siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 5 நவம்பர், 2012

கவர்ச்சியான உடையில் நடனமாடி வாக்கு சேகரித்தார் கேத்தி பெர்ரி

05.11.2012.By.Rajah.{புகைப்படங்கள்},அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், பராக் ஒபாமாவுக்காக கவர்ச்சியாக உடையணிந்து ஆடிப் பாடி வாக்கு சேகரித்தார் பிரபல பாடகி கேத்தி பெர்ரி.
சான்டி புயலையும் தாண்டி, ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன.

இந்நிலையில் விஸ்கான்சின் மாகாணம், மில்வாக்கி நகரில் உள்ள டெல்டா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரபல பொப் பாடகி கேத்தி பெர்ரி கலந்து கொண்டு ஆடிப் பாடி ஒபாமாவுக்காக வாக்கு சேகரித்தார்.

ஒபாமா இந்த தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய பார்வர்ட் அதாவது முன்னேறிச் செல்வோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட உடையை அணிந்து கொண்டு பாடினார்.

அமெரிக்க தேச பக்திப் பாடலுடன் பாட ஆரம்பித்த கேத்தி பெர்ரி, தொடர்ந்து ஒபாமாவை ஆதரித்துப் பாடினார்.

இதற்கிடையே பாடலின் இடையே சான்டி புயலில் பாதிக்கப்பட்டோருக்கு தாராளமாக உதவுங்கள் என்ற கோரிக்கையையும் அவர் வைக்கத் தவறவில்லை

கனடா அரசின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ?

05.11.2012.By.Rajah.கனடிய அமைச்சரின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள ராயல் யார்க் ஹோட்டலில் குடியுரிமை மற்றும் புலம்பெயர்வுதுறை அமைச்சர் ஜேசன் கென்னிக்கு இஸ்ரேலின் ஹைஃபா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

அப்போது ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போராட்டக்காரர்கள் அரசின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், "கென்னி ஒழிக", "யாரும் சட்டவிரோதமான நபர்கள் கிடையாது" போன்ற பதாகைகளை ஏந்தியபடியும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கென்னி யூத எதிர்ப்பையும், இனவாதத்தையும், இனப்பகையையும் தொடர்ந்து வன்மையாக எதிர்த்து வருவதால் டாக்டர் பட்டம் வழங்குவதாக இஸ்ரேல் பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

14 வயது மாணவனுடன் தவறான உறவு: கர்ப்பமான ஆசிரியை

05.11.2012.By.Rajah.அமெரிக்காவில் தன்னிடம் படித்த 14 வயது மாணவனுடன் தவறான முறையில் உறவு வைத்திருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் அமன்டா சோடலோ.

இவருக்கும், இவரிடம் படித்த 14 வயது மாணவனுக்கும் தவறான உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியை அமன்டா கர்ப்பமானார்.

இதை குறித்த மாணவன் தன் சக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதால், வெளியே தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஆசிரியை தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்

பாகிஸ்தானில் நபரொருவர் உயிருடன் எரித்து கொலை?

பாகிஸ்தானில் பஞ்சாயத்து தலைவரின் தீர்ப்புபடி, 30 வயது மதிக்கத்தக்க நபரொருவர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள சினியோட் என்ற நகரில் வசிப்பவர் முகமது சிக்கந்தர்.

இவர் சில நாட்களுக்கு முன்னர் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து, சினியோட் கிராம பஞ்சாயத்தார் விசாரணை நடத்தினர்.

05.11.2012.By.Rajah.பின்னர் முகமதுவை உயிருடன் எரித்து கொல்ல வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அதன்படி, முகமது மீது கெரசின் ஊற்றி தீ வைத்தனர்.

படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து முகமதுவின் குடும்பத்தினர் கூறுகையில், ஒரு வீட்டில் திருடும் போது முகமதுவை பிடித்ததாக குற்றம் சாட்டினர். அப்படியே இருந்தாலும் அவரை பொலிசிடம் ஒப்படைக்காமல், உள்ளூர் பஞ்சாயத்தார் தண்டனை வழங்க முடிவு செய்தனர். உயிருடன் எரித்து கொன்று விட்டனர் என்று கண்ணீருடன் கூறினர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பொலிஸ், திருட்டு போன்ற குற்றங்கள் தொடர்பாக பஞ்சாயத்தார் விசாரிப்பதில்லை. எனினும் முகமது தானாகவே உடலுக்கு தீ வைத்து கொண்டாரா அல்லது வேறு யாராவது தீ வைத்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

இரகசியப் பயணம் மேற்கொண்ட கோத்தா

 
06.11.2012.By.Rajah.சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தென்னாபிரிக்காவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக லங்கா நியூஸ்வெப் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தப் பயணத்தின் போது அவர் தென்னாபிரிக்க அரசின் மூத்த அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தப் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது மற்றும் அதன் நோக்கம் குறித்து இந்தியாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவின் இந்தப் பயணத்தை அடுத்து, சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, நியோமல் பெரேரா, விநாயகமூர்த்தி முரளிதரன், பைசர் முஸ்தபா, ஜனக பண்டார ஆகியோரைக் கொண்ட குழு கடந்த ஒக்ரோபார் 27ம் நாள் ஒரு வாரகாலப் பயணமாக தென்னாபிரிக்கா சென்றதாகவும் லங்கா நியூஸ் வெப் தகவல் வெளியிட்டுள்ளது

இராஜதந்திரிகளை பீரிஸ் சந்திப்பு – கூட்டமைப்புடன் ஏட்டிக்குப் போட்டி?

 06.11.2012.By.Rajah.பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியைத் தளமாக கொண்டு செயற்படும் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவரின் அழைப்பின் பேரில், புதுடெல்லியை மையமாக கொண்டு செயற்படும் 76 நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பிந்திய சிறிலங்காவின் நிலைமைகள் குறித்த அவர் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய 90 நாடுகளில் பெரும்பாலானவை, சிறிலங்காவின் நிலைப்பாட்டை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் புதுடெல்லி சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு, புதுடெல்லியை மையமாக கொண்ட செயற்படும் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்திருந்தது.

இந்தநிலையிலேயே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரும் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்

ஜெனிவாவில் இலங்கை இந்தியா உட்பட மூன்று நாடுகள் இன்று ???

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுவரும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கை தொடர்பான ஆய்வு அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

06.11.2012.By.Rajah.இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு பேரவையினால் நியமிக்கப்பட்ட இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளே இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக இன்று விவாதிக்கப்படவுள்ளது.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக் குழுவினர் கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளின் அறிக்கை எவ்வாறு அமையும் என்பது தொடர்பிலேயே அனைவரதும் கவனம் திரும்பியுள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த மூன்று நாடுகளும் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய பேரவையினால் நியமிக்கப்பட்டபோது இலங்கை அது தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

காரணம் குறித்த மூன்று நாடுகளும் இவ்வருடம் மார்ச் மாதம் ஐநாவில் நடைபெற்ற 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடர் கடந்த ஒக்டோபர் மாதம் 22ம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில் இம்மாதம் முதலாம் திகதியே மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இந்த அமர்வில் இலங்கையிடம் கேள்விகளை எழுப்புவதற்கு 99 நாடுகள் தயாராக இருந்தநிலையில் அவற்றில் 20நாடுகள்  முன்கூட்டியே தமது கேள்விகளை பேரவைக்கு அனுப்பியிருந்தன.

கடந்த முதலாம் திகதி இலங்கையின் சார்பில் பேரவையின் அமர்வில் உரையாற்றியிருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க யுத்தத்தின் பின்னரான நாட்டின் நிலமை தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதாவது யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தல்கள் தொடர்பில் அவர் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.

அத்துடன் தற்போதும் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாத சக்திகள் செயற்பட்டுவருவதாகவும் நல்லிணக்கம், அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளினால் அவற்றைத் தோற்கடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரைக்குப் பின்னர் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இந்தியா போன்ற நாடுகள் இலங்கையிடம் கேள்விகளை எழுப்பியிருந்தன.

குறிப்பாக மனித உரிமை விவகாரம், 13வது திருத்தச் சட்டம், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, வட மாகாண சபைத் தேர்தல் போன்ற விடயங்கள் குறித்து பல நாடுகளும் கேள்வியெழுப்பியிருந்தன.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்காவின் பிரதிநிதி, நீதித்துறையில் அழுத்தங்கள் இருக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க பிரதிநிதியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவே குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியிருந்த இந்தியாவின் பிரதிநிதி வட மாகாண சபைத் தேர்தல் குறித்து கேள்வியெழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சமரசிங்க வடமாகாண சபைத் தேர்தலானது உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்தவகையில் மனித உரிமைப் பேரவையின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடர் நடைபெற்ற காலத்தில் இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து ஆராய்ந்து வந்த இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகள் தமது அறிக்கையை தயாரித்து இன்று பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஜெனிவாவில் இன்று வாக்கெடுப்பு

06.11.2012.By.Rajah.ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 14வது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான அறிக்கைத் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
கடந்த 1ம் நாள் ஜெனிவாவில் நடைபெற்ற அமர்வில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த விவாதம் இடம்பெற்றது.
இதன்போது, பாகிஸ்தான், சீனா, ரஸ்யா, ஈரான் உள்ளிட்ட ஒரு பகுதி நாடுகள் சிறிலங்காவின் அறிக்கையை ஆதரித்து கருத்துகளை வெளிட்டன.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சிறிலங்காவுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டிருந்தன.
அத்துடன், போர்க்குற்றங்களுக்கு நம்பகமான முறையில் பொறுப்புக் கூறுதல், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்துல், அரசியல்தீர்வு காணுதல், நீதித்துறையின் மீதான அரசியல் தலையீடுகளை தவிர்த்தல், வடக்கில் படைவிலக்கம், உயர்பாதுகாப்பு வலய நீக்கம், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அழுத்தங்களைக் கொடுத்திருந்தன.
இந்தநிலையில், சிறிலங்காவின் அறிக்கை மற்றும் நாடுகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் சிறிலங்கா தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த அறிக்கைத் தீர்மானம் இன்று மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.
இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெறவுள்ள அமர்வில் முதலில் பெரு தொடர்பான அறிக்கையின் மீதும் அடுத்து. சிறிலங்கா தொடர்பான அறிக்கை மீதும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த அறிக்கையில் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான பரிந்துரைகள் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது

விரைவில் அறிமுகமாகு​ம் புதிய Online Storage சேவை

06.11.2012.By.Rajah.இணையத்தளங்கள் மூலமான ஒன்லைன் ஸ்டோரேஜ் வசதியை Megaupload தளமானது வழங்கி வந்தது.
சுமார் 50 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டிருந்த Megaupload தளமானது அதன் முறையற்ற சேவைகள் காரணமாக அண்மையில் முடக்கப்பட்டமை அறிந்ததே.

இந்நிலையில் இத்தளத்திற்கு பதிலாக Me.ga எனும் புதிய தளத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பாக Kim Dotcom எனும் இணையத்தள நிறுவனமானது அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நியூசிலாந்து பொலிசார் மற்றும் FBI போன்றவற்றினால் Megaupload தளம் முடக்கப்பட்ட ஓராண்டு முடிவில் இத்தளம் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.

அதாவது எதிர்வரும் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட விருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேசத்தை தமது விருப்பத்திற்கேற்ப ??

  
06.11.2012.By.Rajah.சர்வதேசத்தை தமது விருப்பத்திற்கேற்ப நடத்த முடியும் என நினைத்த சிறீலங்கா, சர்வதேசத்தின் பலத்தை இப்போது தான் உணர்ந்து பயப்பட ஆரம்பித்துள்ளது என்று சிறீலங்காவிற்கான கனடியப் பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தமிழர்களினூடான சந்திப்பின் போது தெரிவித்தார்.
கனடிய மனிதவுரிமை மையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கலந்து கொண்ட கனடாவின் சிறீலங்கா விவகாரத்திற்கான உத்தியோகபூர்வ குழுவில் அங்கம் வகிக்கும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர், தாங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொண்ட விஜயம் தொடர்பான அறிக்கையை கனடிய அமைச்சரவையின் கவனத்திற்குச் சமர்ப்பித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது காணமற் போனவர்களிற்கான பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் உள்ள அழுத்தத்தை அது இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது எனவும் கனடா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேச நாடுகளோடு இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும் றிக் டிக்ஸ்ரா தெரிவித்தார்.

வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும், தமிழர்கள் சம பிரஜைகளாக வாழக்கூடிய வழியேற்படுத்தப்பட வேண்டும் போன்ற விடயங்களில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை தாங்கள் மீளாய்வு செய்வோம் என்றும் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட விவகாரங்களில் கனடாவிற்கு திருப்தியான முடிவு ஏற்படாதபட்சத்தில் கனடியப் பிரதமர், இலங்கையில் அடுத்தவருடம் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை மீளாய்வு செய்யமாட்டார் எனவும் றிக் டிக்ஸ்ரா குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் சுமார் 25 வருடங்களாக இயங்கும் கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட பல பிரமுகர்களும் கலந்து கொண்டு, கனடா-இலங்கை விவகாரத்தில் செயற்படுத்த வேண்டிய செயற்பாடுகள் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்

அமெரிக்காவில் சாண்டி புயலால் ஏற்பட்ட ஒரே நன்மை.

05 11  2012.By.Rajah..அமெரிக்காவை தாக்கிய சான்டி புயலால் அங்குள்ள மிக முக்கிய நகரங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்தன. நியூயார்க் நகரமும் ‘சான்டி'யின் தாண்டவத்திற்குத் தப்பவில்லை. ஆனால் இந்த புயலினால் சில நல்ல காரியங்களும் நடந்துள்ளதாம். அந்த நகரத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்.
சான்டி புயல் கடந்த திங்கட்கிழமை கரையை கடந்தது. இந்த புயலுக்கு 41 பேர் நியூயார்க் நகரில் கொல்லப்பட்டனர். புயலினால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் கொலை 86 சதவிகிதம் குறைந்து போனது. கொள்ளை 30 சதவிகிதம் குறைந்து போனது. கார் திருட்டு 24 சதவிகிதம் குறைந்து போனதாம்.
கடந்த ஆண்டு இதே வாரத்தில் 1,541 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அது இந்த ஆண்டு 1,061 ஆக குறைந்து போயுள்ளதாக புள்ளிவிபவரம் தெரிவிக்கிறது.
கியாஸ் ஸ்டேசனிலும், பெட்ரோலுக்கும் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதனை திருடத்தான் அதிக அளவில் முயற்சி நடைபெறுகிறது. சனிக்கிழமை மட்டும் கேஸ் நிறுவனங்களில் திருட முயன்றதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் சான்டி புயலால் குற்றங்கள் குறைந்திருப்பது நல்ல விசயம்தான் என்கின்றனர் நியூயார்க் நகரவாசிகள்