siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 15 டிசம்பர், 2012

இளம் அரசியல்வாதியின் தற்கொலைக்கு காரணம் காதலா?அதிர்ச்சி


யிர்த் தியாகம் செய்​தாவது கூடங்குளம் அணு மின் உலை​யைத் திறக்க உறுதி ஏற்க வேண்டும்’ என இரண்டு மாதங்​களுக்கு முன், காஞ்சி​யில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முழங்கினார் ஐஸ்வர்யா. சமீபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி இளை​ஞர் காங்கிரஸ் தலைவியாக தேர்வு செய்யப்​பட் டவர். இவரது திடீர் மரணம் பலத்த சர்ச்சை​யைக் கிளப்பி உள்ளது!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாச னின் தீவிர ஆதரவாளருமான எஸ்.டி.நெடுஞ்செழியனின் மகள்​ ஐஸ்வர்யா. மூன்று மாதங்​களுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் பாராளு​மன்றத் தொகுதித் தலைவர் தேர்தலில் காஞ்சிபுரம் தொகு​திக்குப் போட்டியிட்டு, மாநிலத் திலேயே அதிக வாக்குகள் வித் தியாசத்தில் வெற்றி பெற்றவர். சிரித்த முகம்,அளவான பேச்சு, பெரியவர்களிடம் மரியாதை என வளைய வந்தவர், சீரிய​ஸான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகத் தகவல் பரவியது. கடந்த 11-ம் தேதி அவர் இறந்து விட்டதாக இறுதித் தகவல் வந்துசேர, சோகமானது காஞ்சிபுரம் காங்கிரஸ் வட்டாரம்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பொருளாளர் ஓ.வி.அமர்​நாத், ''23 வயதில் ஐஸ்வர்யாவுக்குப் பெரிய பொறுப்பு கிடைத்தது. இன்ஜினீயரிங் பட்டதாரி. சிறு வயதில் இருந்தே அரசியல் ஆர்வம் அதிகம். ஒரே மகளின் ஆசைக்கு நெடுஞ்செழியனும் குறுக்கே நிற்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் ஆனார். தன் எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்​சியில், கட்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டு துடிதுடிப்போடு வலம் வந்தார். மூத்த நிர்வாகிகளிடம் மரியாதை, சிறியவர்களை சரிக்குச்சமமாக நடத்துவது என்ற அவரின் இயல்பு எல்லோருக்கும் பிடிக்கும். காஞ்சியில் அவரது அணுகுமுறையால் இளைஞர்கள் இடையே ஓர் எழுச்சி உருவானது. அந்த நம்பிக்கைகள் ஒரே நாளில் தகர்ந்து விட்டதில் நாங்கள் நொந்துபோய் இருக்கிறோம்'' என்றார் வேதனையோடு.
'ஐஸ்வர்யாவின் மரணத்துக்குக் காரணம், காதல் விவ காரம்தான். காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் உள்ள தலைவர் ஒருவரை ஐஸ்வர்யா காதலித்தார். அதை அவருடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார்’ என்ற தகவல் காங்கிரஸ் வட் டாரத்தில் பரபரப்பாக அடிபடுகிறது.
இறுதி மரியாதை செலுத்தவந்த இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் யுவராஜிடம் பேசினோம். ''ஐஸ்வர்யா, இளைஞர் காங்கிரஸுக்குக் கிடைத்த பொக்கிஷம். செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், ரொம்ப எளிமையாகவே அனைவரிடமும் பழகுவார். இன்ஜினீயரிங் படித்த அவர், எப்படியோ செட்டில் ஆகி இருக்கலாம். ஆனால், அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது அவருக்கு அதிக ஈடுபாடு. அவருடைய வேலைகளைப் பார்த்து, எதிர்காலத்தில் என்னென்னவோ சாதிப்பார் என்று கட்சியின் மூத்தவர்கள் எல்லோரும் நம்பினர். ஆனால், விதி வேறு முடிவு எடுத்து விட்டது'' என்றவரிடம், ஐஸ்வர்யாவின் மரணம் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டோம். ''அனைத்தும் சுத்தப் பொய். எந்த நேரமும் காங்கிரஸும் கட்சிப் பணியும்தான் அவருடைய சிந்தனையில் இருந்தது. ஓர் ஆணின் இறப்புக்குக் கேள்வி எழுப்பாத இந்தச் சமூகம், அதுவே பெண் என்றால் வாய் கூசாமல் என்னென்னவோ பேசுகிறார்கள். ஒரே மகளை இழந்த துக்கத்தில் இருக்கும் அவரின் பெற்றோருக்கு இது எத்தகைய மன வலியை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணராதது வேதனை. அவருக்குச் சின்ன வயதில் இருந்தே மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி பிரச்னை இருந்தது. அதற்காக 10 வருடங்களுக்கும் மேலாக சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த 5-ம் தேதி காலையில் வழக்கம்போல தலைவலிக்காக அந்த மருந்தைச் சாப்பிட்டிருக்கிறார். தன் அறைக்குச் சென்று, பிரைவசிக்காகக் கதவை உள்புறம் சாத்தி இருக்கிறார். அதனால், அவர் வலியால் துடித்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. நீண்ட நேரம் வெளியில் வராததால், கதவைத் திறந்து சென்று மயக்கத்தில் இருந்தவரை மருத்துவமனையில் சேர்த்​தனர். ஒரு கட்டத்தில் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபட்டு சுயநினைவை இழந்திருக்கிறார். கடந்த 11-ம் தேதி காலை இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்'' என்றார் சோகமாக.
ஐஸ்வர்யாவின் பெற்​றோர் சார்பாகபேசியகாங்​கிரஸ் பிரமுகர் மலையூர் புருஷோத்தமன், ''ஐஸ்வர்யா பிறக்கும்போதே ஒற்றைக் கிட்னியுடன் பிறந்தவர். அதோடு அவருக்கு மைக்ரேன் தலைவலியும் இருந்தது. தலை வலிக்கான மாத்திரையை சம் பவம் நடந்த அன்று வலியின் வேதனையால் கூடுதலாக எடுத்துக் கொண்டார். அது வலியை அதிமாக்கிவிட, அதைத் தாங்க முடியாமல் தற் கொலை முடிவுக்குச் சென்று விட்டார். அப்படி இருக்கும்​போது ஐஸ்வர்​யாவின் மரணத்தை 'காதல் தோல்வி’ என்று கொச்சைப்படுத்துவது வேதனையின் உச்சம்'' என்று வருத்தப்பட்டார்.
வழக்கின் விசாரணை அதிகாரி​யான அடையாறு உதவி ஆய்வாளரான தினேஷ்குமார், ''ஐஸ்வர்​யாவுக்குத் தீராத வயிற்று வலி இருந்ததாகவும், வயிற்று வலி கடுமையாகி அதைத் தாங்க முடியாமல் தனது அறையில் துப்பட்டாவில் தூக்கு மாட்டிக்கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் புகார் தந்துள்ளனர். தூக்கில் தொங்கியவரை உடனே மீட்டு மலர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குடும்பத்தினர் தந்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்திருக்​கிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்காத வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அறிக்கை வந்த பின் அடுத்தக் கட்ட விசாரணை தொடங்கும். வேறு ஏதாவது தடயம் கிடைத்தால் அதையும் விசாரிப்போம்'' என்றார்.
ஓர் இளம் தலைவியின் மரணம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அத்தனை கேள்விகளுக்கும் விடை அளிக்கட்டும் காவல் துறை!

வரும் 19ஆம் தேதி என்ன நடக்கும். அச்சத்தில் சசிகலா?

      
னி பெங்களூரு வழக்கு அவ்வளவு​தான்’ என, நீதிபதி மல்லிகார்​ஜுனய்யா ஓய்வுபெற்றதும் உற்சாக​மாகச் சொல்லிவந்த எதிர்த் தரப்பு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணாவின் அதிரடியால் அதிர்ந்து கிடக்கிறார்கள். அதுவும் 'வருகிற 19-ம் தேதி என்ன நடக்குமோ?’ என சசிகலா கலக்கத்​தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன!
கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் கூடிய விரைவில் தீர்ப்பு வந்துவிடும் என்பதற்கு, கடந்த 10 மற்றும் 11-ம் தேதி பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் அரங்கேறிய‌ அதிரடிக் காட்சிக‌ளே அழுத்தமான சாட்சி.
கடந்த 10-ம் தேதி, நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் வழக்கம்போல கோர்ட்டுக்கு வரவில்லை. விசாரணை ஆரம்பம் ஆனதும் சசிகலா மற்றும் சுதாகரன் தரப்பில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ''சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு படி கடந்த 21 நாட்கள் வழக்கின் அன்மார்க்டு ஆவணங்களைப்பார்த்தோம். எங்கள் தரப்பிடம் இருந்து தமிழக ஊழல் தடுப்புத் துறை போலீஸார் கைப்பற்றிய ஆவணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆவணங்களை(60 ஆயிரம் பக்கங்கள்), வழக்கில் பயன்படுத்தவில்லை. அவை வெறுமனே இந்த கோர்ட்டில் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, வழக்கில் பயன்படுத்தாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருக்கும் ஆவணங்களையோ அதன் பிரதிகளையோ எங்களுக்குத் திருப்பித்தர வேண்டும். எங்கள் கட்சிக்காரர் பதில் சொல்ல அந்த ஆவணங்கள் தேவைப்படுகிறது'' என்றார் சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர்.
''இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?'' என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டாவிடம் நீதிபதி பாலகிருஷ்ணா கேட்​டார். ''1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கை, எப்படியாவது இழுத்தடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, இதுவரை 800-க்கும் மேற்பட்ட மனுக்களை எதிர்த் தரப்பில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த மனுக்களின் நியாயத்தன்மையை ஆராய்ந்து ஸ்பெஷல் கோர்ட்டும், கர்நாடக ஹை கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பெரும்பாலான சமயங்களில் தள்ளுபடி செய்து இருக்கிறது. இருப்பினும், மீண்டும் மீண்டும் மனு போட்டு 'அன்மார்க்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்’ எனக் கேட்டதால், சுப்ரீம் கோர்ட் 21 நாட்கள் அனுமதி அளித்தது. இப்போது அந்த மனுவைக் காரணம் காட்டி புதிய மனுவைப் போடுகிறார்கள். இது வழக்கை இழுத்தடிக்கும் செயலே. வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா கடந்த ஆண்டு நான்கு நாட் கள் கோர்ட்டில் ஆஜராகி நீதி பதியின் 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்தார். ஆனால், இரண்டாம் குற்றவாளியான சசிகலா, கடந்த 13 மாதங்களாக மீதி இருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மனு மேல் மனு போட்டு வழக்கை நகரவிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்'' என்று கடுமையாக ஆட்சேபித்தார்.
இருவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, ''இந்த மனு மீதான தீர்ப்பை நாளை சொல்கிறேன். ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், இரண்டாவது குற்றவாளியிடம் மீதி இருக்கும் கேள்விகள் நிச்சயம் கேட்கப்படும்'' என்றார். இதனால் ஷாக் ஆன வழக்கறிஞர்கள், உடனேசசிகலாவுக்குத் தகவலை பாஸ் செய்தனர். 'நாளைக்கு கோர்ட்டை அவாய்ட் பண்ண எதாவது சான்ஸ் இருக்கா?’ என்று சசிகலா கேட்க, 'இல்லம்மா... புது ஜட்ஜ் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்’ என்றார்களாம். அதனால், மறு நாள் பெங்களூரு கோர்ட்டுக்கு வர முடிவு எடுத்தாராம் சசி.
உதவியாளர்கூட இல்லாமல் தனியாக‌ பெங்​களூருக்குக் கிளம்பிய சசி​கலாவுக்கு, கேபிடல் ஹோட்​டலில் எக்ஸிகியூட்டிவ் ரூம் தயாராக இருந்தது. காலை 10.45 மணிக்கு கறுப்பு இன்னோவாவில் கோர்ட்​டுக்குள் நுழைந்தார். கூலிங் கிளாஸ், ஹேண்ட் பேக், பேனா, பென்சில், பிளாஸ்க் சகிதம் வந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் 11.30 மணிக்குத்தான் நீதிபதி பாலகிருஷ்ணா கேபினுக்குள் நுழைந்தார். சசிகலாவும் அவசர அவசரமாக கோர்ட்டுக்குள் நுழைந்தார். ஆனால், அரை மணி நேரத்துக்கு மேலாகியும் கோர்ட் ஹாலுக்கு நீதிபதி வரவில்லை. தனது அறையில் அமர்ந்தவாறு தீர்ப்பை டைப் செய்தாராம். சரியாக 12.35 மணிக்கு கோர்ட் ஹாலுக்குள் நுழைந்த நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு குற்றவாளிக் கூண்டில் நின்றவாறு 'வணக்கம்’ என கைகூப்பினார் சசிகலா. அவரைக் கவனிக்காத நீதிபதி, ''சசிகலா, சுதாகரன் தரப்பில் ஆவணங்கள் கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறேன். வரும் 19-ம் தேதி இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313-ன் படி கேள்விகள் கேட்கப்படும். அன்றைக்கு நிச்சயம் அவர் ஆஜராக வேண்டும். குற்றவாளியின் பதில்களை மொழிபெயர்க்க ஏதுவாக மொழிபெயர்ப்பாளாரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்'' என்றார்.
கோர்ட்டை விட்டு வெளியேவந்த சசிகலாவின் முகத்தில் பழைய உற்சாகம் இல்லை. தன்னுடைய வழக்கறிஞரிடம் ஏதோ சீரியஸாகப் பேசிவிட்டு காரில் ஏறிச்சென்றார். ஏற்கெனவே, 532 கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருக்கும் சசிகலாவிடம் மீதி இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை நீதிபதி பாலகிருஷ்ணா கேட்க இருக்கிறாராம். இந்தக் கேள்விகள் அனைத்தும் முன்னாள் நீதிபதி மல்லி கார்ஜுனய்யா தயார் செய்துவிட்டுப் போனதாம்.
19-ம் தேதிக்கான தயாரிப்புகளில் இருக்கிறார் சசி!

தற்கொலைக்கு மருத்துவமனை மூத்த ஊழியர்கள் தான் காரணமா?

லண்டனில் தற்கொலை செய்து கொண்ட செவிலியர் ஜெஸிந்தாவின் உடல் இன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜெஸிந்தா.
அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று பேசி கேத் குறித்த தகவல்களை சேகரித்தனர்.
அறிவிப்பாளர்களுக்கு, கேத் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தி கொடுத்தது ஜெஸிந்தா தான் என தெரியவந்தது.
இதனையடுத்து மன உளைச்சலில் ஜெஸிந்தா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜெஸிந்தாவின் உடல், லண்டனிலிருந்து இன்று அதிகாலை ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கிருந்து அவரது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் உடுப்பிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதற்கிடையே ஜெஸிந்தா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதம் குறித்த தகவல்கள் அம்பலமாகி உள்ளது.
முதல் கடிதத்தில், இளவரசி கேத் கர்ப்பமுற்ற நிலையில், மசக்கையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்ததையும், அவுஸ்திரேலிய ரேடியோ தொகுப்பாளர்கள் மெல் கிரேக், மிக்கேல் கிறிஸ்டியன் ஆகியோரின் தொலைபேசி அழைப்பால் தான் ஏமாற்றப்பட்ட வேதனை அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
மற்றொரு கடிதத்தில், தான் பணியாற்றி வந்த மருத்துவமனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் பெயரால் வந்த தொலைபேசி அழைப்பை நம்பி ஏமாந்த பின்னர், தன்னை தனது மூத்த அதிகாரிகள் நடத்தியவிதத்தால் ஏற்பட்டுள்ள வேதனையை உருக்கமாக விவரித்துள்ளார்.
மூன்றாவது கடிதத்தில், தனக்கு இந்தியாவில் உடுப்பி அருகேயுள்ள சுர்வேயில் இறுதிச்சடங்கு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்{காணொளி}

அமெரிக்காவில் பயங்கரம்: 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி


அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில், 20 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் இரண்டு துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இதில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் நடத்திய நபரும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கவர்னர் சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பொலிசாருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த பொலிசார், அங்கிருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் எத்தனை குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை.
சம்பவ இடத்திலிருந்து மாணவர்கள் பயத்தில் கதறியபடி பலத்த பாதுகாப்புடன் வெளியேறும் காட்சிகளை அந்நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து பள்ளியை சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு 223 காலிபர் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் முன்னர், ஒவ்வொரு மாணவரையும் பொலிசார் தீவர சோதனை செய்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.
பொலிசாருக்கு உதவ மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஆயுதங்களுடன் பொலிசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர், இந்த துயரமான சம்பவத்திற்கு ஜனாதிபதி சார்பாகவும், எனது சார்பாகவும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார.{காணொளி,புகைப்படங்கள்,}


 



;">



 





சோதனைச் சாவடிகள்! ஆயுதம் தரித்த படையினர்!: மக்கள் மத்தியில்??

 
 
யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் நேற்று மாலை முதல் படையினர் வாகனச்சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது.
குறித்த வீதியில் 75மீற்றருக்கு ஒரு இடத்தில் “நிறுத்து” என்ற அறிவுறுத்தல் பலகையுடன் காத்திருக்கும் படையினரும், இராணுவ பொலிஸாரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதுடன், வாகனம், மற்றும் பயணிகள் தொடர்பில் பதிவுகளையும் செய்கின்றனர்.
இதேபோல் ஆனையிறவு பகுதியில் ஏற்கனவே நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முற்றாக மூடப்பட்டிருந்த நிலையில் மாலை 6 ணிக்குப் பின்னர் அந்த சோதனைச் சாவடியிலும் வாகனங்கள் சோதனையிடப்படுகின்றது.
எனினும் இந்த திடீர் சோதனை நடவடிக்கை எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்பது குறித்து எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் யுத்தகாலத்தினைப் போன்று ஆயுதங்களுடன் படையினர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
மேலும் இராணுவ பொலிஸார் பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை எதற்காக என்ற பலத்த சந்தேகமும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கூட்டுக்குழு

 
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வோரை தடுக்கும் வகையில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இணைந்து கூட்டுசெயற்குழு ஒன்றை அமைக்கவுள்ளன.
அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரின் இலங்கை வந்துள்ள நிலையிலேயே இந்த குழு அமைக்கப்படவுள்ளது.
இந்தக் குழுவுக்கு இலங்கையின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், அவுஸ்திரேலியாவின் சார்பில் அந்த நாட்டின் குடிவரவு மற்றும் பிரஜைகள் திணைக்கள செயலாளர் மார்டின் பௌலர்ஸ-ம் தலைமை தாங்கவுள்ளனர் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது

பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம்! நோர்வே கவலை

 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக நோர்வேயின் தூதுவர் கிரிட் லொசென் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண அரசாங்க அதிபரை அண்மையில் சந்தித்த போது அவர் தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் யாழ்ப்பாணத்தில் பதற்றநிலையை தோற்றுவித்துள்ளதாகவும் நோர்வே தூதுவர் குறிப்பிட்டுள்ளார்

பெற்றோல் விலையை முன்னறிவித்தலின்றி அதிகரித்துள்ளது!

 
இலங்கையில் பெற்றோலின் விலை நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வித முன்னறிவித்தலும் இன்றி லீற்றர் ஒன்று 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சாதாரண பெற்றோல் (ஒக்டெய்ன் 90) லீற்றர் ஒன்றின் விலை 159 ரூபாவாக இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கொசி மாத்தாய், இலங்கை அரசாங்கம் பெற்றோலின் இறக்குமதி செலவை ஈடுசெய்ய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அவரின் ஆலோசனைப்படியே பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.