Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 12 ஜனவரி, 2013

மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுடன் உயிர் வாழும் அதிசய பிரிட்டன் மனிதர்.

பிரிட்டனில் உள்ள ஒருவர், தன்னுடைய உடலில் 15 இடங்களில் உடைந்த எலும்புகளுக்காக 34 இடங்களில் அறுவை சிகிச்சை செய்ததோடு, மாரடைப்பு நோயையும் சந்தித்து, சிறுநீரக கோளாருடன் அதிசயமாக உயிர் வாழ்ந்து வருகிறார். அவரது உடலில் செயல்பாடுகளைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர். Terry White என்ற 67 வயது பிரிட்டன் மனிதர், தன்னுடைய இடுப்பில் ஆறு இடங்களில் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். உடலின் பல்வேறு இடங்களில் உடைந்துள்ள 15 எலும்புகளை ஒன்று சேர்ப்பதற்காக 34 முறை அறுவைசிகிச்சை செய்துள்ளார். இதுமட்டும் போதாது என்று அவருக்கு அடிக்கடி மாரடைப்பும் வருமாம். இதுவும் போதாதென்று சிறுநீரகமும் வேலை செய்யாமல் பழுதடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர். இவருக்கு செய்யப்பட்ட 34 அறுவை சிகிச்சைகளில் 21 அறுவை சிகிச்சை மிகவும் கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று மேஜர் அறுவை சிகிச்சைகள் 10 நாட்கள் இடைவெளியில் மட்டுமே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் அனைத்து வெற்றி பெற்றதற்கு அவருடைய தன்னம்பிக்கையே பெரும் உதவியாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

மாணவர்களின் வீட்டு முகவரிகள் பெறப்பட்டு, அவர்களது

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலரது வீட்டு முகவரிகள் பெறப்பட்டு இனம் தெரியாத நபர்களினால் அவர்களது வீடுகளுக்கு அநாமதேய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். தங்களது வீட்டு முகவரிகள் இந்த அநாமதேய நபர்களுக்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது குறித்தும் இவ்வாறு கிடைத்துள்ள முகவரியால் எதிர்காலத்திலும் தாங்கள் அச்சுறுத்தப்படலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். மாணவர்களின் முகவரியினை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு இந்தக் குழு செயற்ப்பட்டுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது அரசியல் செல்வாக்குடைய குழு ஒன்றினாலே இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என மாணவ்ர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது வீட்டு முகவரிகள் எவ்வாறு கிடைத்தன? அவ்வாறு அவர்களுக்கு வழங்கியது யார் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக் கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளை குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் சார்ந்த விடயங்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது