siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

பெற்றோரும் ஆசிரியர்களும் இராணுவத்தினரின்


Friday 05 October2012..By.Rajah.செயற்பாடுகளுக்குஉடந்தையாளர்களாக உள்ளனர்!சிறீலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள தேசிய மாணவர் படையணி தமிழினத்தின் அடுத்த தலைமுறையிடமுள்ள தேசிய சிந்தனையினை பறிக்கும் முயற்சி என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் மறந்துபோயுள்ள நிலையில், பெற்றோரும், ஆசிரியர்களும் இராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கு உடந்தையாளர்களாக மாறியிருக்கும் அபாய நிலை வடக்கில் தீவிரமடைந்திருக்கின்றது.
யுத்தத்தின் பின்னர் வடக்கில் "கெடெக்" என்ற பெயரில் பாடசாலை உயர்தர மாணவர்களையும், பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக்கொண்டு இராணுவப்பயிற்சியளிக்கப் பட்டிருந்தது. எனினும் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் பாடசாலை மாணவர்களை மட்டும் வைத்துக்கொண்டு தேசிய மாணவர் படையணி அமைக்கப்பட்டது.

இதில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு தெற்கிலும், வடக்கிலும் படையினரால் இராணுவப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இதனை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்திருந்த தமிழ் அரசியல் தரப்புக்கள் பின்னர் பின்வாங்கிக் கொண்டதுடன், இந்தவிடயம் குறித்துப் பேச தயாரற்ற நிலைக்கும் சென்றனர். எனவே படையினரின் செயற்பாடுகள் சுமுகமாக இடம்பெறுவதுடன்,
ஆசிரியர்களும், பெற்றோரும் இதற்கு உடந்தையாக மாறியிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று வியாழக் கிழமை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் தேசிய மாணவர் படையணியினருக்கான பான்ட் வாத்திய அணிவகுப்பு பயிற்சிகளை வடக்கு மாகாண படைத்தளதிகள் மேற்பார்வையில் படையினர் வழங்கியிருக்கின்றனர். இது முற்று முழுதாக தமிழித்தின் அடுத்த போராடும் வல்லமையுள்ள தலைமுறையை முழுதாக சீரழிக்கும் ஒரு பாங்கிலேயே சென்று கொண்டிருக்கின்றது.

இதேவேளை யுத்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் மாணவர்கள் இதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த பான்ட வாத்திய அணிவகுப்பு பயிற்சிக்காக யாழ்.வந்த மாணவர்களின் பேருந்து ஒன்று பளை பகுதியில் விபத்திற்குள்ளானது.
இதில் 10 மாணவர்கள் படுகாயமடைந்திருப்பதுடன், மாணவர்களுக்கு தலைமை தாங்கிச் சென்ற ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். எனினும் இந்தவிடயம் பெரிதாகிவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக படையினர் படுகாயமடைந்த ஆசிரியரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்லாமல் உடனடியாகவே அனுராதபுரம் வைத்தியசாலைக்கு தங்களுடைய உலங்குவானுர்தி மூலமே கொண்டு சென்றுள்ளனர்

வெள்ளை வானில் கடத்த முயற்சித்த சம்பவம்! மடக்கிப்பிடிப்பு!


Friday 05 October 2012..By.Rajah.கொலன்னாவை நகர சபைத் தலைவரான ரவீந்திர உதயசாந்தவை வெள்ளை வானில் வந்தோர் கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று நேற்று 5.00 மணியளவில் இடம்பெறுள்ளது.
நேற்று மாலை 5.00 மணியளவில் நகரசபைத் தலைவர் காணப்பட்ட கொலன்னாவை விஹார மாவத்தைப் பிரதேசத்திற்குள் குறித்த வெள்ளை வான் பிரவேசித்துள்ளது. உடனடியாகச் செயலில் இறங்கிய பிரதேச சபைத் தலைவர், அங்கிருந்து வெளியேறி தனது ஆதரவாளர்களுக்கு தொலைபேசி ஊடாக இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளார். இதனையடுத்து அங்கு திரண்ட அவரது ஆதரவாளர்கள் அந்த வெள்ளை வானை சூழ்ந்து கொண்டு சிறைப்பிடித்துக் கொண்டனர்.
தகவலறிந்த வெல்லம்பிட்டிய பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெள்ளை வானில் காணப்பட்டவர்களைத் தங்களது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். குறித்த வெள்ளை வானில் பெருமளவிலான ஆயுதங்களும் காணப்பட்டன.
இதற்கு முன்னரும் இவர் வெள்ளைவான்காரர்களால் கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்ட போதும் அது கைகூடவில்லை. இவரது சகோதரர் ஒருவரும் முன்னர் வெள்ளைவான் வந்த ஆயுதாரிகளால் கடத்தப்பட்டிருந்தார். ஆனால் இவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை

வன்னி மக்களுக்கென்று கூறி இலங்கை


 Friday 05 October 2012.By.Rajah.இராணுவத்திற்கு 2000 மில்லியன் ரூபா செலவில் புது சீருடைகள்! என்னடா இப்படி ஒரு தலையங்கத்தில் செய்தி வெளியாகி இருக்கு எண்டு பார்க்கிறீர்களா ? இப்படியான செய்தி அரச ஊதுகுழலான தினகரனில் தான் வரும். ஆனால் உண்மையான விடையம் என்ன தெரியுமா ? இலங்கை இராணுவத்திற்கு 2000 மில்லியன் ரூபா செலவில் இலங்கை அரசு புது சீருடைகளை வழங்கவுள்ளது என்பது தான் !

படையினருக்கான துணி வகைகளை வாங்க, இலங்கை மந்திரிசபை 2000 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. முப்படை, அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய கடெட் கூட்டுத்தாபனத்தில் உள்ளவர்களுக்கு இந்த நிதி மூலம் புதிய சீருடை தைத்துக் கொடுக்கப்படும். இது மட்டுமல்லாது 4000 மில்லியன் ரூபாய் செலவில் இராணுவத்திற்காக , 10 மாடியில் நவீன வைத்தியசாலை ஒன்றும் கட்டப்படுமாம்.

இதற்கு மந்திசபையின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது. இச்செய்தியை வெளியிட்ட ஊடக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல , படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் திறமான சுகாதார வசதிகளை வழங்க வேண்டியது அரசின் கடமை என்று கூறியுள்ளார். ஆனால் வடக்கை அபிவிருத்தி செய்ய பணமில்லையென்று மகிந்தர் எல்லோரிடமும் கையேந்துகிறார். இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கும் நாடுகள் கவனிக்க வேண்டிய செய்தி இது

தென்னாபிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றான

Friday 05 October 2012..By.Rajah. சுவாசிலன் நாட்டின் அரசர் பற்றிய திடுக்கிடும் தகவல்!இலங்கைக்கும் சென்றிருந்தார்கடந்த ஆகஸ்ட் மாதம் சுவாசிலன், நாட்டின் மன்னர் இலங்கை சென்றிருந்தார். 3 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட மன்னருக்கு மகிந்தர் செங்கம்பள வரவேற்ப்பை வழங்கினார். தென்னாபிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றான சுவாசிலன் நாட்டின் அரசர் என, தன்னைக் கூறிக்கொள்ளும் மஸ்வட்3 என்னும் மன்னர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
குறிப்பாக மேற்குலக நாடுகள் அவரை தமது நாட்டுக்கு அழைப்பது இல்லை. இந் நிலையில் அவருக்கு ஒரு அங்கிகாரத்தைக் கொடுக்கும் வகையில், தமது நாட்டிற்கு வருமாறு மகிந்த அழைப்பை விடுத்தார். பல காலமாக வெளிநாடு எதற்கும் செல்லாமல் அடைபட்டிருந்த மஸ்வட் இதனை விட்டுவிடுவாரா என்ன ? உடனே கிளம்பி இலங்கை சென்றுவிட்டார். மன்னரோடு சேர்ந்து கட்டித் தழுவி மகிந்தர் புகைப்படங்களை எடுக்துக்கொண்டார். இவை எல்லாம் உலகளாவிய ரீதியில் ஊடகங்களில் அடிபட்டது அப்போது.

ஆனால் இப்போது இது மிகவும் அருவருப்பான ஒரு விடையமாக மாறியுள்ளது. காரணம் பலகாலமாகவே, மேற்குலகம் அவரைக் கண்டித்து வந்துள்ளது. குறிப்பாக இவருக்கு சுமார் 12 மனைவிகள் அதிகாரபூர்வமாக உள்ளனராம். அதிகாரமற்ற வகையில் நூற்றுக்கணக்கான மனைவிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைக் கூட மன்னித்துவிடலாம், ஆனால் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்துவது,
அவர்களை செக்ஸ் அடிமைகளாகப் பயன்படுத்துவது, மற்றும் இளம் பெண்களை கற்பழிப்பது என்று இவர்மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றது. இதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இருப்புக் கரங்கள் கொண்டு தனது நாட்டை ஆண்டுவரும் இம் மன்னர் சாம்பிராஜியத்துக்குள், அவ்வளவு எழிதில் வெளிநாட்டவர்கள் சென்று திரும்பமுடியாது.

இருப்பினும் , மஸ்வட் இராட்சியத்துக்கு உட்பட்ட பகுதியில், பெண்களையும் சிறிமிகளையும் அதிகாரிகள் கொடுமைப்படுத்தும் காட்சிகள் தற்போது புகைப்பட ஆதாரமாக வெளியாகியுள்ளது. சிறுமிகளையும், இளம்பெண்களையும், சில அதிகாரிகள் கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்வதும், பின்னர் அவர்களை வெட்டவெளியில் படுக்க வைத்து, பிறப்பு உறுப்பை சோதித்து அவர்கள் கன்னியா இல்லை கன்னி கழித்தவர்களா என்று பார்த்து சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.
கன்னிப் பெண்களுக்கு மட்டுமே இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு சான்றிதழ்களைப் பெற்ற பெண்களும் சிறுமிகளுமே அரசவைக்கு வேலைகளுக்கு அனுப்பி வைக்கபடுகின்றனர். இவர்களில் ஒருவரை நாளுக்கு நாள் மன்னர், எடுத்துக்கொள்வார். இதனை இந் நாட்டின் பெண்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். அதுபோக இப்படியான ஒரு மாயத் தோற்றத்தில், அந் நாட்டுப் பெண்களை வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

சிறு வயதில் இருந்தே, பெண் பிள்ளைகளின் பெற்றோர், மன்னர் குறிது செய்திகளைக் கூறி பிள்ளைகளை வளர்க்கின்றனராம். இதனால் அவர்கள் வளர்ந்ததும், மன்னருக்கு செக்ஸ் அடிமைகளாகச் செல்ல விரும்புகிறார்கள். ஒரு நாட்டில் சுதந்திர தினம் அல்லது தேசிய தினம் அனுஷ்டிக்கப்பாட்டால், தமது நாட்டின் இராணுவ பலத்தை இல்லையேல் தொழில் நுட்ப்ப வளத்தைக் காட்டுவது வளக்கம்.
ஆனால் சமீபத்தில் சுவாசிலன் நாட்டில் நடைபெற்ற தேசிய தினத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் அரை நிர்வாணமாக மன்னருக்கு முன் அணிவகுத்துச் சென்றுள்ளனர் என்றால் பாருங்களேன் ! இப்படிப்பட்ட பெருமையுள்ள மன்னரைத் தான் மகிந்தர் தனது நாட்டிற்கு அழைத்து செங்கம்பள வரவேற்ப்பை அளித்துள்ளார். இதைகேட்ட ஆய்வாளர் ஒருவர் கூறினார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிளவடையக் கூடிய அபாயம் !


Friday 0 5October 2012 By.Rajah..கட்சி சின்னம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிளவடையக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி சின்னமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ள சம்பந்தன் தீர்மானித்துள்ளார்.
எனினும், இந்த தீர்மானத்திற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் இணங்கவில்லை. இதேவேளை, புளொட் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு திவயின செய்தி வெளியிட்டுள்ளது

நோபெல் பரிசு யார் யாருக்கு கிடைக்கும்.


Friday 05 October2012.By.Rajah.வாடிக்கையாளர்களிடமபணம்வசூலிக்கும் சூதாட்டக்காரர்கள். உலகின் மிக உயரிய விருதான, நோபல் பரிசுகள், அடுத்த வாரம் அறிவிக்கப்படுகின்றன. மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது.
உலக அமைதிக்காகவும், மக்களுக்கும், தன்னலமற்ற சேவையாற்றுபவர்களுக்கும், சமாதான விருது வழங்கப்படுகிறது. நோபல் பரிசு, யாருக்கு கிடைக்கும் என்பது தொடர்பாக சூதாட்டங்களும் அரங்கேறி வருகின்றன. எனவே, நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள், மிகவும் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளன.

சீன எழுத்தாளர் மோ யான், ஜப்பானிய இலக்கியவாதி ஹருக்கி முரகாமி, எகிப்திய தன்னார்வலர் மேகல் கோப்ரான் ஆகியோருக்கு நோபல் பரிசு கிடைக்கும் எனக் கூறி, சூதாட்டக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் பணத்தை வசூலித்து வருகின்றனர்.
வரும், 8ம் தேதி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர் பெயரும், 9ம் தேதி, இயற்பியலுக்கான பரிசும், 10ம் தேதி, ரசாயனத்துக்கான பரிசும், 11ம் தேதி, இலக்கியத்துக்கான பரிசும், 12ம் தேதி, அமைதிக்கான பரிசும், 15ம் தேதி, பொருளாதாரத்துக்கான பரிசும் அறிவிக்கப்பட உள்ளன