Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 6 நவம்பர், 2012

ரத்தத்தில் இருந்து செங்கல் தயாரிப்பு: சர்ச்சையை கிளப்பியுள்ள ?

06.11.2012..By.Rajah..லண்டனை சேர்ந்த ஜேக் மன்றோ ரத்தத்தில் செங்கல்லை தயாரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான ஜேக் மன்றோ, அனைத்து வகையான செங்கற்களையும் கொண்டு கட்டிடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்.
கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்தி வரும் இவர் தற்போது சர்ச்சைக்குரிய செங்கல்லை தயாரித்துள்ளார்.
26 வயதான ஜேக் மன்றோ விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளார்.
இதனை மணலுடன் கலந்து செங்கல் போன்று தயாரித்து, அவற்றை மின் அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைத்து பதப்படுத்துகிறார். ஒவ்வொரு ரத்த செங்கல் தயாரிப்பதற்கும் அவர் 35 லிட்டர் ரத்தத்தை பயன்படுத்துகிறார்.
இதுபற்றி ஜேக் கூறுகையில், இந்த செங்கல் தண்ணீர் புக முடியாத அளவுக்கு மிகவும் கெட்டியாக உள்ளது. இரும்பு கம்பிக்குப் பதில் இதனை பயன்படுத்த முடியும். மேலும் இந்த செங்கற்களைக் கொண்டு எகிப்தில் முன்மாதிரியான ஒரு கட்டுமானத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருக்கிறேன்.
இருப்பினும் இந்த செங்கற்களை கொண்டு வீடு கட்டினால் அதில் மக்கள் வசிக்க விரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்

வாழ்நாளிலேயே முதன்முறையாக வாக்களிக்க உள்ளார் 99 வயது மூதாட்டி

06.11.2012.By.Rajah.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன் வாழ்நாளிலேயே முதன் முறையாக 99 வயது மூதாட்டி வாக்களிக்க உள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் மியர்ஸ் பகுதியில் வசிப்பவர் ரோசி லெவிஸ்(வயது 99).

இத்தனை வருட காலமும் வாக்களிக்காமல் இருந்த ரோசி, தற்போது முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ளார்.
இதுவரையிலும் அவருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது அவருக்கு அடையாள அட்டை தபாலில் அனுப்பப்பட்டுள்ளதால், தனது பேரனுடன் சென்று வாக்களிக்க உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் வாழ்நாளில் இப்போதாவது வாக்களிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ரோசிக்கு ஏழு வயதாக இருக்கும் போது தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதாம்

சிரியாவில் காரில் குண்டு வைத்து தாக்குதல்: 50 பேர் பலி

06.11.2012.By.Rajah.சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள இராணுவ படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
.சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு இருதரப்புகளும் தாக்குதல்களை அதிகரித்துள்ளன.
இந்த கார் குண்டுத்தாக்குதலில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்த போதிலும் 50ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தலைநகர் டமஸ்கசில் அரசின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள மேற்குப்பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு கார்குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து அரசாங்கப் படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு எல்லையில் உள்ள ஹரிம் நகரில் விமானப்படை தாக்குதலில் 20 புரட்சிப்படையினர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது

ஈராக் ராணுவ முகாமில் குண்டு வெடிப்பு: 26 பேர் பலி

06..11.2012..By.Rajah..பொது இடங்களில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் நாள்தோறும் மக்கள் உயிரிழப்பது ஈராக்கில் தற்போது சர்வ சகஜமாகி விட்டது.
ஈராக்கில் 2006ம் ஆண்டு வன்முறை சம்பவங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக குறைய தொடங்கிய வன்முறை தாக்குதல்கள் மீண்டும் இந்த ஆண்டு தலை தூக்க தொடங்கியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் டஜி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் அருகில் சக்தி வாய்ந்த கார் குண்டு வெடித்தது.

இச்சம்பவத்தில் 26 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது

ஜரோப்பிய ஒன்றியம் பற்றி விவாதிக்க மெர்க்கெர் இங்கிலாந்து வருகை


06.11.2012.By.Rajah..யூரோ மண்டலம் தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பல நிபந்தனைகளை உள்ளடக்கிய பொது வரவு செலவுத்திட்டத்தைத் தயாரித்துள்ளது.
இத்திட்டத்தினை பிரிட்டனும்ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தியது. இதற்கு பிரிட்டன் பாராளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ஆதரவை பெறுவதற்கு ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்(Angela Merkel) பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்து பேசினார்.

ஜரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் மற்றும் 17 நாடுகளைக் கொண்ட யூரோ கட்சியினர் கூட, யூரோ மண்டலத்திற்கான வரவு செலவுத்திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.

சென்ற மாதம் பாராளுமன்றத்தில் அறிமுகமான இந்த மசோதா தோல்வியடைந்தது. ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேகும்(William Hague), பிரதமர் டேவிட் கேமரூனும்(Cameron) மீண்டும் நாடாளுமன்றத்தில் இத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று எடுத்துறைத்தனர். இது குறித்து மெர்க்கெல் அயர்லாந்தின் பிரதமரான எண்டா கென்னியுடன் சென்றவாரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

.ஜரோப்பிய ஒன்றியத்தின் அடுத்தக் கூட்டம் நவம்பர் 22, 23 நாட்களில் நடக்கத் திட்டமிடல் திட்டத்துக்கான ஓப்புதலை அனைத்த நாடுகளும் பெற வேண்டும் என்பதில் மெர்க்கெல் ஆர்வம் காட்டுகிறார் என்பதை அவரது தகவல் தொடர்பாளர் ஸ்டீபன் ஸீபெர்ட் பத்திகையாளரிடம் தெரிவித்தார்.

பிரிட்டன் ஜரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிப்போவதன் இடர்பாடுகளை எடுத்துரைக்கவே மெர்க்கெல் இலண்டன் சென்றிருப்பதாக வெளியுறவுத் தொடர்புகளுக்கான ஜரோப்பியக் குழுவின் ஒலாஃப் போயென்கே கூறினார்.

பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்த நிதித் திட்டதிடலுக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் ஐனுஸ் லீவாண்டோவ்ஸ்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனுக்கு ஒரு நீண்ட எதிர்காலம் இருப்பதை அந்நாடு சிந்திக்க வேண்டும் என்று வலியுத்தினார்.

ஜரோப்பியப் பாராளுமன்றத்தின் பசுமைக்கட்சியின் தலைவராக உள்ள டேனியல் கோன்-பெனடிட் பிரிட்டன் பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம் என்று ஆலோசனை கூறினார்

ஒபாமா ஜனாதிபதியானால் இலங்கைத் தமிழர்களுக்கு மாற்றம் வருமா?:

 06.11.2012.By.Rajah.தேசிய அளவில் ஒபாமா முன்னணி!பல ஆண்டுகளின் பின்னர்  கடும் போட்டியுடன்  இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், மக்கள் மழை, குளிர் என்பதையும் பொருட்படுத்தாது பெருந்திரளாகச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

அமெரிக்கா மூன்று வெவ்வேறு கால வட்டவகைகளில் இருப்பதால், முதலில் விடியும் கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் முதலில் வாக்குப்பதிவு தொடங்கியது.

எனவே முதல் வாக்குப் பதிவு இரு கிராமங்களில் தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததுமே அவை எண்ணப்பட்டன.

இதில் முதல் கிராமத்தில் ஒபாமாவுக்கு 5 வாக்குகளும், ராம்னிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன.

இன்னொரு கிராமத்தில் ஒபாமாவுக்கு 23 வாக்குகளும், ராம்னிக்கு 9 வாக்குகளும், லிபர்ட்டி கட்சி வேட்பாளருக்கு ஒரு வாக்கும் கிடைத்தன.

முதல் வாக்குப் பதிவு நடந்த கிராமம் டிக்ஸ்பில்லே நாட்ச். வடக்கு நியூ ஹாம்ப்ஷையரில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இங்குதான் முதல் வாக்குப் பதிவு தொடங்குகிறது. வாக்குப் பதிவு முடிந்த சில நிமிடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு விடும். கிட்டத்தட்ட ஜனாதிபதி தேர்தல் முடிவின் முன்னோட்டமாகவே இது அமையும்.

முதல் வாக்குப் பதிவு நடந்த இன்னொரு கிராமம் ஹார்ட்ஸ் லொகோஷன். இங்கு மொத்தம் 33 வாக்குகள்தான். 6 நிமிடங்களில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

23 வாக்குகளை ஒபாமா பெற்றிருந்தார். ராம்னிக்கு 9 வாக்குகள்தான். சுதந்திர கட்சியின் கேரி ஜான்சன் 1 வாக்கைப் பெற்றிருந்தார். 1948-ம் ஆண்டிலிருந்து இந்த இரு கிராமங்களில்தான் முதல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது.

தென் கரோலினா மாநிலத்தில் 108 வயது மூதாட்டி முதல் முறையாக வாக்களிக்கப் போகிறார். எழுதப் படிக்கத் தெரியாத அவருக்கு ட்ரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் இல்லை. அதனால் இதுவரை வாக்களிக்கவும் இல்லை. இந்த தடவை தேர்தல் விவாதங்களை கவனித்து வந்த அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால், குடும்பத்தினர் கவுண்டி தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

மருத்துவர் சான்றிதழ்களுடன் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. நான் ஒபாமாவுக்கு காக்களித்தேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்லும் இம் மூதாட்டி கறுப்பு இனத்தை சேர்ந்தவர்!

அடித்தட்டு, நடுத்தர மக்களே, முன் வாக்குப் பதிவுகளில் அதிகம் கலந்துகொள்வதால்  ஒபாமா முன்னணி வகிப்பதாக செய்திகள் அமெரிக்க தேர்தல் களச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்பது போன்ற போர்க்கள மாகாணங்கள் அனைத்திலும் ஒபாமாவே சற்று முன்னிலையில் இருப்பதாக கடைசியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

ஆனாலும் ரொம்னிக்கு வாக்களிக்கக்கூடியவர்கள்தான் அதிக அளவில் திரண்டு வாக்குச் சாவடிக்கு வருவார்கள் என்பதாகவும் இந்தக் கருத்துக் கணிப்புகள் கோடிகாட்டுகின்றன

விமான நிலையத்தில் $8.8 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

 .       
06.11.2012.By,Rajah.டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோகிராம் அளவுள்ள ஹெராயின் என்ற போதைபொருளை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஹெராயின் உள்ள பார்சல் விமானத்தின் லக்கேஜ் பகுதியில் இருந்த இந்த பார்சல் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது. கனடிய பார்டர் சர்வீஸஸ் அதிகாரிகள் இந்த பார்சலின் மீது சந்தேக அடைந்து, பார்சலை பிரித்து பார்த்ததில், அதில் ஹெராயின் இருப்பதை உறுதி செய்தனர்.
சர்வதேச அளவில் பிடிபட்ட ஹெராயின் மதிப்பு $8.8 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதை அனுப்பியவர் யார் என்ற விவரம் மற்றும் பிற விவரங்களை விசாரணையின் முக்கியத்துவம் கருதி வெளியிட விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியையும் சேர்த்து, இந்த வருடத்தில் இதுவரை 106 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள் கனடாவில் பிடிபட்டுள்ளதாக CBSA regional director general Goran Vragovic அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட மர்ம வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு. ???


06.11.2012.By.Rajah.கனடாவில் வான்கூவர் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் New Westminster SkyTrain Station தண்டவாளத்தில் திங்கட்கிழமை இரவு நேரத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பார்சலால் அந்த பகுதியே பரபரப்பு அடைந்தது. இரயில் பயணி ஒருவர் எடுத்த அந்த பார்சலில் அபாயகரமான பொருள் ஏதேனும் இருக்கும் என அஞ்சிய ரயில்வே துறையினர், உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இரவு 9.30 மணிக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்த மர்ம பார்சலை சோதனையிட்டதில், அந்த பார்சலில் 35 செ.மீ நீளமுள்ள ஒரு இரும்பு பைப் ஒன்றில் வெடிபொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அது ரிமோட்டால் இயக்கி வெடிக்கத்தக்க வகையான வெடிகுண்டு என்பதையும் கண்டுபிடித்தனர். பின்னர் ரோபோட் உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
இந்த பரபரப்பு காரணமாக அந்த வழியே செல்லும் இரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பின்னர் இரவு 11.30 மணிக்கு மேல் வேறு எந்த வகை வெடிபொருட்களும் ரயில் பாதையில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே போக்குவரத்துக்காக இரயில்கள் அனுமதிக்கப்பட்டன. இந்த வாரத்திலேயே வெடிபொருட்களை இரயில் தண்டவாளத்தில் கண்டு பிடிக்கப்பட்டது இது இரண்டாவது முறையாகும். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அனைத்து இரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ராகுல்காந்தி கல்வியறிவு இல்லாதவர். ராம் ஜெத்மலானி

       06.11.2012  By.Rajah. ராகுல்காந்தி கல்வியறிவு இல்லாதவர் என்ற ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். இன்று புது டெல்லியில் பேட்டியளித்த ராம் ஜெத்மலானி கூறியதாவது:-
பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி ஒருபுறம் தாவூத் இப்ராகீமுடன் சுவாமி விவேகானந்தரை ஒப்பிடுகிறார். இன்னொரு புறம் வருங்கால பிரதமராக நம் நாட்டின் மீது திணிக்கப்பட உள்ளதாக கூறப்படும் ராகுல் காந்தி, அன்னிய நேரடி முதலீட்டுக்கும், கார்கில் போருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்துக் கொள்ளாமல் இருக்கிறார். இதன் மூலம் அவர் கல்வியறிவு இல்லாதவர் என்பது தெளிவாகின்றது.
கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தி உருப்படியான ஒரு வாசகத்தையாவது கூறியது உண்டா? என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பாக பிரதமராக பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி மட்டுமே தைரியமான பிரதமர். அவருக்கு பிறகு அந்த கட்சியில் தைரியமாக குரல் கொடுக்க யாருமே இல்லை. இப்போது ஊழல் குடும்பத்தை ஆதரிக்கும் துதிபாடிகள் நிறைந்த கூடாரமாக காங்கிரஸ் கட்சி மாறி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்

விவேகானந்தர் பற்றிய சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் கட்காரி?

          
By.Rajaj.06-11.2012.நாக்பூரில் நடைபெற்ற விழாவில், பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, விவேகானந்தரின் அறிவுத்திறனை, கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிமின் அறிவுத் திறனுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
சர்ச்சைக்குரிய இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவரது கட்சியில் உள்ள தலைவர்களே அவரது கருத்தை எதிர்த்துள்ளனர். கட்காரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து மகேஷ் ஜெத்மலானி விலகினார். கட்காரி பதவி விலக வேண்டும் என்று ராம்ஜெத்மலானி இன்று வலியுறுத்தினார். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அத்வானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து கட்காரி விவகாரம் குறித்து இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தன் மீதான குற்றச்சாட்டை கட்காரி மறுத்து வந்த நிலையில், இதற்காக இன்று மன்னிப்பு கோரியுள்ளார்