Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 5 ஜூன், 2013

கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள்!!:

அதிர்ச்சியில் சிறிலங்கா படையினர்,விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதுவெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது.
 இதையடுத்து பெரும் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய குண்டுகளையும், ஆயுதங்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
  போர் நடந்த காலத்தில், கொழும்புக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு தொன் எடையுள்ள குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் தமக்குத் தெரியும் என்று அதனைக் கடத்தி வந்தவரான, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் வெலிக்கடைச் சிறை அதிகாரியிடம் எழுத்துமூலம் தெரிவித்தார்.
  இந்த ஆயுதங்களில் தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், ஏழு ரி-56 துப்பாக்கிகள், ஒன்பது தன்னியக்க கைத்துப்பாக்கிகள், மூன்று இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ரி-56 துப்பாக்கிகளுக்கான 3500 ரவைகள், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சொக்கலேற் பொதி, 8 மில்லியன் ரூபா பணம் என்பனவே மறைத்து வைக்கப்பட்டுள்ளன

கழிப்பறை நிறுவனங்களுக்கு விருது வழங்கிய பிரான்ஸ் ,,


சுகாதாரமான கட்டண கழிப்பறைகளை அமைக்கும் சுலப் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக்குக்கு பிரான்ஸ் நாட்டில் விருது வழங்கப்பட்டுள்ளது.
எளிதில் கட்டமைக்கும் வகையில், கட்டண கழிப்பறைகளை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து புரட்சியை ஏற்படுத்தியவர், சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக்.
இந்தியாவில், இவர் ஏற்படுத்திய கழிப்பறை புரட்சியை பாராட்டிய பிரான்ஸ் அரசு, லெஜண்ட் ஆப் பிளானட் என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று முன்தினம், நடந்த விழாவில் துணை ஜனாதிபதி சான்டல் ஜுர்டான் இந்த விருதை பிந்தேஷ்வருக்கு வழங்கினார்
 

ஊழியர்களுக்கு பிரித்தானியா 18 மில்லியன் பவுண்ட்


வங்கதேசத்தின் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு 18 மில்லியன் பவுண்ட் நிதி உதவியை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
தலைநகர் டாக்காவில் ராணா பிளாசா என்ற ஆடைத் தொழிற்சாலை கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 1100க்கும் அதிகமானவர்கள் பலியானதைத் தொடர்ந்து பிரித்தானியா இதனைக் கூறியுள்ளது.
இந்த சம்பவம் அனுபவமான ஒர் விடயம் எனவும் வங்கதேசத்தில் பாதுகாப்புத் தரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை இது எடுத்துக் காட்டுவதாகவும் பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்த விபத்து உலகில் மிகவும் மோசமான கைத்தொழில் விபத்தாக பதிவாகியுள்ளதுடன், சர்வதேச ரீதியில் விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தது.
இந்த விபத்தில் 1130 பேர் பலியானதுடன், சுமார் 2500 பேர் காயமடைந்திருந்தனர்.