Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 8 அக்டோபர், 2012

பெண்களுக்கு பிடித்த ஆண்களுக்கு பிடிக்காத சில விடயங்கள்

 திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ஆண்களும் பெண்களும் முற்றிலும் வித்தியாசமானவர்கள். அதேப் போல் தான் அவர்களது விருப்பங்களும் வித்தியாசம். அதிலும் ஒரு பெரும் ஆச்சரியம் என்னவென்றால், ஆண்களுக்குப் பிடிக்காதது பெண்களுக்குப் பிடிக்கும் என்பது தான். ஆண்களுக்கு பிடிக்காத எவற்றை பெண்கள் விரும்புகிறார்கள் என்று தெரியுமா?
சீரியல் பார்ப்பது
ஆண்களுக்கு எப்போதும் அதிகம் தொலைக்காட்சி பார்க்கவே பிடிக்காது. அவ்வாறு அவர்கள் பார்த்தால் கிரிக்கெட், செய்திகள் அல்லது ஏதாவது விளையாட்டை தான் பார்ப்பார்கள்.
ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களும் சரி சீரியல் தான். எந்த நேரமும் சீரியலையே பார்ப்பார்கள்.
சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை மறப்பார்களே தவிர, சீரியல் நேரத்தை மறக்காமல் நினைவில் வைத்து அதைப் பார்ப்பார்கள். இதைப் பார்க்கும் போது ஆண்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது.
ரொமான்டிக் நாவல் படிப்பது
பெண்கள் பொதுவாக அதிகமான அளவு ரொமான்ஸ் குணம் உள்ளவர்கள். அதனால் தான் அவர்கள் ஏதேனும் ரொமான்டிக் நாவல் படிப்பது, அவற்றை தன் காதல் வாழ்க்கையோடு ஒப்பிட்டு வருத்தப்படுவது.
சரியான நேரத்தில் எழுந்திருப்பது
பெரும்பாலான பெண்களுக்கு சரியான நேரத்தை கடைபிடிப்பது என்பது மிகவும் பிடிக்கும். அதனால் தான் படுக்கும் போது கூட அலாரம் வைத்துவிட்டு, காலையில் எழுந்து வேலை செய்வார்கள்.
ஊர் கதை மற்றும் கிசுகிசு பேசுவது
பெண்களிடம் இருக்கும் பழக்கங்களில் மாற்ற முடியாத விஷயம் என்றால் அது ஊர் கதை பேசுவது தான். ஆண்களுக்கும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால், மட்டும் தான் பேசுவார்கள்.
குழந்தைகள் பிடிக்கும்
பெண்களுக்கு பொதுவாகவே குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் குழந்தைகளை எங்கு பார்த்தாலும் கொஞ்சி மகிழ்வார்கள்

தோல் தொற்று நோய்களுக்கான பாதுகாப்பு முறைகள்

 திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012,By.Rajah.
மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மன உளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
1. புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இல்லாமல் காப்பதன் மூலம் தோல் நோய் மற்றும் தோல் புற்றுநோயைத் தவிர்க்க முடியும்.
2. தோல் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். வெளியில் சென்று வந்ததும், இளம் சுடுநீரால் முகத்தை கழுவி பஞ்சு அல்லது துண்டால் முகத்தை அழுத்தி துடைத்து, இறந்த செல்களை நீக்கலாம்.
3. காய்ந்த மற்றும் வறண்ட சருமத்துக்கு கொழுப்பு உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமத்தை தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.
4. ஆண்கள் ஷேவிங் செய்யும் முன்பு சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துண்டால் முடியைத் துடைக்கவும்.
5. முகத்தில் உள்ள சுரப்பிகள் அடைத்துக் கொள்வது மற்றும் பாக்டீரியா தொற்றின் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்றுகிறது. இது தவிர தைராய்டு சுரப்பியின் மாறுபாட்டாலும் பருக்கள், முடி வளர்வது போன்ற தொல்லைகள் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி கிரீம்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

கறுப்புப் பண வரி ஒப்பந்தத்துக்கு தேர்தல் மிரட்டல்

திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ஜேர்மனியின் கறுப்புப்பண முதலைகள் சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கும் ரகசிய இருப்புக்கு அந்த வங்கிகளே வரி வசூலிக்கும் ரூபிக் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில் ஜேர்மன் அரசுக்கு துரோகம் செய்யும் இந்த பணமுதலைகளுக்கு ஆதரவாக இருப்பதை விரும்பாததால் எதிர்கட்சியினர் இந்த பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி வெற்றி பெற திட்டமிட்டுள்ளனர்.
கறுப்புப்பணத்தைச் சட்ட ரீதியாக்கும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் சுவிஸ் வங்கிகள் தங்களின் வாடிக்கையாளரின் ரகசியத்தை பாதுகாக்க வேண்டி அவர்களின் பெயர்களை வெளியிடாது.
வரியை மட்டும் இருப்பு நிதியிலிருந்து எடுத்து உரிய நாடுகளுக்கு வழங்கும் இந்த ஒப்பந்தம் இன்னும் ஜேர்மன், பிரிட்டன், ஆஸ்ட்ரியாவில் கையெழுத்தாக வில்லை.
ஜேர்மனியில் அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்தின் கீழவையிலும் அரசுக்கு எந்தப்பிரச்னையும் இருக்காது.
ஆனால் மாநில முதல்வர்களை உறுப்பினராகக் கொண்ட மேலவை இந்த வரி ஒப்பந்தத்துக்கு சம்மதம் தராது என்று அரசியல் அறிஞர் கெர்ட் லாங்குத் கூறுகிறார்.
வரும் தேர்தலில் மைய, இடது, சமதர்ம குடியரசு கட்சியினர் அரசை கறுப்புப்பண முதலைகள் ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பிரதம வேட்பாளரான பியர் ஸ்ட்டீன் புரூக்கும் இந்த வரி ஒப்பந்தம் ஒரு தேச துரோகம் என்பதை கடந்த சில நாட்களாக பேசிவருகிறார்.
இந்த வரி ஏய்ப்பு என்பது ஜேர்மனியின் பிரச்சினை, இதற்கு சுவிஸ் ஜேர்மனிக்கு உதவ வேண்டும்.
வரிஏய்ப்பை சிறிய குற்றமாக கருத இயலாது. தேசத்துக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் ஏமாற்றுவேலை என்கிறார் ஸ்ட்டீன் புரூக்

சுவிஸ் அணுசக்தி நிலையங்களில் இடர்பாட்டுச் சோதனை

திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சுவிட்சர்லாந்தில் உள்ள அணுசக்தி நிலையங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்கிணங்க இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்து சோதித்து அறியப்பட்டது. அணுசக்தி நிலையங்கள் இச்சோதனைகளில் தேறிவிட்டன என்றாலும் லீப்ஸ்டாட் அணுசக்தி நிலையத்தில் ஹைட்ரஜன் மேலாண்மையை மேம்படுத்தலாம் என்பதும் தெரிவிக்கப்பட்டது என்று சுவிஸ் அணுசக்தி பாதுகாப்பு மத்திய சோதனைத்துறை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை, பல அணுசக்தி நிலையங்களில் மேம்படுத்த வேண்டியவை குறித்து தனது பரிந்துரைகளை வழங்கினாலும் சுவிஸ் அணுசக்தி நிலையங்களுக்கு மட்டும் பரிந்துரை எதுவும் வழங்கவில்லை. காரணம் சுவிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் கிடையாது.
மூஹ்லெபெர்க், பெஸ்னாக் மற்றும் கோஸ்கென் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களில் ஏற்கனவே இருந்த அனைத்து பிரச்சினைகளும் இப்போது தீர்க்கப்பட்டுள்ளதை இந்த சோதனையறிக்கை புலப்படுத்தியது.
லீப்ஸ்ட்டாட்டில் உள்ள ஹைட்ரஜன் மேலாண்மை பிரச்சினை ஏற்கனவே அறியப்பட்டதுதான் கடந்த ஜுன் மாதத்தில் அதற்கான அறிக்கைகளையும் இந்த அணுசக்தி நிலையம் சமர்பித்துள்ளது

கேரள மந்திரவாதியின் பூஜையில் பங்கேற்ற சமந்தா


 Monday, 08 October 2012, By.Rajah.
பில்லி, சூனிய பாதிப்பிலிருந்து விடுபட நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் சமந்தா பங்கேற்றுள்ளார்.
பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான சமந்தா, நான் ஈ பட வெற்றிக்கு பிறகு உச்சத்துக்கு சென்றார். மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
ஆனால் திடீரென்று தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டதால், படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து விலகினார்.
சமந்தாவுக்கு தீய சக்தியால் பாதிப்பு ஏற்பட்டது என்றும், அதனால் தான் இதுபோன்ற பிரச்னைகள் வருகிறது என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து வினீத் பற்றி கேள்விப்பட்டு அவர் நடத்திய சிறப்பு பூஜையில் பங்கேற்று இருக்கிறார் சமந்தா.
ஆந்திராவில் வசிக்கும் கேரள மந்திரவாதி டி.எஸ்.வினீத் பட் நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரபலம். தீய சக்திகளின் ஆதிக்கம் இருந்தால் அதை சிறப்பு பூஜைகள் நடத்தி சரி செய்வாராம்.
பாலகிருஷ்ணா உள்ளிட்ட டோலிவுட் நடிகர்கள் 20 பேர் வினீத்தை சந்தித்து சிறப்பு பூஜைகள் நடத்தி உள்ளார்கள். 10 ஆயிரம் ரூபாய் முதல் 1 கோடி வரை இந்த பூஜைக்கான கட்டணமாக அவர் வசூலிக்கிறாராம்.
இதுபற்றி வினீத் கூறும்போது, பிரபலங்கள் மற்றும் ஏழை எளியவர்கள் மீது தீயசக்தி பாதிப்பு இருந்தால் அதை சிறப்பு பூஜைகள் மூலம் சரி செய்கிறேன். அந்த தீய சக்தியை நான் தாங்கிக் கொள்வதால் என் உடல் பாதிக்கிறது. தாங்கும் சக்தியை பெருக்கிக் கொள்வதற்காகவே பணம் வாங்குகிறேன் என்றார்

பாலிவுட் வாய்ப்பை எதிர்நோக்கி பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ளும் சனா கான்

 Monday, 08 October 2012, By.Rajah.
பாலிவுட் ஹீரோ சல்மான் கான் ‘பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சிவில் வெளிநபர்கள் தொடர்பில்லாமல் பூட்டிய வீட்டுக்குள் 1 மாதம் தங்கியிருக்க வேண்டும். ரசிகர்கள் இவர்களது நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருப்பர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கொலிவுட் நடிகை சனா கானுக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து இவர் கூறுகையில், பிக் பாஸ் ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. உடனே ஒப்புக்கொண்டேன்.
இந்த ஷோவில் பங்கேற்கும்போது உடன் தங்கி இருப்பவர்களுடன் கருத்துவேறுபாடு, மோதல், கெட்ட வார்த்தைகள் பிரயோகம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்குமே என்கிறார்கள்.
இதற்கு முன்வேண்டுமானால் அந்த கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். தற்போது நிலைமை மாறி இருக்கிறது.
இதில் பங்கேற்பவர்கள் நல்லமுறையில் பழகுபவர்களாக இருக்கிறார்கள்.
ஒரே விடயம் என்னவென்றால் 24 மணி நேரமும் என்னை ரசிகர்கள் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.
எனவே உடை விடயத்தில் கவனமாக இருப்பேன் என்றும் இந்த ஷோ மூலம் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்

மாற்றான்-ஒரு அலசல்

 





08.10.2012.By.Rajah.தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ள படங்களில் ஒன்று .எதிர்வரும் 12 ம் திகதி வெளிவர உள்ளது .இந்த மாற்றான் பற்றிய ஒரு அலசலே இந்த பதிவு .

மாற்றான்
சூர்யா ,காஜல் , ,Sachin Khedekar(தெய்வ திருமகள் படத்தில் அமலாபாலின் தந்தை யாக நடித்தவர் )மற்றும் பலர் நடிப்பில் வெளிவர இருக்கும் மாற்றான் படத்தை கே.வி .ஆனந்த் இயக்குகிறார் .ஒளிப்பதிவு s .சௌந்தர் ராஜன் ,இசை ஹரிஸ் ஜெயராஜ் .கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இப்படத்தை a g s என்டேர்டைமென்ட் விநியோகிக்கிறது .தெலுங்கிலும் brothers என்ற பெயரில் இதே நாளில் வெளியாகும் இப்படம் சூர்யாவின் இதுவரை வெளிவந்த படங்களின் மிகப்பெரும் வெளியீடாக அமையவுள்ளது .

கே.வி .ஆனந்த்

புகைப்பட ஊடகவியாலராக (photo journalist ) தனது வாழ்வை ஆரம்பித்த கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமிடம் உதவியாளாராய் இணைந்ததன் மூலம் சினி உலகில் அடி எடுத்து வைத்தார் .தேவர்மகன் ,அமரன் போன்ற சில படங்களுக்கு ஒளிப்பதிவு உதவி யாளராய் பணி யாற்றிய பின் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படத்திலேயே(மலையாளம் ) சிறந்த ஒளி ப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கி தனது திறமையை நிரூபித்தார் .சிவாஜி,முதல்வன்,நேருக்குநேர் போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராய் பணியாற்றிய இவர் இயக்கிய முதல் படம் கனா கண்டேன் .பெரிய வெற்றியை பெற வில்லை ஆயினும் விமர்சகர்களின் பாராட்டை பெற்றது .அடுத்து இயக்கிய படங்கள் அயன் ,கோ .மூன்று படங்களிலேயே முன்னணி இயக்குனர் ஆகி விட்டார் .இதிலிருந்து இவரின் படங்களின் மவுசை அறியலாம் .

படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுப்பதுதான் இவரின் ஸ்பெஷல் .மசாலா படமான அயன் வெளியான 2009 ம் ஆண்டின் அதிக வசூலை பெற்ற படமாக திகழ்கிறது .சன் பிக்சர்சின் சளைக்காத விளம்பரமும் ஒரு காரணம் என்றாலும் இவர்தான் பிரதான காரணம் .தமிழ் சினிமாவில் தடுமாறி வந்த ஜீவாவை தனக்கென ஒரு இடத்தில் அமர்த்திய பெருமையும் இவருக்கே .சூர்யாவுடன் மீண்டும் கை கோர்த்து இருக்கும் இவரின் மாற்றானுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுவது தவிக்க முடியாததே

மாற்றான் படத்தின் கதை ஒட்டிப்பிறந்த இரட்டையரின் கதை .ஒருவன் நல்லவன் மற்றவன் கெட்டவன் .தமிழ் சினிமாவுக்கு புதுமையான கதை என சொல்ல முடியாத நிலையை அண்மையில் வெளிவந்த சாருலதா ஏற்படுத்தி விட்டது .எனினும் இரணது படமும் வெவ்வேறு திசையில் பயணிப்பதால் அலட்டிக் கொள்ள தேவை இல்லை .trailor பிரமிப்பு ஊட்டியிருந்தது .எனினும் அண்மைக் காலங்களில் படங்களின் trailor ,first லுக் வந்தவுடனேயே இது இன்ன படத்தின் காபி என இணையத்தில் கலாய்ப்பது வாடிக்கை ஆகி விட்டது .சில உண்மையாய் இருந்தாலும் பல பொய்யான தகவல்களே .அந்த வகையில் இது scareface எனும் ஹாலிவுட் படத்தின் தழுவல் என ஒரு கூட்டம் .எதிர்பார்க்கிறது எனினும் படம் அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடி ஆக்கும் என்பதே எனது கணிப்பு .


சூர்யா

சூர்யாவுக்கு ,விஜய் அஜித் அளவுக்கு ரசிகர்கள் கிடையாது .எனினும் இயக்குனர் தெரிவில் அவர்கள் காட்டிய அசமந்தமும் சூரியாவின் மிக சிறந்த இயக்குனர் தெரிவும் சில ஆண்டுகள் மக்கள் மனதில் அவரை முன்னணியில் வைத்து இருந்தது .இப்போது விஜய் ,அஜித் உம் இதே வழியை பின்பற்ற ஆரம்பித்து உள்ளதால் முன்னணியை தக்க வைக்க முடியாமல் போய் விட்டது .சூர்யா கொஞ்ச காலம் தொடர் ஹிட் கொடுத்து வந்த போது மக்கள் அவரின் படங்களை ரசித்தனர் ,எனினும் வழமையாய் இருந்த ரசிகர்கூட்டத்தை பெரியளவில் அதிகரிக்க முடிய வில்லை .அப்படி அதிகரித்த கூட்டத்தில் பெரும்பாலனவர்கள் அயன் படம் மூலம்தான் என்பதை அடித்து கூற முடியும் .சூர்யாவை வசூல் நாயகர்களில் ஒருவராக மாற்றிய படமும் அயன் தான் .
.விஜய் ,அஜித் இன் அண்மைக்கால வெற்றிகளும் ஏழாம் அறிவின் சறுக்கலும் சூர்யாவை சற்று பின் தள்ளி விட்டன .ஏழாம் அறிவு சூர்யாவின் படங்களிலேயே அதி கூடிய வசூலை பெற்றிருந்தாலும் எதிர் மறை விமர்சனங்களும் மக்களின் கருத்துக்களும் உதயநிதியின் அதீத பில்ட் அப்பும் சூர்யாவின் மீது கரும் புள்ளி ஒன்றை ஏற்படுத்தி விட்டன .அத்துடன் பொது உலகில் அண்மைக்காலமாக சூர்யாவின் போக்கும் வெறுக்கத் தூண்டும் விதமாக உள்ளது .இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதிலடி மாற்றான் வெற்றி தான் .சூர்யா மிக சிறந்த பதிலடியை கொடுப்பார் என நம்புகிறேன் .

ஹரிஸ்

ஹரிஸ் சூர்யா கூடணியை பற்றி விபரமாக ஏற்கனவே சொல்லி விட்டேன் ..எனவே ஹரிசின் அண்மைய நிலையை பார்ப்போம் .பாட்டுக்கள் பெரும்பாலானவை காபி என பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஹரிசின் பாடல்கள் மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன .இந்த வருடத்தின் டாப் ஆல்பம் ஆக இவரின் நண்பன் திகழ்கிறது .ஓகே ஓகே யும் சோடை போக இல்லை .ஆனால் மாற்றான் அந்த ரேஞ்சுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .சூர்யாவுடன் ஆன எல்லா படங்களின் பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் கடைசி இரு படங்களில் ஓரளவு சொதப்பி இருக்கிறார் ஹரிஸ் .சில வேலை நிறைய படங்கள் பண்ணிவிட்ட சலிப்போ என்னவோ .பாடல் வெளியாகி ஓரளவு காலம்ஆகி விட்டதால் படம் வரும் போது பாடல்கள் ஹிட் அடிக்க சந்தர்ப்பங்களும் உள்ளனஏனெனில் எல்லாம் அயன் தந்த எதிர்பார்ப்பு .அயனின் டைட்டில் சாங் மியூசிக் ஐ யாரும் மறந்து இருக்க மாட்டிர்கள் .

காஜல்

தெலுங்கில் மகாதீரா ,பிசினஸ் மன் போன்ற படங்கள் மூலம் முன்னணி இடத்தை பெற்று விட்டாலும் தமிழில் இதுதான் இவருக்கு பெரிய படம் .பழனி ,மோதி விளையாடு ,நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு படம் மட்டும் தான் வெற்றி பெற்று இருந்தது .எனவே தமிழில் மாற்றான் இவரை முன்னணி நடிகையாக மாற்றும் என நம்புவோம் .தொடர்ந்து துப்பாக்கியிலும் கலக்க இருப்பதால் தற்போது .எழுந்துள்ள சமந்தா அலையை அடக்க சந்தர்ப்பங்கள் உள்ளன .


கே.வி ஆனந்த் சூப்பர் கில்லாடி தந்து படங்களிலேயே தணந்து முன்னைய படங்களை கலாய்த்து காட்சிகள் அமைத்து இருப்பார் .மாற்றானிலும் கோ படத்தை கலாய்த்து ஒரு காட்சி trailor இல் வெளியாகி இருந்தது .மாற்றானில் இரு சூர்யாவில் அகிலன் அஜித் fan விமலன் விஜய் fan ஆம் .



ஆமா ஒருவன் கெட்டவன் ஒருவன் நல்லவன் அப்போ யாரு நல்லவன் யாரு கெட்டவன் சொல்லுங்க பார்ப்போம் .......ஹா ஹா

மாற்றான் வெற்றி பெற படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்

பிரான்ஸ் தலைநகர் பரிசில் எம்.ஜி.ஆர். விழா

   

08.10.2012.By.Rajah.பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆருக்காக விழா நடத்தப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு பாரிஸ் அருகிலுள்ள செயிண்ட் டெனிஸ் நகரில் நடைபெற்றது. செயிண்ட் டெனிஸ் நகர துணை மேயர் பவிலா, பிரான்ஸ் தமிழ் சங்க தலைவர் பா.தசரதன், டிரான்சிநகர்மன்ற உறுப்பினர் அலன் ஆனந்தன் மற்றும் யோகனந்த அடிகள், தேவ குமாரன், தளிஞ்சன்முருகையா ஆகிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் சென்னையிலிருந்து திரைப்பட நகைச்சுவை நடிகர் சார்லி, இதயக்கனி இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன், பத்திரிக்கையாளர் எம்.சிங்காரவேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை நிர்வாகிகள் ஆனந்தராமன், அன்பழகன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்த, பேரவை தலைவர் முருகு பத்மநாபன் தலைமை ஏற்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் எஸ்.விஜயன் பேசிய போது 2012 ல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நடைபெறும் போது உலகம் முழுவதும் குறிப்பாக ஐரோப்பா நாடுகள் முழுவதையும், ஒருங்கிணைத்து பாரிசில் மாபெரும் விழா நடத்த வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். சார்லி பேசும்போது எம்.ஜி.ஆரின் சிறப்பியல்புகளை வரிசைப்படுத்தி விரிவாகக் கூறினார். இறுதியில் பேரவை பொருளாளர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார். விழாவையொட்டி இதயக்கனி விஜயன் நடத்திய எம்.ஜி.ஆர். புகைப்படக் கண்காட்சியில் அவரது ஆபூர்வ புகைப்படங்களுடன் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய சால்வை, கருப்பு கண்ணாடி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஹொங்கொங்கில் படகு விபத்து: 36 பேர் பலி


08.10.2012.By.Rajah.ஹொங்கொங்கில் இரு படகுகள் மோதியால் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் பலியாகியுள்ளதுடன் 12 இற்கு‌ம் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர்.

அந்நாட்டிலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள லாம்மா தீவில் நடைபெற்ற வாண வேடிக்கை கண்காட்சி நிகழ்ச்சியை காண 120 இற்கும் மேற்பட்ட பயணிகள் படகில் சென்றுள்ளனர்.


இந்நிலையில் குறித்த படகு மற்றொரு பயணிகள் படகுடன் மோதி கவிழ்ந்ததில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் 100 பேரைக் காப்பாற்றி வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

பெருவில் பஸ் விபத்து: 22 பேர் பலி

08.10.2012.By.Rajah.பெருவில் பஸ் விபத்து: 22 பேர் பலி
 
பெருவில் அன்டெஸ் பிராந்தியத்திலுள்ள குன்றுப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தது 22 பேர் பலியானதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
வட பெலுவிலுள்ள ஹூவார்மகா மாவட்டத்தில் பயணித்த இரட்டைத் தட்டு பஸ்ஸே குறுகிய வீ
தியில் கட்டுப்பாட்டை இழந்து 800 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஸ்பெயின் நாட்டவர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
காயமடைந்தவர்கள் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதால் இறந்தவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது

இஸ்ரேலுக்குள் பிரவேசித்த ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது


08.10.2012..By.Rajah.இஸ்ரேலிய விமானப் படையினர் தமது நாட்டின் தென் பகுதிக்குள் பிரவேசித்த சிறிய ஆளற்ற விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்தது.
மேற்படி ஆளற்ற விமானம் நெகெவ் பாலைவனத்தின் வடக்கே தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானம் ௭ங்கிருந்து வந்தது ௭ன்பது தொடர்பில் அறியப்படவில்லை.

மேற்படி விமானம் மேற்கு பகுதியிலிருந்து பறந்து வந்துள்ளதாக நம்புவதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா அல்லது தாக்குதல் நடவடிக்கையொன்றுக்காக அனுப்பப்பட்டதா ௭ன அறியப்படவில்லை ௭ன அவர்கள் கூறினர்.
௭னினும் மேற்படி விமானத்தில் வெடிபொருட்கள் ௭துவும் இருக்கவில்லை ௭ன இராணுவ பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இஸ்ரேலிய வானொலி செய்தி வெளியிட்டுள்ளது

30,000 ஆண்டுகள் பழைமையான பண்டைய

08.10.2012.By.Rajah. யானை இனத்தின் ௭ச்சங்கள் கண்டுபிடிப்பு30000 ஆண்டுகள் பழையான உரோமங்களைக் கொண்ட பண்டைய யானை இனத்தின் ௭ச்சங்கள் வட ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தந்தம் மற்றும் உடலின் வலது பாகம் ௭ன்பவற்றை உள்ளடக்கிய இந்த யானையின் 500 கிலோகிராம் நிறையுடைய ௭ச்சங்கள் ரஷ்யாவின் ரேமைர் பிராந்தியத்தில் 11 வயது சிறுவன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உரோமத்தைக் கொண்ட யானை இன ௭ச்சங்களிலேயே மிக சிறந்த வகையில் பேணப்பட்டநிலையில் காணப்பட்ட இரண்டாவது ௭ச்சமாகவும் 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறந்த ௭ச்சமாகவும் இது விளங்குகிறது


உறைநிலையில் நன்கு பேணப்பட்டு காணப்பட்ட இந்த ஆண் யானை தனது 15 ஆவது வயதில் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஜொப்ஸின் அரிய புகைப்படங்கள்


                       
08.10.2012.ByRajah.இன்றைய தினம் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் உலகை விட்டு மறைந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
இதனை நினைவு கூரும் முகமாக ஸ்டீவ் ஜொப்ஸின் அரிய புகைப்படங்கள் பலவற்றை நாம் இங்கு தந்துள்ளோம்.
இப்படங்கள் அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கை தொடர்பானவை.

பேஸ்புக்’ இணையத்தளத்தை ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் பேர் உபயோகிப்பு








08.10.2012.By.Rajah.தற்போது ‘பேஸ்புக்’ இணையத்தளத்தை ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் பேர் உபயோகிப்பதாக அதன் ஸ்தாபகரான மார்க் சக்கர்பேர்க் அறிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் இணையத்தளமானது 219 பில்லியன புகைப்படங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதுஇந்த இணையத்தளம் தனது பயன்பாட்டாளர் தளத்தை விரிவுபடுத்துவதற்கு ௭திர்ப்பார்த்துள்ளது.

தற்போது மேற்படி இணையத்தளத்தை ௭டுத்துச் செல்லக்கூடிய உபகரணம் ஒன்றின் மூலம் 600 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தி வருவதாகவும் இது கடந்த ஜூன் மாதத்திலான 552 மில்லியன் பார்வையாளர்களுடன் ஒப்பிடுகையில் 48 மில்லியனுக்கும் அதிகமாகும் ௭னவும் தெரிவிக்கப்படுகிறது

தாலிக்கொடி திருடனை பிடிக்க கொழும்பில் நடந்த சுவாரஷ்ய சம்பவம்!




Monday 08 October 2012 .By.Rajah.கொழும்பில் வாகன நெரிசல்கள் இருந்தாலும் மின்விளக்கு சமிக்ஞைகள் இயங்கும் சந்திகளில் வாகனங்கள் நிறுத் தப்படும் போது அவற்றை நெருங்கி பிச்சை கேட்போரின் தொல்லை நாளாந்தம் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது.

அத்துடன், கைக்குழந்தைகளுடன் பெண்கள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் ஜன்னலைத் தட்டி பிச்சை கேட்பார்கள்.
வாகன ஓட்டிகள் அவர்களின் கையில் உள்ள பச்சிளம் பாலகர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு பணம் கொடுப்பார்கள். இந்தப் பாலகர்கள் இப்பெண்களின் பிள்ளைகளா? அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட பிள்ளைகளா என்ற சந்தேகம் இப்போது பொலிஸார் மனதில் வலுப்பெற்றுள்ளது.
இந்தப் பாலகர்களுக்கு இப்பெண்கள் உரிய முறையில் பாலுணவைக் கூடக் கொடுப்பதில்லை. பாலகர்கள் ஆரோக்கியமாக இருந்தால் எவரும் பரிதாபப்பட்டு உதவி செய்யமாட்டார்கள் என்பதற்காகவே இந்தப் பாலகர்கள் இவ்விதம் துன்பப்படுத்தப்படுகிறார்கள்.
அதுபோல் முடவர்கள், குருடர்கள் ஆகியோரும் வாகன ஓட்டிகளைத் துன்புறுத்தி பணம் பறிக்கிறார்கள்.
கடந்த வாரம் பொரளையில் நடந்த ஒரு சுவாரஷ்யமான சம்பவம்!

பொரளையிலுள்ள முச்சந்தி ஒன்றில் பயணித்த  தமிழ் பெண் டாக்டர் ஒருவர் தனது காரை நிறுத்திய போது ஒரு பிச்சைக்காரன் ஜன்னலைத் தட்டி பிச்சை கேட்டதைப் பார்த்த அந்தப் பெண் டாக்டர் அவனுக்கு 10 ரூபாவை ஜன்னலைத் திறந்து கொடுக்க முற்பட்டார்.

அப்போது அந்த பிச்சைக்கார திருடன் அப்பெண்மணியின் கழுத்தில் இருந்த தங்கத் தாலிக்கொடியைப் பிடித்து அறுத்துச்செல்ல முயற்சித்தான். அப்போது  மதிநுட்பம் மிக்க அந்தப் பெண் டாக்டர் தனது காரின் power windows ஐ அவன் எதிர்பாக்காதபோது திடீர் என்று அழுத்தி மூடிவிட்டார்.
இதனால் தப்பியோட முடியாமல் கார் ஜன்னலில் சிக்கியிருந்த கையை விடுவிக்க முடியாமல் அவன் வேதனையில் புலம்பிக்கொண்டிருந்த போது அருகில் இருந்த பொலிஸார் அவனைக் கைது செய்தனர்.

செய்த குற்றத்துக்கு எனது வாகனம் அவனைத் தண்டித்து விட்டது எனக்கு பொலிஸ் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் செல்ல நேரம் இல்லை, அவனை கடுமையாக எச்சரித்து விடுவியுங்கள் என்று கூறிவிட்டு அந்த வீரப் பெண்மணி அங்கிருந்து தனது காரில் பறந்து சென்றுவிட்டாள்.