Link

ணக்கம் வருக வருக....

Pages

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

துப்பாக்கி ஏந்திய காவல்படையுடன் நடந்த ஜனநாயகத்



வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் தலைநகர் அகர்த்லாவில் உள்ள வாக்குச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கி ஏந்தியபடி சாவடியைக் கண்காணிக்கிறார். இடதுசாரிகளின் கோட்டையாக திகழும் திரிபுரா மாநிலத்தில் ஐந்தாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி சாதிக்கும் என்று இடதுசாரிகள் எதிர்பார்த்து வரும் வேளையில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமைதியாக நேற்று வாக்குப்பதிவுகள் நடந்தேறின.

மின் உற்பத்தி நிலையத்தை சீனாவுக்கு விற்பனை,,,


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தினை இலங்கை அரசாங்கம் சீனாவிற்கே விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாங்கிய கடனை அடைக்க முடியாமை, தொடர்ந்து இயங்க வைக்க பணம் இல்லாமை ஆகிய காரணங்களினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மின்சார செலவைக் கட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே இந்த அனல் மின் நிலையத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை அரச தரப்புத் தகவல் தெரிவித்துள்ளது.
குறித்த மின் நிலையம் 1350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த நிலையத்துக்காக சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து உபகரணங்களும் பழையவை என்றும் செயற்பாட்டுக்கு உதவாதவை எனவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.