siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பாடகரானார் ஸ்ரீகாந்த்

07.09.2012.BY.Rajah.
கொலிவுட்டில் உருவாகும் எதிரி எண் 3 படத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் பாடல் ஒன்றை பாட உள்ளார்.
நண்பன் வெற்றிக்குப் பின்பு புதிய பாதையில் பயணிக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள பாகன் படம் நாளை திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் தற்போது நடித்து வரும் எதிரி எண் 3 படத்தில் பாடல் ஒன்றை பாட உள்ளார் ஸ்ரீகாந்த்.
இப்பாடலுக்கு சிம்புவின் போடா போடி படத்திற்கு இசையமைக்கும் தரண் இசை அமைத்துள்ளார்.
நண்பர்களை மையமாக வைத்தே இப்பாடல் இடம் பெறுகின்றது.
இப்படத்தில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். சுமன், ஜெய்பிரகாஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அஜித்துடன் நடிக்க பயம்: டாப்சி

07.09.2012.BY.Rajah.
விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் அஜித் ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார்.
இதற்கிடையில் தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்துள்ள ‘தருவு’ படம், தமிழில் ‘புல்லட் ராஜா’ என்ற பெயரில் மொழி மாற்றம் ஆகிறது.
இதுகுறித்து டாப்ஸி கூறுகையில், ஒருவழியாக விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கான காஸ்டியூம் ஒத்திகை, வசன ஒத்திகை முடிந்தது.
விரைவில் அதில் பங்கேற்கிறேன். இதில் நடிப்பதற்கு நடுக்கமாகவே இருக்கிறது. காரணம் இதில் அஜித் நடிக்கிறார். முதல்முறையாக அவருடன் நடிக்கிறேன்.
நயன்தாரா, ஆர்யாவும் இதில் நடிக்கின்றனர் என்றும் பயமும், நடுக்கமும் இருந்தாலும் படப்பிடிப்பில் பங்கேற்கும் நாளுக்காக காத்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

முகப் பொலிவிற்கு தேங்காய்

07.09.2012.BY.Rajah.தேங்காய் உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தரவில்லை, சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய் ஆகவும், அதற்கு முன் உடல் ஆரோக்கியத்திற்கு இளநீராகவும் மற்றும் இதன் ஓடு வீட்டில் சமைப்பதற்கு தேவையான நெருப்பை மூட்ட என்றெல்லாம் உதவுகிறது.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க
* ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் கூழ் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து, முகம், கை மற்றும் கால்களுக்கு 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் அதனை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட வேண்டும். இது சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்கரப். இதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் சற்று கூடும்.
* மற்றொரு முறை தேங்காய் தண்ணீரை வைத்து செய்வது. அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் நீர் மற்றும் ஏதேனும் பருப்பு பேஸ்ட் எடுத்து கலந்து கொண்டு, சருமத்திற்கு 1-2 நிமிடம் தேய்த்து, பின்னர் கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு தேவையான நீர் சத்து கிடைப்பதோடு, அழகும் அதிகரிக்கும்.
* தேங்காயை சிறிது ஆப்ரிக்காட் பழத்துடன் அரைத்து, முகத்திற்கு ஃபேசியல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் சற்று இறுக்கமடைந்து இளமை தோற்றத்தை தரும்.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க
* தேங்காய் சருமத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த மாஸ்சுரைசர். தினமும் படுக்கும் முன் சிறிது தேங்காய் நீரை சருமத்திற்கு தடவி, பின்னர் படுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அனைத்து புள்ளிகளும் நீங்கி, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும்.
* தேங்காய் நீருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, பின் சருமம் முழுவதும் தடவி, ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படுவதோடு, பளபளப்பாக மின்னவும் செய்யும்.
* தினமும் குளித்த பின்னர், தேங்காய் பாலை வைத்து முகத்தினை கழுவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின்னர் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஆகவே முகம் நன்கு பொலிவோடு இருப்பதோடு, சற்று சருமத்தின் நிறம் அதிகரித்தும் காணப்படும்.
முகப்பரு நீங்க
* முகப்பரு விரைவில் போவதற்கு, ஈஸியான வழி இருக்கிறது. அதற்கு தொடர்ந்து இரவில் படுக்கும் முன் தேங்காய் நீரை முகத்திற்கு தடவி பிறகு தூங்க வேண்டும். இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்தால், முகப்பரு நீங்கி சருமம் மென்மையாகவும், சருமத்துளைகள் நீங்கியும் காணப்படும்.
* இல்லையென்றால் தேங்காயின் கூழ் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு ஃபேஸ் பேக் போன்று, வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்

முத்தக் காட்சியில் நடிப்பது தவறில்லை: காஜல் அகர்வால்

07.09.2012.BY.Rajah.
முத்தக் காட்சியில் நடிப்பது தவறில்லை என்று முன்னணி நாயகி காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
தற்போது முன்னணி இயக்குனர்களில் கைகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல்.
தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மாற்றான் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படங்களில் நடிக்கும் காஜலின் புகழ் பாலிவுட்டிலும் பரவியுள்ளது.
ஏனெனில் பாலிவுட்டில் உதட்டு முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து காஜல் அகர்வால், பாலிவுட்டை பொறுத்தவரை உதட்டு முத்தக் காட்சி என்பது சாதாரண விடயமாகும்.
படத்திற்கான காட்சி அமைப்பிற்கு அவசியம் என இயக்குனர் என்னிடம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் முத்தக் காட்சியில் நடித்துக்கொடுத்தேன் என காஜல் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ஆபாசமாக நடிக்க அழைப்பு வந்தால் எந்த மொழிப்படமாக இருந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என ஆவேசமாக கூறியிருக்கிறார்

மீண்டும் விஜய்யுடன் இணையும் அமலா பால்

07.09.2012.BY.Rajah-
இயக்குனர் விஜய்யின் படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க அமலா பால் பரிசீலனையில் உள்ளார்.
துப்பாக்கி படத்தை முடித்த கையோடு இளைய தளபதி விஜய், ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்திற்கான நாயகிகள் தெரிவு தற்சமயம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதில் நடிகை அமலா பால் முன் வரிசையில் நிற்கின்றார். ஏனெனில் இயக்குனர் விஜய் படமான தெய்வத் திருமகளில் ஆசிரியை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் அமலா.
பின்னர் தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை. இந்நிலையில் மீண்டும் விஜய் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே கோடம்பாக்கத்தில் விஜய்யும் அமலா பாலும் காதலிக்கிறார்கள் என்றும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதை இயக்குனர் விஜய்யும் அமலா பாலும் சேர்ந்தே மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மொத்த உற்பத்திக்கு வடக்கின் பங்களிப்பு போதாது; 3.7 வீத பங்களிப்பே வழங்கியுள்ளது

07.09.2012.BY.Rajah.இலங்கையின் மொத்த உற்பத்திக்கு வட பிராந்தியம் 3.7 சதவீத பங்களிப்பையே வழங்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் 3.4 சதவீதமாக காணப்பட்டபங்க ளிப்பு 2011ஆம் ஆண்டில் உயர்வடைந்துள்ள போதிலும் ஏனைய மாகாணங் களைவிட வடமாகாணம் பின் தங்கியதாகக் காணப்படுகின்றது.
2011ஆம் ஆண்டில் இலங் கையின் மொத்த உற்பத்திக்கு ஒவ்வொரு மாகாணங்களும் பங்களிப்பு தொடர்பான விவரங்களை இலங்கை மத்திய வங்கி வெளி யிட்டுள்ளது. இதில் மேல் மாகா ணம் கடந்த ஆண்டு 44.4 சதவீத பங்களிப்பை இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வழங்கி முதல் நிலையில் உள்ளது.
இருப்பினும் 2010ஆம் ஆண்டு 44.8 சதவீத பங்களிப்பை வழங்கிய மேல் மாகாணம் 0.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. வடமாகா ணத்தைப் பொறுத்தவரையில் 2010ஆம் ஆண்டு 3.4 சத வீத பங்களிப்பை வழங்கியுள்ளது. இது 2011 ஆம் ஆண் டில் 0.3 சதவீதத் தால் அதிகரித்து 3.7 சத வீதமாகியுள்ளது.
வட மாகாணத்தின் இந்த வளர்ச்சி வீதமானது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது. வடமாகாணத்தின் உள் நாட்டு உற்பத்திக்கான மொத்த பங்களிப்பு 241 பில்லியன் ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித அவலம் ஒன்று இந்தோனேசிய கரையில் நிகழும் அபாயம்

07.09.2012.BY.Rajah.
எரிபொருள் தீர்ந்த நிலையில் மேற்கு இந்தோனேசியாவில் தரித்து நிற்கும் கப்பலில் இருந்து வெளியேற 53 ஈழத்தமிழர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் உண்ணாவிரதமிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்டகளாக நடந்து கொண்டுள்ள இச் சம்பவம் சாதாரண சம்பவமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் ஊடகங்களில் பார்வையில் எட்டாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ள மனித அவலமாகவே இச் சம்பவம் உள்ளது.

இது தொடர்பில் எமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்கள்,

கடந்த 9ம் நாள் தமிழ்நாட்டு கிழக்கு கடல் மகாபலிபுரத்திற்கும் காசிமேட்டுக்கும் இடையில் உள்ள ஒரு பகுதியில் உள்ள துறைமுகம் ஒன்றில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி ஈழப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 53 பேருடன் புறப்பட்ட படகு ஒன்று எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்தோனேசியாவில் கரையொதுங்கியுள்ளது.

அப் படகை தற்போது இந்தோனேசியக் கடற்படை சுற்றி வளைத்துள்ளதுடன் அவர்களை கரையிறக்கி சிறிலங்கா அரசிடம் கையளிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் படகில் இருந்து இறங்க மறுத்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாம் சிறிலங்காவிடம் திருப்பி கையளிக்கப்பட்டால் கொல்லப்பட்டு விடுவோம் எனக் கூறித் தம்மை ஐ.நா நிறுவனங்கள் அல்லது மனித உரிமை நிறுவனங்களிடம் கையளிக்கும் படி
கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளதுடன் உணவுத் தவிர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.

53 பயணிகளை கொண்ட இப் படகில் இரு ஊனமுற்றவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் நான்கு பெண்கள் இருப்பதாக அறிய முடிகின்றது.

கடந்த 19ம் திகதி எரிபொருள் தீர்ந்த நிலையில் தத்தளித்த படகை சில மீனவர்கள் கண்டு 100 லீற்றர் டீசல் வழங்கி நகர உதவியதாக தெரிவிக்கும் அப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் 28ம் திகதி வரை பயணம் மேற்கொண்ட நிலையில். எரிபொருள் தீர்ந்து காற்றில் அடித்து செல்லப்பட்டு இந்தோனேசியாவில் சிக்காப் எனப்படும் பிரதேசத்தில் உள்ள துறைமுகத்தில்
தரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான கடல் பயணத்தை தொடர்ந்து கடந்த நான்கு நாட்கள் உணவுத் தவிர்ப்பை மேற்கொண்டு வரும் இவர்கள் உடல் நிலை மிகவும் மோசமடைந்து கொண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு இரு நாட்கள் தாமதிப்பின் மனித அவலம் ஒன்று இந்தோனேசிய கரையில் நிகழும் எனவும் அவ் படகில் உள்ள ஈழப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் பிறிதொரு படகில் பயணித்த இன்னொரு தொகுதி புகலிடக்கோரிக்கைiயாளர்கள் படகில் இருந்து இறக்கப்பட்டடு ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிலும் பெண்கள் குழந்தைகள் அடங்கிய ஈழத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளதாகவும் அறிய முடிகின்றது.



அராலி-வேலணை கடற்பாதை அபிவிருத்தி செய்வது எப்போது?; பிரதேச சபையினர் கேள்வி

07.09.2012.BY.Rajah.
அராலிவேலணை கடலுக்கு ஊடான பாதையை அபிவிருத்தி செய்வது குறித்து யாழ்.கிளிநொச்சி மாவட்ட ஒருங் கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்து 10 மாதங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் இந்தப் பாதையின் அபிவிருத்தி குறித்து எந்தப் பதிலும் கூறப்படவில்லை.
தீவகமக்களும்வலிகாமம் மக்களும் இதை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர் என்று பிரதேச சபையினர் தெரிவிக் கின்றனர்.யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஊடான அபிவிருத்தி எனும் தலைப்பில் கருத்து தெரிவிக்கப்பட்ட போதே மேற்படி விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இந்த மாத முற்பகுதியில் இடம்பெறும் என அரச அதிபர் அறிவித்துள்ளார்.ஆனால் கடந்த கால கூட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகள் இதுவரை உள்ளூராட்சி சபைகளுக்கு கிடைக்கவில்லை.
முன்னேற்ற அறிக்கைகளை உடனுக்குடன் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கோரியும் இதுவரை கிடைக்கவில்லை.இந்த நிலையில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி புறநெகும மற்றும் பல அபிவிருத்திகளுக்கான திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அராலிவேலணை கடற்பாதை அபிவிருத்தி குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கருத்திட்டத்தை முன்வைக்க வேண்டும்.அத்துடன் இந்த அபிவிருத்தி எப்போது ஆரம்பிக்கப்பட்டு முடிவுறுத்தப்படும் எனவும் அறிவிக்க இணைப்புக் குழுத் தலைவர் முன்வர வேண்டும்.
முன்னாள் அரச அதிபர் க.கணேஷ் காலத்தில் மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய், நல்லூர் உள்ளிட்ட பிரதேச சபைகளை நகர சபைகளாக தரம் உயர்த்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழிந்து 4 வருடங்கள் கழிந்த நிலையிலும் இந்த விடயம் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வடக்கில் சிறுவர் வைத்தியசாலை அமைய வேண்டும் என பல கோரிக்கைகள் முன்வைத்த போதும் இதுவரை பதில் இல்லை.இவ்வாறான விடயங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஊடாக நல்லதொரு அபிவிருத்தி ஏற்பட வேண்டும் எனவும் பிரதேசசபை உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர். அத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எத்தனை தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்புக் குழு ஊடாக அபிவிருத்தி எய்தப்பட்டது?
அபிவிருத்தி எய்தப்படாமல் எத்தனை தீர்மானங்கள் உள்ளன என்பன பற்றியும், மாவட்ட அரச அதிபர் வழங்கி உதவ முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கேட்கின்றனர்.

பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரை தலையை வெட்டி படுகொலை செய்த பெண்


07.09.2012.bx.rajah.

துருக்கியில் தன்னை பல மாதங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய நபரை கௌரவக் கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தென்மேற்கு துருக்கியிலுள்ள சிறிய கிராமமொன்றில் வாழும் இரு பிள்ளைகளின் தாயாரான நெவின் யிடிறிம் (வயது 26) என்பவரே தனது கணவர் கடந்த ஜனவரி மாதம் தொழிலுக்காக பிரிதொரு நகருக்கு சென்றதையடுத்து தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த நுரெட்டின் கிடெர் என்பவரை படுகொலை செய்துள்ளார்.

18 வருடங்களுக்கு முன்னரான கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது

 
07.09.2012.by.rajah.

பஸ்ஸர ௭ல்பிட்டிய பகுதியில் கடந்த 18 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 18 வருடங்களாக தேடப்பட்டுவந்த இச்சந்தேக நபர் பொலன்னறுவை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி பஸ்ஸர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட போது ஏற்பட்ட தகராறொன்றில் பஸ்ஸர நவஜனபதய பொல்கஹ கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆர்.டீ.பபாநிஸ் ௭ன்பவர் கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலதடைவைகள் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் அவர் தலைமறைவாகவே இருந்துள்ளார். இவ்வாறான நிலையில் வழக்கை விசாரணைக்கு ௭டுத்து கொண்ட பதுளை மேல் நீதிமன்றம் சந்தேக நபரை குற்றவாளியாக கருதி மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 2011 செப்டெம்பர் 21 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்பினையடுத்தே நேற்று முன்தினம் இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கைச் சிறைகளில் இந்திய மீனவர்கள் ௭வரும் இல்லை

 
07.09.2012.by.rajah.
இலங்கைச் சிறைச்சாலைகளில் இந்திய மீனவர்கள் ௭வருமே இல்லை ௭ன்று மத்திய வெளிவிவகார அமைச்சர் ௭ஸ்.௭ம். கிருஷ்ணா கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் அ.தி.மு.க. விடுத்த கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் இந்திய மீனவர்கள் ௭வரும் ௭ல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இல்லை. இருப்பினும் போதைப் பொருள் கடத்தியதான குற்றச்சாட்டின் பேரில் சில இந்தியர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்படும்போது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள தூதருடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்து உதவி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் இருதரப்பு மீனவர்களும் சுமுகமாக மீன்பிடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ௭ன்றார்

துருக்கிக் கடலில் கவிழ்ந்தது படகு அகதிகள் 58 பேர் நீரில் மூழ்கிச் சாவு

0709.2012.by.rajah.ஐரோப்பாவுக்கு சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்றதாகக் கூறப்படும் மீன்பிடிப் படகொன்று நேற்று துருக் கியின் மேற்குப் பகுதிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கியின் அனடோலியா செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
43 பேரின் சடலங்கள் கடலில் இருந்தும் 15 பேரின் சடலங்கள் படகிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கியின் இஸ்மீர் மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்ததாக அச்செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
படகில் பயணம் செய்தவர்களில் 46 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் உயிர் தப்பியவர்களில் படகின் இயக்குநர் அவரின் உதவியாளர் ஆகியோரும் அடங்குவகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிரேக்க தீவான டஹ்சின் குர்ட் பெயோக்லூவுக்கு அருகிலுள்ள துருக்கிய நகரான அஹ்மெத்பெய்லியிலிருந்து இப்படகு புறப்பட்டதாகவும் பின்னர் பாறையொன்றில் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சிரியா மற்றும் ஈராக் முதலான நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் இவர்களுள் சிறார்களும் அடங்குவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்தப் படகில் இலங்கையர்கள் எவராவது பயணித்தார்களா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை

யாழ்.-வவுனியா தனியார் பஸ்களின் திடீர் புறக்கணிப்பால் பயணிகள் அவலம்

07.09.2012.by.rajah.தனியார் பஸ் சேவைக்கான நேர அட்டவணைக் குழறுபடி காரணமாக நேற்று முன்தினம் சுமார் 15 மணி நேரம் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குமான தனியார் பஸ் சேவைகள் எதுவும் இடம்பெறாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினர் சுழற்சி முறையில் வவுனியா யாழ்ப்பாணம் தனியார் பஸ் சேவைக்கான நேர அட்டவணை ஒன்று கடந்த முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டி ருந்தது. இந்த நேர அட்ட வணை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்லும் பஸ்களுக்கு பொருந்தாத வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற தனியார் பஸ்கள் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு பின்னர் சேவையை இடைநிறுத்தியிருந்தன.
திடீரென இடைநிறுத்தப்பட்ட தனியார் பஸ் சேவை யால் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தரவிருந்த பயணிகள் நேற்று முன்தினம் பெரும் அவல நிலையை எதிர்கொண்டனர்.
இது தொடர்பாக யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ; தேசியபோக்கு வரத்து ஆணைக்குழுவால் சுழற்சி முறையில் வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்லும் பஸ்களுக்கு பொருந்தாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் சேவையில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டனர். இது தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபரிடம் தெரிவித்த போது கொழும்பு தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவிடம் எதிர்வரும் 15 ஆம் திகதி கலந்துரையாடி முடிவு எடுக்கும் வரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் புதிய நேர அட்டவணைப்படி பஸ் சேவையை நடத்துமாறும் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வவுனியா மாவட்ட தனியார் பஸ் சங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது வழமைபோன்று சேவை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சீருடை, பாதணி வழங்காவிடின் விரைவில் பணிநிறுத்தப் போர்; யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர் எச்சரிக்கை

07.09.2012.by.rajah.யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் தமக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய சீருடை, பாதணி என்பனவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மேலதிக நேரக் கொடுப்பனவை விரைவாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இவற்றை உடன் நிறைவேற்றத் தவறின் தாம் போராட்டத்தில் குதிக்கப் போவதாக ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
இது தொடர்பான எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் யாழ்.பல்கலைக்கழக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தங்கராஜா தெரிவித்ததாவது:
ஒவ்வொரு வருடத்துக்கு மான சீருடை, பாதணி என்பன வருட ஆரம்பமான ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். தற்போது எட்டு மாதங்களாகிவிட்ட போதும் அவை வழங்கப்படவில்லை.
இராமநாதன் கட்டடத் தொகுதியில் மின்சாரமின்மை மலசல கூடமின்மை, வாகனத் தரிப்பிடப் பற்றாக்குறை மற்றும் சிற்×ண்டிச் சாலைகளில் தாமதம் எனப் பல பிரச் சினைகள் தொடர்கின்றன. இவை சீர்செய்யப்படவில்லை.
25,30,35,40 ஆகிய வருடங்களை நிறைவு செய்தவர்களுக்கு நான்கு கட்டடங்களில் நான்கு வகையான பதக்கங்கள் வழங்க வேண்டும். அவை இதுவரை எவருக்கும் வழங்கப்படவில்லை. மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை இதுவரை வழங்கப் படவில்லை. அவற்றை உடன் வழங்க வேண்டும்.
நிதிக் கிளை அதிகாரி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு சம்பள முற்பணம் வழங்கப்பட்டதிலிருந்து தெரியவருகிறது. இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ். பல்கலைக் கழகத்தில் இந்த வருடம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பணிபுரிந்த பணியாளர்களின் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும்.
ஊழியர் சம்பளக் கணிப்பீட்டிலுள்ள தவறுகள் திருத்தப்படாமலேயே சம்பளக் கணிப்பீடு இடம் பெறுகிறது. அதனை உடனே திருத்த வேண்டும்.வாகனச் சாரதிகளுக்கான வாகனங்கள், கடமை கள் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. பேருந்து உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.
இவற்றை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டி வரும் என்றார். இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் காண்டீபனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

கல்லுண்டாய் வெளியில் பெரும் சுகாதாரச் சீர்கேடு; உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

07.09.2012.by.rajah.
யாழ். கல்லுண்டாய் வெளியில் கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டு எரிக்கப் படுவதோடு மலக் கழிவுகளும் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுவதால் அப் பகுதியால் பயணிப்பவர்கள் குறிப்பாக அராலி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தச் சீர்கேட்டை நீக்கி நகரப் பகுதி மக்களைப் போன்று தாமும் சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அராலி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். நகர முதல்வர், சங்கானைப் பிரதேச செயலர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மக்கள் சார்பில் மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது யாழ். நகரில் இருந்து அராலி, வட்டுக்கோட்டைக்குச் செல்லும் வீதிக்கு இடையில் காக்கதீவு, நாவாந்துறையிலிருந்து கல்லுண்டாய் மஞ்சள் பாலம் வரையிலான பகுதியில் பல வருடங்களாக கழிவுப் பொருள்கள் கொட்டப்பட்டும் எரியூட்டப்பட்டும் வருகிறது. இரவு நேரத்தில் மலக்கழிவுகளும் இந்தப் பகுதியில் கொட்டப்படுகிறது.
நகரப் பகுதியில் சுகாதாரத்தினைப் பேணுவதற்காக தமது கிராமப் பகுதியில் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டினை மேற்கொள்வதன் மூலமாக தாம் சுகாதாரமாக வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றுள்ளது.
இது தொடர்பாக யாழ். மாநகர ஆணையாளர் சே.பிரணவநாதனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கழிவுப் பொருள்களை அந்த இடத்தில் வைத்து முகாமைத்துவம் செய்து சுகாதார சீர்கேட்டைப் பேணுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இது தொடர்பாக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் சு. முரளிதரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது.
யாழ். மாநகர சபை போதிய நிலப்பகுதி உத்தியோகபூர்வமாக அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அந்த நிலப் பகுதியை மாநகர சபையிடம் ஒப்படைக்கும் பட்சத்தில அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் தவிர மாகாண காணி ஆணையாளரது அனுமதியும் தேவை, பிரதேச மட்ட அமைப்புகளது சம்மதமும் தேவை. இந்த மாதம் நடைபெறவுள்ள பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதுபற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று முரளிதரன் தெரிவித்தார்

கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரும் பங்கேற்கவில்லை; கோப்பாய் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்

07.09.2012.by.rajah.
இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பில் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ எவரும் கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதில் ஈ.பி.டி.பியின் பிரதேச சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் இராணுவத் தினருக்குக் காணிகள் வழங்குவது தொடர்பில் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமை வகித்தார்.இந்தக் கூட்டத்துக்குச் சகல திணைக்களங்களின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்புத் தரப்பினர், சிவில் சமூகத்தினர், சாதாரண பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொள்ள முடியும்.
கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இறுதியாக கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்றது. 9 மாதங்களின் பின்னர் இந்தக் கூட்டம் நேற்று மீண்டும் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கும் கடந்த மாதம் 30 ஆம் திகதி தபால் மூலமாக அழைப்பு அனுப்பப்பட்டதாகக் கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலோ ஐ.தே.க. சார்பில் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் இதில் கலந்துகொள்ளவில்லை.

கோப்பாயில் 550 பரப்புக் காணி பறிபோகின்றது படையினரிடம்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்மதம்

07.09.2012.by.rajah.கோப்பாயில் 550 பரப்புக் காணி பறிபோகின்றது படையினரிடம்; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்மதம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்குச் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார். இதனால் இந்த 550 பரப்புக் காணி படையினரின் கைக்குப் பறிபோகவுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் நேற்றுக்காலை நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இறுதியாக கூட்டத்தின் அனுமதி பெறவேண்டிய தீர்மானம் பிரதேச செயலரினால் வாசிக்கப்பட்டது. கோப்பாயில் ஜே/261 கிராம சேவையாளர் பிரிவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த சிறைச்சாலைக்கென ஒதுக்கப்பட்ட 333.09 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படைப்பிரிவின் 51ஆவது படைத் தலைமையகம் அமைக்க வழங்குவது எனவும், நீர்வேலி ஜே/269 கிராம சேவையாளர் பிரிவில் பன்னாலை பகுதியிலுள்ள 36.37 பரப்பு அரச காணியை இலங்கை பாதுகாப்புப் படையினர் முகாம் அமைக்க வழங்குவது எனவும், தம்பாலை கதிரிப்பாய் ஜே/287 கிராம அலுவலர் பிரிவில் 179.43 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் தேவைக்கு வழங்க நில அளவை செய்யப்பட்டுள்ளது எனவும், நீர்வேலி ஜே/268 கிராம அலுவலர் பிரிவில் பனை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான 2 பரப்புக் காணியை இலங்கைப் பாதுகாப்புப் படைக்கு வழங்குவது எனவும் பிரதேச செயலர் தீர்மானங்களைக் கூட்டத்தில் வாசித்தார். மேற்படி பகுதிகளில் உள்ள காணிகளையும் படையினருக்கு வழங்குவதற்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பங்குபற்றிய ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் உட்பட எவரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தொண்டமானாற்றுப் பகுதியில் விருந்தினர் விடுதி அமைப்பதற்கான அனுமதிகோரப்பட்ட போது திருமதி அமுதா சிறீஸ்கந்தராஜா என்பவர் குறித்த காணி தனியொருவருக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆட்சேபம் தெரிவித்தார். இதனை விட மயிலிட்டி மக்களை, தொண்டமானாறு அக்கரைப் பிரதேசத்தில் குடியமர்த்துவதற்கும் படையினர் மேற்கொண்ட முயற்சிக்கும் இந்தப் பெண்மணி எதிர்ப்பு வெளியிட்டார். ஆயினும் முன்னர் குறிப்பிடப்பட்ட நான்கு காணிக்கும் ஆட்சேபம் தெரிவிக்காமையினால் அவை கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானத்துக்கு அமைய படையினருக்கு வழங்கப்படும் என்று கோப்பாய்ப் பிரதேச செயலர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவருமான சில்வெஸ்திரி அலென்ரினிடம் படையினருக்கு காணிகளை வழங்க உடன்படுகிறார்களா எனக் கேட்டபோது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் தான் இன்னமும் கையொப்பம் இடவில்லை என அவர் நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் தெரிவித்தார்.