Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 31 மார்ச், 2013

கண்காணிக்க செயற்கைக் கோள் அனுப்பும்


பூமியை துல்லியமாக கண்காணிக்கும் உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோளை சீனா, அடுத்த மாதம் விண்ணில் செலுத்த உள்ளது.
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த படியாக சீனா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழ்கிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பும் முயற்சியிலும் அந்நாடு ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, பூமியை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைகோள் "த லாங் மார்ச் 2டி” என்ற ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இயற்கை சீற்றங்களை குறைக்கவும், இயற்கை வளங்களை காக்கவும் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மற்றும் சீன பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும்.
மேலும் கடல் ஆய்வுகள் மற்றும் நகரங்களின் போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றிலும் இந்த செயற்கைகோளின் செயல்பாடு உதவும்.
 

வியாழன், 28 மார்ச், 2013

வளர்ச்சி வங்கி” அமைக்க பிரிக்ஸ் மாநாட்டில் முடிவு:


தென் ஆப்பிரிக்காவின் தலைநகரில் இன்று நடைபெறுகிற பிரிக்ஸ் மாநாட்டில் இதன் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நிதி அமைச்சர்கள் இன்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் பிரிக்ஸ் நாடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நிதியை வழங்க ”பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி” அமைக்க உடன்பாடு ஏற்பட்டது.
வளர்ச்சி வங்கியை அமைப்பது என்பது முக்கியமான முடிவு. உலக வங்கி, இந்த வங்கியுடன் இணைந்து செயல்பட்டு இரு வங்கிகளின் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும் என்று உலக வங்கி செய்தி வெளியிட்டுள்ளது.
 

புதன், 27 மார்ச், 2013

மக்கள் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன்: சர்தாரியின் மகன்

தந்தையுடன் ஏற்பட்ட மன வேற்றுமை காரணமாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்.வரும் மே மாதம் 11ம் தேதி பாகிஸ்தான் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நட்சத்திர பிரசாரகர் என கருதப்படும் பிலாவல் பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாய் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்காதது, பாகிஸ்தானில் பள்ளி மாணவி தாக்கப்பட்ட விவகாரம், குவெட்டா நகரில் ஷியா பிரிவினர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட சில மனவேறுபாடு காரணமாக அவர் தந்தையுடன் தகராறு செய்து கொண்டு துபாய் சென்று விட்டதாக பிலாவலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'தேர்தலில் ஓட்டு போட நேர்ந்தாலும் இனி பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன்' என பிலாவல் கூறியதாகவும் தெரிய வருகிறது

செவ்வாய், 26 மார்ச், 2013

பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்லாந்து பெண்ணுக்கு?



தாய்லாந்தைச் சேர்ந்த 43 வயதுப் பெண் இளம்பெண்களைக் கடத்தி சுவிட்சர்லாந்தில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதிபடுத்தபட்டதை தொடர்ந்து பெர்ன் நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்த பெண் 50 இளம்பெண்களை வற்புறுத்தி இத்தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
மேலும் துர்காஉ(Thurgau) என்ற மாநிலத்தில் மூல்ஹீம்(Müllheim) என்ற இடத்தில் தனியாக ஒரு விடுதியையும் நடத்தி வந்துள்ளார்.
இதற்காக இந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே மூன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.
விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி வந்த பெண்களிடம் தனக்கு அறுபதினாயிரம் ஃபிராங்க் சம்பாதித்துத் தர வேண்டும் என்று இப்பெண் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
இது குறித்து இந்த பெண் கூறுகையில், தன் மீது எந்தத் தவறும் இல்லை, தன்னை ஒரு பகடைக்காயாகத் தான் பயன்படுத்தினார்கள் என்று கூறியதை பெர்ன் நீதிமன்றம் ஏற்க மறுத்து சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
 

தொடரும் இனக்கலவரம்: மக்கள் ஊரை விட்டு ஓட்டம்


மியான்மர் நாட்டின் மெய்திலா நகரில் புத்த மதத்தினர் மற்றும் முஸ்லிம் மதத்தினரிடையே கடந்த புதன்கிழமை முதல் கலவரம் வெடித்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற மோதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மியான்மரின் மத்தியில் உள்ள கோன் நகரில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் வீடுகள் மற்றும் மசூதிகளை இடித்தும், கொளுத்தியும் நாசமாக்கினர். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இறப்பு குறித்த செய்திகளும் கிடைக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை காலிசெய்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். கடந்த வருடம் ராக்கைன் மாகாணத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்துக்கு 200 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

திங்கள், 25 மார்ச், 2013

திருமணநல் வாழ்த்து

திரு.திருமதி ஜெயச்சந்திரன் அருந்தா தம்பதியினருக்கு எங்கள் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்! - Bala Jeya, Bala Athavee, Ragu Swiss, Visakan Kuna, Yalini Sakeelan, Maheswaran Jeyachandran, Yogasingam Sellathuraiமற்றும் Kuna Thangarasa உடன்

ஜனாதிபதி மாளிகையை புரட்சிப்படையினர்?


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ஜனாதிபதியாக பிரான்கோயிஸ் பாசி பதவி வகித்து வருகிறார்.
இவரது ஆட்சிக்கு எதிராக புரட்சிப் படையினர் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த 2 மாதங்களாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன.
இந்த முயற்சி பலனளிக்காத நிலையில், பன்குயி நகரை நேற்று முற்றுகையிட்ட புரட்சிப் படையினர், ஜனாதிபதி மாளிகையை இன்று கைப்பற்றினர்.
ஜனாதிபதி மாளிகை புரட்சிப் படையினர் வசம் வந்ததாக அறிவித்த தளபதி டுஜோமோ நர்கோயோ, ஜனாதிபதி பிரான்கோயிஸ் பாசி மாளிகையை விட்டு தப்பியோடி விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, உள்ளூர் வானொலி மூலம் புரட்சிப் படையின் தலைவர் மைக்கேல் டுஜோடோடியா உரையாற்றுவார் என கூறிய அவர், இன்றுடன் எமது ஆயுதப் போராட்டம் முடிவடைந்தது. போராளிகள் அனைவரும் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்
 

ஞாயிறு, 24 மார்ச், 2013

தாயை 'பிடிக்காததால்' துண்டு துண்டாக வெட்டிய மகன்?



ஜப்பானைச் சேர்ந்த நடுத்தர வயது பெண் தனது 19 வயது மகனுடன் டோக்கியோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் அவரை சந்திக்க வந்த உறவினர்கள், வீட்டில் அவரையும் அவரது மகனையும் காணாமல் திடுக்கிட்டனர்.
வீட்டில் சுற்றும் முற்றும் தேடிய போது, பிளாஸ்டிக் கவர்களில் ஒரு பெண்ணின் அழுகிப்போன உடல் பாகங்கள் மூலைக்கு ஒன்றாக சிதறிக் கிடப்பதை கண்டு மேலும் திகிலுக்குள்ளாயினர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த பொலிசார், அந்த பெண்ணின் மகனை கைது செய்து பொலிஸ் காவலில் வைத்து விசாரித்தனர்.
விசாரணையின் போது, 'எனது தாய் சாதாரணமாக, எளிமையாக இருந்ததால் எனக்கு பிடிக்கவில்லை. அதனால், அவரை துண்டு துண்டாக வெட்டி, சில நாட்கள் குளியல் 'டப்'புக்குள் போட்டு வைத்திருந்தேன்.
நாளடைவில், துர்நாற்றம் தாங்க முடியாததால் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வீட்டிற்குள் ஒளித்து வைத்தேன்' என அந்த கொடூர மகன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
 

சனி, 23 மார்ச், 2013

நாட்டின் பாதுகாப்பிற்கிணையாக பேண ???


பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் உலகநாடுகள் தடுமாறுகின்றன. இத்தேவைகளில் முக்கியமானவை உணவும், தண்ணீரும்தான். இதில் ஒரு மனிதனுக்கு 50 முதல் 100 லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகின்றது என்று உலக சுகாதாரக் கழகம் கணக்கிட்டுள்ளது.முதன்முறையாக, ஐ.நா அமைப்பு நீர் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை அன்று ஒரு செயல்முறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக வானிலை மையத் தலைவரும் ஐ.நாவில் நீர்வளம் குறித்த தலைமைப் பொறுப்பில் இருப்பவரும் ஆன மைக்கேல் ஜராட், ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இணையாக அந்நாட்டின் நீர்வள ஆதாரங்களும் கருதப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்குத் தேவையான நீர் தொடர்ந்து கிடைப்பது, அது குறித்த பிரச்சினைகள் விலக்கப்படுவது, சுற்றுப்புற சூழலைப் பாதுகாத்து நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காகப் பாடுபடுவது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகில், 145 நாடுகள் தங்களுடைய நீர் ஆதாரத்தை அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுகின்றன என்று கூறிய அவர் இதுபோல் உள்நாட்டிலேயே மறைந்து கிடக்கும் 300க்கும் மேற்பட்ட நீர் ஆதாரங்களை அந்தந்த நாடுகள் தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார். 7 மில்லியனாக இருக்கும் மக்கள்தொகை, 2050ஆம் ஆண்டிற்குள் 9 மில்லியனாகப் பெருகக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தட்பவெப்பநிலை மாறுபாடு பஞ்சம், நோய்கள் போன்ற இயற்கை அழிவுகள் தண்ணீர் பிரச்சினையை அதிகரிக்கின்றன. 2010ல் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 2000க்கும் மேற்பட்ட மக்களைப் பலி வாங்கியது. 2011ல், 1,85,000 சோமாலிய மக்கள் தங்களின் உணவு, நீர்த்தேவைக்காக அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
2012ல், தெற்கு சூடானில் ஏற்பட்ட கலவரத்திற்கு தண்ணீர் பிரச்சினையும் ஒரு காரணமாகும். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பற்றாக்குறை உணவுப்பொருட்களின் விலையை உலகளவில் அதிகரிக்கச் செய்தது. தண்ணீரினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு, ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 3.5 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.
பிரேசில், பராகுவே, உருகுவே, அர்ஜென்டினா ஆகிய நாடுகள், ஒரு மில்லியன் சதுர பரப்பளவில் அமையப்பெற்ற குவரானி நீர்ப்பரப்பை, தங்களுக்குள் எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் பகிர்ந்து கொள்வதாக, கடந்த 2010ல் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதை, மைக்கேல் நீர்ப்பிரச்சினைகளில் ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாகக் குறிப்பிட்டுள்ளார்.

முகாமில் தீ விபத்து: 30 பேர் உடல் ,,,


தாய்லாந்தில் அகதிகள் முகாமில் ஏற்பட்டதீ விபத்தில் 30 பேர் பரிதாபமாக உடல்கருகி பலியாயினர்.
தாய்லாந்து- மியான்மர் எல்லைப்பகுதியான வடக்கு மாயே ஹாங்சன் மாகாணத்தில் மாயேசூரின் என்ற அகதிகள் முகாம் உள்ளது.
இங்கு மியான்மரில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இங்கு நேற்று இரவு திடீரென தீப்பிடித்தில் 30 பேர் உடல்கருகி பலியாயினர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வீட்டில் சமையல் செய்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இதுகுறித்து விசாரணைக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

வெள்ளி, 22 மார்ச், 2013

பேரவையில் இலங்கைக்கு எதிரான,,,,,,,

 அமெரிக்கப் பிரேரணை நிறைவேற்றம்! இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை 12 மேலதிக
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.
இதேவேளை தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

இதன்படி 12 மேலதிக வாக்குகளினால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

25 வாக்குகளைப் பெற்று அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது. முன்னதாக அமெரிக்க தீர்மானம் குறித்து பேசிய இலங்கை தூதர், அமெரிக்க தீர்மானம் எற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார்.
ஒஸ்ரியா, ஜேர்மனி, இத்தாலி, அயர்லாந்து, ஸ்பெய்ன், மொன்ரெனிக்ரோ, சுவிற்சர்லாந்து, அமெரிக்கா, பிறேசில், தென்கொரியா, சியராலியோன், இந்தியா, பெனின், கோஸ்டாரிக்கா, லிபியா, ஆர்ஜென்ரீனா, சிலி, ஐவரிகோஸ்ட், கௌதமாலா, பெரு, செக் குடியரசு ,எஸ்தோனியா, போலந்து, மோல்டோவா, ருமேனியா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

 வெனிசுலா, தாய்லாந்து, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈக்வடோர், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், கட்டார், மாலைதீவு, குவைத், உகண்டா, மொரிட்டானியா, கொங்கோ, பிலிப்பைன்ஸ் ஆகிய 13 நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

 அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினா பாசோ, கென்யா, எதியோப்பியா, மலேசியா, கசாக்ஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

வியாழன், 21 மார்ச், 2013

டீசலுக்கு பதிலாக பெட்ரோல்: அமெரிக்க ஜனாதிபதி கார் /


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இரண்டாம் முறையாகப் பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக அரசு முறைப் பயணமாக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில்க்குச் சென்றுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின்பொழுது நடந்த சம்பவம் குறித்து ஊடகம் ருசிகரத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் முதல் குடிமகனான ஒபாமா பாரம்பரியம் மிக்க லிமோசன் காரில் வந்து கொண்டிருந்தபொழுது அந்தக் கார் திடீரென பழுதடைந்து நின்று விட்டதால் பதட்டம் அடைந்த அதிகாரிகள் என்னவென்று ஆராய்ந்தபொழுது டீசலில் இயங்கக்கூடிய அந்தக் காரில் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் காரிலிருந்து இறங்கிய ஒபாமா மாற்றுக் காரில் ஏறி பயணத்தைத் தொடர்ந்துள்ளார். அவர் பயணம் செய்த கார் பழுதுபார்ப்பதற்காக இழுத்துச் செல்லப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்புப் பணியில் இருந்த எட்வின் டோனோவன் கூறுகையில், ஜனாதிபதி பாதுகாப்பிற்காக வந்த காரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனால்தான் எப்போதும் மாற்று கார்களையும், மெக்கானிக்குகளையும் உடன் அழைத்து வருவதாகவும் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்
 

புதன், 20 மார்ச், 2013

142 வது முறையாகக் கத்தியைக் காட்டி மிரட்டும் சிறுமிகள்

142 வது முறையாகக் கத்தியைக் காட்டி மிரட்டும் சிறுமிகள்
கனடாவிலுள்ள வன்கூவர் ரயில் நிலையத்தில் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பயணிகளைக் கத்தியைக் காட்டி மிரட்டியதாலும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை தாக்கியதாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவலர் ஆனி டிரன்னான்(Anne Drennan) கூறுகையில், இவர்கள் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி முதல் 142 முறை கைதாகியுள்ளனர் என்றும் சிறைக்குப் போவதும் வருவதும் இச்சிறுமிகளுக்கு சகஜமாகி விட்டதால் எத்தனை முறை தண்டித்தாலும் இவர்கள் திருந்துவதாக இல்லை எனவும் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் கூறுகையில், கடந்த திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் சர்ரேயிலுள்ள கேட்வே ஸ்கை ரயில் நிலையத்தில் இச்சிறுமிகள் ஒரு பெண்ணை கத்தியால் தாக்கியதால் அவரது கையில் கத்தி சீவி தசை கிழிந்து ரத்தம் கொட்டியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், ஜாய்ஸ் நிலையத்தில் ஒரு ஆணையும் தாக்கியுள்ளனர் எனவும் தகவல் அறிந்த ரோந்துப் பொலிசார் இச்சிறுமிகளைக் கைது செய்து அவர்களிடமிருந்து 20 செ.மீ நீளமான கத்தியை கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சிறுமிகள் மீது வழக்கம் போல் உடலில் காயம் ஏற்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

ஞாயிறு, 17 மார்ச், 2013

பல்கழைக்கழ நுழைவுத்தேர்வில் ஆங்கிலம் ,,,


சீன பல்கலைக்கழகங்களில் நேற்று நுழைவுத் தேர்வுகள் தொடங்கின. இதில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளை மட்டும் எழுதினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கலைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் சீன மொழித்தேர்வு மற்றும் கணிதத் தேர்வுகளை எழுதினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக்கப்பட்ட பாடங்களில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சிங்குவா பல்கலைக் கழக சேர்க்கை அதிகாரி கூறுகையில், “மாணவர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காககவும், தங்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்களில் அதிக கவனம் செலுத்தும் திறமையான மாணவர்களை ஈர்ப்பதற்காகவும் ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது” என்றார்.

திறமையான மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு அனுமதிக்கும் வகையில், தேசிய பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு 27 பல்கலைக்கழகங்கள் ஒரே சமயத்தில் இத்தேர்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சனி, 16 மார்ச், 2013

பதவியேற்பு விழாவை நேரில் காண வருவதற்கு ஆகும்,.,


உலகெங்கும் வாழும் ரோமன் கத்தோலிக்க கிருஸ்தவர்களின் 266 வது தலைமை மதகுருவாக அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் 19ம் தேதி புதிய போப்பாக அவர் பதவி ஏற்றுக்கொள்கிறார். தங்கள் நாட்டைச் சேர்ந்த மதகுரு போப்பாக பதவியேற்கும் இனிய நிகழ்வை நேரில் காண பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ரோம் நகருக்கு செல்வதற்காக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அர்ஜென்டினாவுக்கான வாடிகன் தூதரை சந்தித்த போப் பிரான்சிஸ், ”எனது பதவியேற்பு விழாவை நேரில் காண்பதற்காக ரோம் நகருக்கு வரும் பெரிய செலவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இப்படி சொல்வதனால் அவர்களின் வருகையை நான் தடை செய்யவில்லை. ஆனால், இந்த பயணத்திற்காக ஆகும் செலவை ஏழைகளுக்கான உதவிகளை செய்து, தர்ம காரியங்களில் என் நாட்டு மக்கள் ஈடுபடுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்” என தெரிவித்ததாக வாடிகன் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் பெடரிகோ லொம்பார்டி கூறியுள்ளார்
 

வெள்ளி, 15 மார்ச், 2013

அதிகளவிளான சிறுமிகள் எச்.ஜ.வி தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர்



தென் ஆப்பிரிக்கா நாட்டில் பள்ளிச்சிறுவர்கள் 4 சதவிகித பேருக்கு எச்.ஐ.வி. இருக்கிறது என்றால், பள்ளிச்சிறுமிகள் 28 சதவிகிதம் பேர் இந்த எச்.ஐ.வி. கிருமி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை கூறுகிறது.
இங்கு 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 94,000 சிறுமிகள் கருவுற்று இருக்கிறார்கள். இதில் 77,000 சிறுமிகள் கருக்கலைப்பு செய்து இருக்கிறார்கள்.
பணக்கார முதியவர்கள், வறுமையில் உள்ள சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் எச்.ஐ.வி. கிருமி தாக்குதலுக்கு ஆளாகி ஆண்டி ரிட்ரோவைரல் மருந்து எடுத்துக்கொண்டோரின் எண்ணிக்கை இப்போது  6,78,500 இல் இருந்து15 லட்சமாக மாறியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
மொத்தத்தில் 10 சதவிகிதம் பேர், அதாவது 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு எச்.ஐ.வி. தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் அதிக அளவிலான சிறுமிகள் எச்.ஐ.வி. கிருமிகளால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது தங்களது இதயத்தை காயப்படுத்துகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். கடந்த வருடம் 2,60,000 பேர் எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

வியாழன், 14 மார்ச், 2013

இராணுவ அத்துமீறல்களை விக்கிலீசுக்கு அளித்த வீரரின் வாக்குமூலம்


விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்க ரகசியங்களை அளித்த இராணுவ வீரரின் வாக்குமூலம் அடங்கிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போர்களில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி அந்நாட்டு இராணுவ வீரர் பிராட்லி மேன்னிங், விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசிய தகவல் அளித்தார்.
அமெரிக்க இராணுவம், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிக்கையாளர் உள்ளிட்டவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தின் வீடியோ மற்றும் பல்வேறு ஆதாரங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு மேன்னிங் அளித்துள்ளார். இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டில், மேன்னிங் கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது அமெரிக்காவின் எதிரி நாடுகளுக்கு உதவியது உள்ளிட்ட 22 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன.
எனினும் இவற்றில் 10 குற்றச்சாட்டுகளில் மட்டுமே தனக்கு தொடர்புள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு அமெரிக்காவின் மேரிலேண்ட் இராணுவ நீதிமன்றத்தில் நடக்கிறது.
இவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளநிலையில் பத்திரிக்கை சுதந்திரத்தை வலியுறுத்தும் The Freedom of the Press Foundation என்ற அமைப்பு மேன்னிங் பேசியுள்ள ஆடியோவை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் மேன்னிங் அளித்துள்ள வாக்குமூலத்தில், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் பற்றிய விவாதத்தை தொடங்கும் எண்ணத்திலேயே அவை பற்றிய தகவல்களை வெளியிட்டதாக கூறியுள்ளார்.
நீதிமன்றங்களில் அதிகமாக ரகசியம் காக்கப்படுவது ஜனநாயகத்துக்கு கேடு விளைவிக்கும் என இந்த ஆடியோவை வெளியிட்டுள்ள The Freedom of the Press Foundation தெரிவித்துள்ளது.
 

புதன், 13 மார்ச், 2013

பனிப்பொழிவால் விமானசேவை ரத்து ???


ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ள இச்சூழலில், பிராங்க் ஃபர்ட்(Frankfurt) விமான நிலையத்தில் நேற்று விமானசேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த பிராங்க் ஃபர்ட் விமான நிலையத்தில் தினமும் 1250 விமானசேவைகள் நடைபெறும். ஆனால் இந்த கடுமையான பனிப்பொழிவை தொடர்ந்து 355 விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் விமானப் போக்குவரத்தும், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
விமான சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு இலவச உணவு, குளியல் வசதி, 2 தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் வசதி மற்றும் தேவைப்பட்டால் விடுதியில் தங்கும் வசதியும் செய்து தரப்படுகிறது.
பனியினால் கார்ச்சக்கரம் வழுக்கி விபத்து ஏற்படாமல் இருக்க பல சாலைகளில் காவல்துறையினர் போக்குவரத்தைத் தடை செய்து வருகின்றனர்.
 

செவ்வாய், 12 மார்ச், 2013

38,000 அடி உயரத்தில் தென் ஆப்ரிக்க பெண்ணுக்கு பிறந்த குழந்தை


தென் ஆப்ரிக்க பெண்ணான படவுமாடா காபாவிற்கு, ஜோகன்ஸ் பெர்க்கிலிருந்து நியூயார்க் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பொழுது 38,000 அடி உயரத்தில் குழந்தையொன்று பிறந்துள்ளது.
நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு நடுவானத்தில் பிரசவ வலி ஏற்படவே விமானத்திலிருந்த இரண்டு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.
இக்குழந்தை 38,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபொழுது பிறந்தது. அங்குள்ள விமானிகள் அனைவரும் குழந்தை பிறந்தவுடன் சந்தோஷப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விமானம் நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும் தாயையும் சேயையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இவர்கள் நலமுடன் இருப்பதாகவும் இவரது கணவர் கெம்பியா நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்கா வான் பரப்பில் குழந்தை பிறந்தாலும் அந்நாட்டு குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது,{புகைப்படங்கள்}

 

திங்கள், 11 மார்ச், 2013

HIV நோய்க்கு மருந்தாகும் தேனீக்களின் ,,,



உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் பாரம்பரிய மருந்துப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டுவரும் தேனீக்களின் நஞ்சானது HIV/AIDS உயிர்க்கொல்லி நோயினையும் குணப்படுத்தவல்லது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் சென்.லூசியசில் அமைந்துள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு ஆராய்ச்சியாளர்களினாலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது HIV நோயினை பரப்பக்கூடிய அல்லது ஏற்படுத்தக்கூடிய வைரஸினை முற்றாக அழிக்கும் ஆற்றல் தேனீக்களின் நஞ்சில் காணப்படுகின்றமை குறித்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,{காணொளி, }
 

ஞாயிறு, 10 மார்ச், 2013

8 வயது சிறுவன் 61 வயது பெண்ணை மணந்த வினோத திருமணம் ,.



தென்னாப்பிரிக்காவில் 8 வயது சிறுவன் மரணப் படுக்கையில் கிடந்த தாத்தாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக, 61 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள ட்சுவானே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 8 வயது பேரனின் திருமணத்தை பார்த்துவிட்டு கண்ணை மூடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
சிறுவனின் தாயான தனது மகளிடம் கூறி, அதே பகுதியை சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான ஹெலன் ஷாபாண்டு என்ற 61 வயது பெண்ணை எட்டே வயது நிரம்பிய சனேலே மசிலேலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
முகூர்த்தத்திற்கான நல்ல நேரம் குறிக்கப்பட்டு சுமார் 100 உறவினர்கள் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு ஒருவரையொருவர் ஆரத்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர்.
இந்த வினோத திருமணம் குறித்து சிறுவன் மசிலேலாவிடம் கேட்டபோது, ஹெலனை திருமணம் செய்துக்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நான் வளர்ந்த பின்னர் என் வயதுகேற்ப வேறொரு அழகான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வேன் என்று கூறியுள்ளான்
 

சனி, 9 மார்ச், 2013

பிரிட்டனில் சிகரெட் பிடிப்பது குறைந்துவிட்டது


கடந்த நாற்பதாண்டுகளில் பிரிட்டனில் புகைப்பழக்கம் பாதியாகக் குறைந்துவிட்டது என்றும் குடிப்பழக்கம் கனிசமானக் குறைந்துள்ளது எனவும் பொது வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு தெரிவித்துள்ளது.
கடந்த 1947ம் ஆண்டுகளில் ஏறத்தாழ பாதிப்பேர் சிகரெட் புகைத்துள்ளனர். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு ஐந்தில் ஒருவர் மட்டுமே புகைப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
வாரத்துக்கு ஐந்து நாட்கள் மது அருந்தியவர் கடந்த 2005ம் ஆண்டு 22 சதவிகிதம் ஆக இருந்த எண்ணிக்கை கடந்த 2011ம் ஆண்டு 16 சதவிகிதம் ஆகக் குறைந்துவிட்டது.
புகைப்பதால் நுரையீரல் புற்றுநோயும், இதயநோயும் வர வாய்ப்பிருப்பதாகத் திரும்பத்திரும்ப விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்தியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
பணித்தலங்களில் புகைக்கக்கூடாது என்று பிரிட்டன் முழுக்க தடை விதிக்கப்பட்டதும், சிகரெட் விளம்பரத்துக்கு தடை விதித்ததும் புகைப்பழக்கத்தைக் குறைத்துள்ளது.
இலண்டனில் உள்ள கிங்ஸ்கல்லூரியின் பொதுசுகாதாரப் பிரிவின் கௌரவப் பேராசிரியராக இருக்கும் ஆலன் மர்யோன் டேவிஸ்(Alan Maryon-Davis) கூறுகையில், புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும் குறைந்திருப்பது ஆறுதலாக இருந்தாலும் இன்னும் குறையவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அவர் கூறுகையில், மதுவுக்கு விலையில் தள்ளுபடி தருவதை நிறுத்திவிடவேண்டும் ஏனென்றால் விலை குறையும்பொழுது குடிக்கும் அளவு அதிகமாகின்றது என்றும் மருத்துவமனைகளில் மதுதொடர்பான நோய்ப் பாதிப்பு உடையவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஷ் நுரையீரல் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகியான டொக்டர் பென்னி உட்ஸ்(Penny Woods) கூறுகையில், கடந்த நாற்பதாண்டுகளில் விதிக்கப்பட்ட கடுமையான சட்டங்களும், அரசின் விழிப்புணர்வுப் பிரச்சாரமும், புகைப்பழக்கத்தைக் குறைத்திருப்பதால் ஆபத்தான நோய்களும் அகால மரணமும் தடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்

வெள்ளி, 8 மார்ச், 2013

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு சில???


பிரிட்டனில் வசிக்கும் ஜாக்கி ஸ்டோன் என்ற 42 வயதுப் பெண்மணி பார்வைக் குறைபாட்டுக்காக கான்டாக்ட் லென்ஸ் பொருத்திக்கொண்டார்.
பிரிட்டனிலேயே இரண்டாவது பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பைத்தான் அவர் பயன்படுத்தி இருக்கிறார். லென்ஸை அணிந்த மறுதினமே பார்வை மங்கலானதை அவர் உணர்ந்துள்ளார்.
இரண்டு நாட்கள் கழித்து வலி பொறுக்க முடியாமல் மருத்துவரிடம் சென்று விடயத்தைச் சொன்னபொழுது கண்களுக்கு சொட்டு மருந்து போட்டு வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால், எல்லை மீறிய வலியின் காரணமாக மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
வலியைக் குறைப்பதற்கான மருந்துகள் எதுவும் வேலை செய்யவில்லை. அவரது கண்ணில் ஃப்யூசாரியம்(fusarium) என்னும் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
அதற்குள் அவரது இடது கண்ணில் மூன்று படலங்களையும், 70 நரம்புகளையும் அந்தப் பூஞ்சை தின்று தீர்த்திருந்தது. மருத்துவமனையில் விழித்திரை மாற்று அறுவைசிகிச்சை உட்பட 22 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பலன் அளிக்கவில்லை.
17 வாரங்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. இருந்தும் அவரது இடது கண் பார்வை பறிபோனது. இந்தப் பூஞ்சைத் தொற்று, பார்வை நரம்புகள் மூலம் மூளையைத் தாக்கக்கூடிய அபாயம் இருக்கும் என்று மருத்துவர்கள் அஞ்சியதால் பாதிக்கப்பட்ட கண்ணையே அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று.
பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதற்குக் காரணம் அவர் கண்ணில் அணிந்திருந்த காண்டாக்ட் லென்ஸ்தான் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர் அவர் தற்போது செயற்கைக் கண் பொருத்திக்கொண்டு இருக்கிறார்.
எனவே கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கான சில எச்சரிக்கைகள்
# லென்ஸ்களை உரிய திரவத்தில்தான் சுத்தப்படுத்த வேண்டும். குழாய்த் தண்ணீரில் கழுவக் கூடாது. நீந்தும்போதோ, குளியல் தொட்டியில் குளிக்கும்போதோ, ஷவரில் நனையும்போதோ லென்ஸைக் கழற்றிவிடவும்.
# தொடர்ந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தேவைப்படும்போது லென்ஸை மருத்துவரின் பரிந்துரைப்படி மாற்ற வேண்டும். கண்ணில் நீர் படும்படியான எந்தச் சூழலிலும் லென்ஸை அகற்றிவிடவும்.
# கண்ணில் லென்ஸைப் பொருத்துவதற்கு முன்னர் கைகளை நன்கு சோப் போட்டுக் கழுவவும். பிறகு சுத்தமாக ஈரம் போகத் துடைத்த பிறகே லென்ஸைத் தொடவும்.
# ஒவ்வொரு முறையும் லென்ஸைக் கழுவும் திரவம் புதிதாக இருக்கட்டும்.
# உப்பு நீரால் ஒருபோதும் லென்ஸைக் கழுவாதீர்கள்.
# லென்ஸைப் பாதுகாக்கும் குடுவையை உரிய திரவத்தில் முறையாகக் கழுவவும்.
# எட்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாக அணியக் கூடாது. இடையிடையே ஓய்வு அளிக்க வேண்டும். தூங்கும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
# பார்வை மங்கலானாலோ, வலி ஏற்பட்டாலோ, வீக்கம் அல்லது எரிச்சல் இருந்தாலோ, உடனடியாகக் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
# புகை மண்டிய இடங்களைத் தவிருங்கள்.
புதிதாக லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டியவை
# உரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிறந்த நிறுவனத்தின் தரமான தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.
# அணிவதற்கான பயிற்சியினைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
# முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று அணிய வேண்டும்.
# மின் விசிறியை அணைத்துவிட்டு அணிய வேண்டும். இல்லாவிட்டால் லென்ஸ் காற்றில் பறக்கும் வாய்ப்பு உண்டு.
# லென்ஸ் தவறி விழுந்தாலும் கீறல் ஏற்பட்டுவிடாதபடி கீழே ஒரு சுத்தமான துணி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
# நகக் கீறல் லென்ஸில் ஏற்படாமல் இருக்க நகத்தை ஒட்ட நறுக்க வேண்டும்.
# கண்ணுக்குச் சொட்டு மருந்து போடும்போது லென்ஸைக் கழற்றிவிடவும்.
# லென்ஸ் அணிபவர்கள் கண்ணுக்கு மை போடக்கூடாது

சிறப்பு மருத்துவர்களுக்குத் தடை,,,


சுவிட்சர்லாந்தில் சிறப்பு மருத்துவர்களுக்கான மூன்றாண்டுத் தடையை மாநிலங்களவை மீண்டும் உறுதி செய்துள்ளது.
சுவிஸ் செய்தி நிறுவனமான SDA மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஏராளமான மருத்துவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் படையெடுத்து வருவதாக சில மாநிலங்கள் புகார் கூறுகின்றன என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிக்கப்பட்ட சுதந்திரப் பயணத்தின் விளைவால் எல்லையோர மாநிலங்களில் மருத்துவர்களின் ஊடுருவல் அதிகமாகி விட்டதால் கடந்த 2011ம் ஆண்டு சிறப்பு மருத்துவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது.
புதன்கிழமை கூடிய தேசியக்குழுவில் நடந்த வாக்கெடுப்பில் 103 பேருக்கு 76 பேர் இந்த அனுமதி மறுப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சிறப்பு மருத்துவர்களால் ஆண்டுதோறும் ஐந்து லட்சம் ஃபிராங்க் கூடுதலாக காப்பீட்டுத் துறைக்குச் செலவாகின்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட்(Alain Berset) கூறுகையில், சிறப்பு மருத்துவர்கள் கூடுதலாக இருக்கும் மாநிலங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீண்டும் வருகின்ற ஏப்ரல் மாதம் அனுமதி மறுப்பு நடைமுறைக்குப்படுத்தப்பட்டு அத்தடை எதிர்வரும் 2016 வரை நீடிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.




 

வியாழன், 7 மார்ச், 2013

அடக்குமுறைக்கு பயந்து ஸ்பெயினில் இருந்து ஓடிய யூதர்களின்


     
    உலகம் சினிமா இலங்கை விளையாட்டு தொழிநுட்பம் கவிதைகள் இந்தியா சுவிஸ் ஆங்கிலச் செய்திகள் லங்காசிறி செய்திகள் பிரித்தானியா கனடா பிரான்ஸ் ஜேர்மனி இத்தாலி சுவிஸ் டென்மார்க் நோர்வே அமெரிக்கா அவுஸ்ரேலியா ஏனைய நாடுகள்   
   
500 ஆண்டுகளுக்கு முன்பு அடக்குமுறைக்கு பயந்து ஸ்பெயினில் இருந்து ஓடிய யூதர்களின் வாரிசுகளை திரும்பி வர அழைப்பு
ஐரோப்பிய கண்டத்தின் மத்தியத்தரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டில், 15-ஆம் நூற்றாண்டில் 3 லட்சம் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். ரோமானியர்கள் ஆண்ட காலத்திலிருந்தே ஸ்பெயினில், யூதர்கள் வசித்து வந்தனர்.
 உலகில் உள்ள யூதர்களிலேயே, மிகப்பெரிய சமூகமாக விளங்கிய அவர்கள் மீது, அப்போதைய ஸ்பெயின் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவியதால் அதற்கு பயந்து பல்லாயிரக் கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறினர். கத்தோலிக்க மதத்திற்கு மாறத் துவங்கிய இம்மக்கள் உலகெங்கிலும் வசித்து வருகின்றனர். தற்சமயம் ஸ்பெயின் நாட்டில் யூதர்கள், 40,000-50,000 எண்ணிக்கையில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், 500 வருடங்களுக்கு முன்பு சென்ற அவர்களின் வாரிசுகளை வரவேற்க ஸ்பெயின் அரசு கடந்த நவம்பர் மாதம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நீதித்துறை அமைச்சர் ஆல்பர்டோ ரூயிஸ் கல்லோர்டன் கூறியதாவது:-
ஸ்பெயினின் அசல் சமூகமாக வாழ்ந்த செபார்டிக் யூதர்கள் என்று அழைக்கப்படும் அவர்களின் வாரிசுகள், மீண்டும் திரும்பி வந்து ஸ்பெயினில் குடியேர தேவையான குடியுரிமை மற்றும் பாஸ்போர்டை விரைவில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யார் ஒருவர் தன்னை ஸ்பெயினின் யூத குடி வாரிசு என்று நிரூபிக்க முடியுமானல், அவர்கள் விரைவான முறையில் பாஸ்போர்ட் பெற்று ஸ்பெயின் நாட்டு குடிமகன் ஆக முடியும். எங்களின் நீண்ட பயணத்தில் ஸ்பெயின் நாடு தன்னுடைய ஒரு பகுதியை அறிந்துகொள்ள நேரிட்டது. அதற்கான சில சந்தர்ப்பங்கள் இப்போது வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தி, உலக முழுவதிலும் உள்ள செபார்டிக் யூதர்களிடையே காட்டுத் தீ போல் பரவியுள்ளது. ஸ்பெயினில் குடியேறுவது தொடர்பாக, முதல் மாதத்திலேயே பாஸ்போர்ட்டிற்கு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 6000-த்தை தாண்டியுள்ளது. இதில் பெயர் குறிப்பிடாத அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அடங்குவர்.




 

செவ்வாய், 5 மார்ச், 2013

உருக்கமான கடிதம் சிக்கியது ,,,,


இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவே போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டுமெனக் கூறி தீக்குளித்த மணி மரணமடைந்தார்.
தமிழ்நாட்டில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த மணி என்பவரை தீக்காயங்களுடன் மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
உயிருக்கு போராடிய நிலையிலும் 'இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும். ராஜபக்சவுக்கு எதிராக ஐ.நா சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். தமிழர்களுக்காக எனது உயிரை கொடுப்பதில் பெருமை அடைகிறேன்' என அவர் தெரிவித்திருந்தார்.
அவர் உயிரிழந்த பின்பு, சம்பவ இடத்தில் அவர் முன்னர் எழுதி வைத்திருந்ததாக நம்பப்படும் கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அக்கடிதத்தில், ஈழத்தமிழர்கள் வெல்லட்டும், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச ஒழிக என எழுதப்பட்டு பின்வருமாறு தொடர்கிறது.
வெளிநாட்டில் கப்பல் கட்டும் துறையில் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது இந்தியாவின் நாட்டுப்பற்று என்னை கவர்ந்தது.
இதனால் எனது வலது கையில் இந்தியன் என்றும், தேசிய கொடியையும் பச்சை குத்தி வைத்துள்ளேன். எனது உடலை தானமாக வழங்கியுள்ளேன். 26 முறை இரத்ததானம் கொடுத்துள்ளேன்.சுனாமி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை எதிர்த்து ஜனநாயக முறையில் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகிறேன்.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு நீதி வேண்டி வருகிற 11ம் திகதி கடலூர் அல்லது சென்னை உயர்நீதிமன்றம் முன்பு சாகும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் இதை சார்ந்த ஊழல் வாதிகள் அதற்கும் இடையூறு செய்து திசை திருப்பி விடுவார்கள். ஆகவே எனது மரணத்திற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது மரணத்திற்கு பின்பு தான் சுனாமி வீட்டு ஊழலுக்கு உயிர்பிறக்கும் என்ற நம்பிக்கையில் என் ஜீவனை நான் அழித்துக் கொள்கிறேன்.
மேலும் இலங்கையில் 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை தண்டிக்க வேண்டும். அதற்காக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தர வேண்டும்.
மேலும் எனது ஈழ தமிழ் சமுதாயம் தனிநாடு பெற்று, எனது உயிரின் மக்கள் நன்றாக நல்வாழ்வு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனது தாய், மனைவி, மகள், மருமகன், மகன்களுக்கு எத்தனையோ துன்பங்களை கொடுத்து விட்டேன். நீங்கள் எனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.
எனது இறுதி சடங்கை தற்போது உள்ள வீட்டில் வைத்து என்மீது இந்திய தேசிய கொடியை போர்த்தி எடுத்து நல்லவாடு இடுகாட்டில் என்னை எரித்து என் நினைவாக சிறு கட்டிடம் கட்ட வேண்டும் என அந்த கடிதத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.
 

திங்கள், 4 மார்ச், 2013

நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல்


பல கோடி ரூபாய் செலவில் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.
பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க அதி நவீன வசதிகளுடன் "பெர்" என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டில் இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் எதிர்வரும் 2017ம் ஆண்டில் தான் இவ்விமான நிலையம் தயாராகும்.
இதற்கிடையில் இவ்விமான நிலையத்தை உருவாக்க முதலில் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தாமதத்தின் காரணமாக செலவு இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில் இந்த விளக்குகளை அணைக்க முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறவில்லை என விமான நிலைய கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும் விமான நிலையத்தின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என சொல்வது "கேலிக்குரியது" என ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

குழு தாக்கியதில் மலேசியாவில் 5 பொலிஸார்,,,


மலேசியாவின் கிழக்குப்பகுதி சாபா மாகாணம் போர்னியோ தீவில் பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம், லஹாத் டாடு மாவட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 100 பேர் படகில் வந்து இறங்கினர்.
பின்னர், அவர்கள் தங்களை சூலூ ராயல் ராணுவம் என்று சொல்லிக்கொண்டு அப்பகுதி கிராமம் ஒன்றை ஆக்கிரமித்து கொண்டதோடு இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதற்கு 19 நூற்றாண்டு பதிவேடுகளை அவர்கள் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில், நேற்று இரவு பொலிஸார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 5 பொலிஸாரும், 2 ஆயுதம் ஏந்தியவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளியன்று நடந்த தாக்குதலில் 12 பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களும், 2 மலேசியா பொலிஸாரும் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சாபா மாகாணம், 1800-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் மன்னர் சூலு ஜமாலுல் கிராம் சூல்தானின் கட்டிப்பாட்டில் இருந்து, பின்னர் 1963-ம் ஆண்டு மலேசியாவிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

ஞாயிறு, 3 மார்ச், 2013

அசையும் அசையா சொத்துக்களின் முடக்கத்தை


2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் இங்கிலாந்து மற்றும் ஜக்கிய அரபு நாடுகளில் தஞ்சமடைந்தார்.
பெனாசிர் பூட்டோ அவர்கள் 2007 ஆம் ஆண்டு கொல்லப்பட்டபோது அப்போதைய ஆட்சிப்பொறுப்பில் இருந்த முஷாரப் போதிய பாதுகாப்பு அவருக்கு வழங்கத் தவறியது ஏன் என்பன தொடர்பான வழக்குகள் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தவேளை இந்த வழக்கில் விளக்கமளிக்க வேண்டிய முஷாரப் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதால் அவரை “தலைமறைவாக இருக்கும் நபர்” என அறிவித்த தீவிரவாத தடுப்பு கோர்ட் முஷராப்பின் அசையா சொத்துகள் மற்றும் வங்கிகளில் இருக்கும் ரொக்கப்பணம் ஆகியவற்றை முடக்கவும் உத்தரவிட்டது.
கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து முஷராப்பின் மனைவி சேஹ்பா முஷாரப் மனு தாக்கல் செய்தார். தான் வசிக்கும் வீடு முஷராப் தனக்கு பரிசாக வழங்கியதாகவும் வங்கிகளில் உள்ள பணம் அனைத்து வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது எனவும் அவ் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சேஹ்பா முஷாரப் வாதங்களை மெய்ப்பிபதற்கான ஆதாரங்களை அவரது வழக்கறிஞர் இலியாஸ் சித்திக்கி தாக்கல் செய்யாததால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்ததோடு முன்னர் வெளியிட்டிருந்த ஆணை தொடர்ந்து நீடிக்குமெனவும் தெரிவித்தார்

சனி, 2 மார்ச், 2013

போதைப்பொருள் கடத்தல் தலைவன் உட்பட 4



மியான்மர் நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் தலைவன் நவ் கம், தாய்லாந்தை சேர்ந்த போராளிகளின் துணையுடன் கடந்த 2011-ஆம் அக்டோபர் மாதம் சீனாவுக்கு உட்பட்ட மேகாங் நதி பகுதியில் 2 சீன சரக்கு கப்பல்களை தாக்கி அதில் பணியாற்றிய 13 பேரை ஈவிரக்கமின்றி கொன்று கப்பலில் இருந்த சரக்குகளையும் கொள்ளையடிது அந்தக் கப்பலையும் கடத்திச் சென்று மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் தலைமறைவாக பதுங்கி வாழ்ந்து வந்தான்.
அந்த நாடுகளை சேர்ந்த போலீசாரின் துணையுடன் சீன பொலீஸார் 8 பேரை கைது செய்து சீன நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்ட நவ் கம், சாங் காம் (தாய்லாந்து), யீ லாய் (நாடற்றவன்), சாசிக்கா (லாவோஸ்) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட கப்பல் ஊழியர்களின் குடும்பத்திற்கு 9 1/2 லட்சம் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க தயாராக இருப்பதாகவும் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

இவர்களின் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், மரண தண்டனையை உறுதிசெய்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும் விஷஊசி போட்டு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

வெள்ளி, 1 மார்ச், 2013

புரட்சிப்படைகளுக்கான உதவிகள் தொடருமென ?


சிரியாவில் கடந்த 2 வருடமாக அதிபர் ஆட்சிக்கு எதிராக புரட்சிப்படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இந்த தாக்குதலின் போது பொதுமக்கள் 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்து வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட நாடுகளும் அதிபர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு, புரட்சிப்படைக்கு நேரிடையாக உதவிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் புரட்சிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 60 மில்லியன் டாலர் உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ரோமில் நடைபெறும், சிரியா தேசிய கூட்டணியின் அமைதி கூட்டத்தில் ஜான் கெர்ரி கலந்து கொண்டிருக்கிறார்