Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 29 நவம்பர், 2012

மிட் ரோம்னிக்கு விருந்து கொடுத்தார் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற மிட் ரோம்னிக்கு ஜனாதிபதி ஒபாமா மதிய விருந்து கொடுத்தார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஒபாமா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் ஒபாமா வெற்றி பெற்ற பின்பு ஆதரவு தருவதாக கூறினார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகை விருந்துக்கு ரோம்னி அழைக்கப்பட்டு இன்று நடந்த விருந்தில் கலந்து கொண்டார்.
விருந்தில் ரோம்னி- ஒபாமா இருவர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு பயன் உள்ளதாக இருக்கும் விடயங்களைப்பற்றியே பேசியதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜெய்கார்னி தெரிவித்தார்.

கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 54ஆக உயர்ந்தது

சிரியாவில் இரு கார் வெடிகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 54 பேர் பலியாயினர், 120க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக புரட்சிபடையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஜராமனா நகரில் கிறிஸ்தவ ட்ரூஸ் இன சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இங்கு 2 கார் வெடிகுண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென வெடித்ததில் அப்பகுதியில் இருந்த 20 பேர் பலியாயினர்.
குறுகலான சாலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்களின் மீது விழுந்ததாகவும், எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் இடிபாடுகளுக்கு இடையே சிதறி கிடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குண்டுவெடிப்பில் 20 பேர் இறந்ததாக முதலில் கூறிய சிரியா மனித உரிமைகள் அமைப்பு, பின்னர் 54 பேர் இறந்ததை உறுதி செய்தது, 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஜராமனாவில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 4 முறை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.{காணொளி, புகைப்படங்கள்}







கண்டம் விட்டு கண்டம் பாயும் பாகிஸ்தானின் ஏவுகணை

 
அணு ஆயுதங்களை சுமந்து சென்று 1300 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்ககூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கோரி என்றழைக்கப்படும் ஹத்ஃப்-5 என்ற கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்தது.
இந்த ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. சாதாரண மற்றும் அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தானின் தடுப்புத்திறன் மற்றும் தேசியப் பாதுகாப்பை இச்சோதனை வலுப்படுத்தி உள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இந்த ஆண்டில் மட்டும் 60 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் திறன் படைத்த ஹத்ஃப்-9 முதல் ஹத்ஃப்-4 வரை பல்வேறு அதிநவீன ஏவுகணைகளைச் சோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.{காணொளி,}



பயணிகளின் பொருட்களை திருடிய 13 பேர் கைது

பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை திருடியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ரோஸி சார்லஸ் டி கவ்லி விமான நிலையம் உள்ளது.
இங்கு ஜோக்னஸ்பர்க், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய பகுதிகளிலிருந்து விமானங்களில் வரும் பயணிகளின் பெட்டிகள் கிடங்கில் அடுக்கி வைக்கப்படும்.
இந்த கிடங்கில் கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கமெரா இல்லாத ஒதுக்கு புறமான பகுதிகளில் உள்ள பெட்டிகளிலிருந்து நகைகள், துணிகள், தோல் பொருட்கள் போன்றவை திருடு போனது தெரியவந்தது.
இத்திருட்டு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகம் எழுந்த மற்ற 9 பேரின் வீடுகளில் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள், அவர்களையும் கைது செய்தனர்

வடகொரியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம்

வடகொரியாவுக்கு எதிரான தீர்மானம் முதன் முறையாக வாக்கெடுப்பின்றி ஒருமனதாக ஐ.நாவில் நிறைவேறி உள்ளது. ஆள் கடத்தல் மற்றும் இதர விதிமீறல்கள் தொடர்பான பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வடகொரியாவை வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் ஐ.நா பொதுச் சபையின் மூன்றாவது குழுவிடம் வருவதற்கு 8 ஆண்டுகள் ஆன போதிலும், வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேறியது இதுதான் முதன் முறையாகும்.
எனினும் சீனா, கியூபா மற்றும் வெனிசூலா உள்ளிட்ட சில நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை