Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 13 செப்டம்பர், 2012

கொம்பனித்தெரு வீடுகள் அகற்றப்படுவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை!

 
 
By.Rajah.கொம்பனித்தெரு - 7ம் ஏக்கர் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றி அங்கு அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று விசாரிக்க உயர் நீதிமன்றம் விசாரித்துள்ளது.
அந்த பிரதேசத்தில் வசிக்கும் சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக தாம் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில் தமக்கு இருப்பிடம் இல்லாது போகுமெனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனுவை பரிசீலித்த மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு, மனுவை ஒக்டோபர் 1ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது

தமிழ் அகதிகள் 40 பேர் நெஹ்ரு தீவுக்கு மாற்றம்

By.Rajah.அவுஸ்திரேலியாவில் இருந்து முதல்கட்டமாக இலங்கை அகதிகள் 40 பேர் நெஹ{ரு தீவில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் அவுஸ்திரேலிய பிராந்திய காவற்துறையினருடன் அவுஸ்திரேலியாவில் இருந்து 7 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள நெஹ்ரு தீவுக்கு வானூர்தி மூலம் இன்று அனுப்பப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் வாரங்களில் மேலும் பல அகதிகள் இவ்வாறு நெஹ்ரு மற்றும் பப்புவா நியுகினியா தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த வானூர்தி அகதிகளை ஏற்றிகொண்டு தமது பயணத்தை ஆரம்பித்து விட்டதா, இல்லையா என்பது குறித்து அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் உறுதி செய்ய மறுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன

எம்.ஜி.ஆர். பேட்டிகள்

 

By.Rajah.பல பத்திரிகைகளுக்கு மக்கள் திலகம் அளித்த பேட்டிகள்,ரசிகர்களூக்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றின் அரிய தொகுப்பு, ‘’எம்.ஜி.ஆர். பேட்டிகள்’’ .
வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் இயங்கி வரும் எஸ்.கிருபாகரன் என்பவர் இந்நூலை தொகுத்துள்ளார்.
இந்நூலில், திமுக தலைவர்களால் திரைப்பட உலகம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது?என்ற கேள்விக்கு, ’’திரைப்பட உலகம் என்பது திரைப்படத் தொழிலை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு வார்த்தை என்று நான் நினைக்கிறேன். வேறு ஒரு கேள்விக்கு நான் பதில் சொன்னதுபோல திரைப்படத்தொழில் ஒரு சில பகுதிகளை மட்டும் கொண்ட தொழில் அல்ல. திரைப்பட உலகம் என்று நீங்கள் கேட்பது தமிழ்திரைப்பட உலகம் பற்றித்தான் என்று நான்சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா?
அப்படி உங்கள் அனுமதி கிடைக்குமானால் தமிழ்த் திரைப்படத்தொழிலில் தூய தமிழுக்கு வித்திட்டது திமுக தலைவர்கள்தான் என்று நான் அறுதியிட்டுக்கூற முடியும்’’ என்று பதிலளித்துள்ளார்எம்.ஜி.ஆர்.
மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? தமிழ்ப் படங்களின் தரம், முன்னேற்றம் இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்?வயதுக்கு பொருந்தாத காட்சிகளில் நீங்கள் நடிப்பதாக எழும் விமர்சனம் குறித்து? என்பன உட்பட திரைப்படத்துறை பற்றி பல்வேறு கேள்விகளூக்கு பதிலளித்துள்ளார்.
பல்வேறு துறை பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர் அளித்துள்ள பேட்டிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அதிமுக கட்சி துவங்கிய பின், திமுக அமைச்சரவை மீதான புகாரை ஜனாதிபதியிடம் அளித்த பின்(1972), டெல்லியில் அளித்த பேட்டியில், ’’தமிழ்நாட்டில் உங்களுக்கு எவ்வளவு ஆதரவு? என்ற கேள்விக்கு, 1,000க்கு 999 பேர் என் பக்கம். ஒருவர் திமுக பக்கம் என்று அழுத்தமாக பதில் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
ஓவர் ஆக்டிங் என்றால் என்ன? என்கிற கேள்விக்கு, எம்.ஜி.ஆர். அளித்துள்ள பதில், நடிகர் திலகத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் சொல்லப்பட்டிருக்கிறது என எண்ணத்தோன்றுகிறது

உலக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! பாடகர் உன்னி கிருஷ்ணன் பேட்டி! (வீடியோ இணைப்பு)

By.Rajah.சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார்.
இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக உன்னி கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (11.09.2012) சென்னையில் நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது,
யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவையொட்டி இசைக்கச்சேரி செய்யுமாறு என்னை அணுகினார்கள். ஈழத்தமிழர்களின் மனங்களில் விடுதலைப் பாடல்களின் மூலம் நீங்காத இடம் பிடித்த நான், யாழ்ப்பாணம் சென்று அவர்களை சந்திக்கவும், இசை கச்சேரி நடத்தவும் ஒப்புக்கொண்டேன்.
இசைக்கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீரென தமிழ் மக்கள் பலரின் படுகொலைக்கு காரணமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளரான டக்ளஸ் தேவானந்தா திடீரென தன் ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சிலருடன் மேடையில் ஏறி, எனக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். பின்புதான் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். ஒட்டுமொத்த தமிழர்களாலும் வெறுக்கப்படுபவரும், இந்தியாவில் கொலை குற்றம் சாட்டப்பட்டவருமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளர்தான் டக்ளஸ் தேவானந்தா என்பதை நான் பின்னர் தெரிந்துகொண்டேன். இந்த நிகழ்வு தற்செயலாக நடைபெற்ற வேண்டதகாத சம்பவமாகும். இந்த சம்பவத்தை பற்றி மிகுந்த மனம் வருத்தமடைகிறேன். என்றும் உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாவேன். என் இசை பயணத்தில் அச்சம்பவம் கரும்புள்ளியாக விழுந்துவிட்டதை உணருகிறேன். இனி வரும் காலங்களில் இப்படியொரு சம்பவம் நடைபெறாது என உறுதிகூறுகிறேன். இந்நிகழ்வு தமிழர்களை காயப்படுத்தியிருக்கும். அதற்காக மீண்டும் எனது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்

விருந்தில் நெருக்கம்: திரிஷா-ராணா காதல் தீவிரம்

By.Rajah.திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பது பற்றிய கிசுகிசுக்கள் வெளியாயின. ஆனால் இருவருமே அதை மறுத்துள்ளார்கள். நண்பர்களாகத்தான் பழகுகிறோம். காதல் இல்லை என்றனர். கடந்த வாரம் திரிஷாவுக்கும் ராணாவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாயின.
நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்றும், திரிஷாவுக்கு ராணா விரலில் நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தார் என்றும் கூறப்பட்டது. இதையும் திரிஷா மறுத்தார். இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் அருகருகே நெருக்கமாக இருந்து காதல் தீவிரத்தை வெளிப்படுத்தினர், நண்பனின் பிறந்த நாளையொட்டி இந்த விருந்து நடந்தது.
நெருங்கிய தோழிகள் பலர் வந்திருந்தனர். இந்த விருந்துக்கு திரிஷாவும், ராணாவும் ஜோடியாக வந்தார்கள். தனியாக அருகருகே உட்கார்ந்து கொண்டார்கள். பல மணி நேரம் சிரித்து, சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்.
விருந்து முடியும் வரை அங்கே உட்கார்ந்து இருந்தார்கள். இருவரும் காதலிப்பதை உறுதிபடுத்துவதாக அது இருந்தது என்று கூறப்படுகிறது. திரிஷாவும், ராணாவும் பல வருடங்களாக நட்பாக பழகிவந்தனர். சமீபத்தில் தான் அது காதலாக மாறியது

20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வசந்தம்

 

By.Rajah.ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா, சந்தானம் நடிக்கும் படம் நீ தானே என் பொன் வசந்தம்.
இப்படத்தை திரு. எல்ரெட் குமார், ஜெயராமன் இருவரும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி நடைபெற்றது. இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார்.
இப்படத்தின் இசை கோர்வை செய்த லண்டன் ஆர்கெஸ்ட்ரா இசைக் கலைஞர்கள் 60 பேர் சென்னையில் தமிழ்த் திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களின் முன்னிலையில் நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் பாடல்கள் மற்றும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை வாசித்தது அனைத்து இசை ரசிகர்களையும் இன்பத்தில் ஆழ்த்தியது.
வெளிநாட்டு இசை கலைஞர்கள் சென்னையில் தமிழ் பாடல்களுக்கு இசை மீட்டியது இதுவே முதல்முறை என்பது நமக்கு பெருமை.
இசைஞானியின் ராஜ்யம்
இசை தட்டுகள் அனைத்தும் பாடல் வெளியான அன்றே விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது இசை ரசிகர்கள் இசைஞானிக்கு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.
இப்படத்தின் டிரெய்லர் யூரியூப்பில் வெளியான ஒரே வாரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்து தமிழ் சினிமாவின் இணையதள வரலாற்று சாதனையில் இப்படத்திற்கு முதன்மை அளித்துள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ஜெயராமன் மற்றும் கௌதம் வாசுதேவ மேனன் ஆகியோர் முழுக்க இசைஞானியின் இசை ரசிகர்களால் கிடைத்த பெருமையே என கருதுகின்றனர்.
இப்படத்தின் பாடல்கள் தற்போது தமிழ்நாட்டின் நகரம் முதல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இசைஞானி தனது இசை ராஜ்ஜியத்தை இங்கு நடத்தி வருகிறார்.
இதன் மூலம் இசைஞானி காலங்களை கடந்தவர் என்பது நிரூபணமாகி உள்ளது

விரைவில் திரைக்கு வரும் அமலாவின் beautiful life

By.Rajah.நடிகை அமலா, நீண்ட வருடங்களுக்கு பின்பு மலையாளத்தில் நடித்துள்ள beautiful life திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
தமிழ் மற்றும் கன்னடம் உட்பட தென்னிந்திய மொழி படங்களில் 1990ம் ஆண்டில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் அமலா.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்துகொண்ட பின்னர், சினிமா வாழ்க்கையை விட்டு விலகி இருந்தார்.
அவ்வப்போது சமூக சேவைகளில் ஈட்டு பட்ட அமலா, டி.வி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
இதற்கிடையில் மம்மூட்டி, மோகன் லால் போன்ற நடிகர்களை இயக்கிய இயக்குனர் சேகரன் beautiful life என்ற படத்தில் நடிக்க அமலாவை ஒப்பந்தம் செய்தார்.
இப்படத்தில் நடிகை அமலா நடித்து முடித்திருக்கிறார். இசை வெளியீடு காண உள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது

இசட் புள்ளி சர்ச்சைக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது

 
 
By.Rajah.2011ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இசட் புள்ளி சர்ச்சைக்கான இறுதித் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உச்ச நீதிமன்றிற்கு முன்வைத்த தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பல்கலைக்கழகத்திற்கு 5609 மாணவ மாணவியரை மேலதிகமாக சேர்த்துக் கொள்வதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த யோசனைத் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கடந்த ஆண்டில் 21500 மாணவ மாணவியர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதற்கு மேலதிகமாக மேலும் 4928 மாணவர்களை இணைத்துக் கொள்வதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முதலில் அறிவித்திருந்தது.
எனினும், தற்போது அந்த எண்ணிக்கையை 5609 ஆக உயர்த்த முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நீதிமன்றில் அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக மனுதாரர்களின் சட்டத்தரணிகள் ஒப்புக் கொண்டதனை அடுத்து பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது

கனடாவில் விலைவாசி உயர்வை மிஞ்சும் கல்விக் கட்டணம்

By.Rajah.கனடாவில் சராசரி வருமான உயர்வையும், விலைவாசி உயர்வையும் விட கல்விக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதல் கட்டாயக் கல்விக் கட்டணம் 6.2 சதவிகிதம் ஆண்டொன்றுக்கு உயர்ந்து வருகிறது. ஆனால் பணவீக்கம் 2 சதவிகிதம் என்ற அளவு தான் உள்ளது என்று கொள்கை மாற்றங்களுக்கான கனடா மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கனடா பல்கலைக்கழகங்களில் தற்போது சராசரியாக ஒரு வருடத்துக்குரிய கல்விக் கட்டணம் 6186 டொலராகும். இக்கட்டணத்தில் உணவு, புத்தகம் மற்றும் விடுதிச் செலவு சேர்க்கப்படவில்லை.
இடதுசாரிச் சிந்தனையாளர்கள் இக்கல்விக் கட்டணம் வரும் நான்காண்டுகளில் 7330 டொலராக உயரக்கூடும் என்று கருதுகின்றனர்.
நியுஃபவுண்ட்லாண்ட், லேப்ரடார் போன்ற குறைந்த கட்டணச் செலவுடைய மாநிலங்களில் 2861 டொலர் ஆகவும், கியூபெக்கில் 3278 டொலராகவும், ஒண்டோரியோ, ஆல்பெர்ட்டா மாநிலங்களிலும் முறையே 7513 மற்றும் 7330 டொலராகவும் இருக்கும்.
எதிர்வரும் நான்காண்டுகளில் நியுஃபவுண்ட்லாண்டில் குறைந்த கட்டணமாக 2893 டொலரும், ஒண்டோரியோவில் அதிகக் கட்டணமாக 9231 டொலரும் வசூலிக்கப்படலாம்.
கட்டண உயர்வு குறித்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான எரிக்கா சேகர், நடுத்தர குடும்பங்களை கல்விக் கட்டண சுமை அழுத்துகிறது. அரசும் கட்டணத்தைக் குறைக்காமல் கடனை உயர்த்தியும் திருப்பிச் செலுத்தும் முறைகளை எளிமைப்படுத்தியும் தருகிறது.
மேலும் படித்து முடித்துவிட்டு ஒருவர் வேலைக்குப் போகும் போது சராசரியாக 27000 டொலர் கடனோடு தனது வாழ்க்கையைத் தொடங்குகிறார் என்றார்

திருமணமான தம்பதியினர் சேர்ந்து சாப்பிட்டதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு

By.Rajah.பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள McDonald's உணவகத்தில் திருமணமான தம்பதியினர் அருகருகே அமர்ந்து சாப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. McDonald's என்ற உணவகத்தில் கடந்த ஞாயிறு அன்று இந்த தம்பதியினர் சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது இருவரும் அருகருகே உட்கார்ந்த போது உணவக நிர்வாகி, இஸ்லாமிய கலாசாரப்படி இந்த உணவகத்தில் இதுபோன்று நடந்துகொள்ளக்கூடாது என தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து கணவன் நோமன் அன்சாரி, நாங்கள் திருமணமானவர்கள் என தெரிவித்தும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அந்த உணவகம் அனுமதிக்க வில்லை.
McDonalds போன்ற உணவகங்களில் இஸ்லாமிய கலாச்சாரத்தின் படி திருமணமானவர்கள் அருகருகே இருந்து உண்பது உகந்ததா அல்லது இல்லையா என்பது குறித்து தனது சமூக தளத்தில் வாக்கெடுப்பு நடத்தினார்.
இதில் செவ்வாய்க்கிழமை இரவு வரை சுமார் 1352 பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் இதில் 87% வீதமானோர் அன்சாரிக்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக் McDonalds உணவகத்தில் இருந்து எந்த வித பதிலுமில்லை. இதேவேளை இஸ்லாமிய கலாச்சாரம் மிகுந்த சவுதி அரேபியாவில் உணவகங்களில் இத்தகைய தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பாகிஸ்தான் மெக்டானல்டுக்களில் மாத்திரம் இந்நிலைமை நீடிப்பது ஏன் என சமூக வலைத்தளங்களில் தற்போது இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது

அளவெட்டி மத்திய வி.க. வெற்றிக்கிண்ணம் அரையிறுதிக்கு முன்னேறியது றோயல்

By.Rajah.
 
அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதீயில் மிகப்பிரமாண்டமாக நடத்திவரும் மென்பந்தாட்டக் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்கள் அண்மையில் நடைபெற்றன.
இதில் முதலாவது ஆட்டத்தில் றொக்கெற் அணியும் பயர்பொக்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பயர்பொக்ஸ் அணி 8 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 76 ஓட்டங்களைப்பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய றொக்கெற் 7 இலக்குகள் இழந்து 51 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதனால் 25 ஓட்டங்களால் பயர்பொக்ஸ் அணி வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டி ஸ்ரீமுருகன் அணிக்கும் இணுவில் கலைஒளி அணிக்குமிடையில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இணுவில் கலைஒளி விளையாட்டுக் கழகம் 8 பந்துப் பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 66 ஓட்டங்களைப்பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீமுருகன் 6 இலக்குகளை மாத்திரம் இழந்து 67 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மூன்றாவது போட்டி முத்துத்தம்பி அணிக்கும் காந்திஜீ அணிக்குமிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய முத்துத்தம்பி அணியால் 8 பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காந்திஜீ 1 இலக்கை மாத்திரம் இழந்து 34 ஓட்டங்களை பெற்று இலகுவாக வெற்றியைத் தன் வசமாக்கியது.
நான்காவது போட்டி நியூவோரியர்ஸ் அணிக்கும் றோயல் அணிக்கும் இடையே நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் அணி 8 பந்துப் பரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 67 ஓட்டங்களைக் குவித்தது.
இந்த இலக்கைத் துரத்திய நியூவோரியர்ஸ் அணி 7 இலக்குகளை இழந்து 43 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. இதனால் றோயல் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஐந்தாவது போட்டியில் மல்லாகம் ஆர்.டி.எஸ். அணியை எதிர்த்து உடுவில் சலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய உடுவில் சலஞ்சர்ஸ்அணி 8 பந்துப் பரிமாற்றங்களில் 3 இலக்குகளை இழந்து 67 ஓட்டங்களைப்பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆர்.டி.எஸ். அணி அதிரடியாக ஆடி 3 இலக்குகளை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
ஆறாவது போட்டியில் றோயல் அணியும் காந்திஜீ அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல்அணி 8 பந்துப் பரிமாற்றங்களில்4 இலக்குகளை இழந்து 94 ஓட்டங்களை விளாசியது.
இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காந்திஜீ அணி 6 இலக்குகளை இழந்து 43 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதனால் றோயல் அணி 57 ஓட்டங்களால் பெரு வெற்றிபெற்றது.
ஏழாவது போட்டியில் ஸ்ரீமுருகன் அணியும் மல்லாகம் ஆர்.டி.எஸ். அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீமுருகன் 8 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 88 ஓட்டங்களைப்பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆர்.டி.எஸ். அணி 7 இலக்குகளை இழந்து 11 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இதனால் ஸ்ரீமுருகன் அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
எட்டாவது போட்டியில் ஸ்ரீமுருகன் அணியும் பயர்பொக்ஸ் அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீமுருகன்அணியினர் 8 பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 59 ஓட்டங்களைப்பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பயர்பொக்ஸ் 7 இலக்குகளை இழந்து 11 ஓட்டங்களை பெற்றதனால் ஸ்ரீமுருகன் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
அதன்பின் இடம்பெற்ற முதலாவது காலிறுதிப்போட்டியில் றோயல் அணியும் ஸ்ரீமுருகன் அணியும் பலப்பரீட்சை நடாத்தின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீமுருகன் அணியினர் 8 பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 44 ஓட்டங்களைப்பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய றோயல் அணி 3 இலக்குகளை மாத்திரம் இழந்து 45 ஓட்டங்களை பெற்று வாகை சூடி அரையிறுதிக்கு முன்னேறியது.

பிரிட்டன் தூதரகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு எம்.பிக்கள் வடக்குக்கு அதிர்ச்சியில் அரசு

 13.09.2012.By.Rajah.
கொமன்வெல்த் நாடாளு மன்றச் சங்கத்தின் 58ஆவது அமர்வில் பங்கேற்க இலங்கை வந்த பிரிட்டன் மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்குச் செல்வதற்குப் பிரிட்டன் தூதரகம் ஏற்பாடு செய்ததுள்ளமை இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசு அவர்களைப் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராக இருந்த போதிலும், கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம் சுதந்திரமான முறையில் அவர்கள் சென்று வருவதற்காகத் தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது, தனி விமானத்தில் பிரிட்டன், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம் அனுமைதி கோரியமை அரசுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்திய போதும், வேறு வழியின்றி அதற்குப் பச்சைக்கொடி காண்பித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அரச அதிகாரி ஒருவர், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி இன்னமும் இலங்கை மீது அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ள முனைவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையை இலக்கு வைத்து, கொமன்வெல்த் அமர்வுகளின் போது புதிய குற்றச்சாட்டுகளைத் தயார் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதம் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலும், வரும் நவம்பரில் ஐ.நா மனித உரிமைகள் சபையில் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையிலும் இலங்கைக்கு எதிரான பரப்புரைகளை அவர்கள் தீவிரப்படுத்தக் கூடும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.