Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 26 நவம்பர், 2012

இங்கிலாந்தில் கனமழை: 800க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பெய்த கனமழையால் 800க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 800க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன, மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் டேவிட் கமரூன் டுவிட்டரில், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான  அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் {புகைப்படங்கள்},

இருமல் மருந்து குடித்த 12 பேர் பலி: பாகிஸ்தானில்

கலப்பட இருமல் மருந்து குடித்த 12 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் லாகூர் அருகே ஷதாரா நகரம் உள்ளது. இங்குள்ள கடைகளில் இருமல் மருந்து 25 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இப்பகுதியை சேர்ந்த சிலர் போதைக்காக இருமல் மருந்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேற்று ஒரு கடையில் 20 பேர் இருமல் மருந்தை வாங்கி உட்கொண்டனர். இந்த மருந்தை குடித்த சில நிமிடங்களில் நான்கு பேர் இறந்து விட்டனர்.
மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
மேலும் ஏழு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலப்பட இருமல் மருந்தை உட்கொண்டதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாக கூறப்படுகிறது.

தோல்வியில் முடிவதற்கு காரணம் காதலர்கள் தான் !


காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்குக் காரணம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும், ஆணும், மன முதிர்ச்சியில்லாத நிலையில் திருமணம் செய்து கொள்வதே என்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் பழமலய்.
தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர் இனப்பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து தலித்துகளுக்கு எதிராக அம்மாவட்டத்தில் எழுந்த வன்செயல்கள் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன
தான் காதல் திருமணங்களுக்கு எதிராக இல்லை.ஆனால், பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று வர்ணித்த ராமதாஸ், பெண்களுக்கு திருமண வயதை 21ஆக உயர்த்தினால்தான் அவர்கள் மன முதிர்ச்சியுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வரும் என்று கூறியிருந்தார்
இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான பழமலய் , காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒரு ஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது என்றார்
இதன் மூலம், கலப்புத் திருமணங்களை சாதி ஒழிப்புக்கு ஒரு அடிப்படையாக முன் வைத்த பெரியார் போன்றவர்களின் நிலைப்பாடு சரியல்ல என்கிறீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், மனிதர்கள் பிரதேச எல்லைகளையும், சாதிகளையும் கடந்து கலக்கத்தான் வேண்டும் என்றார். ஆனால் சாதிகள் தங்களது இருப்புக்காகவும், இட ஒதுக்கீடு பலன்களுக்காகவும், எண்ணிக்கையை பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கின்ற காலத்தில், சாதி விட்டு சாதி மாறி நடக்கும் திருமணங்களுக்கு எதிர்ப்பு இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே என்றார் அவர்
பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிற காரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்
ஆயினும், தனது வாழ்க்கையைத் தீர்மானித்துக்கொள்ள வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிமை இல்லை என்கிறீர்களா என்று கேட்டதற்கு, இது தனிமனித உரிமை பேசுபவர்களின் வாதம் என்றார் பேராசிரியர் பழமலய்.
இந்தியாவில், தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தம்மை ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, 18 வயதானவர்களுக்கு சமுதாயம் தந்துள்ள நிலையில், தங்களது சொந்த வாழ்க்கையில் தமக்கு விருப்பமானவர்களை தங்களது வாழ்க்கைத் துணைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களுக்கு மறுப்பது சரியா என்று கேட்டதற்கு, வாக்குரிமையையே சரியாகப் பயன்படுத்தாத சமூகம்தான் இந்தியச் சமூகம், மேலை நாடுகளில் காணப்படுவது போல கல்வியறிவும் முதிர்ச்சியும் அடையவில்லை என்றார் பழமலய்

தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும்!


கல்லறைகள் முழுவதும் இடித்தழிக்கப்பட்டன. கோயில்கள், தெருகள் முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றனர். இத்தனையும் மாவீரர்களுடைய நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே.
அரசாங்கத்திற்கும், அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நன்றாக ஒரு விடயம் புரிந்திருக்கின்றது. எதனை அழித்தாலும், மக்கள் மீது எத்தகைய அடக்கு முறைகளை திணித்தாலும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர்களுடைய நினைவுகளை அழிக்க முடியாது.
ஏதோவொரு வழியில் மாவீரர்களுடைய நினைவுகளை மக்கள் அனுஸ்டிக்கவே போகின்றார்கள். அந்த வழிகளையும் முற்றாக மூடிவிடவேண்டும் என்றே படையினர் பகீரத பிரயத்தனம் எடுத்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு விடயத்தை அரசாங்கமும், அதன் காட்டுமிராண்டித்தனமான இராணுவ இயந்திரமும் புரிந்து கொள்ளத் தவறியிருக்கின்றது. அதாவது கடந்த 30வருடங்களில் 40ஆயிரத்திற்கு ம் மேற்பட்ட மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.
எனவே அந்த 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களுடைய 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல இந்த மாவீரர்களுடன் சம களத்தில் நின்ற போராளிகள், நண்பர்கள், மனைவி, பிள்ளைகள் என ஒவ்வொரு தமிழனும் மாவீரர்களுடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டிருக்கின்றான். சிலர் அற்ப சலுகைகளுக்காக படையினருக்கும், அரசாங்கத்திற்கும் பின்னால் சென்றிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு மாவீரன் நெருக்கமான தொடர்பு இருக்கும். மாவீரர்கள் ஒன்றும் கூலிப்படை கிடையாது. அடக்கி, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அடையாளக் குறிகள். போராடினாலே வாழ்வென்றுரைத்த மூன்று தசாப்தங்களின் நிலைக்குறியீடுகள்.
கடைசி தமிழன் உள்ளவரையில் மாவீரர்களின் நினைவுகள் வாழும். மாவீரர்கள் பூசிக்கப்படுவார்கள். நடுகல் வழிபாடுகளின் தாய், தந்தையர்கள் நாங்கள். எங்கள் சொந்தங்களின் நினைவுகளைக் கொண்டாட முடியவில்லை.
எத்தனை அழிவுகள், இழிவுகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி மாவீரர்களுடைய கனவுகளையும், அவர் தம் நினைவுகளையும் சுமந்து கொண்டு கால்கடுக்க நடக்கின்றோம். அடைய வேண்டிய இலக்கினை நோக்கி.
நிச்சயமாக எங்கள் மாவீரர்கள் சிந்திய இரத்தத்திற்கும், அவர்கள் கொடுத்த உயிர் விலைக்கும் ஒரு விளைவு கிடைக்கும். தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும்.
அந்த நம்பிக்கையோ, பிரிவினைகள், பேதங்கள் இல்லாமல் அந்த உத்தமர்களை நினைவில் கொள்வோம். மூச்சு மூடியும் கடைசித் தருணத்திலும் அவர்கள் உச்சரித்துக் கொண்ட தாரக மந்திரத்தை சொல்லிக் கொள்வோம்.
ஒரு நாள் அடிவானில் சூரியன் பிறக்கையில் இந்த இனம் விடுதலை பெற்று விட்டதாய் செய்தி வரும். அதற்காய் அஸ்த்தமன நேரத்தை ஒவ்வொரு நாளும் வேகப்படுத்திக் கொள்கின்றோம்{புகைப்படங்கள்,}