| கனடாவில்
வாழும் மக்கள் புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையோடும் புத்துணர்ச்சியோடும் வரவேற்க
காத்திருக்கின்றனர்.
கனடியர்களின் புத்துணரச்சிக்கு அடிப்படை காரணம், தங்களது நிதி நிலைமை சிறப்பாக
இருக்கிறது என்று அவர்கள் நம்புகின்றனர். இது தொடர்பாக ஹேரிஸ்- டெசிமோ நிறுவனம் மூலமாக கருத்துக்கணிப்பு நடத்திய CIBC, 70 சதவீதம் பேர் தங்களது தற்போதைய நிதிநிலை குறித்து மனநிறைவடைந்துள்ளனர். ஆனால் இந்த மனநிறைவு சென்ற ஆண்டு 63 சதவீதம் பேரிடம் மட்டுமே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மற்றொருமொரு சிறப்பாவது, 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் மிகுந்த மனநிறைவுடன் இருக்கின்றனர். ஆனால் 25-34 வயதுடையவர்களில் 67 சதவீதம் பேர் மட்டுமே மனநிறைவு பெற்றுள்ளனர். இதுதவிர மேலும் பலர், எதிர்காலத்தில் தங்களின் நிதிநிலமை சிறப்படையும் என்றும் தாம் எதிர்பார்த்த இலக்குகள் அடைவது உறுதி என்றும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 2 சதவீதம் உயர்ந்து 74ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனடா முழுவதும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 4 வரை 2000 பேரிடம் தொலைபேசி மூலம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது |
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
வெள்ளி, 28 டிசம்பர், 2012
வசதிக்கு பஞ்சமில்லை: மனநிறைவுடன் புத்தாண்டை வரவேற்கும்
கத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்
| இங்கிலாந்தில் 10 வயதுக்கு குறைவான
மாணவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருகின்றனர் என்று தகவல்
வெளியாகி உள்ளது.
மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. எப்போது
என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது அமெரிக்காவில் சமீபத்தில் ஆசிரியை மகன் ஒருவன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் தினமும் 4 சிறுவர்கள் கத்தி, சுத்தி, துப்பாக்கியுடன் பள்ளிக்கு வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிரலப பத்திரிக்கையான டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் 4 மாணவர்களாவது தினமும் கத்தி, சுத்தி, துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்கள் சிலர் உலோகத்தால் நட்சத்திர வடிவில் தயாரிக்கப்படும் நிஞ்சா ஸ்டார் ஆயுதத்தை கொண்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். மாணவர்களிடம் கடந்த 5 ஆண்டுகளில் 4,150க்கும் அதிகமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் 20க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களின் ஆவணங்களில் இருந்து தெரிய வந்தது. சில பள்ளிகளில் கோடாரியை கூட மாணவர்கள் கொண்டு வந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
பிரபல பாடகி விட்னி ஹுஸ்டன் கொலை செய்யப்பட்டாரா? திடுக்கிடும் ?
|
பிரபல பொப் இசை பாடகி விட்னி ஹுஸ்டன்(வயது 48), சில மாதங்களுக்கு முன்பு மர்மமான
முறையில் மரணமடைந்தார். அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில் கோகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை அதிகளவு உட்கொண்டதே இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் மரணம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சிகாகோ நகரின் காவல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது நடித்து கொண்டிருக்கும் பால் ஹுபுல் என்பவர் இது தொடர்பாக சமீபத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு விட்னி ஹுஸ்டன், ரூ. 9 கோடி வரை பாக்கி வைத்திருந்தார். இந்த கடனை வசூலிக்கும் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம். பிவர்லி ஹில்ஸ் ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் அவருடன் இருந்தது ஹோட்டல் கமெராவில் பதிவாகியுள்ளது. இவர்கள், விட்னி ஹுஸ்டன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து அவரை கொன்றிருக்கலாம். அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் போராடியிருக்கக்கூடும். இந்த வாதத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அவரது உடலில் சில காயங்களும் காணப்பட்டன. என்னிடம் உள்ள ஆதாரங்களை பொலிசாரிடம் நான் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் விரைவில் இதை ஆதாரமாக வைத்து, புதிய கோணத்தில் விட்னி ஹுஸ்டனின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
சுரங்கத் தொழிலில் முதலீடு அதிகரிக்கிறது:
| சுவிஸ்
சுரங்கத்தொழில் ஜாம்பவானான எக்ஸ்ட்ராட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
பாப்புவா நியு கினியாவில் ஃபிரீடா ஆற்றங்கரையில் உள்ள தங்கம் மற்றும் செம்புச்
சுரங்கத்தை மேம்படுத்த முன்பு கணக்கிட்டதை விட 300 மில்லியன் டொலர் கூடுதலாகத்
தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
சுவிஸ் நிறுவனம், பாப்புவா நியு கினியாவில் உள்ள ஹைலாண்டஸ் பசிஃபிக் என்ற
நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து அந்தத் தீவில் சுரங்கத்தொழிலை மேற்கொண்டுள்ளது.
முன்பு 5.3 மில்லியன் டொலர் முதலீடு செய்தால் போதும் என்ற திட்டமிட்டது. இப்போது 5.6 மில்லியனாக உயர்ந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் புனல் மின்சார முறையை விடுத்து எரிவாயு மின்சார முறையைப் பின்பற்ற வேண்டும் என்று இந்நிறுவனம் முடிவெடுத்ததே ஆகும். 82 சதவீதம் பங்குகளுக்குச் சொந்தமான எக்ஸ்ட்ராட்டா நிறுவனம் திட்ட ஆய்வு அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது. முதலீடு அதிகரிப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், கழிவு மேலாண்மைக்கான செலவினங்களில் ஏற்பட்ட மாற்றம் ஆகும்; என்று Xstrata திட்ட மேலாளர் பால்கோ குறிப்பிட்டுள்ளார். ஹைலாண்ட்ஸ் பசிஃபிக் நிறுவனம் தனியாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், அமெரிக்கச் செலாவணியின் மதிப்பு குறைந்ததால் முதலீடு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த சுரங்கம் மட்டுமின்றி உலகில் உள்ள மற்ற சுரங்கங்களிலும் செலவுகள் அதிகரித்து இருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. போன ஜுன் மாதம், தன்னுடைய பங்குகளை விற்கப் போவதாக எக்ஸ்ட்ராட்டா குறிப்பால் உணர்த்தியது. முதலீட்டுச் செலவுகளின் உயர்வினை உத்தேசித்தே பங்கு விற்பனை குறித்து இந்நிறுவனம் சிந்தித்திருக்கலாம். ஃபிரீடா ஆற்றங்கரையில் உள்ள சுரங்கங்களில் 204,000 டன் செம்பும் 305,000 அவுன்ஸ் தங்கமும் கடந்த இருபது ஆண்டுகளில் கிடைத்துள்ளது. எக்ஸ்ட்ராட்டா இந்தச் சுரங்கத்தை 2007 முதல் எடுத்து நடத்தி வருகிறது. ஹைலாண்டஸ் பசிபிக் தனது அறிக்கையில், அடுத்த ஆண்டில் தானும் எக்ஸ்ட்ராட்டாவும் பாப்புவா நியு கினியாவின் அரசுடன் சமபங்கு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளது |
வாழ்த்துகளை விட பரிசுகள் அனுப்பியோரே அதிகம்
| சுவிட்சர்லாந்தில் இந்த
கிறிஸ்துமஸில் வாழ்த்துகளை விட பரிசுகளே அதிகம் அனுப்பப்பட்டதாக Swiss.com தகவல்
வெளியிட்டிருக்கிறது.
இந்த கிறிஸ்துமஸிற்காக சுவிஸ் தபால்துறை டிசம்பர் 1 முதல் 24 வரை 16 மில்லியன்
பரிசுப்பொருட்களை பட்டுவாடா செய்துள்ளது. கடந்த வருடம் வரை இந்த எண்ணிக்கை 15 மில்லியனாகவே இருந்தது. இந்த கூடுதல் ஒரு மில்லியன் பரிசுப்பொட்டலங்களும் வாட், துர்கா, சோலோதுன் மாநிலங்களுக்கே அதிகமாக அனுப்பப்பட்டுள்ளன. அதாவது, சாதாரண நாட்களில் வரும் பரிசுப்பொருட்களை விட கிறிஸ்துமஸ் தினங்களில் இருமடங்கு வந்துள்ளன. கடிதங்களும் இந்த டிசம்பர் மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நாளைக்கு இருபது மில்லியன் கடிதங்கள் வந்திருக்கின்றன. சுவிஸ்காம், இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் முன்னிரவு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று கடந்த வருடத்தை விட குறைவான(மூன்று மில்லியன்) குறுந்தகவல்களே அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தது. கிறிஸ்துமஸ் அன்று 24.4 மில்லியன் வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டதாக சுவிஸ்காமின் அறிக்கை தெரிவிக்கின்றது. சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பலரும் வாழ்த்துகளை அனுப்பியதனால் அலைபேசிகளில் வாழ்த்துகள் அனுப்புவது குறைந்து போனது என்று சுவிஸ்காமின் தகவல் தொடர்பாளர் செப் ஹுபெர் கூறினார் |
அமெரிக்க மருந்து பொருட்களை இறக்குமதி செய்த ஈரானின்பெண்
மருந்து பொருட்கள் மீது விலை உயர்வு அறிவித்த ஈரான் பெண் அமைச்சரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். ஈரான் அதிபராக முகமது அகமது நிஜாத் (55) உள்ளார்.
இவரதுஅமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக மெரீஷா வாஹில் தஸ்தர்டி உள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரான இவர். நாட்டில் மருந்து பொருட்கள் மீது விலை உயர்வை அறிவித்தும், 2.4 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கத்திய மருந்து பொருட்கள் இறக்குமதி செய்தும் உத்தரவிட்டார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அணுசோதனை செய்வதை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதால் அமெரிக்க மருந்து பொருட்கள் இறக்குமதிக்கும் அனுமதியளித்ததால் ஆத்திரமடைந்த அதிபர், இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன







