siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வெளி நாட்டு ஒதுக்கை முகாமை செய்வது எப்படி? மாலை தீவுக்கு இலங்கை ஆலோசனை

23.09.2012.By.Rajah.

மத்திய வங்கியின் வெளி நாட்டு ஒதுக்கினை திறமையாக முகாமை செய்வது எப்படி? என மாலை தீவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.


இது தொடர்பான பயிற்ச்சிப்பட்டறை ஒன்று மாலை தீவின் தலை நகர் மாலேயில் இடம்பெற்றதாக மத்திய வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பிரிவின் இயக்குனர் எச்.எ.கருணாரத்னா (H.A.Karunaratne) மாலை தீவில் தெரிவு செய்யப்பட்ட சில மத்திய வங்கி அதிகாரிகளிற்கு இந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு ஒதுக்கு மிகக் குறைந்த மட்டத்தினை அடைந்தது. இதனால், ஐ.அ.டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 110 ரூபாவில் இருந்து 134 ரூபா வரை சடுதியாக வீழ்ச்சி கண்டது.

எனினும், திறமையான வெளிநாட்டு நாணய ஒதுக்கு முகாமை மூலம் தற்போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பினை ரூ.131.60 என்ற மட்டத்தில் நிலை பெறச்செய்ய முடிந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது

ஏன் இந்த ஏற்றத் தாழ்வு?

23.09.2012.By.Rajah.இலங்கையின் மாகாண மட்டத்திலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகளைத் தணிக்க, அதிகளவில் மத்திய மயப்பட்டிருக்கும் அரச வரி அறவீட்டு நடைமுறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்! என அபிவிருத்திப் பொருளியலாளரான கலாநிதி. முத்துக்கிருஷ்னன் சர்வானந்தா யாழ்.பொருளாதார இணையத்திற்கு இன்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் சரி சமமற்ற நிலையில் வளர்ந்து வரும் மாகாண மட்டத்திலான பொருளாதார வளர்ச்சி தொடர்பாக நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் அரைப் பங்கினை எடுத்துக்கொள்கின்றது (2011 இல் 44.4%). இதனால் அதிக செல்வம் சேரும் மாகாணமாக மேல் மாகாணம் திகழும் அதேவேளை, ஏனைய மாகாணங்களுடனான வருமான ஏற்றத் தாழ்வு இடை வெளியும் தொடர்ந்து விரிவடைகின்றது. பொருளியல் விஞ்ஞானத்தின் படி, ஒரு நாட்டின் வருமான ஏற்றத் தாழ்வுகளைத் தணிக்க அதன் அரச வரி வருமான மூலங்களை செயல் திறனோடு கையாள வேண்டும். எனினும், இலங்கையின் அனுபவத்தில் இது தவறாகவே பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. உலகலாவிய ரீதியில் வரி வருமானது நுகர்வு மீதான (நேரில் வரி) வரியிடலிலேயே அதிம் சார்ந்துள்ளதுடன், இது அந்த அந்தப் பிரதேசங்களில் வாழும் செல்வச் சீமான்கள் மற்றும் நிறுவனங்களின் கைகளையே எதிர் பார்த்துள்ளது. 1977ம் ஆண்டின் பின்னர், இலங்கையின் வரி வருமானத்தில் நுகர்வு மீதான வரி வருமானங்களின் பங்களிப்பு அதிகரித்துச் சென்ற அதேவேளை, வருவாய் ஈட்டுதல் மீதான வரி (நேர் வரி) வருமானத்தின் பங்களிப்பு குறைவடைந்து செல்வதைக் காணலாம். இதுவே பிற்காலத்தில் மாகாணங்களிற்கு இடையில் செல்வச் சம நிலை இன்மைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாக மாறியதுடன், நேரில் வரி வருமானங்கள் மற்றும் மக்களின் சேமிப்பானது மேல் மாகாணம் நோக்கி பாயவும் காலானது. எனவே, நேரில் வரி வருமானங்கள் மற்றும் மக்களின் சேமிப்பினை உரிய மாகாணமே பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாண சபைகளிற்கு அரச வரி முகாமைச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். மாகாண சபைகள் தற்போது அரச ஊழியர்களிற்கான சம்பளங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் இதர சில நடைமுறைச் செலவீனங்களை மேற் கொள்வதற்கான சுதந்திரத்தினைப் பெற்றுள்ளன. எனினும், இது போதுமானது அல்ல. குறிப்பாக, ஒவ்வொரு மாகாணங்களும் தமது பண அடித்தளத்திற்கு ஏற்ப வருமானம் ஈட்டவும், செலவுகள் மேற்கொள்ளவதனையும் ஊக்குவிக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என முத்துக்கிருஷ்னன் சர்வானந்தா யாழ்.பொருளாதார இணையத்திற்குத் தெரிவித்தார்

இலங்கையில் தங்கத்தின் விலை உயர்வு

23.09.2012.By.Rajah.கொழும்பு செட்டியார் தெருவில் கடந்த இரண்டு வாரங்களிற்கு முன்னர் 55 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை, இந்த வார முடிவில் சுமார் 3 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்து 58 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்கத்தின் விலைகள் வழமையாக ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் அதிகரிப்பது சகஜம். ஆனாலும், கடந்த இரண்டே வாரங்களில் சுமார் மூவாயிரம் ரூபா அதிகரிப்பானது உலக பொருளாதாரத்தின் பலவீனத் தன்மையினையே வெளிப்படுத்துகின்றது.

இலங்கைப் பொருளாதாரம்

23.09.2012.By.Rajah

இந்த ஆண்டு முழுவதற்குமான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 6.75 - 7.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகின்றது. இதனை இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் பி.வி.ஜெயசுந்தர கடந்த வியாழனன்று ராய்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.


சென்ற ஆண்டில் (2011), இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதமானது 8.3 சதவீதம் எனக் காணப்பட்டதுடன், இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் 7.9 சதவீதம் என நல்ல நிலையில் பதிவாகியது. ஆயினும், உலக சந்தையில் எண்ணை விலை உயர்வு மற்றும் உலக பொருளாதார மந்த நிலமைகளினால் இந்த ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி வீதமானது 7.2 சதவீதம் என்றளவிலேயே காணப்படும் என மத்திய வங்கி முன்னதாக தெரிவித்திருந்தது.

இதேவேளை, இந்த ஆண்டில் தொடரும் கால நிலை வரட்சியினால் விவசாய உற்பத்திகளின் பாதிப்பு மற்றும் நீர் மின் உற்பத்தியில் தொடரும் வரட்சி நிலைமைகள் போன்றன ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி வீதத்தினைப் பாதித்துள்ளன. இதனால், இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 6.75 சதவீதம் என்றளவு வளர்ச்சி காணவே வாய்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கடந்த யூன் மாதம் எதிர்வு கூறியுள்ளது.

எது எவ்வாறாயினும், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9 சதவீதம் எனக் காணப்பட்ட இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக் குறையினை, இந்த ஆண்டில் 6.2 சதவீதம் எனக் குறைப்பதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இத்தகைய செலவுச் சிக்கனமானது, அரசின் சமூக நலச் செலவுகளில் பெருமளவு குறைப்பினைக் கொண்டு வருமாயின் அது, இலங்கையின் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சிக்கு நன்மையளிப்பதாக அமையும்.

23.09.2012.By.Rajah.தெல்லிப்பளை மாவிட்டபுரத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சுமார் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மூடைகளில் பருப்பு பயறு உள்ளி உழுந்து என பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுளளன.

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக, சிறிலங்கா இராணுவத்தினரால் உயர் பாதுகாப்ப வலயமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்தப் பகுதி கடந்தாண்டு மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படிப்படியாக மக்கள் தமது காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறி வருகின்றனர். அவ் வகையில், மாவிட்டபுரம் ஆலடி ஒழுங்கையில் உள்ள வளவு ஒன்றிலுள் கிணறைத் துப்புரவு செய்ய வீட்டார் முற்பட்ட நிலையில் கணிற்றில் இருந்து இந்தப் பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

கிணற்றின் அடியில் படங்கு கொண்டு மூடப்பட்டு இருந்த இந்தப் பொருட்களால் கிணற்றின் ஊற்றுகளும் கூட அடைக்கப்பட்டு நீர் வெளி வராத நிலையில் தடுக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்தப் பொருட்கள் ஆலடி வீதியோராத்தில் போடப்பட்டுள்ளமையால் துர் நாற்றம் வீசுவதினால் அந்தப் பகுதியில் மீளக் குடியேறிய மக்கள் பலத்த சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் இத்தகைய உணவுப் பொருட்கள் கிணறுகளில் முடக்கப்பட்டு இருந்ததாகவும் அவர்கள் இடம் மாறும் வேளை, குறிப்பிட்ட பொருட்களை கொண்டு செல்லாது கிணற்றில் போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் அல்லது திருட்டுத்தனமாக பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் எனவும் அப் பகுதி மக்களால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் மாவிட்டபுரத்தில், கந்தசாமி என்பவருடைய கிணற்றில் இருந்து இத்தகைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பிரதேச சபையின் உதவியுடன் அகற்றப்பட்டது.

இவ்வாறு பல லட்சம் ரூபாக்கள்பெறுமதியான பொருட்கள் யாருக்கும் பயன்படாத முறையில் அழிக்கப்பட்டுள்ளமை பொது மக்களிடையே பலத்த விசனத்தை எற்படுத்தியுள்ளது.

23 செப்ரெம்பர் 2012

மாணவனுடன் பாலியல் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை விடுதலை

23.09.2012.By.Rajah.கனடாவின் டொரண்டோ மாகாணத்தில் 15 வயது மாணவனுடன் தவறான உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயது ஆசிரியை குற்றமற்றவர் என கூறி டொரண்டோ நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 42 வயதான Mary Gowans என்ற ஆசிரியை தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக 15 வயது மாணவன் கொடுத்த புகாரினால், அந்த ஆசிரியை மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது ஆசிரியை Mary Gowans தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
அவர் கூறுகையில், அந்த சிறுவன் தான் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டான் என்றும், தனக்கு அதிகளவான காதல் குறுஞ்செய்திகளை அனுப்பினான் என்றும் தெரிவித்தார்.
இதற்கு தான் உடன்படாததால் தன் மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளான் என்றும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியதை அந்த ஆசிரியை நிரூபித்ததால், ஆசிரியர் குற்றமற்றவர் என கூறி விடுதலை செய்வதாக டொரண்டோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

மிகவும் சவால் நிறைந்த கட்டிடத்தில் ஏறி பிரான்ஸ் ஸ்பைடர்மேன் புதிய சாதனை

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012[ காணொளி, புகைப்படங்கள்]
By.Rajah.சீனாவில் 1,300 அடி உயர கண்ணாடி கட்டிடத்தில் ஏறி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்பைடர்மேன் புதிய சாதனை படைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆலென் ராபர்ட்(வயது 50). உலகின் உயரமான கட்டிடங்கள் மீது கயிறு, பாதுகாப்பு சாதங்கள் ஏதுமின்றி ஏறி சாதனை படைப்பதே இவரது பொழுது போக்காகும்.
இதனால் ஸ்பைடர்மேன் என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. மிகவும் சவால் நிறைந்த கட்டிடமாக கருதப்படும் சீனாவின் செங்சோ நகரில் உள்ள 1,300 அடி உயரம் கொண்ட “போர்டலேசா டவர்” மீது ஏறி ராபர்ட் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
இக்கட்டிடத்தின் முதல் 400 அடிக்கு மேல் பயங்கரமாக வழுக்கும் தன்மையுடன் கூடிய கண்ணாடி மற்றும் உலோகத்தாலான வெளிப்புறச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கை, கால்களை ஊன்றக்கூடிய வகையில் பிடிமானம் சற்றும் இல்லாததால், இந்த கட்டிடத்தின் மீது ஏறுவது மிகவும் சவால் நிறைந்ததாக கருதப்பட்டது.
இதனால் வேறு வழியின்றி கண்ணாடி சுவரில் சில சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு கயிறு போன்றவற்றின் துணையோடு, ராபர்ட் கட்டிடத்தின் மீது ஏற ஆரம்பித்தார்.
முதல் 400 அடியை சிரமமின்றி ஏறி முடித்த ராபர்ட், பின் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து இரண்டு மணி நேரத்தில் உச்சியை சென்றடைந்தார்.

அங்கே அவருக்காக காத்திருந்த வரவேற்பு குழுவை சேர்ந்தோர் கைதட்டி ஆரவாரம் செய்து ராபர்டை வரவேற்றனர். இவரின் சாகசத்தை சீன தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
ராபர்ட் சீனாவில் இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டில் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள 1,400 அடி உயரம் கொண்ட ஜின் மாவ் டவரில் ஏறி சாதனை படைத்தார்.
கடந்த மார்ச் மாதம் துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான "புர்ஜ் கலிபா" டவர் மீது ஏறி உலக மக்களின் கவனத்தை கவர்ந்து பாராட்டு பெற்றார்.
2, 716 அடி உயரம் கொண்ட இக் கட்டிடத்தின் மீது ராபர்ட் ஏறும் போது பயங்கர பாலைவனக்காற்று வீசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலியை தாண்டி கூண்டுக்குள் குதித்த நபரை கடித்து குதறிய புலி

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012
By.Rajah.அமெரிக்காவில் கூண்டுக்குள் குதித்த வாலிபரை புலி கடித்து குதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரான்ஸ் மிருகக்காட்சி சாலையில் புலிகள் இருக்கும் பகுதிக்குள் வேலியை தாண்டி ஒருவர் குதித்துள்ளார்.
அதைக் கண்ட 12 வயது புலி ஒன்று அவரை கடித்து குதறியது. அவரது மரண ஓலத்தைக் கேட்ட மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் கார்பன்டை ஆக்சைடு தீயணைப்பு கருவி மூலம் காற்றை பீய்ச்சி அடித்து அந்த புலி அவரை விட்டு விலகிச் செல்லுமாறு செய்தனர்.
பின்னர் அந்த இளைஞரை வேலிக்கு கீழே இருக்கும் சிறிய இடைவெளி வழியாக வருமாறு கூறி மீட்டனர்.

சீனாவில் பள்ளியில் புகுந்து குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மர்ம ஆசாமி: 3 பேர் பலி

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012
By.Rajah.சீனாவில் ஆரம்ப பள்ளியின் வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், குழந்தைகளை கொடூரமாக தாக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் தென் பகுதியில் வியட்னாம் எல்லையையொட்டி பிங்னான் என்ற நகரம் அமைந்துள்ளது.
இங்குள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் மதிய உணவு இடைவேளையின் போது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கோடாரியுடன் வந்த மர்ம நபர் திடீரென குழந்தைகளை தாக்கினார்.
இதில் 6 வயது முதல் 12 வயதுள்ள 3 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர், மேலும் 13 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட வியூ என்ற நபரை பொலிசார் கைது செய்தனர்.
விசாரணையில் இவர் மனநோயாளிகள் மையத்தில் இருந்து தப்பி வந்தவர் என்பது தெரியவந்தது. ஆனால் ஏன் தாக்குதல் நடத்தினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை

அமெரிக்காவில் பாகிஸ்தானுக்கு எதிரான மசோதா தோல்வி

 ஞாயிற்றுக்கிழமை, 23 செப்ரெம்பர் 2012,
By.Rajah.அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிரான மசோதா தோல்வி அடைந்தது. அமெரிக்க நாடாளுமன்ற மேல் சபையில் உறுப்பினர் ராண்ட் பால் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் குறித்து அமெரிக்காவுக்கு தகவலளித்த மருத்துவர் ஷகில் அப்ரிதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுதலை செய்யும் வரை, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
விவாதத்துக்குப் பின் இந்த மசோதாவுக்கு 10 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர், 81 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து மசோதா தோல்வியடைந்தது.
மேலும் இதே மசோதாவில் அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல் நிகழ்ந்த லிபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும்.
இத்தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கைது செய்த பின் தான், நிதி உதவியைத் தொடர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இது குறித்து ராண்ட் பால் கூறுகையில், இந்நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கு அமெரிக்க குடிமக்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நாடுகளுக்கு ஆதரவாக உள்ளது ஏன் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில எனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்

விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் மோதல்: போலிஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய 9 பேர் கைது





23.09.2012.By.Rajah.தருமபுரி மாவட்டம், பிக்கனஹள்ளியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம், தங்கள் ஊரில் வைத்திருந்த விநாயகர் சிலையை ஒகேனக்கல் காவிரியாற்றில் கரைப்பதற்காக லாரியில் சிலையை எடுத்துக்கொண்டு சென்றனர்.
ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலையில் சாலையில் லாரியை நிறுத்தி ஆட்டம் போட்டுகொண்டு போக்குவரத்துகக்கு இடையூறு ஏற்படுதியுள்ளனர். ஒகேனக்கல் போலிஸ் எஸ்.ஐ., நந்தகுமார் தலைமையில் அங்கு சென்ற போலீஸார் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் லாரியை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது மது அருந்தி போதையில் இருந்த இளைஞர்கள், போலிஸ் எஸ்.ஐ.யை பார்த்து கையசைத்தபடியே சத்தம் போட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த எஸ்.ஐ நந்தகுமார் லாரியில் இருந்தவர்களை நோக்கி லத்தியை சுழற்றியபடியே மிரட்ட சென்றுள்ளார். அப்போது லாரியில் இருந்தவர்கள் எஸ்.ஐ.நந்தகுமாரை கீழே தள்ளி தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் கிடைத்தத்தும், அங்கு வந்த போலீசார் லாரியிலிருந்த சிலரை விசாரணைக்கு காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரியில் வந்த மற்றும் சிலர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, போக்குவரத்து இடையூறு செய்த, பிக்கனஹள்ளியை சேர்ந்த செல்லத்துரை (22), மோகன்ராஜ் (24), ரத்தினகுமார் (20), விஜய் (21), வினோத் (19), சாம்ராஜ் (43), அண்ணத்துரை (43), மகேந்திரன் (36), சுதாகர் (31) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதில், வினோத் (19), ரத்தினகுமார் (20), விஜய் (21) ஆகியோர் சங்ககிரி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்

பந்த்! எதிர்த்த அரசு ஆதரித்த மக்கள்!

23.09.2012.By.Rajah.


சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி, எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, டீசல் விலை ஏற்றம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்