Link

ணக்கம் வருக வருக....

Pages

திங்கள், 3 ஜூன், 2013

அம்பலமாகிய கள்ளத் தொடர்பு!


 பேயைக் கண்டறியும் பொருட்டு வைத்த கெமராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கேமராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார்.
ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக, அந்த நபரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண் ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட்சம் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் ஆனால் சம்பவத்தின் போது சிறுவனுக்கு வயது 16 என நிரூபணமானது.
எனினும் இது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லையென அப் பெண் கூறியுள்ளார்.
விசாரணையின் முடிவில் அப்பெண்ணுக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பவும், அங்கிருந்து அவர் பயிற்சி பெற்று வருவதற்காக 6 மாத காலம் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு


  எதிர்காலத்தில் செவ்வாய்க்கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது.
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.
கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ ஊர்தியை அங்கு கொண்டு செல்லும் அரை பில்லியன் கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிக காலம் எடுத்துள்ளது.
இந்தப் பயணத்தை கிழமைகள் கணக்கில் விரைவுபடுத்துவதற்கு போதுமான உந்து சக்திக்கான தொழில்நுட்ப வசதி இன்னும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

சிங்கப்பூரில் விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்?


 இலங்கை யுவதிகளை தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த ஆனமடுவைச் சேர்ந்த நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் சிங்கப்பூரில் விபசாரம் நடத்தி வந்தவர்களில் முக்கியமான நபரென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் சமீபத்தில் ஐந்து யுவதிகளை அழைத்துச் சென்று பலாத்காரமாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நபரால் பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதிகள் இவரது பிடியிலிருந்து தப்பிச் சென்று சிங்கப்பூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

பொலிஸார் இந்த நபரைக் கைது செய்ய முயன்ற போது அவர் தலைமறைவாகியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இந்நபர் சிங்ப்பூரிலிருந்து இலங்கை வர முயற்சித்தபோது சிங்கப்பூர் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு: பொலிசார் தீவிர தேடுதல்,



சுவிட்சர்லாந்திலுள்ள ஜுரிச் மாநகர் காவல்துறையும், மாநிலக் காவல்துறையும் இணைந்து துப்பாக்கி சூடு நடத்திய ஒரு கொலைகாரனை வலைவீசித் தேடி வருகின்றது.
கடந்த வியாழனன்று பிற்பகல் மூன்று மணியளவில் பிராயர்டிராஸ் தெருவில் உள்ள 37ம் எண் உடைய வீட்டில் ஒருவன், தன்னிடமிருந்த துப்பாக்கியால் இரண்டு துருக்கியரைச் சுட்டுவிட்டுத் தப்பிவிட்டான்.
குண்டுகாயத்துடன் இருந்த இருவரையும், பொலிசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஒருவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடைபெற்று உடலில் புகுந்திருந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது.
இருவரும் அபாய நிலையிலிருந்து தப்பித்துவிட்டனர் என்று மாநகர் பொலிஸ் தகவல் தொடர்பாளி மார்கோ கோர்டெஸி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பொலிசார் இந்தத் துப்பாக்கிச்சூடு பற்றி தகவல் தெரிந்தவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்
 

கஞ்சா புகைப்பவருக்கு அபராதம் மட்டுமே?


சுவிட்சர்லாந்து கஞ்சா புகைப்பது சட்டப்படி குற்றம் என்றாலும் மூன்றரை இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரையிலான இளைஞர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
இனி இவர்கள் பிடிபட்டால் அங்கேயே நூறு பிராங்க் வரை அபராதம் வசூலிக்கப்படும். இவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை.
சுவிட்சர்லாந்தில் போதைப்பொருள் கடத்தல், நுகர்வு போன்ற சட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால் சில மாற்றங்கள் ஒக்டோபர் முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இந்த மாற்றங்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் திகதி அன்று நாடாளுமன்றத்தின் மேலவையும், மக்களவையும் அனுமதி அளித்துள்ளன.
பத்து கிராம் அல்லது அதற்கும் குறைவான கஞ்சா வைத்திருப்பவருக்கு இந்த உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பொலிஸ் மற்றும் நீதித்துறையினரின் வேலைப்பளு கனிசமாகக் குறைகிறது. மேலும் சுவிட்சர்லாந்தில் மாநிலத்திற்கு, மாநிலம் இச்சட்டங்கள் மாறுபடுகின்றன.
ஃபிரிபோர்க் மாநிலத்தில் 10 கிராம் கனாபீஸ் வைத்திருந்தால் ஐம்பது ஃபிராங்க் அபராதம் விதிக்கப்படும். அதுவே டிசினோ மாநிலத்தில் மூவாயிரம் ஃபிராங்க் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 

நிலநடுக்கத்தினால் சிலிண்டர் வெடிப்பு

.,.

தைவானில் டைசங் நகரத்திலிருந்து தென்கிழக்கே 38 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் பூமிக்கடியில் சுமார் 14.5 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் தைபேவிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சிலிண்டர் வெடித்ததாக அந்நாட்டின் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உயிரிழப்புகளோ பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
 

புதிய 15 கரும் நட்சத்திர மண்டலங்கள்


 அதி நவீன அல்மா டெலெஸ்கோப், அண்டத்தில் உள்ள காஸ்மிக் தூசுக்களின் இருளுக்குள் 15 புதிய கரும் நட்சத்திர மண்டலங்கள் இருப்பதை பதிவு செய்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நட்சத்திர கூட்டம் 'செடஸ்' அமைந்திருக்கும் திசையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கரும் விண்மீன் திரளுக்கு 'சுபாரு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் காஸ்மிக் பிரபஞ்ச தூசுக்களால் இருக்கும் இந்த கதிர்களின் ஆதிக்கத்திற்குள் மறைந்து கொண்டு இதுபோன்று நிறைய புதிய விண்மீன் திரள்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.