பயணித்தவர்களில் இலங்கையர்களும் அடங்கியிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிருக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம் என்றதனால் தான் கடல் மூலம் அவுஸ்திரேலியா வருவதை தடுக்கும்படி கேட்டுக்கொண்டோம் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது































