Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

சசிகுமார் இயக்கத்தில் நடிக்க முடிவா?: சூர்யா பேட்டி

            
Sunday 21 October 2012  By.Rajah.
சசிகுமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகுமார் ஏற்கனவே சுப்பிரமணியபுரம் ஹிட் படத்தை இயக்கி பிரபலமானார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

தற்போது சூர்யாவுக்காக கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் செய்தி பரவியுள்ளது. இதுகுறித்து சூர்யாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சசிகுமாரும், நானும் சந்தித்து பேசினோம். கதை பற்றியும் விவாதித்தோம். ஆனால் சசிகுமார் இயக்கத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தால் படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை காலங்களில் மக்களை கவர

            
Sunday 21 October 2012 .By.Rajah.
புத்தம் புதுப்படங்களை அள்ளிய சன் டிவிவிடுமுறை தினங்களில் ஒளிபரப்புவதற்காக நான் ஈ, மிரட்டல், கலகலப்பு, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

விடுமுறை தினம் வந்தாலே போதும் சிறப்பு நிகழ்ச்சிகளையும், நடிகைகளின் பேட்டி, சிறப்பு திறப்படங்கள் போன்றவைகளை ஒளிபரப்பி விளம்பரங்கள் மூலம் கல்லா கட்டிவிடுவார்கள். இதில் புத்தம் புதுப்படங்களை யார் ஒளிபரப்புவது என்ற போட்டி வேறு ஏற்படும்.

ஒரே நடிகர் நடித்த படத்தை இரண்டு மூன்று சேனல்களில் போட்டு மக்களை குழப்புவார்கள். இனி தொடர்ந்து பண்டிகை விடுமுறைக் காலம் வர உள்ளதால் சன் டிவி அதற்கேற்ப ரசிகர்களை கவரும் வகையில் இப்பொழுது இருந்தே நிகழ்ச்சிகளை தயாரிக்க தொடங்கிவிட்டனராம்.

ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி, கிருஸ்துமஸ், பொங்கல் என விடுமுறைக் காலங்கள் தொடர்ந்து வர உள்ளன. அதற்கேற்ப புத்தம் புதுப்படங்களின் சேட்டிலைட் உரிமையை சத்தமில்லாமல் கைப்பற்றியுள்ளது.

கலகலப்பு, நான் ஈ, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம், மிரட்டல், சுந்தரபாண்டியன், பாகன், பிட்ஸா போன்ற பிரபல படங்கள் சன் டிவி வசம் உள்ளதால் வரிசையாக விடுமுறை தினங்களில் அவற்றை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது சன் டிவி. இதன் மூலம் அதிக அளவில் விளம்பரங்களை பெற முடியும் என்றும் எதிர்பார்க்கின்றனர் சன்டிவி நிர்வாகத்தினர்.

யாழ்ப்பாணத்து தமிழ் பெண்களை மணம் முடிக்கத் துடிக்கும் இராணுவம்!

         
Sunday 21 October 2012 By.Rajah.
யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர்.
அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது.
யுத்தத்தின் வடுக்களும் இடப்பெயர்வுகளின் தாக்கமும் தமிழர்களின் மனதிலிருந்து அகலாமல் இருக்கும் நிலையில், தமிழ்ச் சமூகத்தின் கலாசாரத்தினை, அவர்களின் வாழ்க்கை முறைமையினை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேலேழுந்துள்ளன.
வடக்கில் உள்ள முன்னாள் போராளிகளோ சரி, போரின் போது அவயவங்களை இழந்து வாழ்க்கையினைக் கொண்டு நடாத்த முடியாத பெண்கள் மற்றும் விதவைகள் ஆகியோர் படையினரால் மேலும் மேலும் தங்களுக்குள்ளே ஒரு உளவியல் போராட்டத்தினையே நடாத்திக் கொண்டு வருகின்றனர். நிம்மதியான வாழ்க்கை கிடைக்காதா என்ற ஏக்கம் பெண்களிற்கு மட்டுமல்ல. தற்போது ஆண்கள் பலரிடமும் கேள்விகளாக தொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் காரணம், தமிழ்ப் பெண்களை தற்போது குறிவைத்துள்ள இராணுவத்தினரைப் பற்றிய சிந்தனைகள் தான். வெளியில் சொல்ல முடியாமலும், சொல்வதானால் பழிக்கு ஆளாக வேண்டிவரும் என்ற பயத்தினாலும் பல பெண்கள் பல பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை சகித்துக் கொண்டுதான் போகவேண்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சமூகக் கட்டமைப்புக்கள் வலுவிழந்து வருகின்றமையை உணரக் கூடியதாக உள்ளது. அதாவது திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலங்களிலெல்லாம் கட்டுப்பாடுகள் மீறமுடியாதவைகளாக இருந்தன. மீறினால் நேரடியாகவே மறைமுகமாகவே தண்டனைகள் வலுவாக இருந்தன. ஆனால் இன்று ஆறாத ரணங்களோடு வாழ்க்கையினைக் கொண்டு நடத்தும் தமிழ்ச் சமூகத்தை சிங்கள மேலாதிக்க அரசாங்கம் எவ்விதத்திலெல்லாம் அடிமைப்படுத்த முடியுமோ அதையெல்லாம் திட்டமிட்டு மேற்கொள்கிறது.
Jaffna Tamil women Smack
தமிழர்களின் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் வாழ்ந்த சாதாரண மக்கள், அரசியல் ரீதியாக வழி நடத்திய தமிழ்த் தலைவர்களின் காலத்திலும், தமிழர்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் காலத்திலும், தங்களுடைய கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், மரபுகள் வழக்காறுகள் ஆகியவற்றை மிகவும் கண்டிப்பாக கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் மட்டுமின்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களும் அவ்வாறே வாழ்ந்தனர். ஆனால் ஆயுத ரீதியாக எப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களோ, அன்றிலிருந்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகள், உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றை விரட்டியடிக்க சமூக சீரழிவு எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் வன்புணர்வுக்குள்ளாக்கியும், பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை மேற்கொண்டும் இராணுவத்தினர் தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர். பிணம் தின்னும் கழுகுகளைப் போலவே அவர்கள் செயற்பட்டனர் என்பதில் சந்தேகம் இல்லை. இது முடிந்துவிட்ட பின், மீண்டும் இளம் பெண்களை குறிவைத்திருப்பது வேதனைக்குரியது. ( இதற்கு சில பெண்கள் உடன்படுகின்றமை அதைவிட வெட்கக்கேடு)
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகமான பாடசாலைச் சிறுமிகளை தங்களது வலையில் சிக்க வைக்கும் இராணுவத்தினர் வயது வித்தியாசமின்றி திருமணம் செய்யவும் துடிக்கின்றனர். ஒரு புறம் காதல் லீலைகள் நடந்தேற, மறுபுறம் திருமணம் முடிப்பதில் தீவிர முயற்சிகள். அவ்வாறு திருமணம் செய்வதற்காக பொய் சான்றிதழ்களை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இரவு பகலாக நடமாடும் தமிழர்களின் பகுதிகளின் நடமாடும் படையினர் அங்குள்ள பெண்களைப் பார்க்கும் பார்வை கழுகைவிட மோசமானதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் காரணம், யாராலும் தங்களைத் தட்டிக் கேட்க முடியாது என்ற சிந்தனைகள் மேலோங்கி இருப்பதுதான்.
அதாவது, தமிழ்ப் பெண்ணைத் திருமணம் முடித்துவிட்டு, வேறொரு சிங்களப் பெண்ணை திருமணம் செய்யலாம். இல்லையேல் வேறு பெண்களை காதலிக்கலாம். (எத்தனை பெண்களென்றாலும்) காரணம், திருமணம் முடித்தது தமிழ்ப் பெண்ணை. அவளாலோ இல்லை, அவள் சார்பாகவோ யாரும் கேட்க முடியாது. கேட்கவும் வேறு நபர்கள் முன்வர மாட்டார்கள். சிங்கள அரசின் பார்வையில் தமிழினம் ஒரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனம் என கருதப்படுவதனால்.
அது மட்டுமல்ல, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்த சிங்கள அரசு, தமிழ் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்காக இவ்வாறு சிங்கள இராணுவம் திட்டமிட்டு தமிழ்ப் பெண்களை திருமணம் முடித்து, தமிழர்களின் வாழ்விடங்களில் சிங்களப் பரம்பலை உருவாக்கலாம்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தங்களது தொழில் நிமித்தம் யாழ். மாவட்டத்தில் ஏனைய படைகள் இருப்பதனால், அவ் இராணுவத்தினர் நீண்ட காலங்களாக தம் குடும்பங்களைப் பிரிந்து தங்கி வாழ்வதனால் அவர்களின் இச்சைக்காக தமிழ்ப் பெண்களை நாடுவதனால் திருமணம் செய்யும் ஆசை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகரிப்பதோடு, யாழில் கலாசார சீரழிவுகளும் கூடவே இள வயது கர்ப்பங்களும் அதிகரிக்கின்றன.
Jaffna Tamil women Smack
இதனால் வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை எந்த நேரமும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பாலியல் துஸ்பிரயோகம், விபச்சார நிர்ப்பந்தம், இளவயதுக் கர்ப்பம் போன்ற சம்பவங்களால் பாதிப்புற்ற பெண்கள், நீதி கேட்கவோ, அல்லது சட்ட பரிகாரம் தேடிக்கொள்ளவோ, சிகிச்சை பெற்றுக்கொள்ளவோ முடியாத சூழ்நிலை போன்ற கொடுமைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றமையே உண்மை.
இவ்வருடம் ஜனவரி மாதம் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் முன்னாள் போராளி ஒருவருக்கும் ஜனாதிபதி செயலகத்தால் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே. இதுவே யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது திருமண ஆசைக்கான தூண்டுகோலாகவும் இருந்திருக்கலாம்.
இவ்வாறு எமது பண்பாட்டுக் கோலங்கள் சிதைக்கப்பட்டு, தாயகத்தின் மக்கள் தொகைச் சமநிலையை மாற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல என்பதனை உறுதி செய்துவிடும் என்பதே நிதர்சனம்

சிரியாவின் உள்நாட்டு போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்:

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அமெரிக்கா, துருக்கி வேண்டுகோள்முஸ்லிம்களின் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட இருப்பதால், சிரியாவில் நடந்து வரும் போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா சிரியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக நடந்து வரும் உள்நாட்டு போரில், இதுவரை 30 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிரியாவில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகை காலம் அடுத்த வாரம் தொடங்குகிறது.
இந்த விழாவில் அனைத்து முஸ்லிம் மக்களும் பங்கேற்க வசதியாக சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் சிரியாவை வலியுறுத்தி உள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி விக்டோரியா நூலந்து கூறுகையில், சிரியாவில் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது.
இந்த மத விழாவில் அனைத்து முஸ்லிம் மக்களும் எந்த வித பய உணர்வும் இல்லாமல் கலந்து கொள்ள வசதியாக தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதற்காக எங்களது ஆதரவாளர் பெர்காமி அங்கு விரைந்து உள்ளார்.
நாங்கள் சிரியாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். உங்களது அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
மக்கள் பண்டிகை கால கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாட வசதியாகவும், மனித நேயத்துடன் சிரியா நடந்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம் என்றார்.
இந்நிலையில் சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு சிரியாவின் ஆதரவு நாடுகளான துருக்கி மற்றும் ஈரான் நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
துருக்கி வெளிவிவகாரத்துறை அமைச்சர் அகமத் தவுத்தோகுலு, மக்களின் விடுமுறை கொண்டாடத்தை சீர்குலைக்காத வகையில் சிரியாவில் 3 அல்லது 4 நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மும்மர் கடாபியின் இளைய மகன் படுகொலை

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah.
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாஃபியின் இளைய மகன் நேற்று(சனிக்கிழமை) திரிப்போலியில் நடைபெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் இவருடன் சேர்ந்து லிபிய தேசிய காங்கிரஸின் தலைவர் மொஹம்மட் மாக்ரிஃபும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிப்போலியிலிருந்து 170 Km தூரத்தில் அமைந்துள்ள 'பானி வலிட்' எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றதில் லிபிய இராணுவத்தின் பிரிவான 'காமிஸ் பிரிகேட்' இல் தளபதியாகப் பணியாற்றிய காமிஸ் கடாஃபி படுகாயமடைந்தார்.
மேலும் இராணுவத்திடம் சிக்கிய பின்னரே உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் மும்மர் கடாஃபி கொல்லப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ஈரானில் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தென்கிழக்கே பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜீலை மற்றும் டிசம்பர் மாதங்களில் சம்பாஹர் பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 67 பேர் பலியாயினர்.
இது தொடர்பாக யாக்ஹா, அப்துல் ஜலில், அப்துல்பாசித் ரகி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கில் ஜஹிர்தான் நீதிமன்ற நீதிபதி முகமது மெர்தாஹி தூக்கு தண்டனை விதித்தார்.
இதனையடுத்து மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது

மரணத்தை ஏற்படுத்தும் பக்கவாத நோயால் பிடெல் காஸ்ட்ரோ பாதிப்பு

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012.By.Rajah.
கியூபாவின் மாஜி ஜனாதிபதியும் புரட்சியாளருமான பிடெல் காஸ்ட்ரோ(வயது 86) பக்கவாத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தன்னை சுற்றியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுவதாகவும் பேச முடியாத நிலையில் காஸ்ட்ரோ உள்ளதாகவும் அவரை கண்காணித்து வருகின்ற மருத்துவர் ஜோஸ் மார்க்குயினா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, காஸ்ட்ரோவை தற்போது தாக்கியிருக்கும் பக்கவாத நோய் நரம்பு மண்டலத்தை முழுவதும் செயலிழக்க செய்து இறப்பை ஏற்படுத்த வல்லதாகும் என்றார்.
இதற்கிடையில் கியூபாவிலும் அமெரிக்காவிலும் காஸ்ட்ரோ இறந்து விட்டார் என்றும் கோமா நிலைக்கு சென்று விட்டார் எனவும் சில பத்திரிக்கைகள் பல மாதங்களாக வெளியிட்டு வருகின்றன.
பிடெல் காஸ்ட்ரோ 1959- 2006 வரை கியூபாவின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என முக்கிய தலைமைப்பதவிகளை வகித்து வந்தவர் ஆவார்.
2006ம் ஆண்டு இவர் பதவி விலகிய பின்னர், இன்று வரை இவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் ஜனாதிபதியாக பதவியில் உள்ளார்.

அவுஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: மக்கள் ஓட்டம்

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அவுஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் கடலில் உள்ள வனாது தீவுக் கூட்டங்களில் இன்று காலை 4.31 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.6 என பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே நிலநடுக்கம் சற்று சக்தி வாய்ந்ததாக இருந்ததால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்தனர்.
மேலும் தங்களது வீடுகளை விட்டுவெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
தெற்கு பசிபிக் கடலில் 22 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்நில நடுக்கத்தினால் கடலில் வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழுந்தன.
ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை

காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012,By.Rajah.உலகில் முக்கிய தேவையான பெட்ரோலை காற்றிலிருந்து தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பூமியில் கச்சா எண்ணெயின் அளவு குறைந்து கொண்டே வருவதால், மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காற்றின் மூலம் மின்சாரம் தயாரித்து இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
காற்றில் உள்ள கார்பன் -டை ஆக்சைடுடன், ஹைட்ரஜன் கலந்து மெத்தனால் உருவாக்கப்படுகிறது.
அதில் இருந்து பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. தற்போது இதுபோன்ற பெட்ரோலை 3 மாதத்தில் 5 லிட்டர் மட்டுமே தயாரிக்க முடிகிறது.
எனவே பெரிய அளவில் பிளாண்ட் அமைத்து அதன் மூலம் தினசரி டன் கணக்கில் பெட்ரோல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும்.
இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோல் தயாரிக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்று மூலம் பெட்ரோல் தயாரிக்கும் தொழில்நுட்பம் சமீபத்தில் லண்டனில் நடந்த பொறியியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.