Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 17 நவம்பர், 2012

பெட்டிகளில் எச்சரிக்கை படங்கள். நான்காவது



புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை தரும் நாடுகளின் பட்டியலில் கனடா நான்காவது இடத்தில் இருப்பதாக கனடா புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த எச்சரிக்கையை சிகரெட் பெட்டிகளின் அட்டைகளில் வெளியிடலாம் என சர்வதேச அளவில் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல நாடுகள் சிகரெட் பெட்டிகளின் அட்டைகளில் எச்சரிக்கை படங்களை வெளியிட்டன.
இந்நிலையில் இவ்வாறான எச்சரிக்கைகளை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் கனடா நான்காவது இடத்தில் இருப்பதாக கனடா புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் அவுஸ்திரேலியா முதலிடத்தில் இருப்பதாகவும், அந்நாட்டில் எச்சரிக்கை செய்தி மட்டுமின்றி சில கட்டுப்பாடுகளும் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.
இதே போன்று கனடாவில் கடுமையான விதிகள் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது

65,000 பேருக்கு மனநலம் பாதிப்பு; சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல்

 
By.Rajah.வடக்கு கிழக்கில் 30 வருடங்களாகத் தொடர்ந்த போர் காரணமாக 65 ஆயிரம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இவர்களுள் 62 ஆயிரத்து 674 பேர் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுள்ளனர், 2 ஆயிரத்து 556 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பிரதி அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
போர் நடவடிக்கைகளின்போது வட மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்கு எங்கே சிகிச்சை அளிக்கப்படுகின்றது? இவர்களையும் விசேட தேவையுடையவர்களாகக் கருதி நிவாரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என விநாயகமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
"யாழ். போதனா வைத்தியசாலையில் 1,271 பேரும், மன்னார் வைத்தியசாலையில் 407 பேரும், வவுனியாவில் 878 பேரும் உள்நோயாளர்களாக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
""ஏற்கனவே, யாழ். போதனா வைத்தியசாலையில் 25 ஆயிரத்து 976 பேரும், ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் 18 ஆயிரத்து 361 பேரும், மன்னாரில் 4 ஆயிரத்து 981 பேரும், வவுனியாவில் 9 ஆயிரத்து 355 பேரும், கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 514 பேரும், முல்லைத்தீவில் ஆயிரத்து 287 பேரும் என 62 ஆயிரத்து 474 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அரச மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்றது'' என்றார்

தடுமாற வைக்கும் உணவுகள் சில - உணவுகளை சாப்பிடாதீங்க! ?

       
17.11.2012.By.Rajah.தம்பதியரைதாம்பத்யத்தில்தடுமாற வைக்கும் உணவுகள் சில உள்ளன. தெரியாம சாப்பிட்டுட்டேன் அப்பஇருந்து சரியில்லையே என்று கூறிக்கொண்டிருப்பார்கள். படுக்கை அறையில் சிக்கல் ஏற்படாமல் இருக்கவேண்டும் எனில்சிலஉணவுகளைதவிர்க்கவேண்டும்என்கின்றனர் நிபுணர்கள்.அவர்கள்பட்டியலிட்டுள்ளஉணவுகளை தவிர்த்துவிட்டால் போதும் தடுமாற்றம் இல்லாத தாம்பத்யம் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளை உணவுகள்
 
வெள்ளை நிறங்களை உடைய கார்போஹைடிரேட் உணவுகள் உடலுக்கு தீங்கு தரக்கூடியவை. இதில் வெறும் மாவுச்சத்துதான் இருக்கும். உடலின் முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். பர்க்கர், கார்ன்ப்ளேக்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்துவிடுங்கள் ஏனெனில் இது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துமாம்.
 
வறுத்த உணவுகளை வேண்டாமே
 
வறுத்த, பொறித்த உணவுகளில் உள்ள டிரான்ஸ்பேட் கொழுப்புகள் தாம்பத்யத்திற்கு ஏற்றதல்ல. இது கொழுப்பை அதிகரிக்கும். ஆண்களின் டெஸ்டோஸ்டிரன் ஹார்மோனின் அளவை குறைக்கும். அதேபோல் மால்களில் விற்பனை செய்யப்படும் பாக்கெட், டின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ரெடிமேட் உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.
 
அதிக புரதம் ஆபத்து
 
சோயாவில் உயர்தர அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உள்ளன. அதேபோல் சோயா பாலில் உள்ள சில அமிலங்களும் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகின்றன. பாலுக்கு பதிலாக சிலர் சோயா பாலை சாப்பிடுவார்கள் இது செக்ஸ் ஆர்வத்தை கட்டுப்படுத்துமாம்.
 
ஆக்ஸாலிக் அமிலம்
 
கீரைகளில் காணப்படும் ஆக்ஸாலிக் அமிலம் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் அளவை குறைப்பதோடு விந்தணுவின் உற்பத்தியையும் கட்டுப்ப்படுத்துகிறதாம். கீரை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் புதிதாய் திருமணமான தம்பதிகள் தினசரி கீரையை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
 
புதினாவிற்கு தடா
 
புதினாவில் உள்ள ஒருவித ரசாயணம் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துகிறதாம். இதனால்தான் துறவு பூண்டவர்கள் புதினாவை வாயில் போட்டு சுவைத்துக்கொண்டிருப்பார்கள். நமது இந்திய உணவில் புதினாவை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். புதினா சட்னி, புதினா பச்சடி, புதினா ஜூஸ் போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர். இது செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரன் அளவை கட்டுப்படுத்துகிறதாம். எனவே உணவில் அதிகம் புதினா சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்

முன்னாள் நேபாள பிரதமரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த இளைஞர் ?

       
By.Rajah.மாவோயிஸ்ட்தலைவரும்நேபாளமுன்னாள்பிரதமருமானபிரசண்டாவை கன்னத்தில்அறைந்த இளைஞருக்குஅடிஉதை கிடைத்தது.
தீபாவளிமற்றும்நேபாளபுத்தாண்டையொட்டிமாவோயிஸ்ட்தலைவரும்முன்னாள் பிரதமருமான பிரசண்டா வெள்ளிக்கிழமை விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அனைவர் முன்னிலையிலும் பவன்குமார் என்ற இளைஞர் பிரசண்டாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
சுற்றியிருந்தஆதரவாளர்கள்அந்தஇளைஞரைத்தாக்கியதில்அவர்பலத்த காயமடைந்ததால்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரசண்டா தலைமையேற்றுள்ள நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர் பவன்குமார் என கூறப்படுகிறது

கடும் நடவடிக்கை!ஐரோப்பிய ஒன்றியம்

        
17.11.2'012.By.Rajah.சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோதமான, முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
பனாமா, பெலிஸ், கம்போடியா, பிஜி, கினியா, டோகோ, சிறிலங்கா, வனாட்டு ஆகிய நாடுகளுக்கே ஐரோப்பிய ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அனைத்துலக சட்டங்களுக்கு அமைய செயற்படத் தவறினால், இந்த நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி ஆணையாளர் மரியா டமனாகி எச்சரித்துள்ளார்.
கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த நாடுகள் நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான கால அவகாசத்தை வழங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
ஆனால் அந்தக் காலப்பகுதிக்குள் முன்னேற்றத்தைக் காண்பிக்காது போனால், ஐரோப்பி ஒன்றியம் வர்த்தக நடவடிக்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்ளப்படும் என்றும் மரியா டமனாகி குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை ஒரு மஞ்சள் அட்டையே என்றும், அதற்கடுத்த கட்டமாகவே கறுப்புப்பட்டியலில் உள்ளடக்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த எச்சரிக்கையை சிறிலங்கா உதாசீனம் செய்தால், சிறிலங்காவின் கடலுணவு ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது

முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட்ட

       
17.11.2012.By.Rajah.தற்சமயம்யாழ்ப்பணத்தில்உள்ள இலங்கையின்ஆறுமாகாணசபைகளின்ஆளுநர்கள் நெடுந்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
வடமேற்குமாகாணசபைஆளுநர்திஸ்சபலல,கிழக்கு மாகாணசபைஆளுநர்மெகான்விஜயவிக்கிரம,தெற்கு மாகாணசபை ஆளுநர் குமாரி பாலசூரிய,மத்திய மாகாணசபை ஆளுநர் திகிறி கொப்பேகடுவ, ஊவா மாகாணசபை ஆளுநர் நந்த மத்தியு, வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்னே டியூகனி ஆகியோர் நேற்று காலை 10 மணியளவில் உலங்கு வானூர்தி மூலம் நெடுந்தீவுக்கு வருகைதந்தனர்.
அங்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், வைத்திய அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் வரவேற்றனர்.
நெடுந்தீவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட்டதுடன் நெடுந்தீவின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்