Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 1 அக்டோபர், 2012

பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?

01.10.2012.By.Rajah.பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம்.
எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது. அதேப் போல் தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன.
வேப்பங்குச்சி: இது ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி தான் தங்கள் பற்களை துலக்குகின்றனர்.
அதனால் தான் அவர்கள் பற்கள் இன்றும் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச்சென்று துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும்.
ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து அதன் ஒரு முனையை நன்கு மென்று பின் தேய்க்க வேண்டும்.
உப்பு: உப்பைக் கொண்டும் பற்களை துலக்கலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது.
இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
அதிலும் பற்களில் வலிகள் ஏற்பட்டால் அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்கலாம். மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும்.
கடுகு எண்ணெய்: கடுகு எண்ணெயை வைத்து பற்களை துலக்கினால் பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும்.
இதுவும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோடு, சிறிது உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.
எலுமிச்சை: எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும்.
தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டும். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கிராம்பு: கிராம்பில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிராம்பு பற்களும் மிகவும் சிறந்தது.
ஆகவே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனால் பற்கள் வெள்ளையாக இருப்பதோடு, பற்களில் வலிகள் ஏற்பட்டால் அதனை சரிசெய்துவிடும்.

தொடர்ச்சியாக 8 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி நடிக்க விதார்த் பயிற்சி

 




01.10..2012.By.Rajah.மங்கலேஸ்வரன் இயக்கத்தில், “காட்டு மல்லி என்ற படத்தில் விதார்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சில காட்சிகளை, தண்ணீருக்குள் படமாக்குகிறார் இயக்குனர்.
அதற்காக, கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றுக்குள், காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லும் இயக்குனர், குறைந்தது, 8 நிமிடமாவது தண்ணீருக்குள் முங்கியிருந்தபடி நடிக்க வேண்டும் என்பதால், இப்போதே விதார்த்தை, அதற்கான பயிற்சியில் ஈடுபடுத்தி உள்ளார்.
அதனால், கடந்த ஒரு மாதமாக, “தம் பிடித்தபடி, நீச்சல் குளத்தில்,தீவிர பயிற்சி எடுத்து வருகிறார் விதார்த். ஆரம்பத்தில், 2, 3 நிமிடம் தண்ணீருக்குள் இருக்கவே கஷ்டப்பட்டவர், இப்போது, 6 நிமிடம் வரை, மூச்சு பிடிக்கும் அளவுக்கு, தன்னை தயார்படுத்தி விட்டார்.

Word Document-ல் சிறப்பு அடையாங்களை பெறுவதற்கு

01.10.2012.By.Rajah.Word Document தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை Alt Key அழுத்தியவாறே தந்தால், அவை உருவாக்கப்பட்டு Textடுடன் அமைக்கப்பட்டு விடும்.
† கத்தி போன்ற இந்த அடையாளம் பெற Alt + 0134.
‡ இதனையே இரட்டையாகப் பெற Alt + 0135.
™ Trade Markஅடையாளம் ஏற்படுத்த Alt +0153.
£ Pounds அடையாளம் பெற Alt + 0163.
¥ Japan Currency Yen அடையாளம் பெற Alt +0165.
© Cpoyright அடையாளம் கிடைக்க Alt + 0169.
® Register Trade Mark அடையாளம் உண்டாக்க Alt +0174.
° Degree என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற Alt +0176.
± Plus or Minus என்பதனைக் காட்ட Alt +0177.
· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த Alt+0183.
¼ கால் என்பதைக் குறிக்க Alt + 0188.
½ அரை என்பதைக் குறிக்க Alt + 0189.
¾ முக்கால் என்பதனைக் குறிக்க Alt + 0190

சுண்டெலிகளை அரைத்து குடிக்கும் வினோத மனிதன்! (வீடியோ)

01.10.2012.By.Rajah.நீங்கள் எத்தனையோ விதமான பாணங்கள் அருந்தியிருப்பீர்கள். ஆனால் இந்த வீடியோவை பாருங்கள் இதில் ஒரு மனிதன் அருந்தும் பாணம் நீங்கள் எப்போதுமே அருந்தியிருக்க மாட்டீர்கள். ஆம்...நீங்கள் காணொளியில் காண விருக்கும் இந்த வினோத மனிதனுக்கு வேலையே இதுதான். உயிர் யந்துக்களை அப்படியோ உயிருடன் உண்ணுவது இவன் வேலை.... இன்று இவன் செய்யும் வேலை 10 இளம் சுட்டெலிகளை ஒவ்வொன்றாக மிக்சரில் போட்டு அரைக்கிறான். பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்ந்து நன்றாக அரைத்து பாணமாக குடிக்கிறான். என்ன அருவருப்பாக இருக்கிறதல்லவா? எனவே தயவு செய்து இளகிய மனம் கொண்டோர் பார்ப்பதை தவிர்க்கவும்

எமனுக்கு அல்வா கொடுத்து உயிர்பிழைத்த மனிதன்! (அதிர்ச்சி காணொளி, )

01.10.2012.By.Rajah.இந்த வீடியோவைப் பார்த்தால் இப்படியும் நடக்குமா என்று எண்ணத்தோன்றும். ரஷ்யாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்து இது. சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற பார ஊர்தி ஒன்று இடதுபக்கமாக திரும்பியுள்ளது. ஆனால் இந்த வீதியில் நேராக வந்த வாகனம் ஒன்று பார ஊர்தியோடு மோதியுள்ளது. அதன் ஓட்டுனர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தின் விசை காரணமாக தூக்கி வெளியே வீசப்பட்ட நபர் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வரும்போது, தனது கைகளால் எதனையோ இறுக்கப் பிடித்துவிட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்படும்போது வீதியில் விழாமல் தப்பித்துவிட்டார். வீடியோவைப் பாருங்கள் விடயம் புரியும் !

ஈராக்கில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தது: 32 பேர் பலி

01.10.2012.By.Rajah.ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 32 பேர் பலியாயினர். ஈராக்கில் பாக்தாத் நகரின் வடக்கே உள்ள டாஜி பகுதியில் அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் நேற்று 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 8 பேர் இறந்தனர், 28 பேர் படுகாயமடைந்தனர்.
கார் குண்டுகள் வெடித்த சிறிது நேரத்தில் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த பகுதியான ஷுலா என்ற இடத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அடுத்து கர்ராடா பகுதியில் பொலிஸ் ரோந்து சென்றபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்பட 2 பேர் இறந்தனர்.
இதைத் தொடர்ந்து அதே பகுதியில் கார் குண்டு வெடித்து இதில் 3 பேர் இறந்தனர். மொத்தமாக நேற்று நடந்த தாக்குதல்களில் மட்டும் 32 பேர் கொல்லப்பட்டனர்.
இதுவரை இச்சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கொலம்பியாவில் மிக கடுமையான நிலநடுக்கம்

01.10..2012.By.Rajah.தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போபயான் பகுதியில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கொலம்பியாவின் தென் மேற்கு பகுதியில் ஈக்வடார் நாட்டின் எல்லையோரம் ஏற்பட்ட இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவானது.
போபயான் பகுதிக்கு தெற்கே 28வது கிலோமீற்றரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை

வாலிபர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நேரடியாக ஒளிபரப்பு: மக்கள் அதிர்ச்சி

01.10..2012.By.Rajah.அமெரிக்காவில் டுவிட்டர் மற்றும் யூடியூப் இணையத்தில் வாலிபர் ஒருவர், தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நேரடியாக ஒளிபரபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சாலையில் அனாதையாக நின்றிருந்த காரை கடத்தி, 175 கிலோ மீற்றர் வேகத்தில் வாலிபர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளார்.
அரிசோனா பாலைவன பகுதிக்கு சென்ற நபர், காரிலிருந்து இறங்கி தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்.
இக்காட்சியை டுவிட்டர் மற்றும் யூடியூப் இணையத்தளங்கள் நேரடியாக ஒளிபரப்பியதை லட்சக்கணக்கான மக்கள் நேரில் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்ததால், நேரடியாக ஒளிபரப்பியதற்காக யூடியூப் இணையத்தளத்தின் செய்தி வர்ணனையாளர் ஷெபர்டு ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார்.


ஆப்கானில் மட்டும் 2000 அமெரிக்க வீரர்கள் பலி

01.10..2012.By.Rajah.ஆப்கானிஸ்தானில் கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வரும் மோதல்களில், இதுவரை 2000 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன.
இருப்பினும் அங்கு அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்களும், தாக்குதல்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த தாக்குதல்களில் ஏராளமான நேட்டோ படை வீரர்கள் பலியாகின்றனர்.
இந்நிலையில் சையத் அபாத் மாவட்டத்தில் ஆப்கான் மற்றும் அமெரிக்க வீரர்களை நோக்கி நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் பலியாயினர்.
இந்த தாக்குதலில் உயரிழந்தவர்கள் அமெரிக்க வீரர்கள் தான் என்பது உறுதியாகிறது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் மட்டும் 2000 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2014ஆம் ஆண்டுடன் அமெரிக்க படைகள் வெளியேற திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 8 ஆண்டுகளில் பெண்களே நிர்வாகம் செய்வர்: ஆய்வில் தகவல்

01.10.2012.By.Rajah.பெண்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்த காலம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் ஆண்களுக்கு நிகராக.. ஏன் ஆண்களை விட மேலாகவே பல பணிகளில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் 2020ஆம் ஆண்டுக்குள் பெரும்பாலும் பெண்களே முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை ஏற்படும் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
லாய்ட்ஸ் டிஎஸ்பி என்ற நிறுவனம் இங்கிலாந்து, ஜேர்மனி, சீனா ஆகிய 3 நாடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இது பற்றி கருத்து கணிப்பு நடத்தியது.
அதன் முடிவுகள், பெண்களிடம் நிதி நிர்வாகம் உள்ள 10ல் 9 வீடுகளில் சேமிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் 82 சதவீத வீடுகளில் பண விவகாரங்களை ஆண்களே கவனித்து வருகின்றனர்.
எல்லா வயது பிரிவினரையும் ஆராய்ந்தால் இன்னும் 8 ஆண்டுகளில் அதாவது 2020ஆம் ஆண்டுக்குள் பெண்களே நீண்டகால முக்கிய நிதி முடிவுகளை மேற்கொள்பவர்களாக இருப்பார்கள்.
தற்போது 45 வயதுக்கு உள்பட்ட தம்பதிகள் உள்ள குடும்பங்களில் 52 சதவீதம் வீடுகளில் நீண்டகால நிதி திட்டங்களை பெண்களே முடிவெடுக்கின்றனர்.
45 வயதுக்கு மேற்பட்ட வயதுள்ள தம்பதிகளின் வீடுகளில் ஆண்கள் நிதி நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.
இந்த நிலை இன்னும் 8 ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிடும். இளம் வயது பெண்கள் தங்களின் அன்றாட செலவுகளை நன்கு நிர்வாகம் செய்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலரை 90 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலி தற்கொலை

01.10.2012. By.Rajah.இங்கிலாந்தில் தனது காதலரை 90 முறை கத்திரிக்கோலால் குத்தி, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு பெண். இங்கிலாந்தின் வடக்கு ஸடபோர்ட்ஷயர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் கரேன் கிளிம்ப்சன்(வயது 46). இவரது காதலரின் பெயர் மார்க் சான்ட்லர்(வயது 42).
கரேனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் சாண்ட்லருடன் 18 வருடங்களாக சேர்ந்த வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் இருவரது உடல்களும் வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கரேன் தான் சான்ட்லரை கொன்றுள்ளதாகவும், பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
சான்ட்லருடன் ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள கரேன், அப்போது ஏற்பட்ட கோபத்தில் கத்திரிக்கோல்களை எடுத்து சான்ட்லரை குத்தியுள்ளார்.
அவர் தப்புவதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கி ஓடி வந்துள்ளார். ஆனால் விடாமல் துரத்தி வந்த கரேன், சான்ட்லர் உடல் முழுவதிலும் கத்திரிக்கோல்களால் குத்தியுள்ளார்.
பின்னர் சமையலறைக்கு சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தடயவியல் நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது.
மேலும் சான்ட்லரின் உடலில் 90 இடங்களில் கத்திரிக்கோல் குத்து காயம் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.