Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 1 செப்டம்பர், 2012

கொக்குவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு: கவலைக்கிடமான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்!

.
 
 
01.09.2012.BYrajah.
யாழ். கொக்குவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற வாள்வீச்சு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதோடு ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினரே தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
இதன்போது சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் வருகைதந்ததைத் தொடர்ந்து அவர்கள் தப்பியோடியுள்ளனர். அத்தோடு அவர்கள் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிகள் ஒன்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை இப்பகுதியில் அடிக்கடி குழக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெறுவதோடு இவற்றை பொலிஸார் கண்டும் காணாதவர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

நீலாவணை களப்பிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

01.09.2012.BY.rajah.மட்டக்களப்பு நீலாவணை பிரதேசத்தில் உள்ள களப்பு ஒன்றில் இருந்து இன்று மாலை இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த வினோ (22 வயது ) மற்றும் ஏட்டின் ( 22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் களப்பில் நண்பர்களுடன் குளித்து கொண்டு இருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தால் கல்முனை எங்கும் கவலையில் ஆழ்ந்துள்ளது. சடலங்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர்

யாழில் கப்பம் கோரி இருவர் கடத்தல்; காவற்றுறையினரால் மீட்பு, சந்தேக நபர் இருவர் கைது

01.09.2012.BYrajah.யாழ் நகரை அண்டிய பகுதி ஒன்றில் கப்பம் கோரி தாயையும் அவரது இரண்டு வயது மகனையும் கடத்திய இருவர் யாழ். காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி வீதி அருகாமையில் வைத்தே இருவரும் கடத்தப்பட்டதாகவும் பணத்திற்காகவே இக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ் புலன் விசாரணைகளை மேற்கொண்டு கணவன் - மனைவி ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் தாயையும் மகனையும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.

கப்பம் கேட்டு கடத்திய இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வவுனியா மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர வண்டிகள் வழங்க ஏற்பாடு

01.09.2012.BYrajah.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட வவுனியா மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகள் 25 பேருக்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு எலயன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து முச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளன இதற்கான கலந்துரையாடல் கடந்த 29ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


இதன் போது வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது

இலங்கை இராணுவத்திற்கு தேவையானவற்றை சீனா தொடர்ந்தும் வழங்கும்; சீன பாதுகாப்பு அமைச்சர்


01.09-2012.BY.rajah.
இலங்கைப் படையினருக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவித் திட்டங்களை தொடர்ந்தும் வழங்குவதற்கும் இவ்வாறான செயற்பாடுகளினால் இரு தரப்பு உறவுகளும் தொடர வேண்டும் என சீனா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ தெரிவித்துள்ளார்.


அதன்படி குறைந்த செலவிலான இராணுவ உதவித் திட்டங்கள், ஆளளி பயிற்சிகளை விஸ்தரித்தல், கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விஸ்ரித்தல், பயங்கரவாத ஒழிப்பு நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளல் என்பனவற்றிற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் சீன பாதுகாப்பு அமைச்சருக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போதே இவ்வாறான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.


யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்தன் பின்னர் அடைந்துள்ள வெற்றிகள் குறித்து சீன தூதுக்குழுவினருக்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விளக்கமளித்தார்.


இடம்பெயர்ந்தோரில் 98 வீதமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் ஏறத்தாழ அனைத்து முன்னாள் போராளிகளும் முறையான புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


அத்துடன் வடபகுதியில் அபிவிருத்திப் பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படு வருவதாகவும் நாட்டின்மொத்த வளர்ச்சி வீதம் 7.5 ஆக உள்ளநிலையில் வடபகுதியின் வளர்ச்சி வீதம் 25 சதவீதமாக இருப்பதாகவும் பாதுகாப்புச் செயலர் தெரிவித்தார்.


சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க, படையினரிகளிடத்தில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை வழங்குவதற்கும் சீன பாதுகாப்பு அமைச்சர் குவாங்லீ உறுதியளித்துள்ளார்.


பாதுகாப்புப் படையினருக்கான கல்லூரியில் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கும் உதவிகளை மேற்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்து ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அச்சுவேலியில் பெறுமதி மிக்க பொருட்கள் மாயம்; பொலிஸார் தெரிவிப்பு

01.09.2012.BY.rajah.
யாழ். அச்சுவேலி தோப்பு பகுதியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து பெறுமதியான பொருட்களும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளர்.
நேற்றுய தினம் அச்சுவேலி தோப்பு இராச வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது
நேற்றுக்காலை வீட்டில் இருந்த அனைவரும் செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவிற்குச் சென்ற சமயம் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதில் 2 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி மிக்க பொருட்களும் 26 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

உணவுமின்றி 9 நாள்களாகக் கடலில் தத்தளித்த 43 இலங்கையர்கள் மீட்பு; ஆஸ்திரேலியா நோக்கிச் செல்கையில் துயரம்

01.09.2012.BY.rajah.ஆஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது படகு இயந்திரம் பழுதடைந்ததால் 9 நாள்களாக உணவும் இன்றிக் கடலில் தத்தளித்த 43 இலங்கையர்களைத் தாங்கள் மீட்டுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பட்டினியால் வாடி வதங்கி, சாகக் கிடந்த நிலையில் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்று அந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
இலங்கையில் இருந்து புறப்பட்ட இவர்களின் படகு இந்தோனேஷியாவுக்கு அருகில் பயணித்துக் கொண்டிருக்கையில் இயந்திரம் பழுதடைந்து, படகு தத்தளிக்க ஆரம்பித்து விட்டதாக காப்பாற்றப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
சுமத்திராவுக்கு அருகில் உள்ள மென்டாவி என்ற தீவையொட்டிய கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகைக் கண்டு மீனவர்கள் இந்தோனேஷிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதை அடுத்து இலங்கையர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் என்று இந்தோனேஷிய பொலிஸ் கப்டன் அப்டுராச்மன் சுர்யன் எர் காரா தெரிவித்தார் என "அஸோசியேட் பிரஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களில் நான்கு பெண்களும் மூன்று சிறுவர்களும் அடங்கியிருந்தனர்.
"9 நாள்களுக்கு முன்னரே படகின் இயந்திரம் முற்றாகச் செயலிழந்துவிட்டது. அத்தோடு அவர்களிடம் இருந்த உணவும் முடிவடைந்துவிட்டது'' என்கிறார் சுர்யன்எர்காரா.
இலங்கையில் வன்முறைகள் காரணமாகத் தாம் ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்குடன் படகில் சென்று கொண்டிருந்தனர் என்று, மீட்கப்பட்டவர்கள் இந்தோனேஷியப் பொலிஸாரிடம் தெரிவித்திருக்கின்றனர் என்று "அஸோசியேட் பிரஸ்' கூறுகின்றது

பிரபாகரன் வீட்டு பங்கருக்குள் வீழ்ந்த சிங்களப் பெண் சாவு

01.09.2012.BY.rajah.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை பார்வையிடச் சென்ற சிங்களப் பெண்ணொருவர் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார்.

ஜேபி சிறியலதா (வயது56) என்ற பெரும்பான்மையினப் பெண்ணே உயிரிழந்தவராவார்.

கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை குறித்த பெண் பார்வையிடச் சென்றுள்ளார்.


இதன் போது அவரது வீட்டைப் பார்வையிடும்போது அங்கிருந்த பங்கர் ஒன்றினுள் தவறி விழுந்துள்ளார். இதன் காரணமாகத் தலையில் கடுமையான காயங்களுடன் முல்லைத்தீவு வைத்தியசாலையில் உடனடியாக சேர்க்கப்பட்டார்.


பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டிருந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பயனின்றி நேற்று நண்பகல் உயிரிழந்தார்.


சடலம் உடல் கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது

தன்னை ரசிக்கும் ரசிகர்கள் கோவையில் அதிகம் இருக்கிறார்கள்: சினேகா

01.09.2012.BY.rajah.
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் தனக்கு பிடிக்கும் என்றும் தன்னை ரசிக்கும் ரசிகர்கள் இங்கு அதிகமிருப்பதாகவும் நடிகை சினேகா கூறியுள்ளார்.
நடிகை சினேகா நடித்துள்ள விடியல், ஹரிதாஸ் படங்கள் திரைக்கு காத்திருக்கின்றன.
தற்போது கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்திலும் சினேகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை சினேகா படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இதர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றார்.
கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகா, அங்குள்ள ரசிகர்களை புகழ்ந்து பேசினார்.
கோவை மக்கள் சினிமா ரசனை உள்ளவர்கள் என்றும் தன்னை ரசிக்கக்கூடிய ரசிகர்கள் இங்கு அதிகம் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
கோவை ரசிகர்களின் அன்பு தனக்கு எப்போதும் உண்டு எனவும் பேசினார்

நடிகர் கவுண்டமணியின் தாயார் காலமானார்

01.09.2012.BY.rajah.
உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார் காளியம்மாள் (87), நேற்று காலமானார்.
திரையுலகின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான கவுண்டமணியின் தாயார் தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த மாதம் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். குறிப்பாக அவருடைய காலில் காயம் ஏற்பட்டது.
அதற்காக வீட்டில் இருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் காலமானார்.
அவருடைய இறுதிச் சடங்கு உடுமலைப்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.
அவரது இறுதிச் சடங்கில் திரையுலகினர் கலந்து கொள்ள உள்ளனர்

விளம்பரத்திற்காக ரூ.5 கோடி வாங்கிய வித்யாபாலன்

01.09. 2012, BY.rajah.
ஒரு ஜவுளிக்கடையின் புடவை விளம்பரத்தில் தோன்ற வித்யா பாலனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா, கத்ரீனா போன்றவர்கள் படங்களில் வாங்கும் சம்பளத்தை விட, விளம்பரங்களில் நடிக்க வாங்கும் சம்பளம் மிக அதிகம்.
இவர்களுக்கு சளைத்தவரல்ல வித்யாபாலனும். அதுவும் தி டர்ட்டி பிக்சர் படம் வெளியாகி வெற்றிகளைக் குவித்த பிறகு, அவர் வாங்கும் சம்பளம் ஏகத்துக்கும் அதிகரித்து விட்டது.
விளம்பர வாய்ப்புகள் வாசலில் க்யூவில் நிற்கின்றன. இவற்றில் புடவை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக வித்யாபாலனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி, அட்வான்ஸ் கொடுத்துள்ளனர்.
அவர் செய்ய வேண்டியதெல்லாம், குறிப்பிட்ட சேலையின் விளம்பரங்களில் நடிப்பதோடு, தான் போகும் நிகழ்ச்சிகளுக்கும் அந்த பிராண்ட் புடவையை அணிந்து செல்ல வேண்டுமாம்

அதென்ன ஜனனி அய்யர்? இயக்குனர் ஆவேசம்

 Saturday, 01 September 2012, BY.rajah.
சாதி அடையாளங்களை பெயரோடு சுமந்து திரியும் வழக்கம் தற்போது பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக பிரபலமாக உள்ள பல பெண்கள் தங்கள் பெயரோடு அய்யர், ரெட்டி, பிள்ளை, நாயுடு என போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
நடிக்க சான்ஸ் கேட்டு வரும் போது, பெயரையோ, அதனுடன் ஒட்டியிருக்கும் சாதி அடையாளத்தையோ மாற்றக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகிறார்கள்.
இதனை எந்த இயக்குநரும் கண்டிப்பதில்லை. பாலா கூட தன் படத்தின் நாயகி ஜனனி அய்யர் என்ற சாதி அடையாளத்துடன் நடிக்க அனுமதித்தார்.
அதே ஜனனி அய்யர் நடித்துள்ள இன்னொரு படம் பாகன். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், நடிகையின் இந்த சாதி அடையாள மோகத்தைக் கண்டித்தார்.
இந்தப் படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என்று வைத்திருக்கிறார். அதென்ன அய்யர்? இப்படி தன் பெயரோடு சாதி அடையாளத்தை வைத்திருப்பதை நான் ஆட்சேபிக்கிறேன் என்று தெரிவித்துள்ளாராம்

பாகிஸ்தானின் இந்து கோவில்களை சீரமைக்கக்கோரி லாகூர் கோர்ட்டில் மனு!

01.09.2012.BY.rajah.லாகூர்: பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்து கோவில்களை சீரமைக்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு செய்யப்பட்டுள்ளது.இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, ஏராளமான இந்து கோவில்கள், பாகிஸ்தானில் பராமரிக்கப்படாமல் உள்ளன. மாபியா கும்பல்கள் கோவில் நிலங்களை ஆக்ரமித்துள்ளன. இந்தியாவில் இருந்த, பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானில் பெரும்பாலான கோவில்கள், தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள கோவில்கள், சிதிலமடைந்து காணப்படுகின்றன. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாழடைந்த கோவில்களை சீரமைக்கவும், மாபியா கும்பல்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்டு தரும் படியும் கோரி, ஜாவீத் இக்பால் என்ற வழக்கறிஞர், லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்

வேளாங்கண்ணி ஆலய விழாவின் நோக்கம் என்ன? பங்குத்தந்தை விளக்கம்!

01.09-2012.BY.rajah.
பெசன்ட் நகர்: மக்களின் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்ததற்காகவும், எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவுள்ளதற்காகவும், நன்றி சொல்லும் விதமாகவே, விழாக்களை கொண்டாடுகிறோம், என்று, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் தெரிவித்தார். பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 40ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நடக்கவுள்ள விழாக்கள் மற்றும் திருவிழாக்கள் நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து, ஆலயத்தின் பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் கூறியதாவது: திருவிழா என்பது அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படுகிறது. மக்களின் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்ததற்காகவும், எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை அமைத்து கொடுக்கவுள்ளதற்காகவும் நன்றி கூறும் விதமாக, திருவிழாக்களை கொண்டாடுகிறோம். வேளாங்கண்ணி கோவிலில், திருவிழா, ஒன்பது நாட்கள் நடக்கிறது. முதல் நாள், கொடியேற்றுவதையே விழாவாக கொண்டாடுகிறோம். இரண்டாம் நாள் துறவற விழா நடக்கிறது. மூன்றாம் நாள் குடும்ப மக்கள் துறவறத்தில் உள்ளவர்களை போல சேவை செய்பவர்களை வாழ்த்தும் தினமாகும். நான்காம் நாள் முதல் தேதி சனிக்கிழமை நோயுற்றோருக்காக ஜெபிக்கப்படும் விழாவாகும். இதில் பங்கேற்கும் சுகவீனமுற்றோர் நலம் பெருவதாக நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை நோயுற்றோருக்கு இங்கு ஜெபிக்கப்படுகிறது. அன்று மாலை அனைவருக்கும், இறைவனின் அருள் பெற்ற எண்ணெய் தடவி ஜெபிக்கப்படுகிறது.
ஐந்தாம் நாள் ஏசு கிறிஸ்துவின் தேவ கருணையை விளக்குவதாக அமைகிறது. அன்று, ஏசு ரத்தம் சிந்தி காத்தார் என்பதற்காக, ரத்த தான முகாம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆறாம் நாள் விழா உழைப்பாளர்கள் விழா. அவர்களை பாராட்டும் விழாவாகவே நடத்தப்படுகிறது. திருவிழாவின் ஏழாம் நாள் இளைஞர்கள் விழாவாக நடத்தப்படுகிறது. எட்டாம் நாள் ஆசிரியர் தின விழா நடத்தப்படுகிறது. ஆசிரியர்களின் சேவையை பாராட்டி, கவுரவித்து மேலும், அவர்கள் சிறந்த சேவையாற்ற வேண்டும் என, இறைவனிடம் ஜெபிக்கப்படுகிறது. ஒன்பதாம் நாள் குடும்ப விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருமணமாகி வெள்ளி விழா மற்றும் பொன் விழா கண்டவர்களை மேடைக்கு அழைத்து, பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ்வதற்காக இறைவனிடம் ஜெபிக்கப்படுகிறது. விழாவின் இறுதி நாள் மக்களுக்கு உதவி செய்யும் மாதாவை வணங்குவதோடு, அவருக்கு விசவாத்தை காட்டுவதற்காக சிறப்பு தேரில் மாதாவின் பவனி வரச்செய்து, வழிபாடு நடத்தப்படுகிறது. அடுத்த நாள் ஆரோக்கிய அன்னையில் பிறப்பு விழா. இதை ஒட்டியே இந்த ஓன்பது நாள் விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு, பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் தெரிவித்தார்.
மாதா சபை விழா: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழாவின் மூன்றாம் நாளான நேற்று மரியாயின் சேனை, மாதா சபை விழாவில் நேற்று காலை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் அரங்கேறின. மாலை வெள்ளி விழா அருட்பணியாளர்கள் பீட்டர் தும்மா, தனிஸ்லாஸ், ஜோசப் மாணிக்கம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவை மறைமாவட்ட மரியாயின் சேனை, மாதா சபை, பிரன்சிஸ்கன் பொது நிலையினர் சிறப்பித்தனர். விழாவில் விசுவாசம் என்ற தலைப்பில் ஆயர் பேசியதாவது:பல புதுமைகளை ஆண்டவர் இயேசு செய்தார். அவர் பிசாசை ஓட்ட சென்றபோது, அவைகள், "நீர் வல்லமை மிக்க மகன் என்பது எங்களுக்கு தெரியும், என்றன. அவைகள் செயலற்ற விசுவாசம் கொண்டவை. யாருடைய வாழ்க்கையில் நல்ல செயல் வரவில்லையோ அது இறந்து போன விசுவாசமாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்

களுத்துறை சிறைச்சாலை பின்புறம் போதைப்பொருள், சட்டவிரோத பொருட்கள் பொலிஸாரால் மீட்பு

1.09.2012.BY.rajah.
களுத்துறை மாவட்ட சிறைச்சாலையின் மதிலுக்குப் பின்புறமாக சுமார் 5இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களும் சட்டவிரோத பொருட்களும் உள்ளடங்கிய பொதியொன்று நேற்று அதிகாலை 04.30மணியளவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொதியினுள் கஞ்சா 560 பைக்கெற்றுகள், கோலிப் சிகரட் பைக்கெற் தலா01 , 06 பாபுல் பைக்கெற்றுகள் ,போத்தலிலே மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பெரிய கஞ்சா பைக்கெற் 28 ,03 கையடக்கத் தொலைபேசிகள்(செருப்புக்களிலே அறைக்கட்ட உள்ளிட்டபொருட்கள் )உள்ளிருக்கும் சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமாக பறிமாறிக் கொள்கின்றனர்.


இது தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து அமைச்சர் இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளயர் நாயகம் பிரதீப் கொடுப்பிலியுடன் பேசி குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறும் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்.






 

9 வது திருமண நாள் வாழ்த்து நேமி செல்வி