Link

ணக்கம் வருக வருக....

Pages

சனி, 13 ஜூலை, 2013

இறந்த நபர் மேயராக தெரிவான அதிசயம் !!!


மெக்சிகோவில் இறந்த நபர் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு மெக்சிகோவில் உள்ள ஓயாகசா நகருக்கு அருகே உள்ளது சான் அகஸ்டின் அமாடென்கோ என்ற கிராமம்.
இந்த கிராமத்தில் மேயரை தெரிவு செய்வதற்கான நடந்த தேர்தலில், லெனின் கார்பெல்லிடோ என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், லெனின் கடந்த 2010ம் ஆண்டு இறந்துவிட்டதாக வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் கிடைத்துள்ளது தான்.
அதன் பிறகு தான் லெனின் போலியாக இறப்புச் சான்றிதழ் வாங்கியது தெரிய வந்தது.
முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு லெனின் மற்றும் 4 பேர் சேர்ந்து தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில் கைதாவதில் இருந்த தப்பிக்க லெனின் இறந்துவிட்டதாக அவரது இறப்பு சான்றிதழை பொலிசாரிடம் அவரது உறவினர் ஒருவர் காட்டியுள்ளார்.
இறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர், மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

அந்தரங்க உறுப்புகளை சோதனையிட தடை


குவாண்டோமோ பே தடுப்பு முகாமில் உள்ள கைதிகளின் அந்தரங்க உறுப்புகளை சோதனையிட வாஷிங்டன் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் குவாண்டோமோ பே தடுப்பு முகாமில் சுமார் 160க்கும் மேற்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தங்களது வழக்கறிஞர்களை சந்தித்த பின்னரும், அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னரும் மிக கேவலமான சோதனைக்கு உள்ளாவதாக புகார் எழுந்தது.
மேலும் பாதுகாப்பு காரணங்களை காட்டி அவர்களது அந்தரங்க உறுப்புகளை இராணுவத்தினர் சோதனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறான சோதனைகள் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், பழைய முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தாங்கள் மிக மோசமான சோதனைகளுக்கு ஆளாவதை கண்டித்து கைதிகள் பலரும் உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது