siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 10 நவம்பர், 2012

உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக

           
 
10.11.2012.By.Rajah.உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன.

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.

கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும். ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.

மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும். இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.

இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும். முத்தான மூன்று பயிற்சிகள் இதோ!

பயிற்சி 1

ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 2

முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி

பயிற்சி 3

முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை அறிவோம் அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும் . இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும்.

ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்

சீன ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை சிந்து!

     10.11.2012.By.Rajah.ஒரு மாத இடைவேளைக்கு பின் ஹாங்காங் மற்றும் சீன ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை சிந்து களமிறங்குகிறார்.
இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து, 17. சமீபத்தில் நடந்த சீன பாட்மின்டன் தொடரின் அரையிறுதியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன வீராங்கனையான லீ சியூரியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அதன் பின் ஜப்பானில் நடந்த ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வலது முழங்கால் காயம் காரணமாக பங்கேற்வில்லை. இந்திய பாட்மின்டன் வீராங்கனையான செய்னா நேவலுக்கு பின் சிந்து மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சிந்து கூறுகையில்,""ஹாங்காங் மற்றும் சீன ஓபன் பாட்மின்டன் தொடர்களில் தற்போது பங்கேற்கவுள்ளேன். இத்தொடரில் சிறப்பாக செயல்பட திட்டமிட்டுள்ளேன். இதற்கான பயிற்சியும் சிறப்பான முறையில் மேற்கொண்டுள்ளேன். நிச்சயம் 100 சதவீதம் வெற்றி பெற முயற்சிப்பேன்.
செய்னாவிற்கு அடுத்தபடியாக என்னை குறிப்பிடுவதை பெருமையாக நினைக்கிறேன். ஒவ்வொரு முறை சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் போது ஒரு புது அனுபவம் கிடைக்கிறது. பாட்மின்டனில் சீன வீராங்கனைகள் வல்லவர்கள். அவர்களை எளிதாக வெல்ல முடியாது,''என்றார்

சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிந்தோரின் எண்ணிக்கை

10.11.2012.By.Rajah..வெலிக்கடை சிறைசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில் காயமடைந்த 16 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 43க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளா அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையை சோதனை செய்ய சென்ற விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டது.

இதன்போது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தின் போது சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர்.

சம்பவத்தின் சிறையின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தி சிறைக்கைதிகளும் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வீச்சு தாக்குதல்களையும் அவர்கள் நடத்தினர்.

வெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 13 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களும், நான்கு இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

விசேட அதிரடிப்படைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரனவனவும் மோதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட கைதிகளே கலகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த சம்பவத்தின்போது சிறை உடைக்கப்பட்டதாகவும் சிறைக்கைதிகள் தப்பிச்சென்றதாகவும் வெளியான தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
 

 

முதன் முறையாக இன்டர்போலின் தலைவராக பிரான்ஸ் பெண்

10.11.2012.By.Rajah.சர்வதேச பொலிஸ் அமைப்பின் தலைவராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பில் 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் கமிஷனராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மிரிலி பாலஸ்டிராசி(வயது 58) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் இன்டர்போலில் பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பதும், பல முக்கியமான வழக்குகளை சிறந்த முறையில் கையாண்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய எம்.பி

10.11.2012.By.Rajah..பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில், அதிர்ஷ்டவசமாக நாடாளுமன்ற உறுப்பினர் உயிர் தப்பினார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக், கியூ பிரிவு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மெதான் பக்டி.
இவர் நேற்று காலை பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகருக்கு கிழக்கே உள்ள தேரா பக்டி பகுதியில் உள்ள மசூதிக்கு சென்றார்.
மசூதிக்கு வெளியே ஷூவை கழற்றி விட்டு தொழுகைக்கு சென்றார். அப்போது அவரது ஷூவில் மர்ம நபர்கள் யாரோ வெடிகுண்டை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
தொழுகை முடிந்து வெளியே வந்த பக்டி, மீண்டும் ஷூவை அணிந்த போது அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது.
இதில் பக்டியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் குவெட்டா நகருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இச்சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்தனர்

ஆணுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

10.11.2012.By.Rajah.தனது கணவருடன் சிரித்து பேசி கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் கண்ணாடியால் தாக்கி காயப்படுத்திய மனைவிக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கிளவ்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் நதாஷா ஹவ்(வயது 31). இவரது கணவர், அமி ப்ளூக் என்ற பெண்ணுடன், ஒரு நைட் கிளப் பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நதாஷா, தனது கணவருடன் அமி சிரித்து சிரித்துப் பேசியபடி இருப்பதைப் பார்த்து கோபமடைந்தார். தனது கணவரை அமி வளைத்துப் போட்டு விட்டாரோ என்று பயந்து போனார்.
உடனே வேகமாக அமியை நெருங்கிய அவர் அங்கிருந்த கண்ணாடி கிளாஸை எடுத்து அமி முகத்தில் ஓங்கி அடித்தார். இதில் அமி அலறியபடி கீழே விழுந்தார்.
அப்படியும் நிறுத்தாத நதாஷா, அமியின் தலை முடியைப் பிடித்து இழுத்து சுவரில் மோதினார். இதில் அமியின் முகத்தில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டு, வலியால் அலறித் துடித்தார்.
இதைப் பார்த்து அருகில் இருந்தோர் வேகமாக ஓடி வந்து நதாஷாவைத் தடுத்துப் பிடித்தனர். உடனே அமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நதாஷாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பின்னர் நதாஷாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே 2001ம் ஆண்டு வேகமாக கார் ஓட்டியதாக நதாஷா மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று மலாலா நாள்: ஐ.நா கௌரவிப்பு

10.11.2012.By.Rajah.பாகிஸ்தானில் சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடிய மாணவி மலாலாவை கௌரவிக்கும் வகையில் நவம்பர் 10ம் திகதியை(இன்று) மலாலா நாளாக கொண்டாடுகிறது ஐ.நா.
பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்த மலாலா யூசுப் சாய்(வயது 14) தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில், மலாலாவை கௌரவிக்கும் வகையில் நவம்பர் 10ம் திகதி மலாலா நாளாக கொண்டாடப்படும் என ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த நாள் 14 வயது மலாலா மற்றும் அவரைப்போன்ற 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மலாலா குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறுகையில், மலாலா உலகில் உள்ள பெண் கல்வி உரிமைக்கான உலக அடையாளச்சின்னம்.
கல்வி ஒரு அடிப்படை உரிமை என்றும் அது மனித சமூகத்தின் வளர்ச்சி, சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றுக்கான பாதையாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், மலாலா மற்றும் உலக நாடுகளிலுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்ய உலக சமூகம் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்