Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 27 செப்டம்பர், 2012

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வரும்

 27.09.2012.By.Rajah.இந்துக்களுக்கு வசதி ஏற்படுத்துங்கள்; நம்பிக்கை பொறுப்புச் சபை தலைவர் கடற்படையிடம் கோரிக்கை
நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் குறித்த நேரங்களில் இடம்பெறும் பூசைகளுக்குச் செல்ல பிரத்தியேக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில் நம்பிக்கை பொறுப்புச் சபை தலைவர் ஏ.தியாகராஜா புங்குடுதீவு கடற்படை தலைமை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு வரும் இந் துக்களுக்கு தனியான வரிசை அமைத்து வழங்கல் எனும் தலைப்பில் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆலயத்தின் பூசைகள் இடம்பெறும் நேரங்கள் காலை 7 மணி, நண்பகல் 12 மணி, மாலை 5.30 மணி மற் றும் 6.30 மணி என்பனவாகும். இதில் அபிஷேகம் மற்றும் சாந்தி என்பன காலை 8.30 மணி முதல் 12 மணி வரை இடம்பெறும்.
அடியார்கள் யாழ். குடா நாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். இந்த வேளைகளில் தென்பகுதிகளில் இருந்து வரும் மக்களும் இந்து அடியார்களும் கலந்து நீண்ட வரிசையில் நிற்கும் போது இந்துக்கள் அம்பிகையின் பூசை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத அளவுக்குப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நேரம் படகுகளுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதால் பூசை வழி பாட்டை உரிய நேரத்துக்குச் சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2010, 2011 காலப் பகுதிகளில் இந்துக்களுக்கு என தனியான வரிசை ஏற்படுத்தப்பட்டு உரிய நேரத்தில் பூசைக்கு செல்ல வழியேற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இந்த வசதி தற்போது செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் இந்துக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையை கருத்தில் எடுத்து இந்துக்கள் உரிய நேரத்தில் பூசை வழிபாடுகளுக்குச் செல்ல பிரத்தியேகமான தனியான வரிசையை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என்றுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதி வடக்கு கடற்படை தலைமை அதிகாரி, அரச அதிபர், வேலணை பிரதேச செயலர், வேலணை பிரதேசசபை தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



உலக தமிழர்கள் கிளிநொச்சியில் நடந்த மனதை உருக்கும் சம்பவங்களை பாருங்கள்!

        
27.09.2012.ByRajah.பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், வடக்கில் மக்களுடைய நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று கிளிநொச்சி நகரில் நடத்தியிருந்த போராட்டம் வெற்கறிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று காலை 11மணியளவில் மாவட்டச் செயலகத்தின் முன்பாக கூடிய மக்கள் தமது நிலங்களில் ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என பதாகைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு உணர்ச்சிபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக குறித்த போராட்டத்தில் மக்களை கலந்துகொள்ளவிடாது தடுப்பதற்குப் படையினர் கடும் பிரயத்தனம் எடுத்திருந்தனர். எனினும் மக்கள் முழுமையாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. இதில் காணாமல்போனோர் மற்றும் சிறைகளிலுள்ளோரின் உறவினரும் கலந்து கொண்டு தங்கள் உறவினர்களை மீட்டுத்தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் இந்தப்போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மனோ கணேசன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, வினோ, மற்றும் சி.சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் சார்பில் அதன் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் முடிவில் ஜ.நாவுக்கான வதிவிடப்பிரதி நிதியிடமும், மாவட்டச் செயலரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன எமது உறவுகளை மீட்க சர்வதேசமே மனமிரங்கு!- கிளிநொச்சியில் உறவுகளைப் பறிகொடுத்த தயார்மார் கதறல்
சர்வதேசமே இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போன எமது பிள்ளைகளை மீட்டுத்தர நடடிவடிக்கை எடு என கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உறவுகளை இழந்த தாய்மார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தின் போதே அவர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு கண்ணீர் மல்க நெஞ்சை உருக்கும் வகையில் அவர்கள் ஒன்றாக சர்வதேசத்திடம் நீதி கோரினார்கள்.
இராணுவத்தினரால் கடத்தப்பட்டும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் போன தமது உறவுளை மீட்டுத்தரவும் தமிழர்களுக்கான நீதியை வழங்கவும் சர்வதேச தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

























 

உலக வெப்பமயமாதலின் எதிரொலி: 10 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் அபாயம்



27.09.2012.By.Rajah.உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், 2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இறக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2030ஆம் ஆண்டில் வானிலை மாற்றத்தால் மனித இனம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாரா என்ற மனித இன நலம் சார்ந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுவதால், உலகில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, துருவப் பகுதிகளிலும் பனி உருகுகிறது.
இதனால் வறட்சி, கடல் நீர் மட்டம் உயர்தல் போன்ற அபாயங்கள் ஏற்படும். தற்போது காற்று மாசு, பசி, நோய் போன்றவற்றால் 50 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.
பெட்ரோலியப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் 2030ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 லட்சமாக உயரும்.
இவர்களில் 90% பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அடுத்த 10 ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 10 கோடி பேர் உயிரிழக்கக்கூடும்.
தொழிற்துறைகள் வளர்வதற்கு முன்பு இருந்ததை விட இப்போது 0.8 சதவீதம் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு கேன்கன் சுற்றுச்சூழல் மாநாட்டின் போது, உலக வெப்பத்தை 2 சென்டிகிரேட் வரை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புக்கொண்டன.
ஆனால், மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் அளவைப் பார்த்தால் 2 சென்டிகிரேட் வெப்பத்தை குறைப்பது கூட போதுமானதாக இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நவீன மயமாக்கப்படும் மருத்துவப் பதிவேடுகள்

27.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில் கடந்த சில வருடங்களாக மருத்துவத் துறையில் "பதிவேடுகள், நோயாளி விபரங்கள், மருந்துச் சீட்டு, எக்ஸ்ரே, ஸ்கேன்" போன்றவை அனைத்தும் காகித வடிவத்திலிருந்து நவீனமயமாக்கப்பட்டு கணனி வடிவத்தில் இருப்பது குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகின்றது. கணனி பதிவுகள் மலிவானவை, குழப்பமற்றவை, நிரந்தரமானவை என்பதால் விபரங்களை CD க்களில் பாதுகாக்கப் பலரும் விரும்புகின்றனர். நோயாளியின் நோய் விபரம், அதற்காக நடைபெற்ற பரிசோதனை விபரங்கள், மருந்துப் பட்டியல் ஆகியன காகித வடிவத்திலிருந்தால் விரைவில் கிழிந்து போகும். ஆனால் CD க்களாக மாற்றினால் பாதுகாப்பாக இருக்கும்.
கணனி சார்ந்த மருத்துவர்கள் இந்த மருத்துவ மின் பதிவுகளின் தரத்தை உயர்த்தி செலவைக் குறைக்க முயல்கின்றனர். காகிதங்களில் பாதுகாக்கும் போது மருத்துவரின் கிறுக்கலான எழுத்துகள் தவறான மருந்துகளைப் பெற வழிவகுக்கும்.
இது போன்ற தவறுகள் மின்பதிவுகளில் ஏற்படாது. அமெரிக்காவில் மட்டும் இத்தவறுகளால் ஆண்டொன்றுக்கு 1,00,000 மரணங்கள் ஏற்படுகின்றன.
ஆனால் சுவிட்சர்லாந்தில் ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து பேர் வரை உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை மருத்துவத் தகவலியல் கழகத்தின் தலைவரான கிறிஸ்ட்டியன் லோவிஸ்(Christian Lovis) தெரிவித்தார்.
நல்ல தரமான சிகிச்சைக்கு நோயாளி பற்றிய தகவல்களின் நம்பகத்தன்மையும் துல்லியமும் மிகவும் முக்கியம் என்றார் லோவிஸ். தகவல் தெரிவித்தல் தவிர வேறு கூடுதல் பயன்கள் எதுவும் இம் மின்பதிவுகளால் இல்லை, என்றும் தெரிவித்தார்.
மின்நலவாழ்வுத் திட்டத்தில் மருந்து, நோயாளி கோப்பு, தொலை மருந்துகள், நுகர்வோர் உடல்நலத் தகவலியல், அயலக மருத்துவ சேவை, மற்றும் தொலைதூதரகத்திலிருக்கு நோயாளி குறித்த தகவல்களைச் சேகரித்து தொகுத்தல் ஆகிய அனைத்தும் அடங்கும்

சாட்டை (வீடியோ இணைப்பு)

27.09.2012.By.Rajah.தங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை.
நெய்வேலி அருகே உள்ள கிராமத்து அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் தம்பி ராமையா. இப்பள்ளியில் எப்படியாவது தலைமையாசிரியராக வேண்டும் என்ற நினைப்புடன் இருந்து வருகிறார்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சரியாக செய்ய முடியாத தலைமையாசிரியர் ஜூனியர் பாலையா, இதனால் வகுப்புகளை கட் அடிக்கும் ஆசியர்கள், மாணவர்களால் மாவட்டத்திலேயே பின்தங்கிய நிலையில் இருக்கிறது அந்த பள்ளி.
இந்நிலையில் இயற்பியல் ஆசிரியராக வரும் சமுத்திரகனி, இந்த பள்ளியின் நிலையை கண்டு வியப்படைகிறார்.
பள்ளியில் இருக்கும் ஒவ்வொரு சட்டங்களையும் மாற்றுகிறார். மாணவர்களை அடித்து திருத்துவதைவிட அன்பாக நான்கு வார்த்தை பேசினாலே நல்வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற புது பார்முலாவை கடைபிடிக்கிறார். இது அவருக்கு கைகொடுக்கிறது.
இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சமுத்திரகனியை பிடித்துப் போய்விடுகிறது. இது மற்ற ஆசிரியர்களுக்கு பொறாமையாக இருக்கிறது.
தம்பி ராமையாவுக்கும் சமுத்திரகனியின் நடவடிக்கை மேல் அதிருப்தி ஏற்படுகிறது. எனவே அவரை பள்ளியில் இருந்து விரட்டவும், கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்.
இதேவேளையில், 12-ம் வகுப்பு படிக்கும் நாயகன் யுவன், அதே வகுப்பில் படிக்கும் நாயகி மகிமாவுக்கு தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வருகிறான்.
இதை மகிமா சமுத்திரகனியிடம் சொல்கிறாள். அவரும் அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறாள். அடுத்தநாள் மகிமா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ய, அவளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
அவள் விஷம் குடித்ததற்கான காரணம் வேறென்றாலும், சமுத்திரகனிதான் காரணம் என சந்தேகத்தில் மகிமாவின் உறவினர்கள் அவரை அடித்து உதைக்க, இது அவர்மீது பொறாமை கொண்ட மற்ற ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இறுதியில், சமுத்திரகனி தன் மீது விழுந்த இந்த கரையை அழித்தாரா? மாவட்டத்திலேயே பின்தங்கியிருக்கும் பள்ளியை முன்னுக்கு கொண்டு வந்தாரா? யுவன், மகிமாவின் காதல் என்னவாயிற்று? என்கின்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப்படம்.
ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? என்பதை சமுத்திரகனி, ஆசிரியர் கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.
மாணவர்களுக்கு சமுத்திரகனி சொல்லும் பல விஷயங்கள், மாணவர்களை படிக்க வைப்பதில் ஆசிரியர்களுக்கு உள்ள சிரமத்தை குறைக்கும்.
உதவி தலைமை ஆசிரியராக வரும் தம்பி ராமையா, திறமையான தனது நடிப்பில் பளிச்சிடுகிறார். தன் வழுக்கை தலைமுடியை எடுத்து வேர்வையை துடைப்பதாகட்டும், சமுத்திரகனியை பார்த்தாலே மனதுக்குள் கொழுந்து விட்டெரியும் வில்லத்தனத்திலும் சபாஷ் போட வைக்கிறார். இவர் தட்டும் கைதட்டலுக்கு திரையரங்கம் முழுவதும் இவருக்கு கைதட்டலை வாரி இறைத்திருக்கிறது.
தலைமை ஆசிரியராக ஜூனியர் பாலையா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், அவரது திறமையான நடிப்பால் சிறப்பான ஆசிரியர் என்பதை நம் மனதில் பதிய வைத்திருக்கிறார்.
படத்தில் பெரும் பகுதி ரசிகர்களின் கோபத்தை தூண்டும் விதத்திலேயே நாயகன் யுவனின் நடிப்பு அமைந்துள்ளது. இறுதியில், நல்லவனாக மாறும் இவர், ரசிகர்களிடம் நெருங்குகிறார்.
நாயகி புதுமுகம் மகிமா, தமிழ் சினிமாவுக்கு அழகான கதாநாயகி கிடைத்திருக்கிறார். காதல், கோபம் என்று முகத்தில் பலவித பாவனைகள் இவருக்கு சர்வசாதரணமாக வருகிறது.
இசையமைப்பாளர் டி.இமான் தான் ஒரு மெலோடி கிங் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அந்த அளவுக்கு ரொம்ப அழகான மொலோடி மெட்டுக்களை கொடுத்திருக்கிறார். ‘சகாயனே சகாயனே’, ‘அடி போடி ராங்கி’ போன்ற பாடல்கள் காதுகளுக்கு இனிமையை தருகின்றன.
அரசு பள்ளிக்கூடங்களில் இருக்கும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் தற்போதைய நிலை என்னவென்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அன்பழகன், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கருத்தை சொல்லியதற்கு ரசிகர்களிடம் பலத்த பாராட்டைப் பெற்றுவிடுகிறார்.
மொத்தத்தில் சாட்டை சுழற்றிய விதம் மிகவும் அருமை...
நடிகர்: சமுத்திரகனி, யுவன், தம்பி ராமையா.
நடிகை: மகிமா.
இயக்குனர்: அன்பழகன்.
இசை: டி.இமான்.
ஒளிப்பதிவு: ஜீவன்.

ஒக்ரோபர் 12ல் திரைக்கு வரும் மாற்றான்

27.09.2012.By.Rajah..சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்த 'மாற்றான்', ஒக்ரோபர் 12ம் திகதி திரைக்கு வருகின்றது.
ஐரோப்பியா, ரஷ்யா நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள மாற்றானின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் இயக்குனர் கே.வி முடித்து விட்டார்.
ஒரு சில மாற்றங்களுடன் க்ளைமேக்ஸ் காட்சி மட்டுமே தற்போது நடைபெற்று வருகின்றன.
மாற்றான் படத்தின் கால அளவு 168 நிமிடங்களாம். படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து, சென்சாருக்கு செப்டம்பர் 28ம் திகதி அல்லது ஒக்ரோபர் 1ம் திகதி அனுப்ப இருக்கிறார்கள்.
ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் ஒக்ரோபர் 12ம் திகதி 'மாற்றான்' திரைக்கு வருகின்றது.
'மாற்றான்' படத்தின் தமிழ் டப்பிங், தெலுங்கு டப்பிங் என தான் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் சூர்யா முடித்துக் கொடுத்து விட்டார்

கந்தகோட்டை பட இயக்குனரின் அடுத்த படம் “ஈகோ”

27.09.2012.By.Rajah.நகுல், பூர்ணா, சந்தானம் நடித்த கந்தகோட்டை படத்தை இயக்கிய சக்திவேல் “ஈகோ” என்னும் பெயரில் புதிய படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் வேலு என்னும் புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் அமெரிக்காவில் பொறியியல் படித்தவர்.
நாயகியாக அனஸ்வரா நடிக்கிறார். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் புகழ் பெற்ற பாலா கொமெடி வேடத்தில் நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் சக்திவேல் கூறுகையில், அழகான பொய்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால் உண்டான நட்பு, காதல், வெறுப்பு மற்றும் ஈகோ நாயகன் நாயகி வாழ்கையை புரட்டி போடுகின்றன.
அதன் பின்பு அவர்கள் வாழ்க்கையில் என்ன ஆகிறது என்பது தான் கதை.
இந்த கதையை நகைச்சுவையோடு கலகலப்பாக எல்லா தரப்பினரும் ரசிக்கும் படி சொல்லியிருகிறோம் என்று கூறியுள்ளார்.
முதல் கட்ட படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்றது.
பாடல்கள் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டன. இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் திரைக்கு வருகிற‌து இந்த ப‌டம் என்கிறது படக்குழு.

நடிகை மீது நடன இயக்குனர் பரபரப்பு புகார்

27.09.2012.By.Rajah.கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடனம் ஆட மறுத்து, தகராறு செய்தார் என்று நடிகை ஆண்டிரிட்டா ராய் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார் நடன இயக்குனர்.
கன்னடத்தில் உருவாகும் படம் ரஜினி காந்தா. இப்படத்தில் துன்யா விஜய் நாயகனாகவும், ஆண்டிரிட்டா ராய் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இவர் மீது நடன இயக்குனர் இம்ரான் சர்தார்யா புகார் கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, நயன்தாரா, திவ்யா, பிரியாமணி, ராதிகா பண்டிட், பாவனா என பல கதாநாயகிகளுடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்கள் தொழிலுக்கு முரண்பட்டு நடந்தது கிடையாது.
தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா இரண்டையும் பிரித்து கையாண்டார்கள். படத்தை பொறுத்தவரை தங்கள் திறமையை வெளிப்படுத்த கடினமாக உழைப்பார்கள்.
ரஜினி காந்தா படத்திற்கான நடன காட்சிகளை முடிக்க எனக்கு குறைந்த கால அவகாசமே தரப்பட்டது. ஆனால் அதை ஆண்டிரிட்டா புரிந்து கொள்ளவில்லை.
கதாநாயகனுடன் நெருக்கமான இருக்கும் படி நடிக்க சொன்னால் பிரச்னை செய்வார். இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொண்டுவிட்டு பகலில் படப்பிடிப்புக்கு வரும்போது தூக்க கலக்கத்துடனே வருவார்.
மேக்கப் போட்டு மறைத்தாலும் அதை மறைக்க முடியாது. ஆண்டிரிட்டாவை நடனம் ஆட வைப்பதற்குள் நரக வேதனை அனுபவித்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஆண்டிரிட்டா ராய் கூறுகையில், தேவையில்லாத காரணங்களை வைத்துக்கொண்டு என் மீது இம்ரான் குற்றம் சாட்டுகிறார். அவர் சொல்வதற்கு ஆதாரம் கிடையாது.
என் மீது இவ்வளவு புகார் சொல்பவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பே படப்பிடிப்பு நடந்த போது ஏன் சொல்லவில்லை. ஆதாரமற்ற புகார் சொல்ல அவர் ஏன் 2 மாதம் காத்திருந்தார் என்று தெரியவில்லை என்றார்.

சத்யராஜ் மகள் ஆவணப் படத்தில் அறிமுகம்

27.09.2912.Byx.Rajah.சமூகப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதன்முறையாக ஆவணப் படமொன்றில் நடித்துள்ளார்.
சத்யராஜின் மூத்த மகன் சிபிராஜ், ஏற்கனவே லீ, நாணயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் சிபிராஜின் படங்கள் இன்னும் வரவேற்பை பெற வில்லை.
இந்நிலையில் சத்ய ராஜின் மகள் திவ்யா முதன்முறையாக ஆவணப்படமொன்றில் அறிமுகமாகி நடித்துள்ளார்.
இப்படத்தைப் பார்த்த சிபிராஜ், திவ்யாவின் நடிப்பை பாராட்டினாராம். மேலும் இப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தை கொல்கத்தாவை சேர்ந்த சிர்ஷாய் என்பவர் இயக்கி உள்ளார்.
இந்த வேடத்தில் நடிக்க முதலில் கங்கானா ரனாவத்தை அணுகினார். ஆனால் இவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் திவ்யாவை நடிக்க வைத்தனர்

பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் வேண்டாம்; அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரிக்கை

27.09.2012.By.Rajah.எதிர்வரும் 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மனு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு, ஏழு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்த மனுஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், புலி உறுப்பினர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்துதல் உள்ளிட்ட எட்டுக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வை நடத்தக் கூடாது என இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தருஸ்மன் அறிக்கை பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்துமாறு வலிறுத்த வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு இரகசிய மனு அனுப்பி பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நிறுத்த முயற்சிப்போர் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது

பரீட்சை நிலையம் இடமாற்றம்

27.09.2012.By.Rajah.இலங்கை வங்கியாளர் சங்கத்தினால் யாழ். திருக்குடும்ப கன்னிய மடப் பாடசாலையில் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எவ். டி.பி.எவ். ஆகிய பரீட்சைகள் வரும் சனி, ஞாயிறு மற்றும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி ஆகிய நாள்களில் நடைபெற ஏற்பாடாகியிருந்தன.
இந்தப் பரீட்சைகள் குறித்த தினங்களில் யாழ். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்பாபிலவு மக்களை கவனிப்பார் யாருமில்லை அவலவாழ்வு தொடர்கிறது

27.09.2012.By.Rajah.சொந்த இடத்தில் மீள் குடியமர்வு எனக் கூறி நேற்றுமுன்தினம் நந்திக் கடல் அருகே சூரியபுரம் காட்டுப் பகுதியில் படையினரால் இறக்கிவிடப்பட்ட கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களும் தொடர்ந்தும் அங்கு பெருந்துன்பங்களை அனுபவிப்பதுடன் உதவிகள் எதுவுமின்றி அல்லல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள் இல்லாமையால் இந்தக் குடும்பங்கள் அந்தரித்த நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. நேற்றுமுன்தினம் படையினரால் அந்தப் பகுதியில் இறக்கிவிடப்பட்ட இந்தக் குடும்பங்களுக்கு குடிதண்ணீர் மற்றும் உணவு வசதிகள் நேற்று சிறிதளவே வழங்கப்பட்டதாகவும் அங்குள்ள முழு மக்களுக்கும் உதவிகள் கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
பகலில் கடும் வெப்பமான கால நிலையால் சிறுவர்கள் வெயிலில் வாடி வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மலசல கூடங்கள் எதுவும் இல்லாமையால் பெண்களும் சிறுவர்களும் பெரும் அல்லல் படுகின்றனர்.
இந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் ஒருவர் உதனிடம் தெரிவித்தார். மர நிழல்களிலும் சிறிய கூடாரங்களை அமைத்தும் தாம் தங்கியுள்ளதாகவும் இரவில் பாம்புகளின் தொல்லை தம்மை அச்சத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவ்வாறான ஒரு அபாய நிலையில் குடியிருக்க நேருமோ எனவும் அவர் அச்சம் வெளியிட்டார். போதிய குடிதண்ணீரோ உணவோ இல்லாமல் மக்கள் பரிதாப நிலைக்கு உட்பட்டிருப்பதாகவும் இது குறித்து அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தம்மைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கோரினார்

மாற்றங்கள் ஏற்படாவிட்டால் விளைவுகள் கடுமையாகும் இலங்கையை எச்சரிக்கிறது கனடா

27.09.2012.By.Rajah.எங்கும் இராணுவ பிரசன்னமாகவே உள்ளது. நாட்டின் வடபகுதியில் நாம் பார்த்தோம், கிழக்கிலும் பெரும் பகுதிகளில் அதுவே உண்மையாக உள்ளது. மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் எனக் கூறும் எந்தவொரு நாட்டிலும் இத்தகைய இராணுவப் பிரசன்னம் நியாயப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. மாற்றத்தை இலங்கை வெளிப்படுத்த வில்லையென்றால் கடுமையான விளைவுகளை அது சந்திக்க வேண்டிவரும்.
இவ்வாறு இலங்கையில் நிலைமைகளை கண்டறியும் கனேடிய அரசின் உத்தியோகபூர்வக் குழுவில் அண்மையில் இங்கு வந்து திரும்பிய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர் தெரிவித்துள்ளார்.
கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கை விடயத்தில் பிரதமர் காப்பர், வெளிவிவகார அமைச்சர் ஜொன் பெயாட், மற்றும் அரசில் உள்ள ஏனையவர்கள் அதீதமான பல கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அந்தக் கரிசனை இலங்கை குறித்த எமது செயற்பாடுகளில் வெளிப்படுகிறது. மனித உரிமைகள் பெருமளவில் இலங்கையில் மதிக்கப்படவில்லை.
அது இல்லாமல் சமாதானம் என்பது சாத்தியப்படாத ஒன்று. எமக்கு கரிசனையுள்ள பல விடயங்கள் குறித்து காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாதவரை எமது நோக்கில் நிலைமைகள் ஏற்புடையதாக இருக்காது.
பொலீஸ் மற்றும் உள்ளுர் சிவில் நிர்வாக்கக்கட்டமைப்புக்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. உள்ளுர் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து காத்திரமான பல அறிக்கைகள் தொடர்ந்தும் வந்த வண்ணமுள்ளன. மக்கள் காணாமல் போகின்றனர். மக்கள் ஏதோ ஒரு வழியில் எழுந்தமான தடுப்புக் காவலை எதிர்கொள்கின்றனர் அல்லது எழுந்தமான துன்புறுத்தல்களை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருந்து எதிர்கொள்கின்றனர்.
இந்த விடயங்களை நாம் இலங்கை பயண்த்தின் போது எழுப்பினோம். நாங்கள் இது குறித்த நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம். இது குறித்த நடவடிக்கைகள் குறித்து நீண்ட காலமாக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த கோடையிலும் அரசு ஒரு புதிய செயல்திட்டத்தை வெளியிட்டது. ஆனால் தளத்தில் எந்தவொரு மாற்றத்தையும் இது வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலைமை எமக்கு ஆழ்ந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லையாயின், எமது கனடிய பிரதமர் அடுத்த வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தயாரில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளார்.
எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் எதனையும் நாம் இதுவரை காணவில்லை.
இலங்கையில் இரு தரப்பிலும் நீண்டகாலப் போரில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் குறிப்பாக தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக 2009இல் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் நடைபெற்ற இறுதிப்போரில் பெருமளவில் தமிழ் மக்கள் கொல்லக்பட்டுள்ளனர். இதில் பலியானவர்களின் குடும்பங்கள், காயமடைந்தோர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோர் என்ன நடந்தது என்பதை அறிய உரித்துடையவர்கள். யார் இறந்தார்கள்? அவர்களுடைய சடலங்கள் எங்கு உள்ளன?
என்ன நடந்தது? என்பதைக் கண்டறிய எந்தவித காத்திரமான முயற்சிகளும் செய்யப்படவில்லை. இது தமிழர்களுக்கு மட்டும் கடினமான விடயம் அல்ல, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும், சர்வதேச பங்காளர்களுக்கும் இலங்கையின் இருண்ட சரித்திரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர அத்தியாவசியமாகின்றது.
மக்கள் ஒரளவு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும், முழுமையான இயல்புநிலையை எட்ட இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மக்கள் தங்கள் முன்னைய வாழ்விடங்களுக்கு திரும்புகின்ற போது ஒன்றில் அவர்கள் வதிவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது எரிக்கப்பட்டுள்ளன அல்லது காணிப்பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றனர். இது ஒரு வலியுள்ள திரும்புகையாக அமைகின்றது.
இலங்கை விடயத்தில் ஒரு காத்திரமான சர்வதேச அணுகுமுறை இல்லை. கடந்த இலைதளிர் காலத்தில் ஜெனிவாவில் இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு கடுமையான செய்தியை சொல்லியுள்ளது. தொடர்ந்தும் இது குறித்து ஏனையவர்களுடன் பேசவேண்டும்.
மாற்றத்தை இலங்கை வெளிப்படுத்தவில்லையென்றால் கடுமையாளன விளைவுகளைஅது சந்திவேண்டிவரும். நீதியில்லாத சமாதானம் ஒருபோதும் நீண்ட கால அமைதியைக் கொண்டுவராது, அதுவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் கற்றுக்கொண்ட பாடம்என்றார்.