Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 10 ஏப்ரல், 2013

எதிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை: ??


சுமார் 900 கி.மீற்றர் வரை பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை அழிக்கவல்ல சக்தி வாய்ந்த 'ஹேட்ப்-4' ரக ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் இன்று நடத்தியுள்ளது.
'ஷாஹீன்-1' என்றும் அழைக்கப்படும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது என்றும் இன்றைய சோதனை வெற்றிகரமாக முடிந்தது எனவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டிலிருந்து இதுவரை பாகிஸ்தான் ஏராளமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களை சுமந்தபடி 60 கி.மீற்றர் வரை பாய்ந்து செல்லக்கூடிய 'ஹேட்ப்-9', ஆயிரத்து 300 கி.மீற்றர் தூரம் வரை பாயும் 'ஹேட்ப்-5' உள்ளிட்ட ஏவுகணைகளை அந்நாடு இதுவரை சோதித்துள்ளது.
போர் திட்டங்களுக்கான லெப்டினன்ட் ஜெனரல் தலைவர்(ஓய்வு) காலித் அஹமத் கித்வாய், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் பாகிஸ்தான் கடல் பகுதியில் இருந்து இன்றைய ஏவுகணை பரிசோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
 

சிறுவனின் துப்பாக்கிச் சூட்டில் 6 வயது சிறுவன் ?


அமெரிக்காவில் 4 வயது சிறுவன் தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு 6 வயது சிறுவனுடன் கடந்த திங்களன்று விளையாடி இருக்கிறான்.இதில் எதிர்பாராதவிதமாக அந்த துப்பாக்கியிலிருந்த குண்டு 6 வயது சிறுவனின் நெற்றியில் பாய்ந்து இருக்கிறது. இச்செய்தி சுட்டவனின் தாயாருக்கு தெரியவர, உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தெரிவித்து இருக்கிறார். அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அச்சிறுவன் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவர நாடு தழுவிய விவாதங்கள் நடைபெறும் நிலையில் இதுபோன்று சம்பவம் நடந்துள்ளது. இதனால், உயிருக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைக்கத்தவறிய பெற்றோர் மீது இப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது