Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 4 நவம்பர், 2012

வறுமையில் வாடிய பாட்டி கோடீஸ்வரியான சுவாரஸ்யம்

06.11.2012.By.Rajah.கரன்ட் பில் கட்ட முடியவில்லை, கேபிளுக்கு பணம் கட்டவில்லை. அதனால் வயரை பிடுங்கி விட்டார்கள். வீட்டில் கஷ்டம். ஐந்து மாதமாக சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலை. ஜூலி செர்வீரா (69) என்ற அமெரிக்க பாட்டியின் நிலைமை இதுதான். ஆனால், 5 மாதத்துக்கு முன்பு அவர் கோடீஸ்வரியாகி விட்டார் என்பது இப்போது பரபரப்பாகி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசிப்பவர் ஜூலி செர்வீரா (69). கணவன் இறந்த பிறகு குழந்தைகளை வளர்க்க படாத பாடுபட்டார். ஓராண்டாக இவருக்கு சோதனை மேல் சோதனை. இவரது மகன் ரூடி (47) கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டார். அவருடைய 4 டீன்ஏஜ் மகன்களையும் வளர்க்கும் பொறுப்பும் சேர்ந்துகொண்டது.
மேலும், திருமணமான 3 மகள்கள். பேர குழந்தைகள் என பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பால் திணறினார் ஜூலி பாட்டி. கடந்த 5 மாதமாக கடும் பண நெருக்கடி. கரன்ட் பில் கட்ட பணம் இல்லை. கேபிளுக்கு பணம் கொடுக்காததால், வயரை பிடுங்கி சென்றுவிட்டார்கள். ஆனால், அதிர்ஷ்ட தேவதை கடந்த மே மாதமே ஜூலியை கோடீஸ்வரியாக்கி விட்டது என்பதுதான் அவருக்கு தெரியவில்லை. மகள் சார்லினா மார்க்கசுடன் கடந்த மே மாதம் ஷாப்பிங் சென்றிருந்தார் ஜூலி.

பர்சில் இருந்த சில்லரை காசுகளை திரட்டி மகளிடம் கொடுத்த ஜூலி, வாட்டர் பாட்டில் வாங்கி வர சொன்னார். அப்படியே ஒரு லாட்டரி சீட்டும் வாங்கிவர சொன்னார். தண்ணீர் வாங்கவே காசு இல்லை. இதுல லாட்டரி டிக்கெட் வேறயா என்று கடுப்பான மகள் வேண்டா வெறுப்பாக ஒரு சூப்பர் லோட்டோ பிளஸ் டிக்கெட் வாங்கினார். அதை கார் பாக்சில் வைத்ததோடு அதுபற்றி மறந்துபோனார் ஜூலி. அந்த டிக்கெட்டுக்குதான் முதல் பரிசு 23 மில்லியன் டாலர் (ரூ.123 கோடி) விழுந்திருந்தது.

டிக்கெட் வாங்கியவர் 6 மாதத்துக்குள் (நவம்பர் 26,ம் தேதி) பரிசு தொகையை வாங்காவிட்டால் பரிசு தொகை முழுவதும் பள்ளி நலத்திட்டங்களுக்கு போய்விடும் என்பது விதிமுறை. இதனால், லாட்டரி சீட்டு கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து, டிக்கெட் வாங்கியவரை லாட்டரி நிறுவன அதிகாரிகள் கடந்த 5 மாதமாக தேடினர். கேமராவில் பதிவான உருவத்தை அச்சிட்டு பல பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டினர்.
அதை ஜூலி பாட்டியின் இன்னொரு மகள் கடந்த வியாழனன்று பார்த்துவிட்டார். அம்மா ஜூலியிடம் தகவல் சொன்னார். முதல் பரிசு விழுந்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை. காரில் வைத்த லாட்டரி சீட்டை ஜூலி பாட்டி தேடி கண்டுபிடித்தார். உடனடியாக அதிகாரிகளை சந்தித்து லாட்டரி சீட்டை கொடுத்தார். ஆனந்த அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த ஜூலி பாட்டி கூறுகையில், விபத்தில் இறந்த மகன் ரூடி மீண்டும் கிடைத்தால், இந்த பணம் முழுவதையும் கொடுத்து விடுவேன் என்று கூறி அழுதார்.
மகள்கள் அவரை தேற்றினர். மூன்று மகள்கள், 6 பேரக் குழந்தைகள் இருந்தும், மனநிலை பாதிக்கப்பட்ட 5 வயது மற்றும் 7 வயதுள்ள 2 ஆண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஜூலி. அவருடைய நல்ல உள்ளத்தை லாட்டரி அதிகாரிகளும் பாராட்டி பரிசு தொகை வழங்கினர்.

கனடாவில் இன்று இரவு முதல் ஒரு மணிநேரம்

.          
Clock changes in Montrealகனடாவில் இன்று இரவு முதல் நேர மாற்றம் அமுலாக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைக்காலத்தில் ஒரு மணி நேரத்தை கூட்டியும், குளிர் காலத்தில் ஒரு மணி நேரத்தை குறைத்தும் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் செய்வது வழக்கம். அதுபோல இவ்வருடம் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது.
தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால், இன்று முதல் ஒரு மணி நேரத்தை குறைக்கப்படுகிறது. அதாவது இன்று இரவு 2 மணி ஆகும்போது 1 மணி என்று மாற்றி அமைக்கப்படும்,,,,,,04.11.2012.

சிறுத்தை’ சிவா-அஜீத் இணையும் படத்திற்கு இசையமைக்கிறார் தேவிஸ்ரீபிரசாத்

04.11.By.Rajah.தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிற விஷயம் என்னவென்றால், அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கு இசையமைக்கப் போவது என்ற கேள்விதான்.

அந்த வகையில், அஜீத்தின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் யுவன்சங்கர் ராஜாதான் இசையமைக்கப் போகிறார் என்று பேச்சு வந்தது. அதன்பின், ‘கொலவெறி’ புகழ் அனிருத் இசையமைக்கிறார் என்ற செய்தியும் வந்தது. ஆனால்,

தற்போது அஜீத்-சிவா இணையும் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மிகவும் பிரபலமானவர். இவர் இசையில் வெளிவந்துள்ள அனைத்து பாடல்களும் வெற்றியடைந்துள்ளன.

முதல்முறையாக அஜீத் படத்துக்கு இசையமைக்கப்போகும் தேவிஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தமிழ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

நான் கவர்ச்சிக்கு ஒத்துவரமாட்டேன் என யார் கூறியது? இனியா

04.11..By.Rajah.வாகை சூடவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இனியா. இப்படத்தைத் தொடர்ந்து ‘மௌனகுரு’ என்ற படத்தில் நடித்த இனியா, தற்போது தங்கர்பச்சானின் ‘அம்மாவின் கைப்பேசி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக, இயக்குனர் பாரதிராஜா இயக்கும் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் நீக்கப்பட்டார். இதுகுறித்து இனியா கூறும்போது,

இயக்குனர் பாரதிராஜா படத்திலிருந்து நான் நீக்கப்பட்டது பெரிய இழப்பு என்றாலும், அவருடைய இயக்கத்தில் எப்போதாவது நடித்து அந்த இழப்பை சரிசெய்து கொள்வேன்.
நான் கவர்ச்சிக்கு ஒத்துவரமாட்டேன் என சிலர் நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனக்கு அதுமாதியான வேடங்கள் இதுவரை அமையவில்லை. ஆனால் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக உபயோகித்து அதிரடி நடிகையாக உருவெடுப்பேன். தமிழில் முன்னணி நடிகையாவதே என்னுடைய நோக்கம்

பாலச்சந்தரின் புதிய தொடர் ‘இலக்கணம் மாறுதோ?

04.11.2012.By.Rajah.கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ள ‘இலக்கணம் மாறுதோ'. புதிய தொடர் வரும் திங்கட்கிழமை முதல் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாக இருக்கிறது.

"இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ..." நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் வந்த பாடலின் வரியை கவிதாலயா நிறுவனத்தின் அடுத்த நெடுந்தொடரின் தொடரின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

பாலசந்தரின் இயக்கமோ, தயாரிப்போ கதைக்களம் வித்தியாசமாகத்தான் இருக்கும். இந்த தொடரும் அதுபோலத்தான் என்பதை பெயரை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரேயா, சுரபி இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே உயிர்த் தோழிகள். இருவருக்கும் உரிய காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. வாசுவுக்கு சுரபி என்றும், சிவாவுக்கு ஸ்ரேயா என்றும் இவர்களின் பெற்றோர் நிச்சயிக்கிறார்கள். திருமணத்திற்கு முன் 3 மாத இடைவெளி இருக்க, நால்வரும் ஜோடியாக பழகுகிறார்கள். அப்பழக்கத்தின் பயனாக, நால்வரும் தத்தம் விருப்பு, வெறுப்புகளை நன்கு புரிந்து கொள்கிறார்கள். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விட அடுத்தவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் உகந்தவள் என்ற உண்மையை மெல்ல உணரத் தலைப்படுகின்றனர். இதை தோழிகள் இருவரும் கூட உணர்ந்து ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் முன் எழும் கேள்விகள் இப்போது இது தான்.

பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளையை மணப்பதா? அல்லது தத்தம் ரசனைக்கு ஒத்து வருகின்ற குண நலன்களை கொண்ட தனக்கேற்ற மற்றவரை ஏற்பதா? என்று யோசிக்கின்றனர். இறுதியில் நால்வரும் இரண்டாவது முடிவை ஒரு மனதாக தேர்ந்தெடுக்க, சிக்கல் உருவாகிறது. இவர்கள் வாழ்வு இவர்கள் முடிவிற்கேற்ப மகிழ்ச்சியாக அமையுமா? என்பதை சுவாரஸ்யத்துடன் கொண்டு செல்கின்றனர்.

இதில் ‘சஹானா' புகழ் காவ்யா, ஐஸ்வர்யா, விஜய், விக்கி, விஜய் ஆனந்த், கவிதாலயா கிருஷ்ணன், ‘அச்சமில்லை' கோபி, சாந்தி வில்லியம்ஸ், உஷா, லலிதா, விசேஷ், ஸ்வேதா, ஸ்ரீவித்யா, லட்சுமி நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் பிரமோதினி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகும் இந்த தொடரை புஷ்பா கந்தசுவாமி தயாரிக்க, வெங்கட் இயக்குகிறார்

ரூ350 மில்லியன் செலவில் களுவாஞ்சிக்குடி???

         
Sunday 04 November 2012.By.Rajah.
ஜப்பான் அரசாங்கத்தின் முழு பங்களிப்புடன் புனரமைக்கப்படவுள்ள மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புனரமைப்பு பணிகள் அடுத்த ஆண்டு முதல் மாதப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜப்பானிய அரசாங்கத்திடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த வைத்தியசாலை புனரமைக்கப்படவுள்ளது. இதற்காக ஜப்பான் அரசாங்கம் ஜய்க்கா திட்டத்தின் மூலம் 500 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடுசெய்துள்ளது.

இது தொடர்பிலான கலந்துரையாடல் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை அத்தியட்சர் கு.சுகுணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஜப்பான் அரசின் ஜெய்க்கா ஆய்வுக்குழுவின் தொழில்நுட்ப கணீப்பீட்டு பணிப்பாளர் டொமோக்கோ முராயாமா மற்றும் ஜெய்க்கா திட்டத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் கிசாந்தி மற்றும் வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

வழங்கப்படும் ஒதுக்கீட்டின் மூலம் சகல வைத்திய நிலையங்களையும் உள்ளடக்கியதான வைத்தியசாலை கட்டிடம் 350 மில்லியன் ரூபாவில் கட்டப்படவுள்ளதுடன் 150 மில்லியன் செலவில் அதற்கான உபகரணங்கள் பெறப்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வைத்தியசாலை பூர்த்திசெய்யப்படும்போது அங்கு பெறப்படவுள்ள நவீன தொழில்நுட்பங்களை கையாள்வதற்காக நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கும் இதன்போது ஜப்பான் உறுதியளித்துள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை அத்தியட்சர் கு.சுகுணன் தெரிவித்தார்.

கடந்த கால யுத்தம் மற்றும் வெள்ள அனர்த்த காலங்களில் படுவான்கரை உட்பட பல்வேறு பகுதி மக்களுக்கு சேவையாற்றும் வைத்தியசாலையாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை காணப்படுகின்றது.

தினமும் வெளி நோயாளர் பிரிவில் குறைந்தது 600பேர் பயனடைந்துசெல்வதாக தெரிவித்த வைத்திய அத்தியட்சர் புதிய வைத்தியசாலை அமைக்கப்படுவதன் மூலம் இந்த தொகை இரட்டிப்பாகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் வைத்தியசாலையாக இது அமையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
 



 

யாழில் பொதுமக்கள் மீது கடற்படையினர் கடும் தாக்குதல்!

          
Sunday 04 November 2012By.Rajah.  சுழிபுரம் கிழக்கு காட்டுப்புலம் திருவடிநிலை பகுதி பொதுமக்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருவடிநிலையில் கடற்பகுதியின் ஒருபகுதியை கடற்படையினர் தடைசெய்து வைத்துள்ளதால் இரண்டு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில் திடீரென மோட்டார் சைக்களில் வருகைதந்த கடற்படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கடற்படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து ஒன்று திரண்ட பொதுமக்கள் கடற்படையினரின் தண்ணீர் பௌசரை வழிமறித்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சி செய்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஆயினும் மேலதிகமாக குறித்த பகுதிக்கு கடற்படையினர் அனுப்பப்பட்டு பொதுமக்களை கலைக்க கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது