Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 18 நவம்பர், 2012

காஸா பகுதி மீது 5வது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் (காணொளி இணைப்பு)

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் இன்று 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8 குழந்தைகள் உட்பட 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான் வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதி ஜபாரி உயிரிழந்தார்.
ஹமாஸ் இயக்கத் தலைமையகம் மற்றும் ஹமாஸ் ஆதரவு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை நிர்மூலமாகின. இதில் 6 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர்.
காஸா பகுதியிலிருந்தும் பல நூறு ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று 5-வது நாளாக அதிகாலை முதலே வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்த கொடுந்தாக்குதலுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்லும் போராட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலுக்கு எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

சிறிலங்கா படையினரால் ஏமாற்றப்பட்ட தமிழ்ப்பெண்கள்

       
By.Rajah.சிறிலங்கா இராணுவத்திடம் 109 தமிழ் இளம் பெண்கள் நேற்று பெற்றோரால், கண்ணீருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தில் நேற்று நடந்த நிகழ்விலேயே, சிறிலங்கா இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவில் இணைவதற்காக இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குடியியல் பணிகளுக்காகவே தம்மை சேர்த்துள்ளதாகவும், தமக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படமாட்டாது என்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாகவும், நேற்று படையில் இணைந்து கொண்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள மொழிப்பயிற்சி உட்பட மூன்று மாதப் பயிற்சியின் பின்னர், தமது கிராமத்திலேயே தொழில் வழங்கப்படும் என்று இவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவர்களுக்கு நேற்று கிளிநொச்சியில் உள்ள 57வது டிவிசனின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மேலதிக காலாற்படை பயிற்சிப் பாடசாலையில் மூன்று மாதகால அடிப்படைப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.

வறுமை, வேலையின்மை காரணமாகவும், 30 ஆயிரம் ரூபா மாதாந்த ஊதியம்,மற்றும் வசதிகள் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் காரணமாகவுமே, தாம் படையில் சேர முன்வந்ததாகவும், இராணுவப் பயிற்சி பெறுவதற்கு தாம் விரும்பமில்லை என்றும் நேற்று படையில் சேர்க்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

எனினும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாகவே, மூன்று மாத அடிப்படைப் பயிற்சிக்காக காலாற்படைப் பயிற்சி பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

சிறிலங்காவை நம்பாத உகண்டா அதிபர் - குடிப்பதற்கான குடிநீரையும்??

          
By.Rajah.உகண்டா அதிபர் யொவேரி முசவேனி கடந்த வாரம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அவர் கொழும்பு வரும்போது சமையற்காரர் ஒருவரையும், குடிப்பதற்கான குடிநீரையும் தனது விமானத்திலேயே கொண்டு வந்திருந்தார்.

கொழும்பில் ஹில்டன் விடுதியில் தங்கிருந்த போதும், சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அதிகாரபூர்வ சந்திப்புகளின் போதும், அவர் குடிப்பதற்கு சிறிலங்கா குடிநீரைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.
தான் எடுத்துச் சென்றிருந்த குடிநீரையே பயன்படுத்திக் கொண்டார்.

தனது பாதுகாப்பின் மீது கவனமாக இருந்து கொண்ட உகண்டா அதிபர், ஹில்டன் விடுதியில் தனது சமையற்காரர் மூலம் சமைக்கப்பட்ட சைவஉணவுகளை மட்டுமே சாப்பிட்டார்.

அசைவ உவுகளை தவிர்த்துக் கொண்டதற்கும், சமையற்காரர், பாதுகாவலர்கள் மற்றும் குடிநீருடன் அவர் வந்து இறங்கியதற்கும் தனிப்பட்ட பாதுகாப்பின் மீது கொண்ட அக்கறையே காரணம் என்று கூறப்பட்டாலும், அது சிறிலங்கா மீதான நம்பிக்கையீனமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த பெண் ?

      
By.Rajah.கணவர் வெளிநாட்டில் இருந்த போது ஒரு தகாத உறவால் பெற்றுக் கொண்ட தனது சொந்த பிள்ளையை கொலை செய்ய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை பிறந்த உடனடியாகவே கொலை செய்து சிசுவின் உடல் புதைக்கப்பட்டுள்ளது.

வலிக்கந்த, குடாபொக்குண என்ற பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

கடந்த 4ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பெற்றெடுத்தவர் 24 வயதான பெண் என தெரிவிக்கப்படுகிறது.

இவரது கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் தகாத உறவினால் இக்குழந்தை கருவுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் பொலன்நறுவை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இணையப் பக்க​ங்களை குறித்த நேர இடைவெளியில் Auto Refresh செய்வதற்கு

By.Rajah.தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகினை சுருக்கி கிராமமாக மாற்றிய பெருமை இணையங்களையே சாரும். இந்த அடிப்படையில் இன்று பல லட்சக்கணக்கான இணையத்தளங்கள் தோற்றம் பெற்றுள்ளன.
இவ்வாறு இணையத்தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது பதிவேற்றப்படும் புதிய தகவல்களை அறிவதற்கு குறித்த இணைப்பக்கத்தினை Refresh செய்ய வேண்டியது அவசியமாகும்.
இதற்காக F5 கீயினை பயன்படுத்த முடியும் அல்லது உலாவியில் காணப்படும் Refresh செய்வதற்கான பொத்தானை அழுத்துதல் வேண்டும்.
இவ்வாறில்லாது Auto Refresh செய்வதற்கான நீட்சிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Google Chrome மற்றும் Firefox போன்ற உலாவிகளில் செயற்படக்கூடியவாறு தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ள இந்த நீட்சிகளை நிறுவிய பின்னர், Auto Refresh செய்ய வேண்டிய நேர இடைவெளியினை தந்தால் போதும். ஒவ்வொரு இணையப்பக்கங்களும் அந்நேர இடைவெளியில் Auto Refresh ஆகிவிடும்

6 கோடி ரூபாய் அளித்தால் மரண தண்டனை ரத்தாகும்: சவுதி ?

By.Rajah.குற்றவாளி ஒருவரின் மரண தண்டனையை ரத்து செய்ய 6 கோடி ரூபாய் அளிக்கும் படி சவுதி அரசு நிபந்தனை விதித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜோஸ்லிட்டோ சபன்டா. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த தகராறின் போது, சூடான் நாட்டை சேர்ந்த நபரொருவரை கொன்று விட்டார்.
இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில், சபன்டாவுக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்கோ அகினோவின் வேண்டுகோளின் படி, கடந்த நான்கு மாத காலமாக மரண தண்டனையை சவுதி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு 6 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது

வேலை நிறுத்த போராட்டம் நடத்த வால்மார்ட் ஊழியர்கள் முடிவு

By.Rajah.அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் சில்லறை வர்த்தகத்தில் முதலிடத்தில் உள்ளது.
குறைவான சம்பளம், ஊழியர்களை சரியாக நடத்தாதது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கறுப்பு வெள்ளி தினமான வருகிற 23ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த வால்மார்ட் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் பாரம்பரியமாக கறுப்பு வெள்ளி தினத்தில் தான் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருள்களை மக்கள் வாங்கத் தொடங்குவார்கள். எனவே அந்தநாளில் விற்பனை களைகட்டும்.
இந்த சூழ்நிலையில் நிறுவனத்துக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்பு வெள்ளி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஊழியர்கள் தெரிவு செய்துள்ளனர்.
கலிபோர்னியா, வாஷிங்டனில் நவம்பர் 21ஆம் திகதி முதலே வால்மார்ட் சேமிப்புக் கிடங்கு, கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்குச் செல்ல மாட்டார்கள். அதற்கு அடுத்த நாள்களில் சிகாகோ, நியாமிஸ தலாஸ், லாஸ் ஏஞ்சலீஸ் ஆகிய நகரங்களையும் வேலைநிறுத்தம் எட்டும்.
மொத்தம் 1,000 கடைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்தப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று வால்மார்ட் ஊழியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
தங்களுக்கு நிறுவனம் இழைக்கும் அநீதிகளை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் விளக்கப் போவதாகவும் வால்மார்ட் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

எங்களை கேவலமாக நடத்துகின்றனர்: கர்ப்பிணிகள்?

 
அவுஸ்திரேலியாவில் கர்ப்பிணிகளை கேவலமாக நடத்தும் நிலை உள்ளது என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் கர்ப்பிணிகளின் நிலை குறித்து புள்ளியியல் துறை கருத்து கணிப்பு நடத்தியது.
இதில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 500 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதில் தெரியவந்த தகவல்களை, அடிலெய்ட்நவ் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும் இடங்களில் கர்ப்பிணிகளை சக ஊழியர்கள் கேவலமாக நடத்துகின்றனர்.
வேலை செய்யும் இடங்களில் தங்களை மற்றவர்கள் பிரித்து பார்ப்பதாகவும், கேவலமாக நடத்துவதாகவும் கூறியுள்ளனர். இதனால் 29 சதவிகிதம் பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும் கர்ப்பம் அடைந்ததால் பதவி உயர்வு மறுக்கப்படுவதாகவும் பலர் கூறியுள்ளனர். கர்ப்பம் அடைந்தால் தங்களை கேட்காமலேயே பணியை மாற்றி விடுகின்றனர் என்று பலர் கூறியுள்ளனர்.
எனினும், குழந்தை பிறந்த பிறகு 3 மாதங்களுக்குள் 29 சதவிகிதம் பேர் வேலைக்கு மீண்டும் செல்ல தொடங்கி விடுகின்றனர். 28 சதவிகிதம் பேர் ஆறு மாதங்கள் கழித்து வேலைக்கு செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது