Link

ணக்கம் வருக வருக....

Pages

ஞாயிறு, 7 ஜூலை, 2013

தவறுதலாக பெட்ரோல் ஊற்றிய சிறுவனுக்கு 1.5 கோடி அபராதம்


சவுதி அரேபியாவை சேர்ந்த 2 சிறுவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் வீட்டின் அருகே உள்ள திறந்த வெளியில் உருளைக்கிழங்கு சமைத்துக் கொண்டிருந்தனர்.
அடுப்பு சரியாக எரியாததால் சிறுவர்களில் ஒருவனான பயாஸ் முகம்மது தனது வீட்டில் இருந்து பெட்ரோலை கொண்டு வந்து அடுப்பில் ஊற்ற முயன்றான்.
தவறுதலாக உடன் இருந்த நண்பனின் மீது பெட்ரோல் கொட்டி விட்டது. அவ்வேளையில், அவன் எரியும் அடுப்பை நோக்கி நெருங்கி வந்ததால் சிறுவனின் உடலில் தீப்பற்றி பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சில நாட்களுக்கு பின்னர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பினான். இந்த விபத்தினால் அவனுக்கு பெரிய அளவில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
எனினும், தனது மகனின் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்ற பயாஸ் முகம்மதுவிடம் இழப்பீடு கேட்டு காயமடைந்த சிறுவனின் தாயார் ரியாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பயாஸ் முகம்மதுவுக்கு 9 லட்சம் சவுதி ரியால் (இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு கோடியே 44 லட்சத்து 55 ஆயிரத்து 909 ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பைப் பற்றி அறிந்த அவனது தந்தை 11 வயது சிறுவனுக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டது ஏற்புடையது அல்ல. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று கூறியுள்ளார்.

ராணுவத்தில் இளவரசர் ஹாரிக்கு கமாண்டர் பதவி


இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளையமகன் இளவரசர் ஹாரி (28).
இவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார்.
அப்பாச்சி ஹெலிகாப்டர் பிரிவில் துணை விமானி ஆக இருந்தார்.
3 ஆண்டு கால பயிற்சிக்கு பிறகு தகுதி தேர்வில் வெற்றி பெற்று தற்போது அப்பாச்சி ஹெலிகாப்டர் படையின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படையில் 5 மாதம் பணி புரிந்துள்ளார்.

பாடசாலையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு:42 பேர்



நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள இடைநிலைப் பள்ளிக்குள் புகுந்து இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம் இன் போராளிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பல மாணவர்கள் உட்பட 42 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
 
 இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பொட்டிஸ்கும் பொது வைத்தியசாலையில் இருந்து அதிகாரிகள் AFP செய்திச் சேவைக்குத் தகவல் அளிக்கையில், மமுடோ இடைநிலைப் பள்ளியில் இருந்து துப்பாக்கிச்சூட்டினால் கொல்லப் பட்ட 42 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சடலங்கள் அங்கு வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. நைஜீரியாவின் முக்கிய வர்த்தக நகரான பொட்டிஸ்கும் இல் இருந்து மமுடோ 5 Km தொலைவிலேயே அமைந்துள்ளது. இங்கு சமீப காலமாக போக்கோ ஹராம் ஆயுதக் குழுவின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்தத் தாக்குதலில் தப்பித்த ஏனைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தகவல் தருகையில், கொல்லப் பட்டவர்கள் அனைவரையும் முதலில் பிணைக் கைதிகளாக ஹாஸ்டலில் பிடித்து வைத்ததாகவும் பின்னர் அவர்கள் மீது சிறிய வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறியுள்ளனர்.

 மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் பாடசாலை வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக ஒளிந்து சென்றவர்களையும் காயங்களுடன் ஓடிச் சென்றவர்களையும் தேடினர். இதன் போது காயங்களுடன் 6 மாணவர்கள் கண்டுபிடிக்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

 இதேவேளை வியாழக்கிழமை டோகொன் குக்கா எனும் நகரில் நைஜீரிய இராணுவம் புகுந்து நிகழ்த்திய தாக்குதலில் 22 போராளிகள் கொல்லப் பட்டதற்குப் பதிற் தாக்குதலாகவே போக்கோ ஹராம் இன் இன்றைய தாக்குதல் நிகழ்த்தப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. இந்நிலையில் நைஜீரிய அரசு மேலதிக வன்முறைகளக் கட்டுப் படுத்தும் பொருட்டு அடமாவா,போர்னோ, மற்றும் யோபே எனும் மூன்று மாநிலங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை போக்கோ ஹராம் உடன் சம்பந்தப் பட்ட வன்முறைகளில் 3600 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

 ''மேற்குலகக் கல்வி தீங்கானது!' எனப் பொருள் படும் போக்கோ ஹராம் குழுவைச் சேர்ந்த போராளிகளால் கடந்த சில மாதங்களில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கொல்லப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

ரயில்வே ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு



இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் தமது சம்பள முரண்பாடுகளை நீக்கக்கோரி இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் தொழில்சார் தொழிற்சங்க கூட்டு முன்னணி அறிவித்துள்ளது