siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 12 செப்டம்பர், 2012

மாத்தளன் பிரதேசத்தில் புதைத்து வைத்த பொருட்களை தேடியெடுக்க அலைமோதும் மக்கள்!

 
 

12.09.2012.By.Rajah.நிலத்தில் புதைத்து வைத்த பொருள்களை எடுப்பதற்காக இறுதிக்கட்டப் போர் நடந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் தாம் இடம்பெயர்ந்து சென்றபோது நிலத்தின் கீழ் புதைத்து வைத்த பொருள்களைத் தேடியெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.
இறுதிக் கட்டப்போர் நடந்தபோது இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது வீட்டுப் பாவனைப் பொருள்களை நிலத்தின் கீழ் புதைத்து விட்டுச் சென்றனர்.
தற்போது இந்தப் பகுதிகளில் மீள்குடியமர்வு இடம்பெற்ற நிலையில் மீள்குடியமர்ந்த மக்கள் அவற்றைத் தோண்டி எடுப்பதில் மும்முரமாக ஈடுபடுவதைக் காண முடிகின்றது.
அம்பலவன்பொக்கணை, மாத்தளன், வலைஞர்மடம் ஆகிய இடங்களில் இதனை அவதானிக்க முடிகின்றது. பலர் தாம் பொருள்கள் புதைத்து வைத்த இடங்களை அடையாளம் காண்பதில் சிரமப்படுவதையும் காணமுடிகின்றது.
இவர்களால் புதைத்து வைக்கப்பட்டுத் தற்போது தோண்டியெடுக்கப்படும் பொருள்கள் சில உக்கிய நிலையில் காணப்படுகின்றன. சில இடங்களில் பொருள்களை எடுப்பதில் அடிதடிகள் இடம்பெறுவதையும் காணமுடிகின்றது.
இங்கு பொருள்களை எடுப்பதில் ஈடுபடுபவர்களில் 90 வீதமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சைக்கிளில் நீண்ட தடியைக் கட்டிய பின்னர் தம்மால் மீட்டெடுக்கப்பட்ட பொருள்களை இருபுறமும் தொங்கவிட்டவாறு செல்வதையும் காணமுடிகின்றது.
மேலும் புதுக்குடியிருப்பு, கோம்பாவில், இரணைப்பாலை, கைவேலி, வள்ளிபுனம் ஆகிய தூர இடங்களில் இருப்பவர்களும் இரவோடு இரவாக இந்த இடங்களுக்கு வந்து பொருள்களை எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டு உலோகத்திலான பாத்திரங்களுக்கு மேல் எடுத்துச் செல்வதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது

சூரிய வெளிச்சத்திற்கு முற்றுப்புள்ளி: கட்டிடத்திற்கு நவீன முறையில் திரை

By.Rajah.அபுதாபியில் பிரமாண்ட கட்டிடம் ஒன்றில் சூரிய ஒளியின் தாக்கம் பணியாளர்களை பாதிக்காமல் இருக்கும் பொருட்டு கட்டிடத்திற்கு பைபர் கிளாஸ் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் ‘அல் பாஹர் டவர்ஸ்’ என்ற கட்டிடம் உள்ளது.
மிகவும் வெப்பம் மிகுந்த நகரம் என்பதால் சூரிய வெளிச்சம் கட்டிடத்திற்குள் வேலை செய்பவர்களுக்கு இடையூறு அளிக்காமல் இருக்க பிரத்யேக, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது கட்டிடத்தை சுற்றிலும் போர்வை போல பிரமாண்ட சன் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தை விட்டு 6 அடி தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இப்போர்வை, காலை அலுவலகம் தொடங்கும் நேரத்தில், இந்த சன் ஸ்கிரீன் கிழக்கு பக்கத்தில் இருக்கும்.
வெயில் உச்சிக்கு ஏற, ஸ்கிரீன் மெல்ல நகர தொடங்கும். மாலை நேரத்தில் மொத்த ஸ்கிரீனும் மேற்கு பக்கம் போய்விடும்.
இவ்வாறு சூரியனின் இருப்பிடத்துக்கு ஏற்ப கம்ப்யூட்டர் உதவியுடன் சன் ஸ்கிரீன் நகர்கிறது. பைபர்கிளாஸ் பொருளால் இந்த ஸ்கிரின் தயாரிக்கப்பட்டுள்ளது.
கண்ணை கூசாத அளவுக்கு போதிய வெளிச்சம் மட்டுமே உள்ளே வரும்.
சூரிய ஒளி விழாததால் வெப்பமும் குறையும். இதனால், மின்விளக்கு, ஏசி செலவு கணிசமாக குறையும் என்கின்றனர்.
இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி தந்த ஏய்டஸ் நிறுவன பொறியாளர்கள் கட்டிடத்தை சுற்றி போர்வை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பணிகள் சில மாதங்களில் நிறைவடையும் என்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரில் பட்ட கடனை ஜேர்மனி இன்னும் அடைக்கவில்லை

By.Rajah.இரண்டாம் உலகப் போரில் பட்ட கடனை ஜேர்மனி இன்னும் அடைக்கவில்லை, அதை தந்தால் எங்களது நிதி பற்றாக்குறை தீரும் என கிரீசின் துணை நிதியமைச்சர் கிறிஸ்ட்டோஸ் ஸ்டாய்கோரஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த 1950ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி கிரீசுக்கு தருவதாக ஒத்துக் கொண்ட தொகை பல பில்லியன் யூரோக்களாகும். அதை விரைவில் தர வேண்டும்.
அந்த பணம் திரும்ப கிடைத்தால் கிரீசின் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று தெரிவித்தார்.
இது குறித்து ஆராய்வதற்காக ஜேர்மனி அரசு நால்வர் குழு ஒன்றை நியமித்து கருத்து கேட்டுள்ளது. அந்தக் குழுவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இரண்டாம் உலகப் போரில் பட்ட கடனை அடைக்காமல், கிரீசின் கடனை அடைக்க பிணைநிதியாக பெருந்தொகை ஒன்றை தர தயாராக உள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

கின்னஸ் சாதனைக்காக சந்தித்துக்கொண்ட உலகின் மிகக் குள்ளமான ஆணும் பெண்ணும் [ வீடியோ]

12.09.2012.By.Rajah.வரலாற்றில் முதன் முறையாக உலகின் மிகக் குள்ளமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்தித்துப் பேசி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
மிகக் குள்ளமான மனிதராக 72 வயதுடைய நேபாளில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்திரா பஹதுர் டாங்கியும் மிகக் குள்ளமான பெண்ணாக 18 வயதுடைய இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்கேவும் கின்னஸ்ஸில் பதியப் பட்டுள்ளனர்.

ஒருத்தருக்கு ஒருவர் இணையானவர்கள் என்று கருதக் கூடிய இந்த Match Makers, செப்டம்பர் 13 இல் வெளியாகவுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்தப்பட்ட போட்டோ சூட் ஒன்றிட்காகவே இவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டுள்ளது.

மேலும் இந்த போட்டோ சூட்டின் போது இவர்கள் இருவருக்கும் இடையே 12 இஞ்ச் உயரமுள்ள கின்னஸ் புத்தகம் ஒன்றையும் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். இவர்களில் சந்திரா பஹதுர் டாங்கி 21.5 இஞ்ச் உயரமும் ஜோதி அம்கே 25 இஞ்ச் உயரமும் உடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது


வயதானாலும் இளமையுடன் தோற்றமளிக்க

 புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2012, By.Rajah.
இன்றைய காலத்தில் முப்பது வயதானாலே அவர்கள் வயதானவர்கள் போன்று இருக்கிறார்கள். ஏனெனில் அதற்கு நாம் உண்ணும் உணவு முறை தான் காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்துவிட்டால், சருமம் சற்று தளர்ந்தது போல் இருக்கும்.
ஆகவே அப்போது முதுமைத் தோற்றத்தை தடுக்க ஏதேனும் ஒரு சில மசாஜ்களை செய்ய வேண்டும். மேலும் ஆயில் மசாஜ் செய்வதால், உடலும் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு பயன்கள் இருக்கின்றன.
திராட்சை எண்ணெய்: இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயில் மசாஜ் செய்தால், சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தளும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்துவிடும்.
முகம் நன்கு பொலிவோடு எப்போதும் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முகத்திற்கு இந்த எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்தால் முகச்சுருக்கங்கள் நீங்கும்.
அவோகேடோ எண்ணெய்: நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம், உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பது தான். ஆனால் இந்த அவோகேடோ எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை குறைத்துவிடும்.
ஆகவே இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைந்து முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும் அவற்றை விரைவில் போக்கிவிடும்.
நல்லெண்ணெய்: உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால், எந்த ஒரு பிரச்சனையும் வராது. மேலும் இந்த எண்ணெய் சருமத்தினை உறுதியாக்கி, பருக்கள் மற்றும் பிம்பிள்களை நீக்கிவிடும்.
ஆலிவ் எண்ணெய்: எண்ணெய்களிலேயே மிகவும் சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய் என்று சொல்லலாம். இது ஒரு அதிசய எண்ணெய் என்றும் கூறலாம். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது.
இதனை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதோடு சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. முக்கியமாக இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, எந்த காரணத்தை கொண்டும் சூடேற்ற வேண்டாம். அவ்வாறு சூடேற்றினால் அதில் உளள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும்

இரு பெண்களை ஏமாற்றிவிட்டு மூன்றாவது திருமணம் செய்த நபர் விமானநிலையத்தில் கைது

.By.Rajah.இலங்கையில் இரு பெண்களை ஏமாற்றிவிட்டு தாய்லாந்து சென்ற யாழ். வடமராட்சி கிழக்கைச் சோ்ந்த நபர் ஒருவர் அங்கு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
மேற்படி பெண்களை ஏமாற்றிய நபரான பஞ்சாட்சரம் சுதர்சன் மருதங்கேணியை சொந்த இடமாகக் கொண்டவர்.
2006 ம் ஆண்டில் உடுத்துறையைச் சேர்ந்த அனுஷா சிவசிதம்பரம் என்பவரை 15 இலட்சம் சீர்வரிசையுடன் பதிவுத் திருமணம் செய்து, 2010 ல் தேனிலவன் எனப் பெயர் சூட்டப்பட்ட ஆண்பிள்ளை பிறந்தவேளை, தன் மனைவிக்கு தெரியாமல் 2010 ல் ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் பழகி அவர்களையும் இரு மாதங்களுக்குள் திருமணம் செய்துள்ளார்.
அதில் முல்லைத்தீவு வலைஞர்மடத்தைச் சேர்ந்த பெண்ணான சுகிர்தருபி சுப்பிரமணியம் என்பவரிடம் 18 இலட்சம் ரூபாய் பணமும் 10 பவுண் நகையும் சீர்வரிசையாக வேண்டிக்கொண்டு, கொடிகாமம் குடமியனை சேர்ந்த பெண்ணான சசிகலா சிங்கராஜா என்பவருடன் இலங்கையை விட்டு வெளியேறி தாய்லாந்தில் குடிபுகுந்தனர்.
தாய்லாந்தில் அகதியாக விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்களுடைய அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
ஏற்கனவே உள்ள இரு பெண்களும் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவரும் விமான நிலையத்திலே கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணை வழங்கியுள்ளது.
இதுபோன்று எத்தனையோ பெண்கள் ஏமாற்றப்பட்டு வெளியே சொல்லமுடியாத அளவுக்கு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்

தலிபான்கள் அனுப்பும் கவர்ச்சிப் பெண்: ஆஸ்திரேலிய உளவுத்துறை !

 

12.09.2012.By.Rajah.


ஆஸ்திரேலிய உளவுத்துறை தமது ராணுவத்துக்கு விசித்திரமான எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளது. �தலிபான் போராளிகள், கவர்ச்சி பெண்கள் வடிவில் உங்களை உளவு பார்க்க வருகிறார்கள்� ஜாக்கிரதை என்பதே அந்த எச்சரிக்கை. பேஸ்புக் சமூக இணையத்தளம் மூலமாக, கவர்ச்சிகரமான பெண்கள் போட்டோக்கள் சகிதம் இந்த உளவு பார்த்தல் நடப்பதை ஆஸ்திரேலிய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நேட்டோ கூட்டுப்படையில் இணைந்து யுத்தத்தில் ஈடுபடும் ஆஸ்திரேலிய ராணுவ படைப்பிரிவின் ரகசியங்கள், தலிபான்களுக்கு இவ்வாறே கிடைத்தனவாம்.
ஆப்கானிஸ்தானில் இந்த மாதம் 3 ஆஸ்திரேலிய வீரர்கள் தமது முகாம்களுக்கு உள்ளேயே கொல்லப்பட்டனர். ஆப்கான் ராணுவத்தில் பயிற்சிக்கு சேர்க்கப்பட்ட புதிய ஆள் போல ஆஸ்திரேலிய ராணுவ முகாமுக்குள் புகுந்த தலிபான் போராளியே, இந்த மூவரையும் சுட்டுக் கொன்றதாக தெரியவருகிறது. ஆஸ்திரேலிய உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, பேஸ்புக்கில் உள்ள கவர்ச்சிகரமான பெண்களுடன் சாட்டிங்கில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் மூலம் ராணுவ முகாமின் உள் விபரங்கள், மற்றும் குறிப்பிட்ட வீரர்கள் முகாமின் எந்தப் பகுதியில் உள்ளனர் என்பதை தலிபான்கள் தெரிந்து கொண்டனராம்.
தலிபான் தற்கொலை போராளி அந்த இடத்துக்கு வரும்வரை, குறிப்பிட்ட ராணுவ வீரர்கள் தமது கம்ப்யூட்டர் அருகே சாட் செய்தபடி அமர்ந்திருக்கும் வகையிலும், �கவர்ச்சிப் பெண்கள்� பேசிக்கொண்டு இருந்தனராம்! தற்போது, ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் அனைவரும், �அதி ஜாக்கிரதையாக� இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது!