siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 7 நவம்பர், 2012

ஒபாமா வெற்றி: ரஷிய அதிபர் புதின் வரவேற்பு

07.11.2012.By.Rajah.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று இருப்பதை ரஷிய அதிபர் புதின் வரவேற்று உள்ளார். ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று இருப்பது அமெரிக்காவுடனான ரஷியாவின் உறவில் ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தும் என்று அவர் கூறி இருக்கிறார்.
ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில்; பரஸ்பர ஆதாயம், மரியாதை, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட ரஷியா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்று இருப்பதால், அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து முன்னுரிமை அடிப்படையில் சிரியா பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை காணவேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறி உள்ளார்.
       

பதவியேற்கிறார் ஜி ஜின்பாங்: என்னென்ன மாற்றங்கள் வரும்?

07.11.2012.By.Rajah.சீனாவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் துணை ஜனாதிபதி ஜி ஜின்பாங்.
சீனாவின் தற்போதைய ஜனாதிபதி ஹூ ஜிண்டோவின் பதவிக் காலம் முடிவடைய உள்ளது.
இதனையடுத்து துணை ஜனாதிபதியான ஜி ஜின்பாங்(வயது 59), சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகப் பொறுப்பேற்பதுடன் ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்க இருக்கிறார்.
உலகம் முழுவதும் எதிரொலிக்கும் பொருளாதார மந்த நிலைக்கு சீனாவும் தப்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியில் சரிவு காணப்படும் நிலையில் புதிய ஜனாதிபதியாகும் ஜி ஜின்பாங் எப்படி இவற்றை எதிர்கொள்வார்? என்ற ஆர்வம் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பொப் பாடகியை திருமணம் செய்து கொண்டவர் ஜின்பாங் என்பது குறிப்பிடத்தக்கது

வாக்களித்த மக்களுக்கு நன்றி: ஒபாமாவின் வெற்றி உரை

07.11.2012.By.Rajah{காணொளி.இணைப்பு)அமெரிக்கா ஜனாதிபதியாக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ‌மிட் ரோம்னியை வீழ்த்தினார்.
ஒபாமாவுக்கு ஆதரவாக 303 வாக்குகளும், மிட் ரோம்னிக்கு ஆதரவாக 206 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
அமெரிக்காவில் சிறப்பான மாற்றம்
இந்நிலையில் தனது தேர்தல் கோட்டையான சிகாகோவில் ஒபாமா வெற்றி உரை ஆற்றினார்.
ஒபாமா சிறப்புரையை கேட்க இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அப்போது அவர் தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களுக்கும் தனது நன்றியை கூறும் வகையில், தன்னை இந்த உயரத்தை அடைய செய்த மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்தார்.
அமெரிக்கா சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக கூறிய ஒபாமா, சிறப்பான முன்னேற்றங்கள் பலவற்றை அடைய அமெரிக்க மக்கள் காத்திருப்பதாக தெரிவித்தார்.
முன்னேற்றப் பாதையை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் செல்வோம் என வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரோம்னியுடனான போட்டி சவால் நிரம்பியதாக இருந்தது.
அமெரிக்காவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல ரோம்னியுடைய ஆதரவும் கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியுடன் இணைந்து அமெரிக்க நிதி நெருக்கடியை சமாளிக்க திட்டங்கள் தீட்டப்படும் என்றார்
சவால்களை சமாளிப்பார் ஒபாமா பத்திரிகையாளர்களிடம் ரோம்னி கூறுகையில், மக்கள் ஒபாமாவை தலைவராக தெரிவு செய்துள்ளார்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். என்னுடன் கடுமையாக உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒபாமா சமாளிப்பார் என நம்புகிறேன். அமெரிக்கா மீது கொண்ட அக்கறை காரணமாக நான் தேர்தலில் போட்டியிட்டேன். இந்த நேரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறினார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி

07.11.2012.B.Rajah{ புகைப்படங்கள்.} சிறப்பான மாற்றம் காத்திருப்பதாக வெற்றி உரைஅமெரிக்கா ஜனாதிபதியாக பராக் ஒபாமா இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
நேற்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ‌மிட் ரோம்னியை வீழ்த்தினார்.
ஒபாமாவுக்கு ஆதரவாக 275 வாக்குகளும், மிட் ரோம்னிக்கு ஆதரவாக 203 வாக்குகளும் பதிவாகி உள்ளன.
அமெரிக்காவில் சிறப்பான மாற்றம்
இந்நிலையில் தனது தேர்தல் கோட்டையான சிகாகோவில் ஒபாமா வெற்றி உரை ஆற்றினார்.
ஒபாமா சிறப்புரையை கேட்க இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அப்போது அவர் தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களுக்கும் தனது நன்றியை கூறும் வகையில், தன்னை இந்த உயரத்தை அடைய செய்த மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்தார்.
அமெரிக்கா சாதிக்க வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக கூறிய ஒபாமா , சிறப்பான முன்னேற்றங்கள் பலவற்றை அடைய அமெரிக்க மக்கள் காத்திருப்பதாக தெரிவித்தார்.
முன்னேற்றப் பாதையை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாகச் செல்வோம் என வேண்டுகோள் விடுத்தார்.
அதிபர் தேர்தலில் ரோம்னியுடனான போட்டி சவால் நிரம்பியதாக இருந்தது.
அமெரிக்காவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல ரோம்னியுடைய ஆதரவும் கிடைக்கும் என தான் நமபுவதாக தெரிவித்தார்.
குடியரசுக் கட்சியுடன் இணைந்து அமெரிக்க நிதி நெருக்கடியை சமாளிக்க திட்டங்கள் தீட்டப்படும் என்றார்.
சவால்களை சமாளிப்பார் ஒபாமா
பத்திரிகையாளர்களிடம் ரோம்னி கூறுகையில், மக்கள் ஒபாமாவை தலைவரை தெரிவு செய்துள்ளார்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
என்னுடன் கடுமையாக உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒபாமா சமாளிப்பார் என நம்புகிறேன்.
அமெரிக்கா மீது கொண்ட அக்கறை காரணமாக நான் தேர்தலில் போட்டியிட்டேன். இந்த நேரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறினார்

கலவரத்துக்குக் காரணம் அமைச்சரா? பரமக்குடி சிக்கலில் சுந்தரராஜ்

     
 
07.11.2012-By.Rajah.தங்கள்சமூகஇளைஞர்கள்கொல்லப்பட்டதற்காகஓர்அஞ்சலி ஊர்வலத்தையாவது பரமக்குடியில் நடத்திவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த தேவர் அமைப்புகளும் முடிவு செய்தன. ஆனால் காவல் துறை அனுமதி மறுக்கவே, அதற்குக் காரணம் அமைச்சர் சுந்தரராஜ்தான் என்று கொந்தளிக் கின்றனர்!
கடந்த 2-ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பந்த் நடத்தி அமைதி ஊர்வலம் நடத்தவும் திட்டம் போட்டிருந்தனர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதைச் சுட்டிக்காட்டி போலீஸ், தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி ஊர்வலம் நடத்தியே தீருவோம் என்று அதற்கான ஆயத்தங்களில் சில அமைப்புகள் இறங்கின. அதனால் அதிகாலையிலேயே, கூட்டமைப்பின் தலைவர் வெள் ளைச்சாமி, செயலாளர் விஜயசாமி ஆகியோரைக் கைதுசெய்து பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விட்டனர். ஊர்வலம் புறப்படுவதாக இருந்த கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் தர்மபுரி எஸ்.பி. ஆஸ்ரா கர்க் தலைமையில் 1,000 போலீஸாரையும் அதிரடிப்படை போலீஸாரையும் குவித்தனர். ஐந்து முனை சந்திப்பு, ஓட்டப்பாலம், ஆத்துப்பாலம், ஆர்ச் போன்ற இடங்களிலும் போலீஸ் கூட்டம்தான். வாகன ஒலிபெருக்கி மூலம், 'நகரில் 144 போடப்பட்டு இருப்பதால், யாரும் வெளியே வர வேண்டாம்’ என்று எச்சரிக்கையும் விடுத்தபடி இருந்தனர்.
அதனால், பக்கத்து ஊர்களில் இருந்து பெருங்​கூட் டமாக ஆட்கள் திரள முடியவில்லை. ஒருசிலர் மட்டும் டூ வீலர்களில் போலீஸ் கண்களுக்குச் சிக்காமல் தேவர் மஹாலுக்கு வந்து சேர்ந்தனர். பக்கத்து ஊர்களான குமாரக்குறிச்சி, கமுதக்குடி, வேந்தோணி, உரப்புளி, பொதுவக்குடி, நைனார்கோவில், பெரும்பச்சேரி போன்ற ஊர்களில் இருந்து பலர் நடந்தே வந்து சேர்ந்தனர். தேவர் மஹாலில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவியத் தொடங்கவே... 'வெளியில் வந்தால் கைது. அதை மீறினால் லத்தி சார்ஜ்...’ என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர்
கூட்டத்தை ஒருங்கிணைத்த மறத்​தமிழர் சேனை அமைப்பின் தலைவர் பிரபாகரன் நம்மிடம், ''நடந்த மோசமான சம்பவங்களுக்குக் காரணமே அமைச்சர் சுந்தரராஜ்தான். நாங்கள் பெருவாரியாக ஓட்டுப் போட்டதால்தான் அவர் ஜெயித்தார். ஆனால், அவர் தன்னை தலித்துகளின் பிரதிநிதியாகவே காட்டிக்கொள்கிறார்.
கொடூரமான முறையில் இறந்துபோனவர்​களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டோம். அதற்கே மறுக்கிறார்கள். இங்கே சுந்தர ராஜ் ஆட்சிதான் நடக்கிறது. இந்திய அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரே, 'தனித் தொகுதிகள் 10 வருடங்களுக்கு மேல் தேவைஇல்லை’ என்று சொன்னார். ஆனால், பரமக்குடி மட்டும் 46 வருடங்களாக தனித்தொகுதியாக இருக்கிறது. இதனால் மற்ற சாதியினர் விரக்தி மனநிலையில் இருக்கிறார்கள்
தவறு செய்த குற்றவாளிகள் மீது காவல் துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. முக்குலத்து மக்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டுப் போட்டதால்தான் ஜெயலலிதா முதல்வராக இருக்கிறார். வரும் நாடா ளுமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் பெரும்பான்​மையாக இருக்கும் 16 தொகுதிகளில் அ.தி.மு.க. தோல் வியைத் தழுவும்'' என்று சீறினார்
போராட்டத்தை கைவிடும்படி, அ.தி.மு.க-வின் வி.ஐ.பி-கள் பலர் பிரபாகரனின் செல்போன் லைனில் வந்து சமாதானப்படுத்தினார்களாம். மதியம் வரை, யாரும் தடையை மீறி ஊர்வலம் நடத்த மஹாலை விட்டு வெளியே வருவதாக இல்லை. ஓர் இளைஞர் கூட்டம் மட்டும் வெளியே வந்து ஆட்சிக்கு எதிராக கோஷம் போட்டுவிட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் '16-ம் தேதி ஊர்வலத்தை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்து இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லுங்கள்’ என்று நிர்வாகிகள் அறிவிக்க, அவர்களைக் கடுமையாகத் திட்டியபடியே கலைந்து சென்றது கூட்டம்.
இதற்கிடையில், கமுதி - கோட்டைமேடு பகுதியில் கூடிய மக்கள், அதி.மு.க. கொடி​யையும் கறை வேட்டியையும் அமைச்சர் சுந்தரராஜ் படத்தையும் எரித்தனர். சாயல்​குடி, முதுகுளத்தூர், நைனார்​கோவில் போன்ற ஊர்களிலும் இதே நிலைதான்
இதுதொடர்பாக, அமைச்சர் சுந்தர ராஜிடம் பேசினோம். ''நான் எப்போதுமே சாதி மதத்துக்கு அப்பாற்பட்டவன். இந்தப் பிரச்னையில் ஏன் என் பெயரை இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேவர் குருபூஜை சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி பசும்பொன் சென்று ஏற்பாடுகளைப் பார்வையிட்டு வந்தேன். அதுபோலவே, இமானுவல் விழாவுக்கு வருகிறவர்கள் மோதிக்கொள்ளக் கூடாது என்பதற்காக தனியாக சாலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தேன். அப்போது, தலித் அமைப்புகள் என்னைத் திட்டினர். இப்போது, தேவர் அமைப்பினர் என்னைத் திட்டுகின்றனர். இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. குறுக்கு வழியில் பதவியைப் பிடிக்க நினைக்கும் எங்கள் கட்சியினர்தான் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். எது உண்மை என்பது அம்மாவுக்குத் தெரியும்'' என்றார் மிகுந்த வருத்தத்துடன்
16-ம் தேதி என்ன நடக்குமோ?

நீதி தேவதை மட்டும் எத்தனை நாள்களுக்குத்தான் உறங்குவது ?

        07.11.2012.By.Rajah.. கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமைகளைக் கண்டு, சாதாரண மனிதர்களுக்கே கோபம் வருவது இயல்பு. அப்படியிருக் கையில், நீதி தேவதை மட்டும் எத்தனை நாள்களுக்குத்தான் உறங்குவது போன்று நடிக்க முடியும்?

ஆனாலும் நீதி தேவதையின் விழிப்பு அதிகாரத்துக்கு பிடித்தமான ஒன்றல்ல.
அதிகாரத்தால் திரையிடப்பட்டு, நடந்தேறும் தில்லு முல்லுகளை நீதி தேவதையின் விழிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். ஆகவே கும்பகர் ணனைப்போல் எப்போதும் நீதியின் துயில் கொள்ளலையே ஆட்சியாளர்கள் விரும்பினர்
ஆயினும், தன்னைச் சூழ நடக் கும் அநியாயங்களின் உக்கிரம் தாங்கமுடியாமல் நீதிதேவதை யால் நிம்மதியாக உறங்க முடிய வில்லை. அதிகாரம் தன்னுடைய பொம்மை என்று இது நாள்வரை நினைத்திருந்த நீதி தேவதை மீள் உயிர் பெற்றாள்
அரியணை வாசிகளின் அக் கிரமங்கள் ஒவ்வொன்றாக வெளிப் படுத்தப்பட்டு, அவர்களின் ஒவ்வொரு நகர்தலும் கேள்விக் கணைகளால் முற்றுகைக்கு உள்ளாகின. தவறு செய்தவர்களுக்கு விழி பிதுங்கியது. அவர்களின் தயவில் ஒட்டிக்கொண் டிருந்தவர்களுக்கு பேதி குடிக்காமலே வயிறு கலங்கியது.
இனியும் விட்டு வைத்தால், தமது இருப்பு கேள்விக் குறியாகி விடும் என்பது அதிகாரத்துக்குப் புரிந்திருந்தது. தான் ஊட்டி வளர்த்த கடா மார்பில் பாய்ந்த பின்னர், வாளாவிருக்குமா ஆட் சித்தரப்பு? தொடங்கியது கண்ணுக்குத் தெரியாத போர். நீதியும் இந்தப் போரை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது. தமக்காகப் போராடும் நீதியின் பின்னால் மக்களின் ஆதரவு நிழல் பெரிதாகத் தொடங்கிற்று.
புறக்கணிப்புகள், சலுகைக் குறைப்புகள், திட்டமிட்ட பழிச்சொற்கள், அமைச்சர்களின் இடைவிடாத அறிக்கைகள் என்பவற்றை அதிகாரம் கைவலிக் கும்வரை பிரயோகித்துக் கொண்டே இருந்தது. எதற்கும் நீதி வளைந்து கொடுப்பதாக இல்லை. நீதியோடு, சீண்டி விட்டு சும்மா இருக்கவும் முடியாது. இருந்தால் நீதிதன் கைவரிசையை காட்டிவிடும்.
சாம, தான, பேத வழிக ளெல்லாம் நீதியின் முன்பயனற்றுப் போய்விட தண்ட வழியைக் கையிலெடுத்தனர் அதிகாராத்தின் அடிவருடிகள். நீதிச்சேவை ஆணைக் குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண சென்று கொண்டிருந்த வாகனத்தை கம்பிகள், பொல்லுகள் என்பவற்றை கைகளி லேந்திய கும்பல் சூழ்ந்து கொண்டது.
உயிர் தப்பியதே பெரிய காரியம் என்று எண்ணும் அளவுக்கு நிகழ்ந்தது தாக்குதல். மஞ்சுள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதிகாரத்தின் அடுத்த குறிபிரதம நீதியரசர்தான். அவரை வீழ்த்த காய்கள் வேக வேகமாக நகர்த்தப்பட்டன.
இந்தச் சதுரங்க ஆட்டத்தில் தன் பக்கத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் அனுசரணையோடு, பிரதம நீதியரசருக்கு எதிராக பிரேரணையை அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும் பான் மையோடு இந்தப் பிரரேணை நிறைவேற்றப்பட்டால், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக் காவை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று அரசு எண்ணுகிறது.
ஆயினும் இதற்குப் பதிலடியாக சட்டத்தரணிகள் சங்கம், "திட்ட மிட்டே பிரதம நீதியரசர் மீது வீண் பழி சுமத்தப்பட்டு, இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது'' என்பதை மக்களிடம் சொல்லி, போராடுவதற்கான ஆயத்தங்களில் இறங்கி விட்டது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை அந்தப் பதவியில் விருப்பப்பட்டு அமர்த்தியவரே ஜனாதிபதிதான். ஆனால் அதிகாரம் நினைத்த திசையில் நீதியின் தராசை வளைக்க ஷிராணி இடங்கொடுக்கவில்லை.
இதற்கு முன்னரும் தனக்குச் சார்பாக நீதியை வளைக்க ஜனாதிபதி முயற்சியை மேற் கொண்டிருந்தார் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
"மஹிந்தவுக்குச் சார்பாக தீர்ப்பை நான் ஒரு வழக்கில் வழங்கியதால் தான் இன்று அவர் ஜனாதிபதியாக முடி சூடிக்கொள்ள முடிந்தது'' என்று எந்த வெட்கமும் இல்லாமல் நீதியை மஹிந்தவுக்காக அடகு வைத்த கதையை சரத் என் சில்வா போட்டு உடைத்திருக்கிறார். ஆனால், ஷிராணி அப்படியல்ல, அவர் சரத் என் சில்வாவைப்போல சுடலை ஞானம் வந்து தத்துவம் பேசாமல், நிகழ்கணத்திலேயே தன் கைகளில் கறை படியாமல் பார்த்துக் கொள்ளவே விரும்பினார்.

அதற்குப் பரிசே அவரது பதவியைப் பறிக்கும் முயற்சி களும், அதன் விளைவாக வந்துள்ள பிரேரணைகளும். அறம் பிழைத்த நாட்டில் அறமே கூற்றாக மாறும். இதற்கு புராணங்கள் முதல் கிட்டியகாலம் வரை நிறைய உதாரணங்கள் உண்டு. தனக்கு எதிராக கருத்துத் தெரிவித்தமைக்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவியைப் பறித்த மாலைதீவு ஜனாதிபதி, தன்னுடைய கதிரையைப் பறிகொடுக்க வேண்டியிருந்தது

அதேபோன்று பாகிஸ்தான் ஜனாதிபதியும் உயர் நீதிமன்றத்தோடு, முரண்டு பிடித்ததால் தன்னுடைய பதவிக்கு எப்போது முற்றுப்புள்ளி விழப்போகிறதோ என்று நிம்மதியின்றி ஏங்கிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய மிக நெருக்கமான நட்பு நாடுகளான மாலைதீவு, பாகிஸ்தான் போன்றவற்றின் ஜனாதிபதிகள் செய்த தவறையும் அதனால் எழுந்த விளைவையும் கண்முன் கண்ட பின்னும் நீதித்துறையோடு சண்டித்தனம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர் இலங்கையின் ஆட்சியாளர்கள்.

யார் கண்டது, கெடுகாலம் வந்துவிட்டால் கண்ணும் அறிவும் கெட்டுவிடுமாம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

நீதி தேவதையே தனக்கு நீதிகோரி புலம்பி அழுவது இலங்கைத் திருமணி நாட்டில் மட்டுமே நிகழும் அதிசயம். நடப்பதை எல்லாம் கைகட்டிக்கொண்டு, பார்ப்பது மட்டுமே எம்மால் முடிந்த காரியம்