Link

ணக்கம் வருக வருக....

Pages

வியாழன், 30 மே, 2013

ஜயலத் ஜெயவர்தன எம்.பி. காலமானார்


 முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று காலமானார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த டொக்டர் ஜயலத் ஜயவர்தன சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் ஜயலத் ஜயவர்தனவிற்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் போதே அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.தே.கட்சி வட்டாரங்களும் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
ஏற்கனவே அவர் மாரடைப்பு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதன் பின்னர் வீடு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
1953ம் ஆண்டில் பிறந்த ஜயலத் ஜெயவர்தன 1994ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான அவர், 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையில் புனர்வாழ்வுத்துறை அமைச்சராக பணியாற்றி இருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி பதவி வகித்த காலங்களில் டொக்டர் ஜயலத் ஜயவர்தன மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த காலப் பகுதியில், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அதிக அளவில் பேசியுள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பல்வேறு கட்ட சமாதான பேச்சுவார்த்தைகளிலும் ஜயலத் ஜயவர்தன பங்கேற்றிருந்தார்.
அத்துடன், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அடிக்கடி சந்தித்து வந்தமையும், அது சார்ந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

புதன், 29 மே, 2013

இடுப்பில் கட்டியிருந்த குண்டைடு ?



அல் கொய்தா தீவிரவாத இயக்டகத் தலைவன் ஒசாமா பின்லேடனின் மரணம் தொடர்பாக உறுதி செய்யப்படாத பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன.
இந்நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ஒசாமாவின் மெய்காப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அமெரிக்க 'சீல்' படையினர் சுற்றி வளைத்தபோது தனது இடுப்பில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்து தான் ஒசாமா பின்லேடன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மெய்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தா 'கல்ப் நியூஸ்' என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஒசாமா பின்லேடனின் பிரேதம் நடுக்கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா கூறி வருவதையும் மறுத்துள்ள இவர், ஒசாமாவின் உடல் பாகத்தை தற்கொலைப்படை தாக்குதலில் சிதைக்கப்பட்டதைப் போல் துண்டு துண்டாக வெட்டி அமெரிக்க படையினர் அடையாளங்களை அழித்து மறைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

ஒசாமாவை அமெரிக்க படையினர் சுற்றி வளைத்த போது நான் அந்த வீட்டில் இல்லை. எனினும், சம்பவத்தை நேரில் கண்ட உறவினர்கள் மூலம் இந்த தகவல் எனக்கு தெரிய வந்தது என்றும் அவர் கூறுகிறார்.

அமெரிக்கர்களிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒசாமா பின்லேடன் தனது இடுப்பில் நவீனரக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 'பெல்ட்'டை எப்போதும் அணிந்திருந்தார் என்றும் நபீல் நயீம் அப்துல் பத்தா கூறினார்.


முயற்சித்தவருக்கு அதிர்ச்சி ??


பேயைக் கண்டறிவதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த கமெராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கமெராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார்.

ஆனால் அந்தக் கமெராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக அவரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக் கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இதனால் அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, அவருடைய காதலியான டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண், ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் சம்பவத்தின் போது சிறுவனுக்கு வயது 16 என்று நிரூபணமானது.

எனினும் இது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லையென அப்பெண் கூறியுள்ளார். விசாரணையின் முடிவில் அப்பெண்ணுக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவரை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பவும், அங்கிருந்து அவர் பயிற்சி பெற்று வருவதற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குழந்தையை பிரசவித்து குப்பைத்தொட்டியில் வீசிய ?



பிறந்த தனது குழந்தையை கொன்ற குற்றத்திற்காக 25 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிசார் கூறியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ஒரு தாய் குழந்தையை பிரசவித்ததாகவும் அந்த குழந்தை எங்கே என்ன ஆனது என்பது தெரியாதென வைத்தியசாலை மருத்துவர்கள்  பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கொலை துப்பறியும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை துப்பறிவாளர்களுக்கு கிடைத்த தடயங்களின்படி சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தனது கர்ப்பத்தை மறைத்தாகவும் பின்னர் வீட்டில் குழந்தையை O'connor Drive and Bermondsey Road பகுதியில் உடைகள் நன்கொடையாக போடும் பெட்டிக்குள் போட்டதாக கூறப்பட்டுள்ளது.

குழந்தையை பெட்டிக்குள் போட்ட பின்னர் அப்பெண் வயிற்றில் இரத்த தோற்றத்துடன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவ ஊழியர்கள் நச்சுக்கொடியை கண்டுபிடித்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.

குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிசாரின் கூற்றுப்படி தெரியவருகின்றது.

மேலும் சந்தேக நபரான அஞ்சலினா ஸ்பனிடிஸ், ரொறொன்ரோ வைத்தியசாலை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிறு, 26 மே, 2013

. மனித உரிமை பேரவையின் 23 ஆவது கூட்டத்தொடர் திங்களன்று

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன.
47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கையின் சார்பில் அமைச்சர்கள் மட்டத்திலோ அதிகாரிகள் மட்டத்திலோ எந்த பிரதிநிதிகளும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து மட்டும் உயர் அதிகாரி கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதரக அதிகாரிகளும் இந்த கூட்டத்தொடர்பில் இலங்கை சார்பாக கலந்துகொள்ளவுள்ளனர்.

சனி, 25 மே, 2013

மதுபான விற்பனைக்கு தடை விதித்த துருக்கி


 துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள துருக்கி நாடு, மதச்சார்பற்ற நாடாக விளங்குகிறது. அந்நாட்டின் இளைஞர்கள் மதுபானங்கள் மீது ஆர்வம் கொள்வதைத் தடுக்கும் வகையில், மதுபான விற்பனை மற்றும் விளம்பரத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அவைகளில் தினமும், இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை மதுபானம் விற்கக் கூடாது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், மசூதிகள் அருகில் மதுபான கடைகள் திறக்கக் கூடாது.
இளைஞர்களுக்கு மதுபானங்கள் வழங்கக் கூடாது, தொலைக்காட்சிகளில், மதுபான விளம்பரங்களை காட்டக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கான சட்ட திருத்தங்கள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்ட திருத்தங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் சட்டமாகவுள்ளது
 

சுமார் இருபது ஹரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம்


அட்லாண்டிக் கனடா பகுதியை வருகின்ற யூன் மாதம் முதல் அடுத்தடுத்து 13 முதல் 20 அரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக கனடாவின் அரிக்கேன் மையமும், அமெரிக்காவில் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக மையமும் அறிவித்துள்ளது.
இது குறித்து கனடா மையத்தின் திட்டக் கண்காணிப்பாளர் கிறிஸ் போகர்ட்டி(Chris Fogarty) கூறுகையில், வருகின்ற யூன் மாதம் முதல் வீச போகும் அரிக்கேன் புயல்களில் மூன்று முதல் ஆறு புயல்கள் பெரும் புயல்களாகவும், அடுத்த பதினோரு புயல்கள் சாதாரணமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க நிறுவனம் புயல் பற்றிய தனது அறிக்கையில், வருடந்தோறும் ஆறு அரிக்கேன் புயல்களும், மற்ற மூன்று பெரும் புயல்களுடன் மணிக்கு 175 கி.மீற்றர் வரை வீசும் புயல்காற்றும் உண்டு என்று தெரிவித்துள்ளது.
 

உலகில் 26 கோடி பேர் சாதி பாகுபாட்டின்,.,


உலக முழுவதும் சாதி அடிப்படையில் மக்களை பிரித்து அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதை கணக்கிட ஐ.நா. அமைப்பு தன்னார்வ தொண்டர்களை நியமித்து ஆராய்ந்தது.
அவர்கள் உலக முழுவதும் 26 கோடி மக்களுக்கு மேல் சாதிப் பிரிவினையின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகளில் மனித உரிமைகளை மீறி இவ்வாறு சாதிப்பிரிவினையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க கடுமையான சட்ட திட்டம் கொண்டு வரவேண்டு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் சாதி அடிப்படையிலான பாரபட்சம் பரவிக்கொண்டும், வேர் ஊற்றிக்கொண்டும் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தலித்துகள் அல்லது தீண்டத்தகாதவர்கள் என்று அறியப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
 

பாதியிலேயே தரையிறங்கிய விமானம்:


 பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் இருந்து பி,கே709 என்ற பாகிஸ்தான் சர்வதேச விமானம் நேற்று காலை 9.35 மணிக்கு பிரிட்டன் மான்செஸ்டர் நகர் நோக்கி புறப்பட்டு சென்றது.
பிரிட்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கு மான்செஸ்டர் செல்ல வேண்டிய அந்த விமானத்தில் 297 பயணிகள் இருந்தனர். மான்செஸ்டர் நகரை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்த விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த செய்தியை அடுத்து பிரிட்டன் போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானத்தை இடைமறித்தன.
பின்னர் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இறக்குவதற்கு பதில் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த விமானம் அங்கு தரையிறக்கம் செய்யப்பட்டது. உடனடியாக அங்கு தயாராக இருந்த பொலிசார் அதிரடியாக பாகிஸ்தான் விமானத்திற்குள் புகுந்து சோதனையிட்டனர்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் 30 மற்றும் 41 வயது மதிக்கத்தக்க இருவரைக் கைது செய்தனர். பிரிட்டனை சேர்ந்த அவர்கள் இருவரும் குற்றவாளிகளா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் அவர்களிடமிருந்து எந்தவித ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் அச்சுறுத்தல்கள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து விமானத்தை ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விமானத்தை இறக்கியிருப்பதாக விமானி தெரிவித்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
ஆனால், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக பாகிஸ்தானிய விமான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வந்த இரு விமானங்கள் இது போன்று சோதனைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது
 

பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் ஆவி நடமாட்டமா?

 
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக ஷின்சோ அபே பொறுப்பேற்றார்.
6 மாதங்கள் ஆகியும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இல்லத்துக்கு அவர் குடிபெயரவில்லை.
பிரதமரின் அரசு இல்லத்தில் ஆவி நடமாடுவதாகவும், அதன் காரணமாக அந்த இல்லத்துக்கு குடிபெயர அபே மறுத்து வருவதாகவும் புரளி நிலவுகிறது.
இது உண்மையா? என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அமைச்சரவைக்கு கடிதம் எழுதி இருந்தார்.
பிரதமரின் செயல் அலுவலகத்தின் இரண்டாவது வாயிலாக இந்த இல்லம் விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த இல்லத்துக்கு குடிபெயர காலதாமதம் செய்வதால், அவசர காலத்தில் பிரதமர் விரைவாக செயல்படுவதற்கு தடையாக அமையும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கேள்விக்கு அபே தலைமையிலான அமைச்சரவை நேற்று எழுத்துப் பூர்வமாக பதில் அனுப்பி உள்ளது.
அதில், அரசு இல்லத்துக்கு பிரதமர் குடிபெயராமல் இருப்பதற்கு ஆவி நடமாட்டம்தான் காரணம் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என கூறப்பட்டுள்ளது
 

சர்ச்சையை உருவாக்கியுள்ள லண்டன் வூலிச்

லண்டனின் வூலிச் பகுதியில் கடந்த புதனன்று வீதியில் வைத்து பிரிட்டிஷ் படைவீரர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை முன்கூட்டியே தடுத்திருக்கலாம் என்ற கருத்தை பிரித்தானிய அரசு நிராகரித்துள்ளது.
கொலையாளிகளிடமிருந்து முன்கூட்டியே வெளிப்பட்ட சமிக்ஞைகளை அதிகாரிகள் தவறவிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சம்பவ இடத்தில் பிடிபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் இரண்டுபேரும் பிரித்தானிய எம்-ஐ-5 புலனாய்வுப் பிரிவினரால் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால், அவர்களைத் தொடர்ந்தும் கண்காணிக்க அதிகாரிகள் தவறிவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது.
'எல்லாநேரத்திலும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடியாது, வன்முறைகளில் ஈடுபட நினைக்கும் தனிப்பட்ட நபர்களினால் சுதந்திரமான சமூக கட்டமைப்பு தான் பாதிக்கப்படுகிறது' என்று மூத்த அமைச்சர் எரிக் பிக்கிள்ஸ் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் தொடர்பிலும் பிரித்தானிய பாதுகாப்பு புலனாய்வுத் துறையினருக்கு என்ன தகவல்கள் தெரிந்திருந்தன என்று அந்நாட்டு நாடாளுமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரித்தானிய ஃபுசிலியர்ஸ் றோயல் றெஜிமெண்டின் இரண்டாவது படைப்பிரிவைச் சேர்ந்த லீ ரிக்பி என்பவரே வைத்து கொலை செய்யப்பட்டவர் ஆவார்.
குறித்த இராணுவ வீரர் 22 வயதானவர் என்பதுடன் ஆப்கானிலும் பணியாற்றியுள்ளார்.
இஸ்லாமிய கோஷங்களை எழுப்பிய இருவரால் பட்டப் பகலில் இந்த இராணுவ வீரர் இறைச்சி வெட்டும் கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திய பிறகு, அந்த இருவரும் தப்பியோட முயற்சிக்கவில்லையெனவும் பொலிஸார் வந்த போது அவர்களை நோக்கி இந்த இருவரும் ஓடியுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாகிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.
தற்போது அவர்கள் இருவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரது பேரும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் ஒருவர் கிழக்கு லண்டனின் ரொம்போர்டைச் சேர்ந்த 28 வயதான மைக்கல் அடிபொலாஜோ எனவும் மற்றையவர் தன் கிழக்கு லண்டனின் கிரீன் விச்சைச் சேர்ந்த மைக்கல் அடிபோவ்ல் எனவும் பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

வெள்ளி, 24 மே, 2013

தலதா மாளிகைக்கு முன்னால் பிக்கு தீக்குளிப்பு


கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார்.
குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.
வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த பிக்கு தீ குளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் குறித்த பிக்குவை பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் கண்டி வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாக இலங்கையர் மீது


பிரித்தானியாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்ரோடிடொன் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் நபருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
50 வயதான சுப்ரமணியம் என்பவர் சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சட்டவிரோதமாக புகலிடக் கோரிக்கையாளர்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமான தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் பலி: ஒபாமா

 
 
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, நேற்று செனட் உறுப்பினர்களிடம் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.
அப்போது முதன்முதலாக ராணுவ நடவடிக்கையில் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். எதிரிகளைத் தாக்கும் வண்ணம், முறைப்படுத்தப்பட்ட ஆளில்லாத ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி கடந்த 2009ம் ஆண்டு முதல் நான்கு அமெரிக்கர்கள் பாகிஸ்தானிலும், ஏமனிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், இது குறித்து அரசு சட்டதரனி எரிக் ஹோல்டர் எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அல் அவ்லாகி என்ற தீவிர இஸ்லாமிய கணக்கர் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு, ஏமனில் இத்தகைய தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே வருடம் சமீர் கான் என்ற மற்றொரு அமெரிக்கரும் இதே வகையான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
டென்வரில் வாழ்ந்து வந்த அவ்லாகியின் 16 வயது மகனும் இதே போன்று கொல்லப்பட்டதாக அரசு சட்டதரனி எரிக் ஹோல்டர், செனட்டின் நீதித்துறைக் குழுவின் தலைவர் பாட்ரிக் லீஹிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இவர்களுள் அவலாகி தவிர, மற்ற மூவரும் எதிர்பாராதவிதமாக இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்றும் அது குறித்து அமெரிக்க அரசு அறிந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கொல்லப்பட்ட மற்றொரு நபர் குறித்த தகவலும் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் குவாண்டிகோவில் உள்ள கப்பல்படைத்தளத்தை தாக்க முயன்று, பின்னர் பாகிஸ்தானின் பழங்குடியைச் சேர்ந்த ஜிகாதி தீவிரவாதிகளுடன் சேர்ந்த ஜுடே கெனான் முகமது என்பவரே இத்தகைய ஆளில்லாத ராணுவ விமானத்தால் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவி ஏற்றவுடன், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டசபை உறுப்பினர்களுக்குத் தெரியவேண்டும் என்று ஒபாமா கருதியதால் தான் அனைத்து விபரங்களையும் தெரிவித்துள்ளதாகவும் எரிக் ஹோல்டர் குறிப்பிட்டுள்ளார்
 

செயற்கைக்கோள் ரஷ்யாவால் கைவிடப்பட்ட ராக்கெட்டில்


ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
விண்வெளியில் ரஷ்யாவிலிருந்து செலுத்தப்பட்டு செயலிழந்த நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் ஒன்றின் மீது இந்த பெகாசஸ் செயற்கைக் கோள் மோதியதிலிருந்து அந்நாட்டின் விண்வெளி நிலையத்திற்கு சரியாக சிக்னல்கள் கிடைக்கவில்லை என்று அம்மையம் தெரிவித்துள்ளது.
ஆயினும், தொடர்ந்து விண்வெளியில் சுற்றி வருவதால் அது பழுதடைந்தது குறித்து இன்னும் சரிவரத் தகவல் தெரியவில்லை.
பூமியைச் சுற்றி வருகின்ற செயற்கைப் பொருட்களைக் கண்காணிக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கூட்டு விண்வெளி செயல்பாட்டு நிர்வாக மையம், ரஷ்ய ராக்கெட்டுடன் நேரடியான மோதல் எதுவுமில்லை என்றும் அதன் சிதறிய துண்டுகளுடன் பின்னர் மோதியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஈக்குவடார் நாட்டின் விண்வெளி நிலையத் தலைவரான ரோன்னி நடேர், பெகாசஸ் செயல்பாட்டில் இருப்பதாகவும் அந்நாட்டு மக்களுக்கான செயற்கைக்கோள் இயங்கி வருவதாகவும் இணையதளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
 

லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர்?


லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஊல்விச் இராணுவ முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று பிசியான லண்டன் சாலையில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
கொலையாளியை பொதுமக்களே மடக்கி பிடித்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் மைக்கேல் எடிபோலஜா(28) என்று தெரிய வந்துள்ளது.
பிரிட்டன் இராணுவத்தினரால் முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதற்குப் பழிவாங்கவே இத்தாக்குதலை நடத்தினேன் என்று தாக்குதலுக்குப்பின் எடிபோலஜா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு நிலை குறித்து ஆராய அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் கமரூன் கூறுகையில், பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது.
புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல் பிரிட்டன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்; இஸ்லாம் மதத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். இத்தாக்குதல் பிரிட்டன் மக்களை மிகவும் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
 

வியாழன், 23 மே, 2013

ராணுவ வீரர் தலை துண்டித்துக் கொலை

 .
 
லண்டனில், பிரிட்டன் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.பரபரப்பான லண்டன் சாலையில், ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்த இரண்டு மர்ம மனிதர்கள், அவரது தலையைத் துண்டித்துப் படுகொலை செய்தனர். அப்போது, இஸ்லாமிய மொழியில் அவர்கள் கத்தியதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

அமெரிக்க எழுத்தாளருக்கு மேன் புக்கர் பரிசு

நியூயார்க்கில் வாழும் அமெரிக்க எழுத்தாளர் லிடியா டேவிஸýக்கு 2013-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. மிகச் சிறந்த எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லிடியா டேவிஸýக்கு இதன் மூலம் 60 ஆயிரம் பவுண்ட் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. ""தி எண்ட் ஆஃப் தி ஸ்டோரி'' மற்றும் ""வெரைடீஸ் ஆப் டிஸ்டர்பன்ஸ்'' எனும் இரு நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்துள்ளது.
 தி மேன் புக்கர் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியும் ஒருவர். இறுதியில் லிடியா தேர்வு செய்யப்பட்டதன் மூலம் புக்கர் விருது பெறும் வாய்ப்பை அனந்தமூர்த்தி இழந்தார்.
 ஆண்டுதோறும் வழங்கப்படும் புக்கர் பரிசுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்படும் சர்வதேச விருதானது அவரைக் கெüரவிப்பதாக அமையும். 
இத்தகைய விருது பெறுவோர் ஆங்கிலத்தில் நாவல் எழுதியிருக்க வேண்டும். அல்லது பிற மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் சர் கிறிஸ்டோபர் ரிக்ஸ் கூறினார்.
 லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டார் அனந்த மூர்த்தி.
ஒரு நாளைக்கு நான்கு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும் தனது 80 வயதையும் பொருட்படுத்தாது இவ்விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து எழுத்தாளர்கள் சார்பிலும் இந்த விழாவில் தான் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டார் அனந்தமூர்த்தி.

பிரிட்டனில் பயங்கரவாத தாக்குதல்?

பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு அருகே புதன்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர் ராணுவ வீரர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் ஆயுதங்களுடன் வந்ததாக ராணுவ அதிகாரி சைமன் லட்ச்ஃபோர்டு தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற லண்டனின் தென்கிழக்கில் உள்ள வூல்விச் சாலையை போலீஸார் அடைத்தனர். ராணுவ பயிற்சி முகாமுக்கு அருகே இச்சம்பவம் நடந்ததுள்ளது.

இத்தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் என்று செய்திகள் வெளியானாலும், இது குறித்து போலீஸார் எதுவும் தெரிவிக்கவில்லை.

இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

புதன், 22 மே, 2013

மதுவைப் பருக்கி பாலியல் துஷ்பிரயோகம்

15 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி மதுவை அருந்த வைத்து அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாத்தளை பிரதேச சபையின் ஐ.ம. கூட்டமைப்பு உறுப்பினரும் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியுமான ஒருவரை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மாத்தளை நீதிமன்ற நீதிவான் திருமதி சத்துரிக்கா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறிப்பிட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சந்தேக நபரை விசாரணையின் பின்னர் மாத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தப்போதே நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுவனின் வைத்திய அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்

தேவாலயத்தினுள் தற்கொலை!

பிரபல எழுத்தாளரும் கட்டுரையாளரும் தேசியவாதிகளால் பாராட்டப்பட்டவருமான Dominique Venner  இன்று மாலை 16h00 மணிக்கு Notre-Dame de Paris தேவாலயத்தினுள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேவாலயத்தினுள் உள்ளேயும் வெளியேயும் உல்லாசப் பயணிகள் உட்பட ஆயிரத்து ஐநூறு பேர் உடனடியாகக் காவற்துறையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தேவாலயத்தின் முதற்கட்டுக்கு அருகில் நின்று 78 வயதான இவர் தனது தலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
   இன்று காலை தனது வலைப்பதிவில் ' 26 மேயின் ஜெஹய்டெக்கர் போராட்டம்' «La manif du 26 mai et Heidegger» என்ற த
லைப்பில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஓரினத் திருமண அங்கீகாரச் சட்டத்தை 'மிகவும் மோசமானது' என்று விமர்சித்திருந்தார். Taubira சட்டத்தின் எதிர்ப்பாளர்களையே மே 26இல் தேசியப் பேரணிக்காக அழைத்திருந்தார்தற்கொலை செய்து கொண்ட இந்தக் கட்டுரையாளர் «இஸ்லாமிய சக்தி» யைக் கண்டித்து விமர்சித்திருந்தார். ஆபிரிக்க மக்ரெபன் குடியேற்றத்தைக் கடுமையாகக் கண்டித்ததோடு «பிரான்ஸ் இஸ்லாமியர்களின் கைகளில் விழுந்து கொண்டிருக்கின்றது» என்றும் கோபத்தோடு விமர்சித்திருந்தார். «40 ஆண்டுகளாக இதுவரை மற்றும் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசியற் கட்சிகள் (FN நீங்கலாக), தேவாலயங்கள், முதலாளிகள் போன்றோர் அனைத்து வழிகளிலும் ஆபிரிக்க மக்ரெபன் குடியேற்றத்தை முடக்கி விட்டுக் கொண்டே வருகின்றனர்» என்று தொடர்ந்தும் எச்சரித்து வந்துள்ளார்,

செவ்வாய், 21 மே, 2013

இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பம்:?

பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Lexington நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில், பிணவறை ஊழியராக 38 வயதுடைய பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.
வழமையாக மருத்துவமனை ஊழியர்களுக்கு செய்யும் மருத்துவ பரிசோதனையில், குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது நடவடிக்கைகளில் ஏற்கனவே, நிர்வாகத்துக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில், இவரது கர்ப்பம் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பொலிஸ் விசாரனையில்,வைக் குறித்த திடுக்கிடும் சம்பவம் வெளிவந்தது. அப்பெண் தனது வாக்கு மூலத்தில், தான் பிணவறையில் வேளை செய்து கொண்டிருந்தபொழுது, திடீர் மரணமான ஆணின் சடலம் ஒன்று வந்ததாகவும், அப்போது தனக்கு தோன்றிய சபல எண்ணத்தால், அப்பிணத்துடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாகவும், இதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.
பிணத்தின் மூலம் கர்ப்பமாவதன் சாத்தியத்தன்மை தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள பொலிசார், குறித்த பெண்ணின் வாக்குமூலத்துக்கு அமைய அப்பெண் மீது வழக்கு பதிவு செய்து நீமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றம் அப்பெண்ணுக்கு $250,000 பிணை விதித்து தீர்ப்பளித்தது.

6.0 அளவிலான நிலநடுக்கம்


ரஷ்யாவை 6.0 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று தாக்கியது.அந்நாட்டின் தீபகற்ப பகுதியான காம்சட்காவில் இந்திய நேரப்படி இன்று காலை 6.55 மணியளவில் இது ஏற்பட்டது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பெட்ரோபவ்லோவ்ஸ்க் நகரத்தில் இருந்து 136 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

பணம் இல்லாததால் 4 பேரை கொலை செய்து தானும் ?


இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைப் புற துணைப்படையில் பணிபுரிந்த ஒருவர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருடைய கணக்கில் பணம் இல்லை என்பதினால் வங்கி அதிகாரிகளிடம் அதிகப்பற்றில் (ஓவர்டிராப்ட்) பணம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் மறுத்து விட்டதினால் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க முயன்றுள்ளார். அங்கும் அவருக்கு பணம் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர், வங்கியின் காவலாளியை முதலில் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்துள்ளார். அதன் பின்னர் வங்கியின் உள்ளே நுழைந்து அவர் கண்மூடித்தனமாக அங்கிருந்த மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
இதனால் அவரை மற்றவர்கள் பிடிக்க முயற்சி செய்ததில் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த பெண் ஒருவரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருந்தார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் பொலிசார் வங்கிக்குள் நுழைந்தனர். அப்போது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார்.
வங்கியில் பணம் கிடைக்காததால் ஒருவர் 4 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
 

செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி:

 
20 வினாடிகளில் கையடக்க தொலைபேசிக்கு சார்ஜ் செய்யக்கூடிய கருவியைக் அமெரிக்க மாணவி கண்டுபிடித்துள்ளார்.
 இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சரகோட்டா நகரில் வாழ்ந்துவரும் 18 வயதான ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.
இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம் விஞ்ஞானி விருதினையும் பெற்றுள்ளார். இந்தக் கருவியை மேம்படுத்த அமெரிக்க அரசு இவருக்கு 50,000 டாலர் நிதி உதவியும் அளித்துள்ளது.
தன்னுடைய செல்போனின் பாட்டரி அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலை ஏற்பட்டதே தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கு தூண்டுகோலாக இருந்தது என்று ஈஷா குறிப்பிட்டுள்ளார்
சாதரணாமாக 1000 முறை பயன்படுத்தக் கூடிய பாட்டரிகளைப் போல் இல்லாமல், தன்னுடைய கருவியை 10,000 முறை சார்ஜ் செய்யப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றார்.
இந்த பாட்டரி சிறு மின்விளக்குகளில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாகவும், செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்களில் இவற்றின் பயன்பாடு வெற்றிகரமானதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
 

ஆராய்ச்சியாளர்கள் மூவர் லஞ்சம் பெற்ற?

 
அமெரிக்காவின் நியுயார்க் பல்கலைக் கழகத்தில், அமெரிக்க அரசின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல்களை வெளியிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திங்களன்று, மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் யுடாங் சூ(44), சிங் யாங்(31 ), யீ லீ (31) ஆகிய மூன்று சீன ஆராய்ச்சியாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
யுனைடட் இமேஜிங் ஹெல்த்கேர் என்ற சீன ஆராய்ச்சி நிறுவனம் அந்த நாட்டின் நிதி உதவி பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆராய்ச்சி குறிப்புகளை அவர்களுக்கு அளித்ததாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையும், வழக்கறிஞர்களும் வாதிட்டனர்.
தீவிர குற்றமான இதனை, அரசு ஒருபோதும் மன்னிக்காது என்று பிரீத் பராரா என்ற அரசாங்க வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
இதில், யுடான் சூ, சிங் யாங் ஆகிய இருவரும், ஞாயிறு அன்று நியுயார்க்கில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் கைது செய்யப்பட்டனர். யீ லீ பிரச்சினைகள் எழும்முன்னரே சீனாவிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் வணிக ரகசியங்களை சீனா மறைமுகமாக அபகரிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது
 

திங்கள், 20 மே, 2013

ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா:


 ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சோதனை வடகொரியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று நடத்தப்பட்டது.
வடகொரியாவின் இச்செயலுக்கு தென் கொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, 3 ஏவுகணைகளை பசிபிக் கடலின் கிழக்குப் பகுதியில் வடகொரியா நேற்று முன்தினம் ஏவியது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளையும் மீறி, வடகொரியா இச்சோதனையை நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு ,,

     
விண்ணுக்கு சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதா என்பது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் நடவடிக்கையிலும் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சூழல் உயிரினங்களுக்கு எந்த வகையில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக கண்டறிவதற்காக, ரஷ்ய விஞ்ஞானிகள் சுண்டெலி, நத்தை, பல்லி உள்ளிட்ட உயிரினங்களை "பயோன்-எம்” என்ற விண்கலம் மூலம், கடந்த மாதம் விண்வெளிக்கு அனுப்பினர்.
இந்த விண்கலம் ரஷ்யாவின் ஓரன்பர்க் நகரில் நேற்று பாதுகாப்பாக தரை இறங்கியது.
புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் பிராணிகளின் இதயம், நரம்பு, தசை ஆகியவற்றில் எந்த விதமான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆராய இவை அனுப்பப்பட்டன.
அனுப்பப்பட்ட 45 எலிகள், 15 பல்லிகள் உள்ளிட்ட பிராணிகளில் எத்தனை உயிரோடு இருக்கின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் தகவல் வெளியிடவில்லை.

ஞாயிறு, 19 மே, 2013

சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

 
 அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார்.
 ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் கடுமையான பயிற்சி எடுத்து, இச்சாதனையை செய்துள்ளார் என்று அவரது அப்பா ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்தார். எவரெஸ்ட்டுடன் உலகின் ஏழு மலைச்சிகரங்களை அடைந்து ராஹா தனது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் என்று அவர் கூறினார். 

பன்னாட்டு விளையாட்டு அமைப்பின் நெருக்கடியை அடுத்து, இரு விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள சவூதி அரசு கடந்த வருடம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது

சனி, 18 மே, 2013

ஐ.நாவுடன் முரண்டு பிடிக்கும்?

சிறிலங்காவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறதுஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி ஒருவர் சிறிலங்காவுக்கு செல்ல கோரிக்கை விடுத்த போதும், அது சிறிலங்கா அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் கொழும்பு வருவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதுவரை அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனல் 4 வெளியிட்ட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த விசாரணைகளை நடத்தவே ஐ.நா பிரதிநிதி கொழும்பு வர விருப்பம் வெளியிட்டிருந்தார்.

இந்த காணொளி உண்மையானதே என்று 2011 ஏப்ரலில் கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் கூறியிருந்தார்.

இதன் பின்னர் சிறிலங்காவுக்கு வர அவர் விருப்பம் வெளியிட்டிருந்த போதிலும், அதற்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் அனுப்பவில்லை.

இந்தநிலையில், வரும் வாரம் ஜெனிவாவில் கூடவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 23வது அமர்வில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, சிறிலங்காவுக்கு வர அனுமதிக்கும் படி அவர் மீண்டும் கோரியுள்ளார்.

எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 17 மே, 2013

தனித்து வாழும் பெண்களால் பெருந்தொல்லை:


ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) நகரில், வாடகை வீடு வேண்டுவோருக்கு வீடுகளை ஒதுக்கித் தரும் கழகத்தின் தலைவரான ஹேன்ஸ் டயட்டர்(Hans-Dieter) தனித்து வாழும் பெண்களால் எங்களுக்குப் பெருந்தொல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து இவர் அளித்த ஊடகப் பேட்டியில், கணவர் இறந்த பின்னர் தனித்து வாழும் பெண்களால் தோட்டத்தைப் பராமரிக்க முடியாது, எந்த வேலையையும் செய்ய இயலாது, எதைச் சொன்னாலும் எரிச்சல்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
துருக்கியிலிருந்து வந்திருக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நஃபீசா ஓ(Nafize Ö) என்பவருக்கு வீடு ஒதுக்கித் தர முடியாது என்று ஹேன்ஸ் தெரிவித்ததால் அந்தப் பெண் மிகவும் கோபப்பட்டுள்ளார்.
இது குறித்து நஃபீசா கூறுகையில், நான் நான்கு பிள்ளைகளை வளர்க்கிறேன். என்னால் ஆறு ஆண்களின் வேலையைச் செய்ய முடியும். நான் ஒரு பெண் என்பதால் எனக்கு வீடு கிடையாது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சனையை ஹேன்சுடன் பேசி  தீர்த்து வைப்பதாகக் ஹேம்பர்க் தோட்டக்காரர் கழகத்தினைச் சேர்ந்த டிர்க் சீல்மேன்(Dirk Sielmann) என்பவர் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதிக்கு ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை: பரபரப்பு ??


வடகொரியாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்ற கிம் ஜாங்-யுன்க்கு கடந்த 2009ம் ஆண்டு ரிகோல்-ஜி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் அதை அவர் ரகசியமாக வைத்து இருந்தார். இந்நிலையில் திடீரென 2012ம் ஆண்டு யூலையில் தனது மனைவியுடன் பொது மக்கள் மத்தியில் தோன்றி அதிர்ச்சியளித்தார்.
அதற்கு முன்னரே இத்தம்பதிக்கு 2010ம் ஆண்டே ஒரு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில், தற்போது ஜனாதிபதி கிம்-ஜாங்-யுன்னுக்கு அவரது ரகசிய காதலி மூலம் பெண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக சுவிட்சர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து மிகவும் விலை உயர்ந்த குழந்தை உணவு பொருட்கள் வடகொரியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஜனாதிபதி யுன் தனது குழந்தைகளுக்காவே இந்த உணவு பொருட்களை இறக்குமதி செய்து வட கொரியாவில் விற்க அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மரணம் அடைந்த முன்னாள் ஜனாதிபதியும், கிம் ஜாங்-யுன் தந்தையுமான கிம் ஜாங்-இல்லுக்கு மனைவி தவிர சட்டத்துக்கு விரோதமாக 3 காதலிகள் இருந்தனர்.
கிம் ஜாங்-யுன் தவிர அவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். தற்போது கிம் ஜாங்- யுன்னும் இந்த விடயத்தில் தனது தந்தை வழியை பின்பற்றுவதாக செய்தி வெளியாகி உள்ளது

கனடாவில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்


கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் இது போன்ற 2000 தட்டுகள் அந்நாட்டில் தென்பட்டுள்ளதாக இது குறித்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமாகும்.
கனடா நாட்டில், அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டில், 986 தட்டுகள் இது போன்று தெரிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இந்த எண்ணிக்கை 1981ஆக அதிகரித்துள்ளது.
மேலும் முன்னர் இருந்ததைவிட, தற்பொழுது கனடா மக்கள் அதிக அளவில் வானத்தைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்று கிரிஸ் ருட்கொவ்ச்கி என்ற விஞ்ஞான எழுத்தாளர் கூறுகின்றார்.
இத்தகைய தட்டுகள் மாறுபட்ட வடிவங்களில் தென்படுகின்றன. அதாவது முக்கோண வடிவிலோ, ஒளிப்பிழம்பு போன்றோ, வட்டவடிவ பறக்கும் தட்டாகவோ போன்ற பல்வேறு மாறுபட்ட தோற்றங்கள் மக்களுக்குத் தென்படுகின்றன.
10 வயது சிறுவன் ஒருவன் தான் பார்த்தைப் பற்றி குறிப்பிடுகையில், ஒரு நிமிடம் கண்ணுக்குத் தெரிந்த அது, பின்னர் வானத்தில் மிக வேகமாகப் பறந்து சென்றது என்று கூறுகின்றான்.
இத்தகைய பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், விவாதங்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில், நாசா விண்வெளிமையம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வட்டவடிவ தட்டு போன்ற ஒரு அமைப்பு வானவில் நிறத்தில் வெளிச்சத்தை இறைத்தவாறு பூமியின் மேற்பரப்பில் வட்டமிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

மக்களுக்காக கண்ணீர் சிந்திய அவுஸ்திரேலிய


அவுஸ்திரேலியாவில் மக்கள் எழுதிய கடிதத்தை படித்து வி்ட்டு, பிரதமர் ஜூலியா கில்லர்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு மாற்று திறனாளிகளுக்கு பயனளிக்க கூடிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார்.
இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தால் ஏற்பட கூடிய நன்மைகளை விளக்கினார்.
மக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்து கில்லார்டு பேசி கொண்டிருக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட ஜூலியா, குயின்ஸ்லேண்டர்ஸ் நகர மக்கள் தங்களது கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அழுதார்.
ஜூலியா பேசி முடித்து அமர்ந்த பின்னர், தொழிலாளர் கட்சியினர் மற்றும் மாற்று திறனாளி வழக்கறிஞர்கள் 20 பேர் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த.,


பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் பெப்ரவரி மாதம் 18ம் திகதி அன்று நடைபெற்ற இந்தக் கொள்ளை, பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமானநிலையத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளையாகும்.
விமானம் சூரிச்சுக்குப் புறப்படத் தயாராக இருந்த நிலையில், இந்தக் கொள்ளையர்கள் சரக்குப் பெட்டகத்தைத் திறக்கும் படி மிரட்டி அதில் ஏற்பட்டிருந்த வைரங்களையும், ரொக்கப் பணத்தையும் ஏராளமாகத் திருடிச் சென்றனர்.
அவர்கள் கொள்ளையடித்த ரொக்கப்பணத்தில் பெரும் பகுதியை பொலிசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வியாழன், 16 மே, 2013

தொட்டிக்குள் காவியம் படைக்கும் காதல் ஜோடி:


எத்தனையோ விதமான நடனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் வித்தியாசமான நடனம் இது,சிலி நாட்டின் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஜோடி ஒன்று தமது திறமையை காட்டியுள்ளது.
இது வழமையைப் போன்று சாதாரண மேடை நடனம் அல்ல. முற்றிலும் மாறுபட்ட ஜிம்னாஸ்டிக் வகையிலான நடனம்.

அதுவும் இரு நீர்த் தொட்டிக்குள் இவர்கள் காட்டும் திறமை அபாரமானது.

பார்ப்பவர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அவர்களின் திறமையைக் காண காணொளியை பாருங்கள்,

புதன், 15 மே, 2013

வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு


கடந்த வருடம் 1,585 சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள்(Black Money Transaction) நடைபெற்றுள்ளதை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த 2012ம் ஆண்டில் சந்தேகத்துக்குரிய வகையில் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக கருதப்படும் கணக்குகளை ஆய்வு செய்ததில் 1,585 வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவற்றில் 15 வங்கிகளில் பரிவர்த்தனைகள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ ரூ. 20 ஆயிரம் கோடி என்று தெரிகிறது. ஆறு பரிவர்த்தனைகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 10 ஆயிரம் கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கி விதிமுறைகளின் ரகசியத் தன்மையினால் உலகின் பல பாகங்களிலிருந்தும் இங்கு கருப்பு பணம் பதுக்கப்படுகிறது. மேலும் பயங்கரவாதம், போதை மருந்து போன்ற செயல்களுக்கும் சுவிஸ் வங்கிகள் மூலம் பணம் சுழற்சி செய்யப்படுகிறது.
கருப்பு பண சொர்க்கம் என்று தங்கள் நாடு அழைக்கப்படும் களங்கத்தைப் போக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
மேலும் வங்கிக் கணக்கு விவரங்களை அளிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி வருகிறது
 

பாகிஸ்தான் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்


இந்திய கைதி சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் கோட் லாக்பாத் சிறையில் 1400 கைதிகள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
சிறை அதிகாரிகளின் விரோத மனப்பான்மையைக் கண்டித்து கைதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை 3.30 மணிக்கு தங்களை எழுப்பி சிறைக்குள் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்புவதாகவும், சிறையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும் போராடும் கைதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று சிறை கண்காணிப்பாளர் மறுத்துள்ளார்.
சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்டதையடுத்து, சிறையில் உள்ள கொடிய குற்றவாளிகள் மற்ற கைதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனி செல்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இந்திய கைதிகள் 30 பேர் உள்ளனர். அவர்களில் யாராவது உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளாரா? என்பது தகவல் வெளியாகவில்லை.
 

பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ,..


பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி அமோக வெற்றி பெற்று அடுத்த பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் ஆகிறார்.
இந்நிலையில் அமெரிக்க  ஜனாதிபதி பராக் ஒபாமா, நவாஸ் ஷெரீப்புடன் புகைப்படத்தில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி கூறுகையில், மே 11ம் திகதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக சீட்டுகள் பெற்று ஆட்சி அமைக்கவுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜனாதிபதி ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே பரஸ்பர வளர்ச்சி குறித்து இரு நாடுகளும் அக்கறையுடன் செயல்பட்டு வருவதில் நீண்ட கால வரலாறு உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் மக்களின் வளர்ச்சி, பாதுகாப்பு குறித்த விடயங்களில், ஜனநாயக முறைப்படி அமையவுள்ள இந்த அரசுக்கு மேலும் அமெரிக்காவின் ஆதரவு தொடரும் என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்
 

தீவிரவாதிகளின் எழுச்சியால் அவசரநிலைப்

 
ஆப்பிரிக்கா கண்டத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் முஸ்லிம் ஆட்சியை வலியுறுத்தி நாட்டின் வடக்குபகுதியில் இருந்து தீவிரவாதிகள் அரசுக்கெதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தனமையை பலவீனப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்களும், தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்களையும், கிராமங்களையும் திடீரென கைப்பற்றியுள்ளனர்.
இதனால், ஜனாதிபதி குட்லக் ஜொனாதன் நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்துள்ளார். மேலும் அதிகமான துருப்புகளை அங்கு அனுப்பவும் உறுதியளித்துள்ளார்.
தீவிரவாதிகள் தங்கியிருப்பதற்கான தடயங்கள் தெரியும் இடங்களை நிர்மூலமாக்கவும் உத்தரவிட்டார்.
இச்செய்தியானது அந்நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது
 

அறுவடைக்குச் செல்லும் நேபாள மக்கள்


உலகளாவிய அளவில் ஆண்மை எழுச்சியை அதிகரிக்கவல்ல அருமருந்தாக "வயாக்ரா" மாத்திரை கருதப்படுகிறது.
இந்த மாத்திரைக்கு இணையான ஆண்மை சக்தியை தரக்கூடிய அறியவகை பூஞ்சை நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரத்தில் விளைகிறது.
ஆரம்பத்தில் கம்பளிப் பூச்சியின் உடலைப் பற்றி, சில நாட்களில் கம்பளிப் பூச்சியை அழித்துவிட்டு "யார்ச்சகும்பா" எனப்படும் இந்த பூஞ்சை வளரத் தொடங்குகிறது. இவ்வகை பூஞ்சைகளுக்கு சீனா, மியான்மர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கடும் கிராக்கி உள்ளது.
நீரில் இந்த பூஞ்சையை போட்டு கொதிக்க வைத்து தேனீர், சூப் போன்றவை தயாரித்து பருகினால் ஆண்மை வீரியமும், ஒருசில வகை புற்று நோயில் இருந்து நிவாரணமும் கிடைக்கிறது என ஆசியாவில் வாழும் அனேக மக்கள் நம்புகின்றனர்.
இவ்வகை பூஞ்சை கிலோ ஒன்றுக்கு சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை விலை போகின்றன. இவற்றின் மகசூல் வசந்த காலத்தில்தான் அதிகம் என்பதால், இந்த இமயமலை வயாக்ராவை அறுவடை செய்ய உரிய பருவத்தில் நேபாள மக்கள் இமயமலை அடிவாரத்தை முற்றுகையிட தொடங்கி விடுகிறார்கள்.
பள்ளிகளில் படிக்கும் தங்கள் வீட்டு பிள்ளைகளையும் இவர்கள் வயாக்ரா வேட்டைக்கு அழைத்து சென்று விடுவதால், இமயமலை அடிவாரத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் சுமார் 8 ஆயிரம் நேபாள மாணவர்கள் பணம் சம்பாதிக்கும் குறியில் வகுப்புகளை புறக்கணித்து விடுகின்றனர்.
வெள்ளியின் விலைக்கும், தங்கத்தின் விலைக்கும் இடைப்பட்ட விலையில் இந்த யார்ச்சகம்பா பூஞ்சை விலை போவதால், ஓர் பருவ காலத்தின்போது மாணவர்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.
"முதுமையில் இருக்கும் நபர்களுக்கு ஊக்க மருந்தை அறுவடை செய்யும் தேடலில், இளமை பருவத்தே பயிர் செய்ய வேண்டிய கல்வியை மாணவர்கள் கெடுத்துக் கொள்வது வேதனையான விஷயம்" என்கிறார், நேபாளத்தின் ஜார்கோட் மாவட்ட கல்வி அதிகாரியான பிரகாஷ் சுபேதி
 

செவ்வாய், 14 மே, 2013

தொழில் அதிபர் வீட்டில் நகை கொள்ளை


திருச்சி புத்தூர் பாரதிநகர் அருகே சர்ச் காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜெய்கண். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
மேலும் கண்டோன்மெண்ட், தில்லைநகர் பகுதியில் பிரபல ஓட்டலும் நடத்தி வருகிறார். ரோட்டரி சங்கத்தில் தலைவராகவும் உள்ளார்.
ஜெய்கண் நேற்று முன்தினம் தனது மனைவி, மகன் மற்றும் குடும்பத்துடன் ராமேசுவரத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் அவரது ஓட்டலில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஜெய்கண்ணின் வீட்டுக்கு நேற்று காலை சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டின் முதல் தளத்தில் உள்ள கதவும் உடைக்கப்பட்டு இருந்து. இது குறித்து உடனடியாக அவர் தனது முதலாளி ஜெயக்கண்ணுவிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஜெய்கண் நேற்று மாலை திருச்சி விரைந்து வந்தார். அப்போது தான் குடும்பத்துடன் வசித்து வரும் முதல் தளத்தில் பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் வெளியே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் நேற்று இரவு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். போலீசார் விசாரணையில் வீட்டில் பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 1/4 லட்சம் ரொக்க பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
மேலும் மொத்தம் 5 கிலோ எடையுள்ள 6 வெள்ளி தட்டுகளையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகை மற்றும் வெள்ளி தட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் 4 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைத்து ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டின் கீழ் தளத்தில் யாரும் வசிக்கவில்லை.
வீட்டின் மாடியான முதல் தளத்தில் தான் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு பின்பக்கமாக கதவை உடைந்து நுழைந்து வீட்டின் மாடியில் இருந்து நகை, பணத்தை சாகசமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர். தொழில் அதிபர் குடும்பத்திற்கு நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்  பதிந்து கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். தொழில் அதிபர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் !

மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் ! 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
 பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்கா நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத் திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு திருவள்ளுவர் விருது, திரு.வி.க. விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவை திருவள்ளுவர் திருநாளிலும், தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது ஆகியவை சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்றும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திருக்குறளை பிற நாட்டு அறிஞர்களும் பாமரர்களும் புரிந்து கொள்ள வழிவகை செய்தவரும், அறநெறிக் கருவூலமான நாலடியார் மற்றும் திக்கெட்டும் தமிழ்ப் புகழ் பரப்பும் திருவாசகம் ஆகியவற்றை மொழி பெயர்த்தவரும் ஆன அயல்நாட்டு தமிழ் அறிஞர் ஜி.யு. போப்பின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில், அயல் நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு ஜி.யு.போப் விருது வழங்கப்படும்.
விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இதற்கென ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும்.
இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப் புலவர் பெயரில் விருது வழங்கப்படும்.
விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இதற்கென ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவிட வகை செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் ஒரு விருது வழங்கப்படும்.
விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இதற்கென ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் தமிழ்க் கல்வி வளர முதல் நடவடிக்கையாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2003 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் நிதி எனது அரசால் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஒரிசா, உத்தர் பிரதேஷ், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட மானியங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ் அறிஞர் மு.வ.வின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்த் துறை தொடங்கப்பட்டு தற்போது பொன்விழா கண்டுள்ளது.
இத்தமிழ்த் துறையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். ஆனால் தமிழ்த் துறையில் போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே அங்கு தமிழ்ப் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வருங்காலத்தில் ஆந்திர மாநிலத்தில் தமிழ் மொழியை வளர்ப்பதைக் கருத்தில் கொண்டும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைக்கு 3 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிதி உதவியாக ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் பண்பாட்டையும் நாகரிகத்தையும் போற்றி வளர்த்து வரும் தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தின் நுழைவாயிலில் தமிழர் தம் கட்டடக் கலையை வெளிப்படுத்தும் விதமாக தோரண வாயில் அமைத்திட வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் எனவும் தில்லி தமிழ்ச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு தோரண வாயில் கட்ட நிதி உதவியாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மனநிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணாவால் 1968ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழர் தம் வாழ்க்கை வளத்தை எடுத்துக் கூறும் தொல்காப்பியத்தின் பெயரால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொல் காப்பியத்திற்கு எழுதியுள்ள பல்வேறு விளக்க உரைகளை ஒன்று சேர்த்து முறைப்படுத்துவது, பிற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தொல்காப்பியம் குறித்தான பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்துதல் போன்ற பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் இந்த ஆய்விருக்கையின் மூலம் மேற்கொள்ளப்படும். இதற்கென உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளத

திங்கள், 13 மே, 2013

திறமையான தலைமை நிர்வாகி பதவி



சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார்.
நிறுவனத்துக்கும் அவருக்கும் எந்தத் தகராறும் இல்லை, சுகாதாரக் காரணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கா திரும்பப் போகிறாரா என்பதும் புரியவில்லை என்று சுவிஸ் செய்தி நிறுவனம் இவரைக் குறித்து கருத்து வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஹ்யுபெர்ட்டுஸ் வான் க்ரூன்பெர்க்(Hubertus von Grünberg) கூறுகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது இந்த நிறுவனத்தைத் திறம்பட நடத்தியவர். வெற்றியைத் தவிர வேறு எதையும் அறியாதவர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோ ஹோகன் சேர்ந்து 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தை இலாபம் மிக்க நிறுவனமாக மாற்றிவிட்டார் என்றும் பாராட்டினார் க்ரூன்பெர்க்
 

இன்ப சுற்றுலா சென்ற இளம் பெண் கொலை வழக்கு:


சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியே வந்த இயந்திரப்படகு இந்தத் தோணியை முந்திக் கொண்டு சென்றதில் ஏற்பட்ட உராய்வு காரணமாக அத்தோணி  தண்ணீருக்கள் கவிழ்ந்தது. இதில் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளனர்.
தண்ணீரில் விழுந்த அப்பெண்ணின் கால்கள் இயந்திரப் படகின் சக்கரக் காற்றாடியில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் கால் நசுங்கி இரத்தம் கொட்டியதில் உயிரிழந்துள்ளார்.
ஆனாலும் அந்த மோட்டார் படகு நிற்காமல் போய் விட்டது. அதிலிருந்து பிழைத் தெழுந்த காதலன் இயந்திர படகு உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இவரது படகினால் ஒருவர் இறந்ததற்கு இவர் பொறுப்பாவார் என்று வழக்கு தொடரப்பட்டிருப்பதால் படகு உரிமையாளரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
 

ஞாயிறு, 12 மே, 2013

7 கோடி ஆண்டுகள் பழையான டைனோசரஸ் ?


மங்கோலியா நாட்டிலிருந்து 7 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்கள் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டன.
இந்நிலையில் மங்கோலியா அரசு, டைனோசரஸ் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்தது.
இதனையடுத்து மங்கோலியாவில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்தி வரப்பட்ட 10க்கும் மேற்பட்ட டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்களை கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஒரு நாட்டின் கலாச்சார நலனை கொள்ளை அடிப்பவர்களையும், சதிகாரர்களின் செயலையும் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
நாளை நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் இவைகள் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவரின் போட்டோ 30 இலட்சத்துக்கு ஏல விற்பனை..!


சீனாவின் மாபெரும் தலைவர் மாவோ ஷெடாங். சீன கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இவர் மரணம் அடைந்து 27 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் இவரது அரிய போட்டோ சீனாவில் நேற்று ஏலத்துக்கு விடப்பட்டது.
அதை பலர் போட்டி போட்டு கூடுதல் தொகைக்கு கேட்டனர். முடிவில் ரூ.30 லட்சத்துக்கு அந்த போட்டோ ஏலம் போனது.
இது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 10 மடங்கு அதிகமாகும். அதை லூஷான் மவுன்டெய்ன் என்ற சுற்றுலா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது

பால்மா இறக்குமதியை தடைசெய்யும்


நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களை தடைசெய்வது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்மைக் காலத்தில் நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளதாக வெளியான தகவலை அடுத்தே இந்த ஆராய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அண்மையில் இலங்கைக்கு வந்த நியூஸிலாந்தின் இரண்டு அமைச்சர்கள் தமது பால்மாக்களின் இறக்குமதியை தடைசெய்ய வேண்டாம் என்று இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் தொடர்பில் சிங்கப்பூரில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பால்மாக்களில் அடங்கியுள்ள கதிரியக்க தாக்கங்களினால் நீரிழிவு உட்பட்ட நோய்கள் ஏற்படும் என்று மருத்துவத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.