siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

இரண்டு வயது குழந்தையை கொடுமையாக தாக்கிய தாய் கைது

செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012,By.Rajah.அமெரிக்காவில் இரண்டு வயது குழந்தையை மிக கொடுமையாக தாக்கிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவரது இரண்டு வயது குழந்தை சேட்டை செய்ததால், கையில் பசையை தேய்த்து சுவற்றில் ஒட்ட வைத்து விட்டார்.
அத்துடன் கையில் கிடைத்த பொருட்களை கொண்டும், வயிற்றில் எட்டி உதைத்தும் மிக கடுமையான முறையில் குழந்தையை தாக்கி உள்ளார்.
இதனால் குழந்தை கோமா நிலைக்கு சென்று விட்டது. நினைவு திரும்பிய பின் தன்னை தாக்கிய விதத்தை குழந்தை உறவினர்களிடம் தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக எலிசபெத்தை பொலிசார் கைது செய்தனர். இந்த குற்றச்சாட்டில் இவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பிரிட்டனில் உபயோகித்த போத்தல்களை மீண்டும் பயன்படுத்த தடை

 
செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah.பிரிட்டனில் ஏற்கனவே பயன்படுத்திய போத்தல்களை மறுபடியும் பயன்படுத்தவோ, பரிசாக கொடுக்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மிடில்டன் ஜாம் தயாரிப்பதை பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டன. இதனையடுத்து பிரிட்டனில் சமீப காலமாக வீட்டிலேயே ஜாம் தயாரிப்பது அதிகரித்து உள்ளது.
அதுமட்டுமல்லாது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட போத்தல்களில் இந்த பொருட்கள் அடைத்து வழங்கப்படுகின்றன.
உபயோகப்படுத்தப்பட்ட போத்தல்களை மறுபயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவது சட்டத்தை மீறும் செயலாகும் என பிரிட்டன் தேவாலயங்களுக்கான சட்ட ஆலோசனை துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பிரிட்டன் உணவுத் தர நிர்ணய கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பழைய போத்தல்களை மீண்டும் பயன்படுத்தும் போது, அந்த போத்தல்களில் உள்ள ரசாயனம் உணவில் கலக்க வாய்ப்புள்ளது.
இதனை தடுக்கவே இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த விதியை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 4.5 லட்சம் ரூபாய் வரை அபராதமோ அல்லது ஆறு மாத சிறை தண்டனையோ அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்வெளியில் இருந்தபடியே ஐஸ்கிரீமை சுவைக்க போகின்றார் சுனிதா வில்லியம்ஸ்

செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah.சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்காக தனியார் விண்கலம் மூலம் ஐஸ்கிரீம் கொண்டு செல்லப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து பூமிக்கு மேல் 410 கிலோமீற்றர் தொலைவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன.
இந்த நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உட்பட மூன்று வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு தேவையான உடை, உணவு, தண்ணீர் மற்றும் சில உபகரணங்கள் உட்பட சுமார் 450 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து கொண்டு தனியார் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் நேற்று புறப்பட்டது.
இதில் வீரர்களுக்கு பிடித்தமான வெண்ணிலா ஐஸ்கிரீம்களும் கொண்டு செல்லப்பட்டது. இந்த விண்கலம் நாளை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை சென்றடையும்.
விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணையும் தருணத்திற்காக காத்து கொண்டிருக்கிறோம் என சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்

72 பேரை கொடூரமாக கொலை செய்த நபர் கைது

 
செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah.மெக்சிகோவில் 72 பேரை கொடூரமாக கொலை செய்த போதை பொருள் கும்பலின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோ நாட்டிலிருந்து மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மக்கள் குடிபெயர்வது வழக்கமான ஒன்று.
அவ்வாறு குடிபெயர்ந்த மக்களில் பலர் சான் பெர்னாண்டோ நகருக்கு அருகில் ரான்சு என்னுமிடத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 2010ஆம் ஆண்டில் 72 பேர்களை கொலை செய்து ஒரே இடத்தில் புதைத்திருந்தனர். இது தொடர்பாக போதை பொருள் கடத்தல் கும்பல் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து நடந்த விசாரணையில், இந்த கும்பல் மற்ற நாடுகளுக்கு குடிபெயர விரும்பிய நபர்களை கடத்தி, அவர்களை போதை பொருளை விழுங்க சொல்லி அதன் மூலம் போதை பொருட்களை கடத்தி வந்ததும், இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களை கொலை செய்து புதைப்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான சல்வேடர் அல்போன்ஸா மார்டினேஸ்(வயது 31) என்பவரை கப்பற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.

Fast Folder Eraser Pro மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

 செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah.
கணனியில் காணப்படும் Files-களை இலகுவாகக் கையாளும் முகமாக அவற்றினை Folder-களை உருவாக்கி சேமிப்பது வழமையான விடயமாகும். எனினும் இந்த Folder-கள் வேண்டப்படாதவிடத்து அவற்றினை கணனியிலிருந்து நீக்க முற்படும்போது கணனியின் செயற்படுதிறன் குறைவடையலாம்.
எனவே இப்பிரச்சினைக்கு விடையாக Fast Folder Eraser Pro எனும் மென்பொருள் காணப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் அதிகளவு எண்ணிக்கையான Files-களை கொண்ட Folder-களையும் இலகுவாகவும், விரைவாகவும் கணனியிலிருந்து நீக்க முடிவதுடன் கணனியின் திறனையும் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் நீக்கப்படும் Folder-களோ அல்லது Files-களோ Recyclebin பகுதிக்கு செல்லாது நேரடியாகவே கணனியிலிருந்து அகற்றப்படுகின்றது