Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 12 அக்டோபர், 2012

வெப்பத்தை அளக்கும் தெர்மா மீட்டர் ரூ.47 லட்சத்திற்கு ஏலம்

 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012,By.Rajah.
வெப்பத்தை அளக்க பயன்படுத்தும் தெர்மா மீட்டரை விஞ்ஞானி டேனியல் கபிரீயேல் பாரன்கீட் என்பவர் கண்டுபிடித்தார். இவை 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தான் தற்போது பல்வேறு தெர்மா மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது பல்வேறு தெர்மா மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பித்தளையினால் தயாரிக்கப்பட்ட இந்த தெர்மா மீட்டர் லண்டனில் உள்ள கிறிஸ்ட்ஸ் நிறுவனத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. தற்போது அந்த தெர்மா மீட்டர் ரூ.47 லட்சத்துக்கு ஏலம் போகியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக வேறு ஒரு நபருக்கு சொந்தமாக இருந்த தெர்மா மீட்டர் தற்போது ஏலம் மூலம் இன்னொருவர் கைக்கு மாறியுள்ளது. ஆனால், ஏலம் எடுத்த அந்த நபரின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

சிறையிலேயே குழந்தையை பெற்றெடுத்த பெண்


வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah.
போதைப் பொருள் மற்றும் மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் Julie Bilotta(வயது 26) என்ற பெண் சிறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கனடாவின் ஒட்டாவா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் Julie Bilotta என்ற பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பிரசவ வலி எடுத்த நேரத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை, நான்கு மணி நேரத்திற்கு பிறகே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
குழந்தை பிறந்ததும் ஒரு சில நாட்களுக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது குழந்தை பாட்டியின் பராமரிப்பில் உள்ளது

கடும் பொருளாதார நெருக்கடி: நோபல் பரிசை பெறுகிறது ஐரோப்பிய

 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah.
யூனியன்கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளை ஒருங்கிணைத்ததில் ஐரோப்பிய யூனியனுக்கு பெரும் பங்குண்டு என்ற அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் அமைதிக்கான நோபல் பரிசை பெறுகிறது. கடந்த 1957ம் ஆண்டில் 6 ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைத்தே ஐரோப்பிய யூனியன் முதன் முறையாக உருவாக்கப்பட்டது.
தற்போது இதில் 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஒரு பொது பாராளுமன்றமும் பொதுவான கரன்சியாக யூரோவும் புழக்கத்தில் இருக்கிறது.
இருப்பினும் 17 நாடுகள் மட்டுமே இந்த யூரோவை புழக்கத்தில் கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.
இந்த யூனியன் உருவாகி 55 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தற்சமயம் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பிய யூனியன் சிக்கித்தவிக்கிறது.
குறிப்பாக, இந்த யூனியனில் உள்ள ஸ்பெயின், கிரீஸ், போர்சுகல் போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதோடு, பொது கரன்சியான யூரோவின் மதிப்பும் சரித்து வருகின்றன.
இதனால் ஒட்டு மொத்த ஐரோப்பாவின் பொருளாதாரமும் தள்ளாடிக் கொண்டுள்ளதையடுத்து கிரீஸை யூனியனை விட்டே விரட்ட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த யூனியனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பாவில் அமைதி, ஒற்றுமை, ஜனநாயகம், மனித உரிமைகளை தழைத்தோங்கச் செய்ததில் ஐரோப்பிய யூனியனின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் பிரிந்து கிடந்த கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளை ஒருங்கிணைத்ததில் ஐரோப்பிய யூனியனுக்கு பெரும் பங்கு உண்டு என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதலில்

 
வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah.
41 பேர் பலி, 100 பேர் படுகாயம்அமெரிக்கா, ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் மலைப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒரக்ஷாய் பகுதியில் புலர்ந்கெல் என்ற இடத்தில் நேற்று ஒரு காம்பவுண்டு மீது அமெரிக்கா 4 ஏவுகணைகளை வீசியது. அதில், அங்கிருந்த ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 18 தீவிரவாதிகள் உயிரிழந்தனர், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் அந்த காம்பவுண்டுக்குள் இருந்து 4 வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகின. இதற்கிடையில், ஒரக்ஷாயில் முஸ்டி மேளா என்ற இடத்தில் 2 குண்டுகள் வெடித்தன. ஹசான்சாய் டார்ரா என்ற இடத்தில் கழுதைகள் பூட்டிய வண்டியில் குண்டு வெடித்தது. அதில் 3 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் மற்றொரு குண்டு வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த 2 தாக்குதல்களும் 22 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். அமெரிக்க ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பாகிஸ்தானில் உள்ள சிடா நகரில் மார்க்கெட் வெளிப்புறத்தில் குண்டு வெடித்தது. அதில் 12 பேர் உயிரிழந்தனர், 24 பேர் காயம் அடைந்தனர்.
அங்கிருந்த பல கடைகள் குண்டு வெடிப்பில் அழிந்தன. 4 வாகனங்கள், 2 சைக்கிள் ரிக்ஷாக்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. அங்கு ரிக்ஷா நிறுத்தத்தில் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ வெடி பொருட்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் அங்குள்ள டேரா புக்டி என்ற இடத்தில் சாலையோரம் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி தாக்குதலில் வாகனம் சிக்கி நொறுங்கியது. அதில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு 41 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை வீணாக்கும் சுவிட்சர்லாந்து

 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சுவிட்சர்லாந்தின் மத்திய தொழில்நுட்பக் கல்லூரியும் (சூரிச்), பேசெல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மக்கள் வீணாக்குவது தெரியவந்தது. இதன் மூலம் சுவிஸில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 320 கிராம் உணவு வீணாகின்றது.
Food waste.ch என்ற அறக்கட்டளையும் WWF என்ற சுற்றுச்சூழல் அமைப்பும் இந்த ஆய்வை நடத்த உதவியது.
WWF என்ற அமைப்பு ஒக்டோபர் 16ம் திகதி கொண்டாடப்படும் உலக உணவு நாளை ஒட்டி ஓர் அறிக்கை வெளியிட்டதில், ஒவ்வோர் ஆண்டும் நாம் இரண்டு மில்லியன் தொன் எடையுள்ள நல்ல உணவை வீணாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் நுகர்வோரே அதிகபட்ச(45%) உணவை வீணாக்குவதாகக் கண்டறியப்பட்டது.
சமையல் செய்வதில் 5 சதவீதம் வீணாகிறது. தரக்குறைவான பொருட்கள் என்ற காரணத்தால் 30 சதவீதம் தூக்கியெறியப்படுகின்றது.
விவசாயிகள் விளைச்சலில் 13 சதவீதத்தை வீசி விடுகின்றனர். சிலர் காய்கறிகளை மிகவும் பெரியவை அல்லது சரியாக விளையாதவை என்ற காரணத்திற்காக பறித்துக் கீழே போட்டு விடுகின்றனர்.
உணவை வீணாக்குவதால் 500000 கார்கள் உமிழும் கரியமிலப் புகைக்குச் சமமான தீமை ஏற்படுகின்றது.
உணவு வீணாவதைத் தடுக்க சில வழிமுறைகளை இந்த அமைப்பு பரிந்துரைத்தது.
பழைய அல்லது மிஞ்சிய உணவை மீண்டும் பயன்படுத்தவும், உணவை நன்றாக காற்றுப்புகாமல் மூடி வைக்கவும், குளிர்ச்சியான இடத்தில் (குளிர் சாதனப் பெட்டி) வைக்கவும், மொத்தமாக வாங்கிக் குவித்து வீணடிக்காமல் தேவைக்கேற்ப சிறிய அளவில் வாங்கி உண்ண வேண்டும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சுவிஸ் ஏழை பிரஜையை ஏமாற்றிய ஆஸ்திரிய சூதாட்டக் கழகம்

 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சுவிட்சர்லாந்தின் ஏழை ஒருவருக்குக் கிடைத் 43 மில்லியன் யூரோவை வழங்க ஆஸ்திரியக் காசினோ மறுத்ததால் இறுதியில் அவர் ஒரு மில்லியன் யூரோவைப் பெற்றுக்கொண்டார். பிரிகென்ஸ் காசினோ என்ற சூதாட்டக் கழகம் சுவிஸ் மாநிலமான செயிண்ட் கேலனின் எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கான்ஸ்ட்டன் ஏரியில் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.
இங்கு பெஹர் மெர்லாக்கு(வயது 27) என்பவர் ஒரு ஆட்டத்தில் 43 மில்லியன் யூரோவை வென்றார்.
இந்த அறிவிப்பு வந்து சில மாதங்கள் கழிந்த பின்பு அந்தக் கழகம், கணனியில் ஏதோ தவறு ஏற்பட்டு விட்டதாக அறிவித்து அவருக்குப் பரிசுத் தொகையை வழங்க மறுத்தது.
உடனே மெர்லாக்கு நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அவருக்கு ஜனவரி மாதத்துக்கு முன்பே 5 மில்லியன் யூரோ இழப்பீடு தருமாறு அறிவுறுத்தியது.
இத்தீர்ப்பு அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதனால் காசினோவே வெறும் 500000 யூரோவை வழங்கியது.
மீண்டும் இந்த வழக்கு யூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் நீதிமன்றத்துக்கு வெளியே பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதனை அனைவருக்கும் தெரியப்படுத்தினர். முடிவான தொகை பற்றி இருதரப்பினரும் தெரிவிக்காவிட்டாலும் 1 மில்லியன் யூரோவுக்கு மெர்லாக்கு ஒத்துக் கொண்டதாகத் ஆஸ்திரியாவிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.
இது குறித்து ஆஸ்திரியாவின் ஃபெல்ட்கிர்க் நீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளரான ரீன்ஹார்ட் ஃபிளாட்ஸ் இருதரப்பினருக்கிடையே சமரசம் ஏற்பட்டதை உறுதி செய்தார்

iPad Mini Tablet குறித்த தகவல்கள் வெளியானது

.வெள்ளிக்கிழமை,  12 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அப்பிள் iPad Mini Tablet-ன் தொழில்நுட்ப சாதனங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய Tablet 7.85 inch திரையினை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
ஆனால் இது 3G மற்றும் 4G Network வசதிக்கு Support செய்யாது என்று தகவல்கள் வெளிவந்தாலும், இதில் Wifi வசதியை மட்டும் பெறலாம் என்றும் கூறுகின்றன.
மேலும் A-6 Processor, Nano Sim Tray போன்ற வசதிகளுடன் முகப்பு கமெராவினையும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் 32 GB மற்றும் 64 GB Memory கொண்ட Version-களை பெறலாம். அநேகமாக இந்த Tablet புதிய இயங்குதளமான ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனம் இல்லா டொரண்டோ சாலை. விரைவில்

           
Thursday 11 October 2012.கொண்டுவர downtown councillor Kristyn Wong-Tam முயற்சி.கனடாவில் உள்ள டொரண்டோவின் downtown councillor Kristyn Wong-Tam சென்ற வருடன் மெக்சிகோவிற்கு சுற்றுலா நிமித்தமாக சென்றிருந்தபோது ஒரு ஞாயிற்றுகிழமை அன்று அங்குள்ள Guadalajara பகுதியில் எவ்வித வாகனமும் இல்லாமல் அமைதியாக இருந்ததை பார்த்து அதிசயித்துள்ளார்.
எப்போதும் பரபரப்பாக இயங்கும் அந்த சாலையின் அமைதியை பார்த்து, இதுபோன்று டொரண்டோ நகரத்தில் உள்ள சாலைகளுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக விரைவில் ஒரு மசோதா கொண்டுவர உள்ளதாக செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

அவர் நினைத்தபடி அந்த மசோதாவை நிறைவேற்றினால் டொரண்டோவின் முக்கிய பகுதிகளுலும், இனி வாகங்கள் எதுவுமில்லா சாலைகளை வாரம் ஒருமுறை பார்க்கும் வாய்ப்பு டொரண்டோ மக்களுக்கு கிடைக்கும். இந்த மசோதாவிற்கு பொதுமக்களிடையே பெரும் ஆதரவு இருக்கும் என நம்பப்படுகிறது
 

கனடாவில் இராணுவ ரகசியங்களை ரஷ்யாவிற்கு

          
Thursday 11 October 2012.By.Rajah.விற்ற கப்பல்படை துணைதளபதி கைது.ரஷ்யாவுக்கு கனடாவின் இராணுவ இரகசியங்களை வழங்கியது தொடர்பாக கனடா கப்பல் படையின் துணை தளபதி கைது செய்யப்பட்டார்.கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு கடந்த 2007ஆம் ஆண்டு முதல், கப்பல் படையின் துணை தளபதியான ஜெப்ரே பால் டெலிஸ்லே தகவல்களை அளித்து வந்தது தெரியவந்தது.

மேலும் இதற்காக இவருக்கு மாதம் 2800 முதல் 3000 அமெரிக்க டொலர் சம்பளமாக கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.இதனையடுத்து அவரது வீட்டை இராணுவமும், காவல்துறையினரும் சோதனை செய்தததில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அந்த வழக்கின் விசாரணை ஹேலிபெக்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியது. ஜெப்ரேயின் வழக்கறிஞர், குற்றவாளி தனது குற்றங்களை ஒத்து கொள்வதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10,11ஆம் திகதிகளுக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.இவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கனடியர்கள் பெரும்பாலும் அமெரிக்க

          
Thursday 11 October 2012 .By.Rajah.
விமான நிலையங்களை பயன்படுத்துவது ஏன்? பரபரப்பான தகவல். பணத்தை மீதப்படுத்தும் நோக்குடன் ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் கனேடியர்கள் அமெரிக்க விமான நிலையங்களைப் பயன்படுத்திப் பயணம் செய்வதாக அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.
அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளும் விமானப் பயணங்கள், 30 சதவீதம் செலவு குறைந்தவையாக அமைந்துள்ளதுகட்டணங்கள், வரிகள், மற்றும் சம்பளங்களில் உள்ள வேறுபாடு என்பன காரணமாக கனடாவில் இருந்து மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களுக்கான கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
கனேடிய அரசு, அதன் கொள்கைகளில் மாற்றம் செய்தால், இரண்டு மில்லியன் கனேடியர்கள் அமெரிக்க விமான நிலையங்களுக்குப் பதிலாக மீளவும் கனேடிய விமான நிலையங்களைப் பயன்படுத்துவார்களென அறிக்கை தெரிவிக்கிறது

காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது !

        
Thursday 11 October 2012 12.By.Rajah.

காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விக்கு கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி.ரமணிகாந்த் பதிலளிக்கிறார்.

நான் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன், நான் மூச்சு விடும் போது ஒரு விதமான விசில் சப்தம் வருகிறது. இதனால் வகுப்பறையில் மாணவர்களின் கேலிக்கு ஆளாகிவிடுகிறேன். இதை சரிசெய்ய முடியுமா?

பதில்: மூக்கு முதல் குரல் நாண் வரை அடைப்போ அல்லது குறுகலாவோ இருந்தால் சில விதமான சப்தங்கள் வரலாம். எந்த பகுதியில் அடைப்பு உள்ளது என்பதனை பொறுத்து தான் தெளிவாக கூறமுடியும். இதற்காக பயப்படவேண்டிய அவசியம் இல்லை இதனை எளிதாக சரி செய்ய இயலும்.

காது கேளாமை என்பது பிறவி கோளாறா? மரபணு கோளாறா அல்லது விபத்து, அதிர்ச்சி போன்றவற்றால் ஏற்படுகிறதா?

நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று காரணங்களாலும் காது கேளாமை, கேட்டலில் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.பாதிப்புகளின் அளவை பொறுத்து அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது செயற்கை காது கேட்கும் கருவியை பொருத்தியும் இதனை சரிசெய்யலாம்.

சைனஸ் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெஸ் என்ற சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதன் பலன் என்ன யாருக்கு பொருந்தும்?

பொதுவாக இந்த அறுவை சிகிச்சை இ.எஸ்.எஸ் என்று கூறப்படுகிறது. காதில் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. மருந்துகள் மூலம் பலன் இல்லாவிடில் சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு பாதிப்பை பொறுத்து செய்யப்படுகிறது. பாதிப்பு ஏற்பட்ட யாருக்கு வேண்டுமானலும் இந்த சிகிச்சை செய்யலாம்.

காதில் எதனால் சீழ் வடிகிறது? இதனை எவ்வாறு சரி செய்யவேண்டும்?

காதில் சீழ் வடிவதற்கான காரணத்தை கண்டறிந்து தான் முறையான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இது ஆரம்ப கட்டத்தில் இருப்பின் மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த இயலும். காதில் சீழ் வடிதலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நாட்கள் வரை மருந்துகளை உட்கொள்ளவேண்டும். மூக்கு தண்டு வடபாதிப்பு, சைனஸ் தொல்லை, டான்சில்ஸ், அண்ண சதைப் பிரச்னை போன்ற தொல்லைகளும் உடனிருந்து காதில் சீழ் வடிவது நெடுநாளாக இருந்தால் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும். ஒரு சிலருக்கு காதில் இருக்கும் சவ்வு கிழிந்து கூட சீழ் வரலாம். இவர்களுக்கு அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனரே சரியா?

வேக்ஸ் எனப்படும் திரவப்பொருள் பொதுவாக அனைவரின் காதுகளிலும் இருக்கும். இது காற்றில் உள்ள வாயுக்களினால் ஒரு சிலருக்கு திடப்பொருளாக மாறி கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தங்கி விடுகிறது. குளிக்கும் போது இயல்பாகவே வெளிவந்து விடுகிறது. ஒரு சிலருக்கு இது வெளிவராமல் கட்டி போன்று ஆகிவிடுகிறது. இவர்கள் மட்டும் மருத்துவர்களை அணுகி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இதனை தாமாக சுத்தம் செய்வது காதுகளின் உட்பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. காதுகளில் சோப்பு தண்ணீர், உடலில் தேய்த்துக்குளிக்கும் மாவு போன்றவை போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மூக்கடைப்பிற்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரேவின் காரணமாக புற்றுநோய் ஏற்படுமா?

பதில்: இல்லை, அதன் காரணமாக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புஇல்லை. பொதுவாக ஸ்பிரே இரண்டு வகைகளில் உள்ளது. ஸ்டிராய்டு, அலர்ஜி, சதை வளர்ச்சி போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரே வகைகள், மற்றொன்று சளிக்காக பயன்படுத்துவது. முதல் வகையை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தொடர்ந்து பயன்படுத்தலாம். இரண்டாம் வகையை ஒரு குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே பயன்படுத்தவேண்டும் அல்லது அதற்கு அடிமையாகிவிடுவோம். அதை தவிர புற்றுநோய் என்பது மூக்கு பொடி பயன்படுத்துவதால் வரலாம்.


கர்ப்ப காலத்தின் போது காது, மூக்கு, தொண்டை, ஆகிய பகுதிகளில் பிரச்னை ஏற்பட்டால் அதற்கான மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என்று கூறுகின்றனரே ஏன்?

காது, மூக்கு, தொண்டை மட்டும் அல்ல கர்ப்ப காலங்களில் எவ்வித மருந்துகளையும் உண்பதை தவிர்க்கவேண்டும். மருந்து எடுக்கும் போது அது நேரடியாக கருவில் உள்ள கருவை பாதிக்கும். மருந்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். என் தொழில் காரணமாக அதிகபட்ச நேரம் நான் செல்போன் பயன்படுத்தவேண்டிய சூழல் உள்ளது. இயர் போன் மூலம் பேசினால் பாதிப்புகளை தவிர்க்க முடியுமா?

செல்போன் பயன்பாட்டின் மூலம் இதுபோன்ற பாதிப்பு வரும் என்பதை உறுதியாக கூற இயலாது. இது பற்றிய ஆய்வு எதுவும் இன்னும் முழுமையடையவில்லை.ஆனால், அதிக நேரம் செல்போனில் பேசுவது கட்டாயம் கேட்கும் தன்மையை குறைத்து பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். சிறிது இடைவெளி விட்டு பேசுங்கள். இதில் இயர் போனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். அப்படியே பயன்படுத்தினாலும் ஒலி அளவை குறைத்து வைத்துக்கொள்வது பாதிப்புகளை குறைக்கும்.

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று

         
Friday 12 October 2012 .By.Rajah.
கியூபிரிவு பொலிஸாரிடம் பிடிபட்ட இலங்கையர்கள் விடுதலை ! அவுஸ்திரேலியாவுக்கு, செல்ல முயன்று, தூத்துக்குடி அருகே சிக்கிய இலங்கை அகதிகள் 55 பேர், நேற்று மாலை விடுவிக்கப்பட்டு, முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
.
தமிழகத்தின் பல்வேறு முகாம்கள், வீடுகளில் வசித்த 25 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 55 பேர், அவுஸ்திரேலியா செல்ல வந்தபோது, தூத்துக்குடி அருகே சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயிலில், கியூபிரிவு பொலிஸாரிடம் பிடிபட்டனர்.
.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களை விடுவிக்க உத்தரவிட்ட தமிழக அரசு, அவர்கள் மீண்டும் அதே இடத்திற்கு அனுப்ப வருவாய்த்துறை, பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
.
அதன்படி, 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரை, மண்டபம், வாழவந்தான் கோட்டை, போகநல்லூர் முகாம்களுக்கு, கியூபிரிவு பொலிஸார் நேற்று மாலை, பஸ்களில் அழைத்துச் சென்றனர்.
.
அரசு அனுமதிபெற்று சென்னை, சிதம்பரம், திருச்சியில் வீடுகளில் வசித்த, 22 குடும்பங்களைச்சேர்ந்த 47 பேரை, கியூ பிரிவு பொலிஸார் அந்தந்த இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். இவர்கள் அனைவரும், அந்தந்த ஊர்களில் பொலிஸாரால் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

வவுனியாவில் சிசுவை வீதியில் எறிந்து

         
Friday 12 October 2012 By.Rajah.
சென்ற இரக்க குணமற்ற பெற்றோர்! வவுனியா, பட்டைக் காடு, வேப்பங் குளம் பிரதேசத்தில் நடு வீதியில் வீசி எறியப்பட்ட நிலையில் பிறந்து மூன்று நாட்களே ஆன சிசு ஒன்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

சிசு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிசுவை வீதியில் வீசி எறிந்து சென்ற இரக்க குணமற்ற பெற்றோர் யாரென இதுவரை தெரியவரவில்லை.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்