Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 28 செப்டம்பர், 2013

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி


கொழும்பு புளுமென்டால் பகுதியில் காரில் வந்த இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 56 வயதுடைய வர்த்தகரொருவர் பலியாகியுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தபின் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து: 20 பேர் பலி


சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகொன்று இந்தோனேசிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை இருபது சடலங்களை இந்தோனேசிய ஜாவா தீவு வாசிகள் மீட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது படகில் 120 பேர் வரை இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் மீட்கப்பட்டவர்கள் ஜோர்தான், லெபனான், மற்றும் யேமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பயணித்த அனைவரும் மத்தியகிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

எய்ட்ஸை ஒழிக்க 1 பில்லியன் டொலர் வழங்கும் பிரிட்டன்


 உலகளவில் கொடிய நோய்களான எய்ட்ஸ், மலேரியா, டி.பி போன்ற போன்ற நோய்களுக்காக அடுத்த மூன்று வருடங்களில் 1 பில்லியன் டொலர் வழங்குவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

சர்வதேச மேம்பாட்டு செயலாளர் ஜஸ்டின் கிரினிங் இந்த அறிவிப்பை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் வறுமை ஒழிப்பு குறித்தான கூட்டத்தில் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு முடிவிற்குள் எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுத்து குணப்படுத்த வேண்டும் என்பதை முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார்.
உலகளவில் இதற்காக 2014-2016ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டொலர் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவும் 1.65 பில்லியன் டொலர் தரவுள்ளது

மெக்ஸிகோ நிலச்சரிவு: 170 பேர் மரணம்?


மெக்ஸிகோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு அதிபர் என்ரிக் பெனா நியேட்டோ தெரிவித்துள்ளார்.
தெற்கு மெக்ஸிகோ அருகே லா பின்டாட்டா என்ற இடத்தில் ஏற்பட்ட அந்த நிலச்சரிவில் அங்குள்ள ஒரு கிராமம் முற்றிலுமாக மண்ணில் புதைந்தது. இதில், 170 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இது குறித்து குய்ரேரோவில் தமது அமைச்சர்களுடன் அதிபர் என்ரிக் சனிக்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

விமானத்தில் 1300 கிலோ கோகைன் போதைமருந்து மீட்பு


 
வெனிசுவேலாவின் காரகாசிலிருந்து பிரான்சின் தலைநகர் பாரிசுக்கு வந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் வந்த 30 பெட்டிகள் எந்தப் பயணியின் பெயரிலும் பதிவு செய்யப்படவில்லை.

சந்தேகப்பட்ட விமான நிலைய அதிகாரிகள் அவற்றைப் பிரித்து சோதனையிட்டபோது 1300 கிலோ எடையுள்ள சுத்தமான கோகைன் போதை மருந்துப் பொருள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு 200 மில்லியன் டொலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் அந்நாட்டு அதிகாரிகளால் நேற்றுதான் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் மானுவல் வல்ஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டு காவல்துறைகளும் பிரான்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கடத்தல் குறித்து விசாரித்து வருகின்றார்கள்.

கடத்தல் காரர்களை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிய வருகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெனிசுவெலாவிலும் கோகைன் கடத்தல் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கி வரும் போதை மருந்து தடுப்பு குழுவினருடன் அந்நாட்டின் பொது அமைச்சக வழக்கறிஞர்களும் குறிப்பிட்ட காலத்தில் அங்கு ஏதேனும் குற்ற நடவடிக்கை நடந்ததா என்பது குறித்து விசாரிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் ஈரானின் அணுவாயுத அணிவகுப்பு


ஈரான் அணுஆயுதங்களை நிறைய சேமித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையடுத்து அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது சில பொருளாதாரத்தடையை கொண்டுவந்துள்ளது.

இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்து வருகிறது. ஆனால், ஈரான் ஆக்க வழிகளில் பயன்படுத்தவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக கூறிவருகிறது.
இந்நிலையில் 1980-1988 ஆண்டு வரை ஈரான்-ஈராக்கிடையே நடந்த போரின் நினைவுதினம் முன்னிட்டு நேற்று ஈரானில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதில் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய 30 ஏவுகணைகளை ட்ரக்குகளில் வைத்து அணிவகுப்பு நடத்தப்பட்டன. இதன் மூலம் தனது எதிரி நாடுகளுக்கு ஈரான் ஒரு எச்சரிக்கை மணி அடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதில் 12 செஜில் மற்றும் 18 காதர் ஏவுகணைகள் இடம்பெற்றன. இந்த இரு ஏவுகணைகளும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அரேபிய ஏவுதளங்களை குறிவைத்து தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த அணிவகுப்பில் பேசிய ஈரான் அதிபர் ஹசன் ரஹானி, காட்சிக்கு வைக்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் தற்காப்புக்காக மட்டுமே என்று வலியுறுத்தினார். 200 வருடங்களில் எந்த ஒரு நாட்டையும் ஈரான் தாக்கியது கிடையாது என்றும் அப்போது அவர் கூறினார்.

சீனாவை தாக்கியது 'உசாகி' புயல்: 20 பேர் பலி


பிலிப்பின்ஸ் மற்றும் தைவானைத் தொடர்ந்து உசாகி புயல் ஹொங்கொங் மற்றும் சீனாவின் தெற்கு கடலோரப்பகுதிகளை தாக்கியது.
மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் தாக்கிய இப்புயலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். குவாங்டாங் மற்றும் ஃபுஜியன் நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹொங்கொங்கில் முன்னெச்சரிக்கையாக 8-ஆம் எண் புயல் எச்சரி‌க்கை ஏற்றப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

240 கி.மீற்றர் வேகத்தில் சூறையாடும் உசாகி!


பிலிப்பைன்ஸ் மற்றும் தைவானை உசாகி என்ற கடுமையான சூறாவளி தாக்கி வருகிறது. பலத்த மழை, அதிவேக சுழற்காற்று ஆகியவை காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. சூறாவளி காரணமாக, பயிர்கள்

கடுமையாக சேதம் அடைந்துள்ளன. தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் இல்லை. இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு

அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு காரணமாக ஓட்டல்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. மணிக்கு 240 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை பொழிவு 1.2 மீட்டர் என்ற

அளவில் பலமாக உள்ளது. இந்த சூறாவளி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, ஹாங்காங் அரசு அதிகாரிகள் கூறி உள்ளனர்
 

வியாழன், 12 செப்டம்பர், 2013

ஹோட்டலொன்றில் பதற்ற நிலை: !

 
வாதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் இரு குழுக்களிடையே முரண்பாடொன்று இடம்பெற்றுள்ளதுடன் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அங்கு பொலி

ஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் சம்பவத்தின் போது அங்கு வந்த  அப்பிரதேச பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பக்கச்சார்பாக செயற்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த ஹோட்டலின் உரிமையாளர்கள் எனக் கூறப்படும் இரு

தரப்பினரிடையே முரண்டாடொன்று ஏற்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு நிலவிய பதற்ற சூழ்நிலையால் ஹோட்டலில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் அசௌகரியத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் தெரியவருகின்றது.

மேலும் இதன்போது ஹோட்டலில் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

நிலக்கரி சுரங்கத்தால் பேய்நகரமாக மாறிய கிராமம் ஜேர்மனில்


 
ஜேர்மன் நாட்டில் உள்ள ஒரு கிராமமானது மக்கள் நடமாட்டம் இல்லாத பேய் நகரமாக மாறியுள்ளது.
வடக்கு ஜேர்மன் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமானது உள்ளது.

இங்கு ஏற்பட்ட ஏராளமான மாசுக்களால் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.
அப்பகுதியில் வாழ்ந்து வந்த 7,600 மக்கள் வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர் மேலும் 100 பேர் அங்கு வாழலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்து மாறுதலாகி சென்ற நபர் கூறுகையில், நானும், என்னுடைய மனைவியும் எங்களுடைய எண்ணங்களை மாற்றிவிட்டு புது வாழ்க்கையை நோக்கி பயணிக்கிறோம்.
மேலும் அங்கு ஏற்பட்டுள்ள ஒரு பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண் வேண்டும் என்று கூறியுள்ளார்
 

சனி, 7 செப்டம்பர், 2013

7வது மாடியிலிருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த குழந்தை

7வது மாடியிலிருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த குழந்தை
கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் 7வது மாடியிலிருந்து தவறி விழுந்த 17 மாத குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.

Overlea Boulevard பகுதியின் Don Mills வீதியருகில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தின் 7வது மாடி பால்கனியிலிருந்து 17 மாத ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்தது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் குழந்தை இக்கட்டான ஆனால் நல்ல நிலைமையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு சந்தேகப்படும்படியான காரணமெதுவும் தெரியவில்லை என்றும் ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை நாற்காலியில் ஏறி பால்கனி கிராதியின் மேலாக விழுந்திருக்கலாமா என்ற கோணத்தில் புலன் விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடுமையான காயங்களுடன் சிறுவன் வைத்தியசாலையில் உள்ளான்.