siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 22 டிசம்பர், 2012

ஐ.நா ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியது தெற்கு சூடான்

ஐ.நா ஹெலிகொப்டரை தெற்கு சூடான் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சூடானிலிருந்து தனியாக பிரிந்த தெற்கு சூடானின் ஜோங்லெய் மாநிலத்தில், ஐ.நா ஹெலிகொப்டரை அந்நாட்டு இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த 4 ரஷ்ய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுதொடர்பாக தெற்கு சூடான் அரசு உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
ஐ.நா ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதை முதலில் மறுத்த இராணுவம், ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக கூறியது.
அதன் பின் போராளிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த சூடான் ஹெலிகொப்டர் என நினைத்து சுட்டதாக தெரிவித்தது.
இருப்பினும் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிலிப் ஆகர் தெரிவித்தார்.
ஜோங்லெய் மாநிலத்தில் இயங்கும் டேவிட் யாவு யாவு தலைமையிலான போராளிக் குழுவிற்கு, சூடான் அரசு விமானங்கள் மூலம் ஆயுதங்கள் வழங்குவதாக தெற்கு சூடான் அடிக்கடி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


வடபழநியில் அரசு பஸ் தீப்பிடித்து எரிந்தது


சென்னை ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ், திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அரசு பஸ்

சென்னை வடபழனி பணிமனையில் இருந்து வடபழனி–குன்றத்தூர்(தடம் எண்: எம்.88) செல்லும் அரசு பஸ், நேற்று காலை வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர் சென்றது. நேற்று பிற்பகல் குன்றத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு போரூர் வழியாக வடபழனி நோக்கி வந்து கொண்டிருந்தது.

பஸ்சை டிரைவர் தங்கவேல் ஓட்டினார். கண்டக்டர் கருணாநிதி பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்


புகை வந்தது
 
மதியம் 1 மணியளவில் வடபழனி பஸ் நிலையத்துக்கு முன்பு ஆற்காடு சாலையில் சாலிகிராமம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த என்ஜினில் இருந்து புகை வரத்தொடங்கியது. இதையடுத்து டிரைவர் தங்கவேல், பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அதற்குள் என்ஜினில் இருந்து அதிகளவில் புகை வெளியே வர ஆரம்பித்தது.

இதனால் பயந்து போன டிரைவர் தங்கவேல், பயணிகள் அனைவரையும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி விடும்படி கூறி விட்டு, தானும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார். பஸ்சில் பயணம் செய்த 40–க்கும் மேற்பட்ட பயணிகள், அலறியடித்துக்கொண்டு பஸ்சின் படிக்கட்டு வழியாக கீழே முண்டியடித்துக்கொண்டு இறங்கி ஓடினார்கள்.

தீப்பிடித்து எரிந்தது

பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து கொண்டு பஸ் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பஸ் முழுவதும் தீ வேகமாக பரவி, கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சி அளித்தது.

சாலையோரம் பஸ் நிறுத்தப்பட்டதால் அருகில் இருந்த கடைகளிலும் தீயின் அனல் பரவியது. எனவே கடைக்காரர்கள் தங்களது கடைகளை மூடி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதற்கிடையில் அசோக்நகர் தீயணைப்பு வீரர்கள் வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனால் அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது.

போக்குவரத்து பாதிப்பு

போக்குவரத்து மிகுந்த சாலையில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் எரிந்து கொண்டிருந்த பஸ்சை தங்களது செல்போனில் படம் பிடித்து சென்றனர்.

பஸ்சில் கரும்புகை வந்தவுடன் டிரைவர் அனைத்து பயணிகளையும் இறங்கச்சொன்னதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினார்கள். தீ விபத்தில் எரிந்த பஸ்சை, போலீசார் வடபழனி பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அரசு பஸ் தீப்பிடித்து எரிந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்துவிசாரித்துவருகின்றனர்{காணொளி,}

கணவனைச் சிறையில் இருந்து மீட்ட மணைவி


கணவனாலே கொலைசெய்யப்பட்ட துயரம் சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது.
சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்துகொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ?

அனுஜா 2011ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சிவலோக நாதன் என்பவரை மணம் முடித்துள்ளார். அப்போது அனுஜாவுக்கு 21 வயதும் சிவலோக நாதனுக்கு 27 வயதுமாக இருந்தது. பெண் வீட்டார் சுமார் 50,000 ஆயிரம் கனேடிய டாலர்களை செலவு செய்து இத் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இதற்கு முன்னதாக அனுஜாவுக்கு இந்த சிவலோக நாதன் யார் என்றே தெரியாது. திருமணமாகி முதல் மாதத்திலேயே வாடகை கட்டவில்லை என்ற காரணத்தால், வீட்டை இழந்த சிவலோகநாதன், அனுஜாவின் பெற்றோர் வீட்டின் கீள் பகுதியில் குடிபுகுந்துள்ளார்கள். அடிக்கடி கோபப்படும் சிவலோகநாதன், அனுஜாவை பார்த்துப் பாராமல் அடிப்பது வழக்கம். கன்னத்தில், தலையில் , மற்றும் முதுகுப் பகுதியில், இவர் அனுஜாவைத் தாக்கியுள்ளார். ஒரு சமயம் பாக்சிங் அடிப்பது போல அனுஜாவின் முகத்தில் கைகளால் குத்தி காயப்படுத்தியுள்ளார். நிலத்தில் வீழ்ந்த அனுஜாவின் தலைமுடியை பிடித்து அவரை தூக்கி மீண்டும் தாக்கியுள்ளார். இதனால் பொலிசார் இப் பிரச்சனையில் தலையிடவேண்டி வந்தது.

சுமார் 3 தடவை பொலிசார் சிவலோகநாதனைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். ஆனால் அவர் திருந்தியபாடாக இல்லை. ஒவ்வொரு முறையும் பொலிசார் சிறையில் அடைக்கும்போது, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று அயலவர்கள் அட்வைஸ் பண்ணுவார்களாம். இதனால் மனமிரங்கிய அனுஜா, தானே சென்று அவர்மேல் உள்ள குற்றங்களை எல்லாம், நிராகரித்து அவரை பலதடவை சிறையில் இருந்து விடுவித்துள்ளார்.

இருப்பினும் அவர் இறுதியாகக் கைதுசெய்யப்பட்டவேளை, அவர் பிணையில் செல்ல நீதிபதி அனுமதிக்கவில்லை. இதேவேளை அவர் மீது தாம் எந்தக் குற்றத்தையும் சுமத்த விரும்பவில்லை என்று அனுஜா தெரிவித்துள்ளார். இருப்பினும் சில குற்றங்களுக்கு, பாதிக்கப்பட்ட நபர் மறுத்தால் கூட குற்றவாளியை நீதிமன்றில் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்க முடியும். இவ்வாறு ஒரு நடவடிக்கையை எடுக்கவே கனேடியப் பொலிசார் விரும்பியுள்ளார்கள். இதனை அனுஜா ஆட்சேபித்தும் உள்ளார். இந் நிலையில் சில தினங்களுக்கு முன்னர், பெற்றோர் வீட்டின் கீள்ப் பகுதியில், கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பிணையில் வெளியே வந்த, கணவர் சிவலோக நாதன் அனுஜாவை கொலைசெய்துள்ளார். கழுத்தை வெட்ட பாவிக்கப்பட்ட கத்தி முதல் அனைத்து தடையங்களையும் கண்டுபிடித்துள்ளார்கள் பொலிசார். சிவலோகநாதனே இக் கொலையைச் செய்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
28 வயதாகும் இச் சந்தேக நபர் தற்போது கனேடியப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எல்லாத் திருமணங்களும் இவ்வாறு முடிவதில்லை ! ஆனால் திருமணம் என்று வரும்போது தமக்கு பிடித்த, அல்லது நன்கு தெரிந்த ஒருவரை எமது பிள்ளைகளுக்கு மணம் முடித்து வைப்பது நல்லதல்லவா ? யார் என்றே தெரியாத நபர் ஒருவரை திடீரென்று எவ்வாறு மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறீர்கள் ? முன் பின் தெரியாத நபர் ஒருவரை நம்பி 21 வருடம் அன்பாக வளர்த்த பெண் பிள்ளையை எவ்வாறு அனுப்பிவைக்கிறீர்கள். அனுஜாவுக்கு நடந்த கொடுமை இனியும் ஈழத் தமிழர் மத்தியில் தொடரக்கூடாது. தமிழ் பெற்றோர்கள் இதனை ஒரு முன்னுதாரணமாக எடுப்பது நல்லதல்லவா ?