Link

ணக்கம் வருக வருக....

Pages

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்: நாசா கண்டுபிடிப்]


அமெரிக்க நாசா நிறுவனம் மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி செவ்வாய் கிரகத்தை தற்பொழுது ஆராய்ந்து வருகின்றது.
இந்த விண்கலமானது, முன்னர் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமான பெர்குளோரேட்ஸ் என்ற உப்பு படிமங்களை கண்டுபிடித்துள்ளது.
இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களை சூடுபடுத்தும்பொழுதும் இதிலிருந்து குளோரினேட்டட் ஹைட்ரோ கார்பன்கள் வெளியேறியது.
அப்பொழுது கூடவே அதிக அளவிலான ஆக்சிஜனும் வெளியேறுவதை விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர். {புகைப்படங்கள்}




இந்த பெர்குளோரேட் உப்புகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் முன்னர் உயிரினங்களின் புழக்கங்கள் இருந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்
 

விளையாட்டு போட்டியில் ஊழல்: சுவிஸ் அதிகாரிகள் மீது ,.,


இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட ஊழல் வழக்கில் சுவிட்சர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டிற்கான ஏற்பாடு மற்றும் கட்டமைப்பு பணிகளில் குழு தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் கல்மாடி எம்.பி., இந்த ஊழல் குறித்து கைது செய்யப்பட்டார். தற்பொழுது இவர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்
இந்த வழக்கை சி.பி.ஐ. தொடர்ந்து விசாரித்து வருகின்றது.
மேலும் காமன்வெல்த் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் விளம்பர பலகை, ஸ்கோர் போர்டு ஆகியவற்றை அமைத்ததில் 95 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கான கருவிகளை வினியோகம் செய்த சுவிஸ் டைமிங் லிமிடெட் என்ற நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மூவருக்கும் சம்மன் அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ளும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மூன்று அதிகாரிகளுக்கும் சம்மன் தயார் செய்து அதை உள்துறை அமைச்சகத்துக்கு சி.பி.ஐ அனுப்பி வைத்துள்ளது.
 

புதுமைகள் படைப்பதில் சுவிஸ் முதலிடம்


ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய அண்மைகால ஆய்வின்படி, அதன் உறுப்பினர் நாடாக இல்லாத சுவிட்சர்லாந்து புதுமைகள் படைப்பதில் முதலிடத்தைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து புதுமை மதிப்பீட்டுக் கழகம் இந்த வாரம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பினர் நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை அறிந்து தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் குரோஷியா, ஐஸ்லாந்து, மேசிடோனியா, நார்வே, செர்பியா, துருக்கி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் சேர்த்து கொள்ளப்பட்டன.
பதினைந்து அம்சங்களை அடிப்படையாக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் வெளிப்படையான, சிறப்பான மற்றும் கவர்ச்சியான ஆய்வு முறைகளை பின்பற்றுவதில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மூன்று ஆய்வு முறைகளையும் நிறுவனமுதலீடு, அறிவுசார் சொத்துகள் மற்றும் பொருளாதார விளைவுகளை அறிவதற்கு சுவிட்சர்லாந்து பயன்படுத்தியுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் ஸ்வீடன், ஜேர்மனி, டென்மார்க், ஃபின்லாந்து போன்ற நாடுகளும் புதுமைகள் படைப்பதில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது