Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 14 டிசம்பர், 2012

யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே//?

       
 
போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டபோதும் யாழ்ப்பாண நகரம் இன்னும் உயர் பதற்ற நிலையிலேயே உள்ளதாக த டிப்ளொமெட் என்ற ஆசிய பசுபிக் வலய சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிய நிகழ்வை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டனர்.

இதன் பின்னர் பல மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தொடர்ந்தும் யாழ்ப்பாண பிரதேசம் பதற்றத்துடன் செயற்பட்டு வருவதாக அவ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு பின்னர் 1956ம் ஆண்டு சிங்கள தலைவர்களால் சிங்களம் மட்டுமே என்ற சட்டம் கொண்டு வரப்பட்டமையை அடுத்து தமிழர்களின் மொழி உரிமைகள் உட்பட்ட உரிமைகள் நசுக்கப்பட்டன. இதன் காரணமாக தமிழர்களின் போராட்டம் ஆரம்பமானது. இதன் விளைவாக 1983 ஆம் ஆண்டு நாட்டில் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்டன.

மேலும் இதன் பின்னர் கடந்த 30 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது. இந்தநிலையில் போரில் இறந்துப்போன விடுதலைப்புலிகளை நினைவு கூருவதை இலங்கை அரசாங்கம் பயங்கரவாத நடவடிக்கையாக கருதி அதனை அடக்கி வருகிறது.

அதன் விளைவாகவே இன்று யாழ்ப்பாணத்தில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் இலங்கைப் படையினரும் அதிகளவில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக த டிப்ளொமெட் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

ஓடும் இரயிலில் பழகிய இரண்டே மணிநேரத்தில் திருமணம் செய்த காதல் ஜோடி

முன் பின் சந்தித்திராத இளம் ஜோடி, ரயிலில் சந்தித்து பேசிய, இரண்டு மணி நேரத்திலேயே, ஒருவரை ஒருவர் பிடித்துப் போய், திருமணமும் செய்து கொண்ட சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.
"ஆயிரம் காலத்து பயிர்” என, வர்ணிக்கப்படும் திருமண உறவில், இரு உள்ளங்களை இணைக்க, ஜாதி, மதம், ஜாதகம், பொருத்தம் என, பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், பார்த்த சில மணி நேரத்திலேயே, இரு மனமும் ஒன்றாகி, திருமண பந்தம் வரை சென்றுள்ளது, உண்மையில் ஆச்சர்யமானது தான்.முன்னெப்போதும் இது போன்ற சம்பவம் நடந்திராது என்று கூறும் அளவிற்கான சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது
கடந்த செவ்வாய் கிழமை மதியம், டில்லி, நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து, ரயில் ஒன்று புறப்பட்டது. இருக்கை வசதி கொண்ட அந்த ரயிலில், எதிரெதிர் இருக்கையில், ஒரு இளம் பெண்ணும், இளைஞனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும், முன் பின் சந்தித்திராதவர்கள். ரயில் புறப்பட துவங்கியதும், ஒருவருக்கொருவர் பேசத் துவங்கினர். அந்த இளைஞன், லக்னோ செல்ல டிக்கெட் எடுத்திருந்தார்; இளம்பெண், கான்பூர் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தார்.
"நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்று பேசத் துவங்கிய இந்த ஜோடி, ஒரு மணி நேரத்திற்குள், தங்களின் பணி, குடும்பம், அந்தரங்கம், ஆசாபாசம், திருமண விருப்பம், எதிர்காலம் என, அனைத்தையும் பேசித் தீர்த்து விட்டது. இதை, அருகில் இருந்த சக பயணிகள், பார்த்துக் கொண்டே இருந்தனர்.இரண்டு மணி நேரம் முடிந்த நிலையில், அலிகார் ஸ்டேஷனை, ரயில் அடைந்தது. இளம் ஜோடி, மிகவும் நெருக்கமாகி விட்டது; இருவருக்கிடையே, அன்பும், காதலும், பாசமும் வெள்ளமென பாய்ந்து கொண்டிருந்தது.எதிரே இருந்தவர்களை சாட்சியாக வைத்து, திருமணம் செய்து கொள்ள, அந்த ஜோடி விரும்பியது. பெட்டியில் இருந்த மற்றவர்களிடம், இது குறித்து வேண்டுகோள் விடுத்தது.
முகத்தில் மகிழ்ச்சியுடனும், கண்களில் கனவுகளுடன் இருந்த அந்த இளம் ஜோடியின் வேண்டுகோளை மறுக்க முடியாத, சக பயணிகள், திருமணம் நடத்தி வைக்க முன்வந்தனர். அங்கிருந்தவர்களில் ஒருவர், "இன்னும் சில நிமிடங்களில், முகூர்த்த நேரம் முடியப் போகிறது” என, கூறியதும், ஓடும் ரயிலிலேயே, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அவர்களில் ஒருவரே, புரோகிதர் போல அமர்ந்து, மந்திரங்கள் சொல்ல, பயணிகளின் உற்சாக குரல், கைத்தட்டலில், மோதிரம் அணிந்து, அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.இந்த தகவல், எப்படியோ, அடுத்து வந்த, துண்ட்லா ரயில்வே ஸ்டேஷனுக்கு தெரிய வந்தது. அந்த ஸ்டேஷனில், ரயில் நின்றதும், இளம் ஜோடி இருந்த ரயில் பெட்டிக்குள், போலீசார் நுழைந்தனர். "ரயிலிலேயே திருமணம் செய்து கொண்டது யார்?” என கேட்டனர்.
இருவரும், தம் விருப்பத்தையும், திருமணம் செய்து கொண்டதையும், தாங்கள், "மேஜர்” என்பதையும், ஆதாரங்களுடன் போலீசாரிடம் கூறினர். முறைப்படி மாலை மாற்றி, திருமணம் செய்து கொண்டதாகவும்; தாங்கள், கணவன் - மனைவி ஆகி விட்டதாகவும் கூறினர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாத போலீசார், வேறு வழியின்றி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிச் சென்றனர்.இளம் ஜோடியாக ரயிலில் ஏறி, திருமண ஜோடியாக இறங்கிச் சென்றதை, அந்த ரயில் பயணிகள், ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஜோடி இறங்கி சென்று, நீண்ட நேரம் ஆன பிறகும், இப்படியும் நடக்குமா என, பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது."கனவு போல, அந்த ஜோடியின் திருமணம் நடந்து முடிந்தது” என, சக பயணிகள், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்

தன் மரணத்தை 12.12.12ல் தீர்மானித்த இளைஞர் தற்கொலை

உலகம் விசேட நாளாக கருதிய 12.12.12ல் இறக்க வேண்டுமென எண்ணிய வாலிபர், தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சகர் மாவட்டத்தில் உள்ள நரோரா நகரை சேர்ந்த கிருஷ்ணபால் (வயது 40), மரக்கன்றுகள் விற்பனை நிலையம் நடத்தி வந்தார்.
இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடவுள் விருப்பப்படி தான், கடந்த 12.12.1972ல் பிறந்ததாக கூறி வந்தார்.
ஆனால், இறப்பு என்பது கடவுள் விருப்பப்படி நடப்பது இல்லை எனக்கூறிய இவர், 12.12.12ம் திகதி உயிர் விடுவேன் என முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.
இதன்படி தனது மரணத்துக்கு நாள் குறித்த கிருஷ்ணபால், 12.12.12ம் திகதி பிற்பகல் 12:12 மணிக்கு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக 12 பக்கத்துக்கு விரிவாக கடிதம் எழுதி வைத்தார்.
இந்நிலையில் செங்கற்களை எடுத்துக் கொண்டு நேற்று காஜியாபாத் பிரதாப் நகரில் உள்ள 80 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி உச்சிக்கு சென்றார்.
கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டிக் கொண்டார். அந்த பக்கம் சென்றவர்களை அழைத்து, தான் வைத்திருந்த 12 பக்க கடிதத்தின் ஜெராக்ஸ் காப்பிகளை கீழே வீசினார்.
அதை படித்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்தனர். கிருஷ்ணபாலை சமாதானம் செய்து கீழே இறங்க கூறினர்.
அதை அவர் ஏற்கவில்லை. இதற்கிடையில் வாலிபர்கள் சிலர் தண்ணீர் தொட்டி மீது ஏறினர். அவர்கள் மீது செங்கற்களை வீசினார்.
இதனால் பயந்து போய் அவர்கள் கீழே இறங்கிவிட்டனர். எனினும், பொதுமக்களும் பொலிசாரும் கிருஷ்ணபாலை கீழே இறக்க தீவிர முயற்சி செய்தனர்.
இதனால் தனது எண்ணம் எங்கே நிறைவேறாமல் போய் விடுமோ என்று பதற்றமானார் கிருஷ்ணபால்.
11.05 மணிக்கெல்லாம் கீழே குதித்து விட்டார். பொலிஸ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்த கிருஷ்ணபாலை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து காஜியாபாத் பொலிஸ் கண்காணிப்பாளர் ஷிவ்சங்கர் சிங் யாதவ் கூறுகையில், கிருஷ்ணபால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
12.12.12ம் திகதி 12:12 மணிக்கு கடவுள் விருப்பத்தை மீறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியவர் எதிர்பாராதவிதமாக முன்கூட்டியே விழுந்து இறந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜனாதிபதிக்கு 5-வது முறையாக மரண தண்டனை விதிப்பு,/

 
ஈராக்கின் துணை ஜனாதிபதி தாரிக் அல் ஹாஷ்மிக்கு, ஐந்தாவது முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் சதாம் உசேனின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின், அமெரிக்காவின் உதவியுடன் ஆட்சி மலர்ந்தது.
துணை ஜனாதிபதி பதவியில் இருந்த தாரிக் அல் ஹாஷ்மி, 45 பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி பாக்தாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் துருக்கிக்கு சென்ற ஹாஷ்மி, மீண்டும் நாடு திரும்பவில்லை. இதற்கிடையே ஹாஷ்மி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதித்து பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதற்கு பிறகு சில நீதிமன்றங்களிலும் அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மற்றொரு நீதிமன்றத்தில், அவருக்கு ஐந்தாவது முறையாக மரண தண்டனை அறிவிக்கப்பட்டது.
ஹாஷ்மி கடந்த 2006ம் ஆண்டு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த 2010ம் ஆண்டில் நடந்த தேர்தலில் மீண்டும் துணை ஜனாதிபதியாக தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது

மலாலாவின் பெயரை சூட்ட பள்ளி மாணவிகள் எதிர்ப்பு

தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆளான சிறுமி மலாலாவின் பெயர், பள்ளிக்கு சூட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஸ்வாட் மாவட்டத்தின் மிங்கோரா நகரை சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய்(வயது 14).
பள்ளி மாணவியான மலாலா பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், தலிபான்களின் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியர்.
இவர் அமைதி குறித்து பல்வேறு பேச்சு போட்டிகளிலும், தன்னார்வ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இந்நிலையில் மலாலா மீது தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பலத்த காயமடைந்த மலாலா, தற்போது லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
மலாலாவின் பெயரில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றுக்கு, பாகிஸ்தான் அரசு மலாலா பெயரை சூட்டியுள்ளது. ஆனால் இதற்கு அந்த பள்ளி மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், இந்த பெயரை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தலிபான்கள் இந்த பள்ளியின் மீது தாக்குதல் நடத்துவார்கள். பாதிக்கப்படப்போவது நாங்கள் தான் என கூறி வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர்

செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை

லண்டனில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட செவிலியர் ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை பிரிட்டன் பொலிசார் வெளியிட்டுள்ளனர். பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பமாக உள்ளார். இவர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்தார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலையமொன்று அரசு குடும்பத்தினர் போன்று பேசி, இளவரசி குறித்த தகவல்களை சேகரித்தனர்.
இந்த அழைப்பு செவிலியர் ஜெஸிந்தா தான், இளவரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு இணைப்பு கொடுத்தார் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தால் பயந்து போன ஜெஸிந்தா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து ஸ்காட்லாந்து பொலிசார் விசாரணை நடத்தி ஜெஸிந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ஜெஸிந்தா, துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருடன் பணிபுரியும் சக ஊழியரும், மருத்துவமனை பாதுகாவலர்களும் அவர் தூக்கில் தொங்குவதை பார்த்துள்ளனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
வேறு எதுவும் சந்தேகப்படும் படியாக இல்லை. மூன்று குறிப்புகளை எழுதி வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியை தோற்கடித்து வெற்றி பெறும் நிலையில்?

 
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், புரட்சிபடையினரின் கை ஓங்கியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத் பதவி விலக கோரி புரட்சிபடையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப் போராட்டத்தில் இதுவரையிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதுடன், ஐந்து லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
போராட்டத்தை கைவிடும் படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியும், ஜனாதிபதி பதவி விலக மறுத்து வருகிறார். இவருக்கு சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இதற்கிடையே சிரியா புரட்சிபடையினரை அங்கீகரிப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரஷ்ய வெளிவிவகாரத்துறை அமைச்சர் போக் டோனோவ் குறிப்பிடுகையில், சிரியாவில் புரட்சிபடையினரின் கை ஓங்கியுள்ளது. அப்பாவி மக்கள் பலர் மடிவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.
இந்நிலையில் புரட்சிபடையினர் மீது சிரியா இராணுவம் ஸ்கட் ரக ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது