Link

ணக்கம் வருக வருக....

Pages

புதன், 19 ஜூன், 2013

தனக்குத் தானே ஆபரேஷன் செய்துக் கொண்ட முதல் டாக்டர்-


 
பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார். தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவ நிலையோ..விமான பயணத்துக்கு இடம் தரவில்லை. அன்று மாலை வயிற்று வலி மேலும் கடுமையானது. ‘அப்பென்டிஸைட்டிசிஸ்’ எனப்படும் குடல் வால் நோய்தான் தனது தீராத வயிற்று வலிக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்தார். மறுநாள் இரவு வரை வயிற்று வலி குறையாமல் போகவே, 30-4-1961 அன்றிரவு 10 மணியளவில் ஒரு டிரைவர் மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் ஆகியோர் கத்தி, மருந்து ஆகியவற்றை எடுத்து தர, தனது வயிற்றுப் பகுதியை 10 சென்டி மீட்டர் அளவிற்கு திறந்து 4 சதுர சென்டி மீட்டர் அளவுள்ள குடல் வாலை வெற்றிகரமாக வெட்டி வெளியே எடுத்தார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷனுக்கு பின்னர் திறந்த பகுதியை தையலிட்டு மூடிய ரோகோசோவ், 2 வாரத்திற்குள் உடல்நலம் தேறி எப்போதும் போல் வேலைகளை கவனிக்க தொடங்கினார். 1962ம் ஆண்டு லெனின்கிராட் நகருக்கு திரும்பிய அவர், 1966ம் ஆண்டு புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி செய்து பி.எச்.டி. பட்டம் பெற்றார். பின்னர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி 1986 முதல் 2000ம் ஆண்டு வரை செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 21-9-2000 அன்று தனது 66வது வயதில் லியோனிட் ரோகோசோவ் மரணமடைந்தார். உலக மருத்துவ வரலாற்றில் தனக்குத் தானே ஒருவர் ஆபரேஷன் செய்துக் கொண்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில்



அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மதுபோதையில் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட நான்கு பேரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் ரி. சரவணராஜா ஒருவருக்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாவும் மற்றறொருவருக்கு மூவாயிரம் ரூபாவும் அடுத்த இருவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை கஞ்சா வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிவான் ஐயாயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கைது செய்யப்பட்டவர்களில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மற்றும் கண்டி தர்மசிறி மாவத்தையை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்களிப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றம்


இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18.06.13) நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
வேறு எந்த இடத்திலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யாதவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதுடன் அதற்கான சட்டமூலமும் நீதியமைச்சரினால் நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழ்வோர் சொந்த மாவட்டங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை.
இந்த திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 1983 மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெயர்ந்த 15,000 பொதுமக்கள் வடக்கில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்ய வழி பிறக்கும் என்று அந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டடு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்