Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
திங்கள், 17 செப்டம்பர், 2012
கவிஞர் கண்ணதாசனின் பேத்தியை மணக்கிறார் ரிச்சர்ட்
| 17.09.2012.By.Rajah.காதல் வைரஸ், நாளை, கிரிவலம், யுகா போன்ற படங்களில் நடித்த நடிகர் ரிச்சர்ட் கவிஞர் கண்ணதாசனின் பேத்தியை மணக்கிறார். |
இவர் அஜீத்தின் மனைவியான ஷாலினியின் சகோதரர். ரிச்சர்டுக்கும், மறைந்த கவிஞர்
கண்ணதாசன் பேத்தியுமான சத்யலட்சுமிக்கும் திருமணம் நடக்க உள்ளது. பல் மருத்துவரான இவர் பொன்
மாலைப் பொழுது என்ற படத்தின் இணை தயாரிப்பாளர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு
தொடங்கியது.ரிச்சர்ட்,சத்யலட்சுமி திருமண நிச்சயதார்த்தம் வரும் 23ஆம் திகதி சென்னையில் நடக்க உள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்கின்றனர். அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும். இதுபற்றி ரிச்சர்ட் கூறுகையில், இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எங்கள் இருவரது குடும்பமும் நீண்டகாலமாக நட்பாக பழகி வருகிறோம். சத்யலட்சுமி படங்கள் தயாரிக்கிறார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து பட தயாரிப்பில் ஈடுபடுவார். தற்போது ரெண்டாவது படம், கூத்து ஆகிய தமிழ் மற்றும் தேவதலு என்ற தெலுங்கு படத்திலும் நான் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் |
ஓவியாவை அழவைத்த விமல்
| 17.09.2012.By.Rajah.ஓவியாவுக்கு சிபாரிசு செய்கிறேன் என்பது சரியல்ல. இனிமேல் அவர் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்றார் விமல். |
களவாணி படத்தில் விமல் ஜோடியாக நடித்தார் ஓவியா. அடுத்து கலகலப்பு படத்திலும்
இணைந்த இந்த ஜோடி, தற்போது சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடிக்கின்றனர். இது பற்றி விமல் கூறுகையில்,
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பார்கள். ஒருவருக்காக
எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க முடியாது என்ற கருவை மையமாக வைத்து படத்தை
இயக்குகிறார் ரவிலல்லின். இதில் பிளஸ் 2 மாணவனாக நடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதால் 8 கிலோ உடல் எடையை குறைக்க வேண்டி இருந்தது. ஓவியா, தீபாஷா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பஸ்ஸே பஸ்ஸே என்ற ஒரு பாடலில் என்னை பாடும்படி இசை அமைப்பாளர் பைசல் கேட்டார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சிலவரிகள் பாடினேன். ஓடியோவில் மட்டும் இது இடம்பெற்றிருக்கும். படத்தில் வேறு பாடகர்கள் பாடி உள்ளனர். ஓவியாவுக்கு சிபாரிசு செய்கிறீர்களா? என்கிறார்கள். அப்படி எதுவும் கிடையாது. இந்த கிசுகிசுவை தவிர்க்க இனிமேல் அவருடன் ஜோடியாகவே நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இந்த பேட்டியின் போது அருகில் ஓவியா இருந்தார். விமலின் பதிலை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ஓவியா, சோகத்தில் மூழ்ந்தார், அவரது கண்களும் கலங்கின |
ரசிகர்கள் தொல்லை: சல்மானுக்கு கூடுதல் பாதுகாப்பு
| 17.09.2012.By.Rajah.பாலிவுட் நடிகர், நடிகைககள் பொது இடங்களில் செல்லும் போது பாதுகாப்புக்காக தனியார் செக்யூரிட்டிகள் வைத்துக் கொள்கின்றனர். |
சல்மானுக்கு இதுவரை 6
செக்யூரிட்டிகள் பாதுகாப்பு அளித்து வந்தனர். கடந்த ரம்ஜான் தினத்தன்று மும்பையில் உள்ள சல்மான் வீடு முன் ரசிகர்கள் திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாததால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஏக் தா டைகர் படத்துக்கு பிறகு சல்மானுக்கு ரசிகர் வட்டம் பெருகி உள்ளது. தபங் 2 படப்பிடிப்பில் அவர் பங்கேற்க சென்றபோது ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் சல்மானுக்கு கூடுதலாக செக்யூரிட்டி கார்டு வரவழைக்கப்பட்டனர். தற்போது 12 செக்யூரிட்டிகள் அவருக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். பாலிவுட் நடிகர்களில் இவ்வளவு அதிக செக்யூரிட்டிகள் வேறு யாருக்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது |
முஸ்லிம்களுக்கு எதிரான படத்தை கனடாவில் வெளியிட முடிவு
| 17.09.2012.By.Rajah.கனடாவின் டொரண்டோ
மாகாணத்தில் முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட படத்தை வெளியிட போவதாக
இந்து சமய ஆதரவு குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, ஏமன், எகிப்து, பங்களாதேஷ்,
ஆப்கானிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவைகள் அனைத்தும் கனடாவில் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடைகளை ஏற்படுத்தாது என இந்து சமய ஆதரவு குழுவின் செய்தி தொடர்பாளர் கூறினார். மேலும் இந்த படத்தின் முன்னோட்டத்தையும், இந்து, கிறிஸ்தவம், யூதசமயம் போன்ற மதங்களைக் காயப்படுத்துகின்ற படங்களின் சில பகுதிகளையும் வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்து சமயத்தாரை புண்படுத்தும் காட்சிகள் பல படங்களில் வெளிவந்த போதும் அவர்கள் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொள்கின்றனர். அந்த சகிப்புத்தன்மை மற்ற சமயத்தாருக்கும் வேண்டும் என்றார் |
ஈக்வடார் தூதரகத்தில் தான் தொடர்ந்து தஞ்சம்: அசாஞ்ச்
| 17.09.2012.By.Rajah.அமெரிக்கா உட்பட பல
நாடுகள் குறித்து பல்வேறு ரகசிய தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில்
வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச்.
இந்நிலையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது சுவீடனில் வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுவீடனுக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சமடைந்த அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தூதரகத்தில் இருந்து அவர் வெளியே வந்தால் கைது செய்யலாம் என லண்டன் பொலிசார் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்னை தீர வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராத உலக நிகழ்வுகளால் தான் மாற்றம் வரலாம். அதாவது ஈரானுடன் போர் ஏற்பட்டாலோ, அமெரிக்க தேர்தல் நேரத்திலோ, சுவீடன் அரசு இந்த வழக்கை கைவிட்டாலோ இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கலாம். இவற்றில் மூன்றாவதாக கூறியது நிகழ அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கு குறித்து தீர விசாரித்த பிறகு சுவீடன் அரசு இதை கைவிடலாம். இதற்கு 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகும். எனவே, ஓராண்டுக்கு நான் ஈக்வடார் தூதரகத்திலேயே தங்க வேண்டியிருக்கலாம் என்றார் |
சந்தேகத்துடன் திருமணம் செய்து கொண்டீர்களா? விவாகரத்தில் முடியும் விபரீதம்
| 17.09.2012.By.Rajah.சந்தேகத்துடன் திருமணம்
செய்து கொள்வோரே, அதிகளவு விவாகரத்து செய்வதாக சமீபத்திய ஆய்வின் மூலம்
தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த “குடும்ப உளவியல் பத்திரிகை” 232 ஜோடிகளிடம் நான்கு
ஆண்டுகளுக்கும் மேலாக, மணவாழ்வு குறித்து சர்வே நடத்தியது. திருமணம் ஆன சில மாதத்தில், பின் ஆறு மாதத்துக்கு ஒரு முறை என தொடர்ச்சியாக அந்த ஜோடிகளின் வாழ்க்கை குறித்து கருத்து அறியப்பட்டது. சர்வே முடிவுகளை சமீபத்திய இதழில், அப்பத்திரிகை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருமணத்துக்கு முன் மண வாழ்க்கை பற்றிய சந்தேகத்துடன் இருக்கும் பெண்கள், சில ஆண்டுகளில் அதிகளவு விவாகரத்து பெறுகின்றனர். அவர்களின் தாம்பத்ய உறவும் திருப்திகரமாக இருப்பதில்லை. மண வாழ்க்கை பற்றி சந்தேகம் இருப்பது எல்லாருக்கும் சகஜமான ஒன்று. அதனால் அது பற்றி கவலைப்பட வேண்டாம் என மக்கள் கருதுகின்றனர். ஆனால் சந்தேகம் இயல்பான ஒன்றாக இருந்தாலும், அதனால் எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மண வாழ்க்கை பற்றி தெளிவாக எண்ணத்துடன் இருக்கும் பெண்களை ஒப்பிடுகையில், சந்தேகத்துடன் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், இரண்டரை மடங்கு அதிகளவில் விவாகரத்தில் சிக்குகின்றனர். விவாகரத்து பெறாமல் வாழ்க்கையை தொடர்பவர்கள் திருப்தியாக காலம் தள்ளுவதில்லை. சர்வேயில் கலந்து கொண்டவர்களிடம், திருமணம் செய்வது பற்றிய சந்தேகம் அல்லது தயக்கம் இருக்கிறதா? என கேட்கப்பட்டது. ஆண்களில் 47 சதவிகிதம், பெண்களில் 38 சதவிகிதம் ஆம் என்றனர். ஆண்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், பெண்களின் சந்தேகம் தான் அதிக பாதிப்புகளில் முடிகிறது. சந்தேகப் பெண்களில் 19 சதவிகித பேரும், தெளிவான பெண்களில் 8 சதவிகிதம் பேரும், நான்கு ஆண்டுக்கு பின் மண வாழ்க்கையை விவாகரத்தில் முடித்தனர். தெளிவான முடிவுடன் திருமணம் செய்து கொண்ட தம்பதியரில், நான்கு ஆண்டுக்கு பின் வெறும் 6 சதவிகிதமே விவகாரத்தை நாடினர். கணவன் மட்டும் சந்தேகம் கொண்டு இருக்கும் பட்சத்தில் 10 சதவிகித விவாகரத்து ஏற்பட்டது. மனைவி சந்தேகத்தால் 18 சதவிகித மணமுறிவு நிகழ்ந்தது. இருவரும் சந்தேகத்துடன் வாழ்க்கையை தொடரும் பட்சத்தில், விவாகரத்து எண்ணிக்கை 20 சதவிகிதமாக உயர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது |
ரஸ்ய மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்
எதிர்வரும் 18,19ம் திகதிகளில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் விசேட அழைப்பை ஏற்றுக் கொண்டு, தொல்கோவ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
வெளிவிகார அமைச்சர் உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைவதற்கு ஐதேக நிபந்தனை
காலத்தைக் கடத்தாமல் அரசாங்கம் வடக்கு மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தெளிவாக அறிவிக்கவேண்டும் என்று அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை மற்றும் அவற்றுக்கான காலஎல்லை தொடர்பில் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிட்டார்.
நாட்டின் இனப்பிரச்சனை தீர்வுக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது தொடர்பிலும் அதன் நிகழ்ச்சிநிரல் மற்றும் அவற்றுக்கான காலஎல்லை தொடர்பிலும் அரசாங்கம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மூன்று சமூகங்களுக்கும் முதலமைச்சர் பதவி
கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் பதவியை இரண்டு ஆண்டுகளுக்கு தமிழர் ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முஸ்லிம் ஒருவருக்கும் ஒராண்டுக்கு சிங்களவர் ஒருவருக்கும் வழங்கவேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய தேசியக் கட்சி நான்கு ஆசனங்களையே கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அரச கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சியமைக்கப் போவதாக ஆளுநருக்கு தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துவிட்டது.
இதற்கிடையில் அரச கூட்டணியும் கிழக்கில் தமது ஆட்சியே அமையும் என்று பின்னர் அறிவித்தது.
ஆனாலும் ஒருவாரத்துக்கும் கூடுதலாக அரசுடன் பேச்சு நடத்திவருவதாக கூறிவருகின்ற முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் உறுதியான முடிவு எதனையும் அறிவித்தபாடில்லை.
இந்த நிலையில் தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றி ஜனாதிபதி அழைத்தால் அதுபற்றி பேசிப்பார்க்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் நேற்று முன்நாள் பதிலளித்திருந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்: ரொபேர்ட்டா பிளக்மென்
அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்ட அபிவிருத்திகள் மற்றும் மீளமைப்பு தொடர்பில், தெளிவாக விளக்கப்படுத்த வேண்டும் என்பதுடன், இந்த விடயத்தில் நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறத்தியுள்ளார்.
அத்துடன் இன்னும் என்னென்ன விடயங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளன என்பதையும் அரசாங்கம் திறந்த மனதுடன் அறிவிக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசாங்கத்தினால் வழங்ககூடிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் அதிகபடியான இராணுவ பிரசன்னம் இருப்பதாக தாம் கருதவில்லை என்றும், எனினம் அங்குள்ள இராணுவத்தினர் குறைக்கப்பட்டு, மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு இடமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் இதனை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

முன்னேஸ்வரம் ஆலய வருடாந்த மிருக பலி பூஜை நடைபெறாது: சிவபாதசுந்தரம்
இதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. எனினும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தொடர்சியான அடாவடி தனங்களினால் இந்த பூஜை நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து இந்து கோவில்களிலும் இவ்வாறான மிருகபலி பூஜைகள் இடம்பெறுகின்றனாவா இல்லையா என்பது தொடர்பில் தாம் ஆராயவிருப்பதாக மேர்வின் சில்வா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அனைத்து இந்து கோவில்களிலும் இவ்வாறான மிருகபலி பூஜைகள் இடம்பெறுகின்றனாவா இல்லையா என்பது தொடர்பில் தாம் ஆராயவிருப்பதாக மேர்வின் சில்வா எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மேர்வின் சில்வாவின் மகள் பொலிஸில் சரண்
இவருடன் ரேஹன் விஜயவர்தன மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பெச்சாளர் தெரிவித்தார்.
இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
த.தே.கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் திடீர் சந்திப்பு
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்த்தர்கள், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், செயலாளர் எம்.ரி.ஹசன் அலி உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல் மருத்துவரான இவர் பொன்
மாலைப் பொழுது என்ற படத்தின் இணை தயாரிப்பாளர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு
தொடங்கியது.
இது பற்றி விமல் கூறுகையில்,
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பார்கள். ஒருவருக்காக
எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க முடியாது என்ற கருவை மையமாக வைத்து படத்தை
இயக்குகிறார் ரவிலல்லின். 
சல்மானுக்கு இதுவரை 6
செக்யூரிட்டிகள் பாதுகாப்பு அளித்து வந்தனர். 