பாகிஸ்தான் பிரதமர், ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்ய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள
2010-ம் ஆண்டு அவர் நீர் ஆதாரம் மற்றும் எரிசக்தி துறையின் மந்திரியாக பதவி வகித்தார்
அப்போது தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்குவதற்கு 3.7 மில்லியன் டாலர்களை லஞ்சமாக வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்ப
லஞ்சம் வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், ராஜா பர்வேஸ் அஷ்ரப், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 15 பேரை கைது செய்யும்படி, தலைமை நீதிபதி இப்திகார் முஹம்மத் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்
Link
▼
ணக்கம் வருக வருக....
▼
Pages
▼
செவ்வாய், 15 ஜனவரி, 2013
ஆக்ரோஷமாக பதிலடி கொடுங்கள்: இந்திய தளபதி
காஷ்மீரில், பாகிஸ்தானிய இராணுவம் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறு இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை யுத்தமிட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் காஷ்மீர் பகுதியில் நடந்த மோதல்களில் இந்தியச் சிப்பாய்கள் இருவரும் பாகிஸ்தானியச் சிப்பாய்கள் இருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.
காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பதற்றங்களைத் தணிப்பதற்கும் பாகிஸ்தானிய இராணுவம் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறும் இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார்.
பெண்ணிடம் கத்தியை காட்டி பயமுறுத்தி பாலியல்!
தனிமையிலிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பயமுறுத்தி அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முகமூடியணிந்திருந்த நபரை பதுளைப் பொலிஸார்; நேற்று கைது செய்துள்ளனர்.
பதுளைப் பகுதியைச் சேர்ந்த உடுவரை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடுவரை என்ற இடத்தின் வீடொன்றில் ஏனையவர்கள் மரண வீடொன்றிலிருந்தமையினால் 58 வயது நிரம்பிய இரு பிள்ளைகளுக்கு தாயாரான மேற்படி பெண் மாத்திரமே வீட்டிலிருந்துள்ளார்.
அவ்வேளை உறவினர் போன்று குரல் கொடுத்து, அந்நபர் கதவைத் தட்டிய போது கதவைத் திறக்க, கத்தியை காட்டி பயமுறுத்தி அப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்.
காட்டப்பட்ட கத்தியை அப்பெண் பிடிக்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக அப்பெண் காயத்திற்குள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
குறித்தப் பெண் செய்த முறைப்பாட்டினையடுத்து உடுவரையைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
தைத்திருநாளை ஆனையிறவில் கொண்டாடிய
தைத்திருநாளை கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இராணுவ தளபதி ஜகசூரிய ஆகியோர் நேற்று யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
யாழ். ஆனையிறவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் யாழ். மாவட்ட பாதுகாப்பு கட்டளை தளபதி மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிளிநொச்சி சென். திரேசா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும், அம்பாறை மாவட்ட இசை கலைஞர்களின் ‘முகமூடி தயாரிப்பு’ எனும் தொனிப்பொருளிலான நாடகமும் இடம்பெற்றன.
இதேவேளை, ஆனையிறவு இராணுவ முகாமிற்கு அருகாமையில் தற்போது மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு பொங்கல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா மற்றும் இராணுவ தளபதிகள் என பலர் கலந்துகொண்டனர்



